
அன்று-
உப்பும் புளியும் குறைத்து
உவகையுடனே உண்டேன்
உள்ளுக்குள் நீ இருந்ததால்.
இன்று-
உப்புமற்று புளியுமற்று
உவகையுமற்று உண்கிறேன்
உனது அலட்சியத்தால்.
அன்று-
தளர் நடையின் போது
தடுக்கி நீ விழுந்தால்
தவிப்புடனே தாவி எடுத்தேன்.
இன்று-
தளர்ந்த நடையில் நானிருக்க
தடுமாற்றம் தானிருக்க
தரவில்லை உன் தோள் பிடிக்க.
அன்று-
பேசக் கற்றாய்
எழுதக் கற்றாய்
படிக்கக் கற்றாய்
பலவும் கற்றாய் நீ என்னிடத்தில்.
இன்று-
மௌனம் கற்றேன்
தனிமை கற்றேன்
துயரம் கற்றேன்
பலவும் கற்றேன் நானும் உன்னிடத்தில்
"நீ வாழக் கற்றாய்
நான் வாழ்க்கை கற்றேன்".
25 comments:
எல்லா வரிகளிலும், பாவம் அந்தத்தாயுள்ளத்தின் ஏக்கம் தெரிகிறது.
//அன்று-
உப்பும் புளியும் குறைத்து
உவகையுடனே உண்டேன்
உள்ளுக்குள் நீ இருந்ததால்//
அவனுடைய துவக்கம் அன்று அவளிடம் தானே ஆரம்பித்துள்ளது. அதனால் இந்தத் துவக்க வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
தாயின் கஷ்டத்தை உணராத பிள்ளைகள் உருப்படப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
Indli 3 & Tamilmanam 2 vgk
சிலருக்கு இப்படியான் பிள்ளைகள் அமைந்து வாழ்க்கையை கற்றுத் தருகின்றனர்.
அந்தத் தாயின் உள்ளத்தில் இருப்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டியது உங்கள் கவிதை... அருமை....
வாழ்வின் யதார்த்தத்தை அருமையான வரிகளில்
தந்துள்ளீர்கள் .
இன்பம் தந்தேன் பதிலுக்கு துன்பம் தந்தாய்
என்பதை வலியுறுத்தும் கவிதை .
இன்று நான் நாளை நீ என்பதை உணர மாட்டார்கள் .
பிறந்தப்ப இருக்கும் உருவம் மட்டும்
குழந்தையில்லை .
வயது முதிர்ந்து தளர்ந்து இருக்கும்
அவர்களும் குழந்தைகளே.
இருவரையும் கவனமாக பேண
வேண்டும்
கவிதைக்கு நன்றி
தமிழ் மணம் ஐந்து
வயோதிக பெற்றவர்களுக்கு நாம் தரும் பரிசு தனிமைதான். உணர்வார்களா நாளைய வயோதிக பெற்றோர்கள்?
மனசை நெகிழவைத்த கவிதை....!!!
சூப்பர் ராஜி. இது போன்ற முதியோர் உணர்வுகளை வெளிப்படுத்தும் பதிவுகள், நம்மை சுற்றியுள்ள உலகத்தின் பார்வையை அவர்கள் பக்கம் திருப்புகின்றன. நான் என்னுடை உலகத்தின் பார்வையை முதியோர் பக்கம் திருப்பிய போது இளையவர்கள் புரிந்து கொள்ளும்தன்மையை வளர்த்துக் கொண்டனர். இப்போது அவர்களிடம் மென்மை, பரிவு, கனிவு அத்தனையும் இருக்கிறது. நாம் நம்மால் முடிந்த மாற்றங்களை எழுத்துக்களால் உருவாக்குவோம். வாழ்த்துக்கள்
நல்லதோர் கவிதை. தாயின் தவிப்பு மனதை கனக்க செய்து விட்டது.
த.ம 8 இண்ட்லி 12
>>மௌனம் கற்றேன்
தனிமை கற்றேன்
துயரம் கற்றேன்
பலவும் கற்றேன் நானும் உன்னிடத்தில்
"நீ வாழக் கற்றாய்
நான் வாழ்க்கை கற்றேன்".
டாப்
உணர்வுகளை உலுக்கும் வரிகள்... நிதர்சனம் சுடத்தான் செய்கிறது. நல்ல கவிதை ராஜி'க்கா
நல்லா இருக்கு கவிதை
அந்தத் தாயின் வேதனை கனமாய் இறங்கிவிட்டது வார்த்தைகள் மூலம்.
"நீ வாழக் கற்றாய்
நான் வாழ்க்கை கற்றேன்".
நெத்தியடி
Nekizhththum kavithai
மனதை என்னவோ செய்தது..ராஜி
அடாடா! வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை... அற்புதம். :-)
இன்றுதான் முதன்முதலில் உங்கள் தளம் வருகிறேன்...
இதுவரை தவறவிட்டதற்காக வருந்துகிறேன்....
முதுமையின் அவலத்தை
காலப்போக்கினில் அவர்கள் கற்றுக்கொண்ட
கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்களை
அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.
நன்று.
இன்றுதான் முதன்முதலில் உங்கள் தளம் வருகிறேன்...
இதுவரை தவறவிட்டதற்காக வருந்துகிறேன்....
முதுமையின் அவலத்தை
காலப்போக்கினில் அவர்கள் கற்றுக்கொண்ட
கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்களை
அழகாக சொல்லியிருக்கீங்க சகோதரி.
மிக மிக அருமை முதுமையின் அவலத்தை
மிக அழகாக சொல்லிப் போகும் இந்தப் படைப்பு
அருமையிலும் அருமை த.ம 11
@வை கோபாலகிருஷ்ணன் சார்
@thirumathi b s sridhar
@வெங்கட் நாகராஜ்
@M.R
@பாலா
@Mano நாஞ்சில் மனோ
@கோவை2தில்லி
@சி.பி செந்தில்குமார்
@அப்பாவி தங்கமணி
@லக்ஷ்மிமா
@ரிஷபன்
@மி.கி.மாதவி
@தேனம்மை லக்ஷ்மணன்
@RVS
@மகேந்திரன்
@ரமணி சார்
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
இந்த நிலை மாற நாம் அனைவரும் நம்மாலான அனைத்து முயற்சிகளும் செய்வோம்.
கணிப்பொறி சரியில்லாததால் உடனே வர முடியோவில்லை. அற்புதம் ராஜி. மனதில் நிற்கிறது கவிதை.
@ரத்னவேல் சார்
கருத்திற்கு நன்றி
@வித்யா சுப்ரமணியம் மேடம்
அதனால் ஒன்றுமில்லை மேடம்.இதோ அடுத்த கவிதை தயார்.அதற்கு ஓடி வந்து விடுங்கள்.
கருத்திற்கு நன்றி மேடம்.மாற்றம் வர வேண்டிய
உணர்வைப் பற்றிய கவிதை
கவிதை ரொம்ப நல்லாருக்கு ராஜி.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க! அனைத்து வருகளும் அருமை!
Chiththi, I dont have tamil font, hence forced to write in english....Wow!!! soul touching kavithai!!!
Post a Comment