Tuesday, September 20, 2011

தொலைந்த தொழிலாளி

சிற்றாடை அணிந்த
சிறு வயதில் சில
சின்ன சின்ன தூறல்கள்.


இரட்டை சடை பின்னி
இங்கும் அங்குமே ஆட

துள்ளிக் கொண்டு சென்றேன்
தொடர்ந்து அந்த மனிதரை .



மஞ்சள் என்றும் பச்சை என்றும்
வெள்ளை என்றும் சிவப்பு என்றும்

வண்ண வண்ண மயமாய்
வடிவங்கள் பல விதத்தில்



வளையலும், கைகடியாரமும்,
மோதிரமும், மாலையுமாய்
நொடியிலே வடிவமைத்து

சிறுவர்கள் சந்தோஷிக்க
ஜவ்வு மிட்டாய் தந்த
அந்த தொழிலாளி எங்கே?

என் முதல் மோதிரம்,
என் முதல் கைக்கடியாரம்
என்று தந்த தொழிலாளி
எந்த திருவிழாவில் தொலைந்தார்?


24 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிற்றாடை அணிந்து, சிறு வயதில், இரட்டை சடை பின்னி, அவை இங்கும் அங்குமே ஆட, துள்ளிக் கொண்டு அந்த மனிதரை தொடர்ந்து சென்ற குட்டிக்குழந்தை ராஜி இப்போது எங்கே?

அதுபோலவே சிறுவர்கள் சந்தோஷிக்க
ஜவ்வு மிட்டாய் தந்த அந்தத் தொழிலாளியும் இப்போது காணாமல் போய் விட்டார்.

குழந்தைப்பருவ நினைவுகளைக் கூறும் நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

[Voted 1 to 2 in Tamilmanam &
1 to 2 in Indli also]

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் கவிதை. ஜவ்வு மிட்டாய்.... தேன் மிட்டாய் நினைவிருக்கிறதா? இப்போதெல்லாம் இது கூட தயாரிப்பதில்லை என நினைக்கிறேன்....

நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

நினைவுகளை மீட்டெடுக்கும் நல்ல கவிதை ராஜி.

Anonymous said...

சிறுவயது ஞாபகத்தை சிதறாமல் தரும் கவிதை.
கைக்கடிகாரம், வளையல் எல்லாம் தரும் அந்த மனிதர் இப்போதுள்ள குழந்தைகளுக்கு தெரியாமலே போய்விட்டாரே...

-சே.குமார்
http://vayalaan.blogspot.com

Yaathoramani.blogspot.com said...

சிற்றாடை அணிந்த சிறுவயது
நினைவுச் சாரல்கள் அருமை
அந்த நிகழ்வு இப்போது இல்லை ஆயினும்
அந்த நினைவுகளே
சாரலாய் மனம் நனைத்தும் குளிர்வித்தும் போவதை
சொல்லிச் செல்லும் விதம் அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5

இராஜராஜேஸ்வரி said...

என் முதல் மோதிரம்,
என் முதல் கைக்கடியாரம்
என்று தந்த தொழிலாளி
எந்த திருவிழாவில் தொலைந்தார்?/

மலரும் இனிய நினைவுக்கள்..

சாந்தி மாரியப்பன் said...

பஞ்சு மிட்டாயும் இப்போ காணறதில்லை. அதுவும் பாக்கெட்டுல அடைபட்டு மால்களுக்கு வந்துடுச்சு..

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை.தொஅலைந்துபோன குழந்தை நினைவுகள் தான்

மகேந்திரன் said...

சின்னவயது நினைவுகளுன்
அப்போது நமக்கு கிடைத்த பொருட்களை
செய்த தொழிலாளியை நினைவுகொள்வது
சிறந்த சிந்தனை.
அருமை கவிதை சகோதரி.

Unknown said...

நல்ல கவிதை...காணாமல் போனவர்களில் இந்த விஷயமும் கவிதையாக இணைந்தது நன்றி சகோ!

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா குழந்தை பருவத்தை ஞியாபக படுத்திட்டீங்க!!!

பாலா said...

ஆம் நாம் குழந்தை பருவத்தில் பார்த்த சிலரை இப்போது எங்கும் பார்க்க முடியவில்லை.

சாகம்பரி said...

எனக்குத் தெரியுமே. இங்கே மதுரையில் ஒரு கிராமியத் திருவிழா கண்காட்சி நடந்தது. அதில் பார்த்தேன். ஒரு வாட்ச் மட்டும் கட்டிக் கொண்டேன். நகரத்து வெளிச்ச வீதியில் தொலைந்து போனவர் கிராமங்களில் இருக்கிறார். வந்து பார்க்கலாமே ராஜி, அழகான கவிதைக்காக ஒரு வளையல் மட்டும் வாங்கித் தருகிறேன்..

ADHI VENKAT said...

நல்ல கவிதை.
ஜவ்வு மிட்டாய், இலந்த வடை, தேன் மிட்டாய், பஞ்சு மிட்டாய், கமர்கட் சாப்பிட்ட நினைவுகள் தான் உள்ளன.

கைக்கடியாரம்,மோதிரம் இவைகளுடன் கொசுறாக கன்னத்தில் வேறு ஒட்டி விடுவார்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

நானும் மறந்தே போய்விட்டேன் இவரை.நானும் இவர் பின்னால் சுற்றியதுண்டு,போட்டி போட்டுக்கொண்டு விதவிதமாய் டிசைன்களில் வாங்கி சாப்பிட்டதுண்டு .நினைவுபடுத்திய உங்களுக்கு நன்றிகள்.

ரிஷபன் said...

என் முதல் மோதிரம்,
என் முதல் கைக்கடியாரம்
என்று தந்த தொழிலாளி
எந்த திருவிழாவில் தொலைந்தார்?

கையக் கொடுங்க மேடம்.. ஸூப்பர் கவிதை

Rathnavel Natarajan said...

அருமை.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஹாய், இந்த ஜவ்வு மிட்டாய்க் கிழவன் பின்னால் நானும் ஓடி இருக்கிறேன். குளிக்கும்போது அது கரைந்து விடுமோ என்று கைக்கடிகாரத்தை கேம்பஸ் பாக்சுக்குள் வைத்து மறந்து பொய் ஏறும்போ எறும்பு கைக்கடிகாரத்தில் எதுவும் மிஞ்சவில்லை.

Unknown said...

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே
வந்ததே! வந்ததே!

எளிய சொற்கள் இலக்கிய நடை
அருமை! வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

திருவிழாக்களோடு பலவும் தான் தொலைந்து போயின... நல்ல வார்த்தை கோர்வை ராஜி'க்கா...

துபாய் ராஜா said...

நாகரீக வளர்ச்சியில் நாம் தொலைத்தவை இதுபோல ஏராளம். :((

raji said...

@வை கோபாலகிருஷ்ணன் சார்

கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி

@வெங்கட் நாகராஜ்
கிடைப்பதில்லை என்றுதான் நினைக்கிறேன்

@ராமலக்ஷ்மி
நன்றி

@சே குமார்
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

@ரமணி

கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.உண்மையில் தங்களால்தான் தொடர்ந்து எழுதுகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இல்லாவிடின் வேலைச்சுமையில் எழுதுவதை ஒத்திப் போடும் மனச்சோம்பல் துளிர் விட்டிருக்கும்

@இராஜராஜேஸ்வரி
ஆமாம்.சுகமான நினைவுகள்

@லக்ஷ்மிமா

ஆம்.நாம் தொலைத்த பலவற்றுள் இதுவும் ஒன்று

@அமைதிச்சாரல்

ரொம்பவும் சரி சாந்தி.

@மகேந்திரன்
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

@விக்கியுலகம்
நன்றி

@Mano நாஞ்சில் மனோ
நன்றி

@பாலா
உண்மைதான்

@சாகம்பரி

ஒரே ஒரு வளையல்தானா மேடம்!
கருத்திற்கும் வளையலுக்கும் நன்றி.வந்து விடுகிறேன்

@கோவை2தில்லி
ஆஹா!இந்த நினைவுகள் வச்சு நீங்க ஒரு பதிவு போடுங்கஆதி.நாங்க வந்து ரசிக்கறோம்

@thirumathi b s sridhar

நன்றிக்கு நன்றி

@ரிஷபன்

வாழ்த்திற்கு ரொம்ப நன்றி சார்.உங்களைப் போன்றோர் தரும் ஊக்கத்தில் இன்னும் இன்னும் நிறைய எழுதலாம்.

@Rathnavel

முடிஞ்சா வாட்ச் வாங்கி வையுங்களேன்.வந்து வாங்கிக்கறேன்.எனக்கு நினைவு தெரிந்து நான் இந்த தொழிலாளியை முதன் முதலில் பார்த்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.

@வித்யா சுப்ரமணியம் மேடம்

உங்க கிட்ட ஒரு பதிவு எழுதற அளவு இதைப் பத்தி மேட்டர் இருக்கும் போலருக்கே.எறும்புக்கு அடிச்சது அதிர்ஷ்டம்.

@புலவர் சா இராமானுசம்
நன்றி

@அப்பாவி தங்கமணி
நன்றி

@துபாய் ராஜா

ஆம்.உண்மைதான்

middleclassmadhavi said...

வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்

middleclassmadhavi said...

வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_30.html -ல் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும் (2nd comment? )

Post a Comment