Friday, September 2, 2011

பிச்சை பாத்திரம்

'வைதேகி! கிளம்பலாமா?' கேட்டுக்கொண்டே வந்தார் சுந்தரம்.

"இதோ வந்துட்டேன்,நான் கதவெல்லாம் பூட்டிண்டு வரேன்.நீங்க வண்டியை எடுங்கோ" என்று புடவைக் கொசுவத்தை நீவி சரி செய்து கொண்டே மாடிப்படியின் அழகிய வளைவுகளில் இறங்கி வந்தாள் வைதேகி

"மூணு மணிக்கெல்லாம் கிளம்பனும்னு ப்ளான் பண்ணியும் மணி 
நாலாயிடுத்து.இனி ட்ராபிக் தொல்லை ஆயிடும்" என்று அலுத்துக் கொண்டே
வண்டிஎடுக்க சென்றார்.

அடுத்த வாரம் வரும் இருபத்தைந்தாவது திருமண நாளுக்கு ஆசிரமக்
குழந்தைகளுக்கு உணவும் உடைகளும் தந்து கொண்டாட எண்ணி அதற்கு ஆர்டர் கொடுக்க கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

எழிலாகத் தோற்றமளித்த பங்களாவின் கலைநயமிக்க போர்ட்டிகோவில் இருந்து கார் மெதுவாய்க் கிளம்பியது.

'அம்பது சாப்பாடும் 30 செட் ட்ரெஸ்ஸும் ஆர்டர் பண்ணினா சரியார்க்குமா?'

'அதுக்கென்ன ஆர்டர் செஞ்சுட்டா போச்சு.என்ன பெரிய பிரமாதம்?' என்றார் சுந்தரம் 

தார் ரோட்டில் வழுக்கிச் சென்ற பியஸ்டா சிக்னலின் சிவப்பு விளக்குக்கு சிறிய குலுக்கலுடன் நின்றது.சுற்றிலும் கார், பைக் என்று சகல வண்டிகளும் நிற்க
குறுக்கே சென்ற ரோட்டில் விதவிதமான வாகனங்கள் அணிவகுத்து சென்று 
கொண்டிருந்தது 

'இதுக்குத்தான் சீக்கிரம் கிளம்பி இருக்கணும்.இனி இந்த தொல்லைதான்' என்ற படியே ஏ சி யை நிறுத்தி கண்ணாடியை இறக்கினார்.

'அம்மா!அய்யா! எதாச்சும் தர்மம் பண்ணுங்கய்யா!' என்ற குரலுக்கு நிமிர்ந்தார்.

எண்ணெய் காணாத பரட்டைத் தலையும் அங்கங்கே நைந்து கிழிந்திருந்த 
உடையுமாய் குச்சி குச்சியாய் கை கால்களுடன் பத்து பன்னிரண்டு வயதிருக்கும் ஒரு  சிறுமி அலுமினியத் தட்டை சில்லரைகளுடன் குலுக்கிக் 
கொண்டிருந்தாள்
ஒருவிதமான பார்வையுடன் அவளை பார்த்துவிட்டு பச்சை விளக்கிற்கு 
வண்டியைக் கிளப்பினார்.

தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு வீடு திரும்பும் பொழுது மணி 
ஒன்பதரையை  தொட்டிருந்தது.சாப்பிட்டு முடிக்கும் சமயம் காலிங் பெல்லடிக்க சுந்தரம் கதவை திறந்தார்.

'அட!வாடா மூர்த்தி! ஆச்சர்யமா இருக்கே லேசுல வரமாட்டாயே.வா வா
உள்ள வா வைதேகி சாப்பிட ஏதானும் கொண்டா

'இல்லடா சுந்தரம்.ஏற்கனவே லேட்டா வந்துர்க்கேன்.நான் உடனே கிளம்பனும்.
அப்பவே வந்தேன்.கதவு பூட்டியிருந்தது'

'அப்படியா?நாங்க கடைக்கு போயிருந்தோம்.அடுத்த வாரம் வெட்டிங்  டே க்கு
ஆசிரமக் குழந்தைகளுக்கு சாப்பாட்டு ட்ரெஸ் லாம் ஆர்டர் குடுக்க போயிருந்தோம்'

'ஓஹோ!அப்டியா? சந்தோஷம். நான் எதுக்கு வந்தேன்னா நாளைக்கு சாயங்காலம் நம்மாத்துல "ஆதி சங்கர அனுபவம்" காலட்சேபம் இருக்கு.கூப்பிட வந்தேன்.கட்டாயம் வந்துருங்கோ.பூஜையும் இருக்கு.ஜானு காலம்பற போன் பண்ணி கூப்பிடுவா'

'அப்படியா!ரொம்ப சந்தோஷம்.கட்டாயம் வந்துடறோம்.இதெல்லாம் கேட்க 
கொடுத்து வச்சுருக்கனுமே'  என்றாள் வைதேகி.

மூர்த்தி விடை பெற்றார் 

மறுநாள் மாலை.....



--தொடரும்....

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை ஏ.ஸி. கார் போல நல்லா போய்க்கிட்டே இருந்தது. மீண்டும் டிராஃபிக் ஜாம் அல்லது சிக்னல் போல “தொடரும்” என்ற ரெட் லைட் வந்து நின்று போனது. தொடர்ச்சி எப்போ என்று ஏங்க வைத்து விட்டது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

எல் கே said...

இயல்பான நடை. இன்னும் கொஞ்சம் பெரிய பாகமா போட்டிருக்கலாம்

ஆச்சி ஸ்ரீதர் said...

நானும் தொடருகிறேன்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடரவும். காத்திருக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

அருமையாகத் துவங்கியிருக்கிறீர்கள்
சொல்லிச் சொல்லிவிதமும் அருமை
சட்டென முடித்ததைப்போல் இருந்தது
தொடர வாழ்த்துக்கள் த.ம 4

வெங்கட் நாகராஜ் said...

கதை இயல்பான நடையில் இருக்கிறது. தொடரக் காத்திருக்கிறேன்....

RVS said...

ஆஹா... தொடரா? ஃபியஸ்டால ஃபர்ஸ்ட் கியர் விழுந்துருக்கு. அடுத்த பார்ட்ல ஐந்தாவது கியர் தொடும் என்ற நம்பிக்கையில்... :-))

”பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே” என்று ராஜா “ரமண மாலை” சி.டியில் பாடுவது ஒலிக்கிறது. :-)

RVS said...

என்னுடைய கமெண்ட் எங்கே?

குறையொன்றுமில்லை. said...

ஆரம்பம் நல்ல இருக்கு, அடுத்து என்னன்னு ஆர்வத்தை தூண்டும் விதமாக ம்தொடரும் போட்டிருக்கீங்க.

Anonymous said...

கதை ரொம்ப நல்லா போகுது. வாழ்த்துக்கள்.

-சே.குமார்.

raji said...

அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

அப்படி ஒண்ணும் பெரிய கதை அல்ல, ஒரே பாகமாக போட்டிருக்கலாம், ஒரு வேளை சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் பண்ண என்றால் ஓக்கெ..

R. Gopi said...

அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்

ரிஷபன் said...

அடுத்த பகுதி?

ADHI VENKAT said...

அடுத்த பகுதியை படிக்க போகிறேன்....

Post a Comment