
இந்த துவாரகாநாத் ஓவியம் மார்பிள்களை இழைத்து அதில் பெயிண்ட் செய்யப் பட்டிருக்கிறது

வர்ணக்கலவைகளால் தீட்டப் பட்ட ராஜபுத்திரப் பெண்ணின் ஓவியம்

வர்ணக்கலவைகளால் தீட்டப் பட்ட ராஜபுத்திர நடன ஓவியம்.இந்த ஓவியத்தில் சிறு சிறு மணிகளின் வேலைப்பாடும் செய்யப் பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் மினியேச்சர் பெயின்ட் என்று சொல்லப்படும் ஓவியம்
இவை இரண்டும் சுவற்றில் வரையப் பட்ட ஓவியம்
இது ஜெய்ப்பூரின் ஷீஷ் மஹால்.இதை சுற்றிலும் கோட்டைகள் அரண்கள்
அமைந்துள்ளன.இதற்கு ஜீப்பில் மலையேறி சென்று மீண்டும் படிக்கட்டு போன்ற அமைப்பில் மலையேறி செல்ல வேண்டும்.மஹாலின் முன்புறம் முழுதும் வர்ணங்களாலும்,வண்ணக் கற்களாலும் அமைந்த கலை வேலைப்பாடுகள்தான்.
உதய்ப்பூர் சிட்டி பேலஸ்.சுவற்றில் சிறு சிறு ஓவிய வேலைப்பாடுகள்

ஜெய்ப்பூர் ஹவா மஹால்.இங்கு எங்கு நின்றாலும் காற்று பிய்த்துக் கொண்டு செல்லும்.(ஹவா-காற்று).இது ஃபவுன்டேஷன் எனப்படும் கடைகால் இன்றி
கட்டப்பட்டிருக்கிறது.இதன் உள்ளே தற்பொழுது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவதில்லை.
இது மஹாராணா உதய்சிங்கின் அரசு தர்பார் சபை
தர்பார் சபையின் எதிரில் இருக்கும் மார்பிள்களால் ஆன மயில்கள்
ஜெய்ப்பூரின் அருகில் ஏக்லிங்க் ஜி என்ற ஒரு சிவலிங்கம் அமைந்துள்ளது.
சிவன் ஒருவனே தலைவன்.அவன் ஒருவனே வழிபாட்டுக்கு உரியவன் என்ற
பொருளில் ஏக்லிங்க் ஜி என்ற பெயர் அமையப் பெற்றது.
ஜெய்ப்பூரை ஆண்டவர்கள் தங்களை அரசர்கள் என்று கூறிக் கொள்வதில்லை.
மஹாராணா என்றே பெயர் கொண்டவர்கள்.(மஹாராணா- சீஃப் மினிஸ்டர்)
ஏனென்றால் இவர்கள் சிவனையே அரசனாக கருதி வந்தனர்.
ஏக்லிங்க் ஜி யை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் பதிவில் சேர்க்கவில்லை.
ஜெய்ப்பூர் மேவாரை ஆண்ட புகழ் பெற்ற மஹாராணா பிரதாப் சிங் சிலை
ஜெய்ப்பூர் உதய்ப்பூரை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி
23 comments:
ஒவ்வொரு படங்களும் பேசுகின்றன.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள் அம்மா.
பகிர்விற்கு நன்றி.பழம் விட்டாச்சு
படங்கள் நன்றாக எடுத்துள்ளீர்கள். குறிப்பாக ஜெய்ப்பூர் ஹவா மஹால்,மஹாராணா பிரதாப் சிங் சிலை ஆகியன அருமையான கோணங்கள். தகவல்களுக்கும் நன்றி.
ஜெய்ப்பூரை ஆண்டவர்கள் தங்களை அரசர்கள் என்று கூறிக் கொள்வதில்லை.
மஹாராணா என்றே பெயர் கொண்டவர்கள்.(மஹாராணா- சீஃப் மினிஸ்டர்)
ஏனென்றால் இவர்கள் சிவனையே அரசனாக கருதி வந்தனர்.
அப்படியா.. எனக்குப் புதிய தகவல்.
படங்கள் கொள்ளை அழகு. நேரில் கூட இத்தனை பொறுமையாய் பார்த்திருப்பேனோ என்னவோ..
அந்த நாட்களில் கலைக்கு அவர்கள் கொடுத்த மதிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. ரசனையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
படங்கள் எல்லாம் தெளிவாக நன்றாக இருக்கு.அந்தக்காலத்தில் ஓவியருக்கும் கட்டிடக்கலைகளுக்கும் சரியான படி மதிப்புக்கொடுத்திருக்காங்க. அதனால நாம இன்று அவைகளை ரசிக்கமுடிகிரது.
அற்புதமான படங்கள் கலக்கல் ராஜி...!!!
நல்ல படங்கள். எனது ஜெய்ப்பூர் பயணத்தினை நினைவூட்டியது சில படங்கள்.
பகிர்வுக்கு நன்றி.
மீண்டும் நான் உதைய்பூர் போன மன நிறைவை கொடுத்தது......நாத்துவாரா, ஏக் லிங்க்ஜி, மற்றும் கோட்டைகள் பார்க்க பிரமிப்பை கொடுக்கும், இப்பொழுது ஏரிகளில் நீர் நிரம்பி வெளியேருவதால் பார்க்க அருமையாக இருக்கும்.
இரண்டு ஆண்டுகள் HZL பணியாற்றினேன்... அருமையான காணவேண்டிய இடங்கள்......
எல்லாப்படங்களுமே வெகு அழகாக அருமையாக உள்ளன. பொறுமையாக படம் எடுத்து,தகுந்த விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்.
//வர்ணக்கலவைகளால் தீட்டப் பட்ட ராஜபுத்திர நடன ஓவியம்.இந்த ஓவியத்தில் சிறு சிறு மணிகளின் வேலைப்பாடும் செய்யப் பட்டுள்ளது.//
இந்த மூன்றாவது படம், இவ்வளவு வருஷங்கள் ஆகியும், புத்தம் புதிய பொலிவுடன் (Bright ஆக)இன்று வரைந்தது போல உள்ளது மிகச்சிறப்பு தான்.
மார்பிள் கற்களை இழைத்துச் செய்வது என்றால் எவ்வளவு ஒரு பொறுமையும், கலைத்திறமையும் வேண்டும் அந்தக் கலைஞர்களுக்கு.
சாதாரணமாக அந்தக்காலத்தில், எங்கள் ஊரில், ஆட்டுக்கல், அம்மி, குழவி முதலியனவற்றை சுத்திலாலும் உளியாலும் அடித்து அடித்து கஷ்டப்பட்டு செய்பவர்களைப் பார்த்து நான் அதிசயித்ததுண்டு.
அவ்வளவு பெரிய ஹவா மஹால் கட்டடத்தை, அடித்த காற்றிலும் shake எதுவும் இல்லாமல் துல்லியமாக ஹ[ல்]வா போல படம் பிடித்திருக்கிறீர்களே! சபாஷ்.
சித்திரம், சிற்பம், ஆடல், பாடல், நாட்டியம், நாடகம் போன்ற அனைத்துக் கலைகளுக்கும் பொக்கிஷமாக நம் நாடு இருப்பதை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது.
நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெரிய கோவில்களிலுமுள்ள ஒவ்வொரு கற்தூண்களிலும் எவ்வளவு கலைஞர்களின் கடுமையான உழைப்பைக் காணமுடிகிறது.
ஜெய்ப்பூருக்கும், உதய்ப்பூருக்கும் தங்களுடன் எங்களையும் அழைத்துச் சென்று எல்லா முக்கிய இடங்களையும் பார்க்க வைத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
நானும் ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கெல்லாம்
போய் வந்தேன்.நேரமின்மையால் பதிவாக்க முடியவில்லை
தங்கள் பயண அனுபவத்துடன் பதிவைக் கொடுத்தால்
இன்னும் கூடுதல் தகவலும் கொடுக்கலாமே
படங்கள் அனைத்தும் மிக மிக அருமை
தர்பார் மண்டபத்தினுள் படம் எடுக்கக் கூடாது என
அதிக கெடுபிடிகள் இருக்குமே
எப்படி படம் எடுத்தீர்கள்
வெளி நாடு சென்ற போது தண்ணீர் கொண்டுபோன
வெள்ளி அண்டா படம் இருந்தால் கூட விளக்கத்தோடு
போடுங்களேன்.போகாதவர்களுக்கு அது அரிய தகவலாக இருக்குமே
கலைப் போக்கிஷங்களை அழகான பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி.தொடர வாழ்த்துக்கள்
த.ம 6
எல்லா படங்களும் தகவல்களும் அருமையாக இருந்தன. ஹாவா மஹலில் ஏன் இப்போது உள்ளே விடுவதில்லை. நாங்கள் சென்ற போது உச்சி வரை சென்று படம் எடுத்து வந்தோம்.
வெள்ளி கூஜா தகவல்கள் அருமையாக இருக்கும்.
மிக நல்ல விவரணங்கள் . படங்களுடன் விளக்கம் நல்லது. முதன்முதலாக வந்தேன் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
அசைவற்ற அசைவும், மொழியற்ற மொழியுமாக வெளிப்படுவது ஓவியக்கலை.
ஓரிடத்தில் படித்தது.... சரிதானே!! :-)
ஒவ்வொன்றும் அழகை வெளிப்படுத்தும் புகைப்படங்கள். ஓவியங்கள் மட்டுமல்ல, சிறந்த கலைபொருட்களும் அங்கு இருந்தனவே. beautiful.
நல்ல வரலாற்றுத் தொகுப்பு படங்கள்..! தொகுத்தளிமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்..!!
நேரமிருக்கும்போது எமது வலைப்பூவை ஒரு பார்வையிடவும்.. தங்களின் கருத்துக்களை அளிக்கவேண்டுகிறேன்..!! தங்கம்பழனி
அருமையான ஓவியங்கள்
என்று என் வலையில்
உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..
@Rathnavel sir
@thirumathi b s sridhar
@ராமலக்ஷ்மி
@ரிஷபன்
@lakshmi madam
@Mano நாஞ்சில் மனோ
@வெங்கட் நாகராஜ்
@krishnan R
@வை கோபாலகிருஷ்ணன் சார்
தங்கள் வரவிற்கும் கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி
@ரமணி சார்
தர்பார் மண்டபத்தை படம் எடுக்க அனுமதி இல்லைதான்.ஆனால் எனக்கு அது முதலில் தெரியாது.காமராவிற்கு கட்டணம் செலுத்தி விட்டால்
அந்த சீட்டுடன் காமராவை உள்ளே அனுமதிக்கிறார்கள்.எனவே தர்பார் மண்டபமும் அதில் அடக்கம் என நினைத்தேன்.நான் எடுத்த சமயம் அங்கு காவல் இல்லை.பிறகுதான் தெரிந்து கொண்டேன் கட்டணம் செலுத்தி இருந்தாலும் அங்கு படம் எடுக்க அனுமதி இல்லை என்பதை.
கூடுதல் தகவல் அளிக்காமல் சுருக்கமான பதிவாக வெளியிட்டதற்கு காரணம், நான் சென்று வந்ததும் பிற பதிவர்களின் விடுபட்ட பழைய பதிவுகளை படிக்கும் பொழுது துளசி மேடத்தின் ராஜஸ்தான் பயண அனுபவம் பற்றி எழுதி இருந்ததை படிக்க நேரிட்டதுதான்.அதை விட பெட்டராக வேறு ஒருவர் எழுதி விட முடியாது.அவர் அந்த பயண அனுபவத்தை 41 பகுதிகளாக தந்துள்ளார்.இங்கு இறுதிப் பகுதியின் சுட்டி தந்துள்ளேன்.
http://thulasidhalam.blogspot.com/2011/08/41.html
@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றி.ஹவா மஹாலை ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப் போவதாகக் கேள்வி.உண்மை நிலவரம் தெரியவில்லை.
@kovaikkavi
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
@RVS
மிகச் சரி சார்
@சாகம்பரி
ஆமாம் மேடம் கலைப்பொருட்களும் இருக்கின்றன.என்னிடம் அவற்றை எடுத்த புகைப்படங்களும் உள்ளன.ஆனால் அவற்றை அப்லோட் செய்தால் அப்லோட் ஆகாமல் ஒரே
பிரச்சனை.அதனால் அவற்றை விட்டு மற்ற புகைப் படங்களை மட்டும் அப்லோட் செய்தேன்.கருத்துக்கு நன்றி
@தங்கம்பழனி
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.கட்டாயம் தங்கள் வலைப்பூவை பார்வையிடுகிறேன்.
@என்ராஜப்பாட்டை ராஜா
கருத்திற்கு நன்றி
ஜெய்ப்பூர் ஜாலிப்பூர்..
படங்கள் நீட்.
கட்டுரை ஷார்ட்
இப்பதிவு விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் இடம் பெற்றுள்ளது. :-))
http://www.vikatan.com/article.php?aid=10582&sid=290&mid=10
அசத்தல் படங்கள் ராஜி..
Post a Comment