Saturday, September 3, 2011

பிச்சை பாத்திரம் (பகுதி 2)

பகுதி 1 இங்கே பார்க்கவும்   


                   "அங்கம் ஹரே புளக பூஷணம் ஆச்ரயந்தீ
                    ப்ருங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்"

ஊதுபத்தி மணமும் மலர்களின் வாசனையும் அறையை நிறைக்க, கன கம்பீரமான குரலில் உபன்யாசகர் ஆதிசங்கரர் அருளிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தின்' பின்னணியை செவி குளிரும்படி வழங்கிக் கொண்டிருந்தார்.

"மாலவன் மீது வைத்த மாயப் பொன்விழி இரண்டை,மாது நீ என்னிடத்தில் 
வைத்தால் நானும் உந்தன் கருணையால் செல்வம் பெற்று கண்ணிறை
வாழ்வு கொள்வேன் கமலத்தாயே"

அழகான மொழிபெயர்ப்புடனும் தகுந்த விளக்கங்களுடனும் அனைவரின்
கவனமும் ஒன்றும்படி கணீரென்று சொல்லிக் கொண்டிருந்தார்.

தன்னிடம் இருந்த ஒரு நெல்லிக்கனியையும் பிக்ஷை என அழைத்த சங்கரருக்கு அளித்த அம்மாதுவின் வறுமை தீர்க்க சங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம் அறையையும் அங்கிருந்தோர் மனதையும் நிறைத்துக் கொண்டிருந்தது.

உபன்யாசம் முடிந்ததும் மூர்த்தியிடமும் ஜானுவிடமும் விடை பெற வந்த 
சுந்தரம் ,  'ரொம்ப பேஷா இருந்ததுடா. அப்படியே மனசு நிறைஞ்சு இருக்கு.
சரி நாங்க கிளம்பறோம்.பதினஞ்சாம் தேதி நாங்க ஆசிரமத்துக்கு போறச்சே 
நீங்களும் வந்துடுங்கோ சரியா?' என்று கூறி கிளம்பி சென்றார் 

திருமண நாளான பதினைந்தாம் தேதி காலை, முகம் நிறைய பெருமையுடனும் சுறுசுறுப்புடனும் "வைதேகி! அர்ச்சனைக்கு எல்லாம் எடுத்துண்டயா?" என்றார் 

"எடுத்துண்டாச்சு.முதல்ல கோவிலுக்கு போய்ட்டு அப்பிடியே ஆசிரமத்துக்கு போய்டலாம்,சரிதானே?"

"ஆமாம் ஆமாம்! சாப்பாடு துணிகள் எல்லாம் நேரே அங்கேயே வந்துரும்.வா வா கிளம்பு"

கோவிலில் அர்ச்சனை முடிந்து பிரசாதத்துடன் வெளி வருகையில் , "சாமி!
சாமி!தர்மம் பண்ணுங்க துரை!" என்ற குரலுக்கு திரும்பினார்.

பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கையேந்திக் கொண்டிருந்த சிறுமியை உற்று நோக்கினார்.சிக்னலில் அன்று பார்த்த அதே சிறுமி,அதே கந்தல் உடை ,கலைந்த தலை ,கண்களில் மட்டும் ஒரு புது ஒளி.ஒரு கையில் அலுமினியத் தட்டு மற்றொரு கையில்......

'ச்சீ போ! இதே தொந்தரவா போச்சு' அந்த மனிதர் அலுத்துக் கொண்டே நகர முயல,சிறுமியோ 'ஐயா!தயவு செஞ்சு எதாச்சும் போடுங்கையா' என்று விடாது கெஞ்சினாள்.
'அடச்சே! சொன்னா புரியாது?.இது என்ன கைல பச்ச குழந்தைய வச்சுருக்க?இத
காமிச்சு பிச்சை எடுக்க அனுப்பிட்டாங்களாக்கும் வழிய விடும்மா' என்று எரிந்து விழுந்துவிட்டு அந்த மனிதர் செல்ல சிறுமியோ முகம் வாட நின்றாள்.

உடனே சுந்தரத்தை நெருங்கி, சார்!எதுனாச்சும் தர்மம் பண்ணுங்க சாரு! என்று
தட்டை ஏந்தினாள்
"ஏம்மா!போன வாரம் சிக்னல்ல பாத்தப்ப நீ மட்டும் இருந்த.இப்ப இது என்ன பிஞ்சுக் குழந்தை வச்சுருக்க?இதக் குடுத்து பிச்சைக்கு அனுப்பிட்டாங்களா?"

"இல்லீங்கய்யா.என்னை யாரும் அனுப்பலீங்க.எனக்கு யாருமில்லிங்க"

"பின்ன இது யார் குழந்தை?"

'தெரியாதுங்கய்யா'

' என்னம்மா சொல்ற?'

'நாலு நாள் முன்னாடி இங்க பக்கத்துல இருக்கற குப்பைத் தொட்டில,சாப்பிட்ட எச்ச இலையை போட போனப்ப அதுக்குள்ளே இந்த பாப்பா இருந்துச்சுங்கய்யா.
பக்கத்துல நாயெல்லாம் கத்திக்கிட்டு இருந்துச்சு.பாவமா இருந்துச்சு.அதான் 
நான் தூக்கிட்டு வந்துட்டேனுங்க.தட்டில விழற காசுலதான் பாலு வாங்கி பாப்பாக்கு குடுக்கறேன் சாமி!தர்மம் பண்ணுங்க சாமி!' என்று தட்டை ஏந்தினாள். 

இருந்து தானம் கொடுத்த இடங்களில் அருளாத ஒன்றை தன்னிடமிருந்த ஒரு நெல்லிக்கனியையும் தானமளித்த இடத்தில் அருளிய சங்கரர் மனக்கண்ணில் சிரித்தார்.ஒரே ஒரு நாள் கூத்தாய் தானமளிக்க நினைத்ததை பெருமையாய் 
நினைத்த அவர் மனம் சிறுத்தது.

காருண்யத்தின் பிம்பமாய் நின்ற அந்த சிறுமி உயர்ந்து தெரிந்தாள்.மனம்
நெகிழ கண்கள் ஈரமாக அவள் கையிலிருந்த தட்டை நோக்கினார் சுந்தரம்.

அவர் கண்களுக்கு அந்த பிச்சை பாத்திரம் அட்சய பாத்திரமாய் தெரிந்தது.

22 comments:

ஆச்சி ஸ்ரீதர் said...

நேர்த்தியான முடிவு

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted 5 to 6 in Indli & 2 to 3 in Tamilmanam.

//ஒரே ஒரு நாள் கூத்தாய் தானமளிக்க நினைத்ததை பெருமையாய் நினைத்த அவர் மனம் சிறுத்தது.

அவர் கண்களுக்கு அந்த பிச்சை பாத்திரம் அட்சய பாத்திரமாய் தெரிந்தது.//

நல்ல கதை. நல்ல முடிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். வலைச்சர அறிமுகத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள். vgk

Yaathoramani.blogspot.com said...

மிக அருமையாகத் துவங்கி
மிக அழகாகத் தொடர்ந்து
நிறைவாக கதையை முடித்துள்ளீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பெரும்பாலானவர்கள் தவறு செய்யும்போது, மனம் நல்லவர்களையும் சந்தேகப்படும். நல்ல சிறுகதை ராஜி.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை சகோ. மனதைத் தொட்ட முடிவு...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ்மணம் 7

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல அடிக்கருத்தியலைக் கொண்ட கதை..

சொன்னவிதம் அருமை.

RVS said...

குட்! நறுக்குன்னு முடிச்சுட்டீங்க... என்னை எழுதச் சொன்னா வளவளான்னு ஒரே பதிவுல அண்டா அண்டாவா எழுதியிருப்பேன்.

அற்புதம். இரண்டு பாகமா பிரிச்சு மேஞ்சுட்டீங்க... வெரி குட். :-)

சி.பி.செந்தில்குமார் said...

கதை நீட்

குறையொன்றுமில்லை. said...

நல்ல கதை, மனதை தொட்ட முடிவு.

சாந்தி மாரியப்பன் said...

கதை ரொம்ப நல்லாருக்குங்க . அற்புதமான முடிவு.

R. Gopi said...

கதை முடிவு சூப்பர்.

Unknown said...

நல்ல சிறுகதை சகோ!

ரிஷபன் said...

மனதைத் தொட்ட முடிவு.

middleclassmadhavi said...

நெகிழ்வு கதை! வாழ்த்துகள்

Rathnavel Natarajan said...

அருமையான முடிவு.
வாழ்த்துக்கள் அம்மா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

சுசி said...

கதை அருமை ! வாழ்த்துக்கள்.

சாகம்பரி said...

அருமையான கதையமைப்பு. கதையின் எதிக்ஸ் எனக்கு பிடித்திருகிறது ராஜி.

raji said...

@மனோ மேடம்

வலைச்சர அறிமுகத்திற்கு எனது நன்றிகள்

@ALL

பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி

எல் கே said...

போட்ட கமெண்ட்டை காணோம் ?? கதை நல்லா இருக்கு . ஆனால் எதோ ஒரு சஜெசன் கொடுத்திருந்தேன். அது மறந்து போச்சு :(

ADHI VENKAT said...

கதை ரொம்ப நல்லா இருந்தது. மனதை நெகிழ செய்த முடிவு. வாழ்த்துக்கள் ராஜி.

Post a Comment