சிலுசிலுவென்ற காற்று முகத்தில் மோத அதை அனுபவித்தபடி வேப்பமரத்தை
நிமிர்ந்து பார்த்தான் சத்யா.இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தி ஒடி விளையாடும் காட்சியை சற்று நேரம் கவலை மறந்து ரசித்தான்.
ஒருவேளை அவைகளும் தன் பங்கு பழத்திற்காக மோதிக் கொள்கின்றனவா தன்னைப் போல?
திரும்பி வீட்டைப் பார்த்தான்.அவனுக்கு ஐந்து வயதிருக்கும்போது அப்பா
பார்த்து பார்த்து கட்டியது.மழைக்கும் வெயிலுக்கும் இத்தனை வருடங்களில் மெருகு குலையாமல் அதனை பராமரிப்பதிலும் அவருக்கு தனி ஆர்வமிருந்தது.
சுற்றிலும் தோட்டம் அமைக்க இடம் செய்து,வாசலில் ஊஞ்சலுக்கேன்று தனி
வராண்டா அமைத்து எதிரில் சிறு திண்ணையுடன் கம்பி வைத்த ஜன்னல்களுமாய் எல்லாமே அவரின் ரசனைதான்.அந்த ஊஞ்சலில் அவர் லேசாக ஆடிக் கொண்டு வெற்றிலை பாக்கு போடும் காட்சி சத்யாவின் மனதில் தோன்றியது.
"கல்யாணமே பண்ணலாம் போல இருக்கே" என்று ஹாலைப் பார்த்து
மூக்கில் விரல் வைக்காத உறவுகளே இல்லை.இரண்டு படுக்கையறை,பூஜை அறை மற்றும் சமையலறையுமாய் கீழேயும், பெரிய விடுமுறை நாட்களில் அத்தை குழந்தைகள் மாமா குழந்தைகள் என கொட்டமடிக்கும் அளவு மாடியில் அறைகளுமாய் பெரிய வீடு.
வீட்டின் வெளித்தோற்றத்தைப் பார்த்து பெருமூச்செறிந்தான்.
ஆயிற்று நான்கு மாதங்கள்.ஒரு சாயங்கால நடைப்பயிற்சிக்குப் பின் ஊஞ்சலில் வந்து அமர்ந்தவர்தான்.கணப்பொழுதில் எல்லாம் முடிந்தது.
ஆனால் இருக்கும் வரை அவரின் வாழ்க்கையின் நிழல் பக்கம் தெரியாமல் போனது.அம்மா போகும்போது அவனுக்கு வயது பதிமூன்று.மூன்று நாள் விஷக்காய்ச்சலில் படுத்தவள் சிகிச்சை பலனின்றி போய் சேர்ந்தாள்.அன்றிலிருந்து அப்பாவும் அவனும் தனியாகிப் போனார்கள்.வீட்டையும் சத்யாவையும் கவனிக்க அவனது ஒன்று விட்ட அத்தை ஒருத்தி இருந்தாள்.அப்பாவுக்கென்று தான் மட்டும்தான் என்று நினைத்திருந்தான்.அப்படி அல்ல என்பது போல் அப்பாவின் சாவிற்கு வந்த அவள்....
அவளும் அவளுடைய பதினைந்து வயது மகனும்.அவளுக்கு மட்டுமா மகன்?!
காரியங்கள் முடிந்ததும் அவள் சத்யாவை சந்திக்க மீண்டும் வந்திருந்தாள்.
எளிமையான தோற்றம்.முதல் நாளன்று பார்த்த குங்குமம் இப்பொழுது வகிட்டில் இல்லை.களையான முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது.கண்கள் ஈரத்தில் பளபளத்தன.
'யார் நீங்க? என்ன விஷயம்?' என்றான் சத்யா
'நான்....நான்.....' தடுமாறினாள்
'சொல்லுங்க' சலித்த குரலில் கேட்டான்
'நான் உன் அப்பாவின் இரண்டாவது மனைவி.இவன் உன் தம்பி பாலு'
'இது என்ன உளறல்?' சீறினான்
'உளறலைப்பா.உண்மைதான்.கொஞ்ச நாள் முன்னாடி அவரே எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிடப் போறதா சொல்லிண்டிருந்தார்.ஆனா அதுக்குள்ளே...'
'இல்லை.நான் நம்ப மாட்டேன்.என்ன பிதற்றல் இது? வெளிய போங்க, போங்க
இங்கிருந்து" கத்தினான்.
'எங்களுக்கு வேற போக்கிடம் இல்லைப்பா.அவர் இருந்த வரை எல்லாத்தையும் அவரே பாத்திண்டிருந்தார்.இப்ப நாங்க நிர்க்கதியாகிட்டோம்.
அன்றாட சாப்பாட்டுக்கு கஷ்டமில்லைப்பா.இவன் மேலே படிக்க உதவி செஞ்சா மட்டும் போதும்'
'உன் மதிப்புல கீழிறங்கிடக் கூடாதேன்னு நினைச்சானோ என்னவோ.கேட்டதுலேருந்து எனக்கு மனசே சரி இல்ல போ!'
'இதென்னடா அக்கிரமமா இருக்கு?'
'யாரோ படிக்க நான் எதுக்கு செலவு பண்ணனும்?நீங்களா வெளிய போயிட்டா நல்லது'
மறுநாள் டிபன் பரிமாறும்போது அத்தை ஆரம்பித்தாள்
'அப்பா காரியத்துலே எல்லாரும் கிசுகிசுன்னு பேசிண்டிருந்தா.உனக்கு
பதினஞ்சு வயசு இருக்கச்சே அவளுக்கு தாலியே கட்டி தாரமாக்கிண்டுட்டாராம்.நமக்கு தெரியாம வச்சுருந்துக்கானே!'
'போனவரைப் பத்தி நாம எதுவும் தப்பா பேசிடக் கூடாது அத்தை.இருந்தாலும் இது உண்மைனா நமக்கு தெரியாம அப்பாவால எப்பிடி அத்தை......' குரல் கம்மியது.
'உன் மதிப்புல கீழிறங்கிடக் கூடாதேன்னு நினைச்சானோ என்னவோ.கேட்டதுலேருந்து எனக்கு மனசே சரி இல்ல போ!'
அடுத்த வாரம் ஆபீசிலிருந்து திரும்பியதும் அத்தை ஒரு கவரைக் கொடுத்தாள்.'இன்னிக்கு போஸ்ட்ல வந்தது'
பிரித்து படித்தவன் சிலையானான்.'என்னடா! ஏன் பேயறைஞ்சாப்பல நிக்கற என்ன விஷயம்?'
'வீட்டுல பங்கு கேட்டு அந்த பொம்பளை கேஸ் போட்டிருக்கா.வக்கீல் நோட்டிஸ் அனுப்பிருக்கா'
'இதென்னடா அக்கிரமமா இருக்கு?'
'அதெல்லாம் அவளால ஒன்னும் பண்ண முடியாது அத்தை.அப்பாவுக்கு ஒரே வாரிசு நான்தான்.அவங்க கேஸ் செல்லாது.நான் நம்ம வக்கீலைப் பாத்துட்டு வரேன்'
இரண்டு வாரத்திற்கெல்லாம் அத்தையின் பிள்ளைக்கு உடல்நலக் கோளாறு என்று தகவல் வர அத்தை கிராமத்திற்கு கிளம்பினாள்.அத்தையும் இல்லாது அப்பாவின் நினைவில் தனியே அந்த வீட்டில் இருக்க மனமற்று கம்பெனி கெஸ்ட் ஹவுசுக்கே சென்று விட்டான் சத்யா.
அதன் பின் இன்றுதான் வருகிறான் வீட்டைப் பார்க்கவென்று.அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்கி, நண்பர்களோடு கொட்டமடித்து என்று
வீடு பல கதை சொல்லிற்று.அப்பாவின் மறைவிற்குப் பின் எல்லாம் வெறிச்சென்றாகி விட்டது.இதில் அந்த அம்மாள் வேறு சொந்தம் கொண்டாடி கேஸ் போட்டு அது வேறு இழுத்துக் கொண்டிருக்கிறது.
'நம்ம பக்கம் கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கு,நீங்க கவலைப் படாதீங்க' என்கிறார் வக்கீல்.நாளை மறுநாள் தீர்ப்பு இருக்கலாம்.
யோசனையுடன் வீட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பினான் சத்யா.
முற்றிலும் இடிந்து தரை மட்டமாகி இருந்த தன் வீடு இருந்த இடத்தைப்
அணில்கள் மருட்சியாய் இவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பழத்திற்காக துரத்திக் கொண்டன.
மறுநாள் அலுவலகம் கிளம்பும்பொழுது 'செல்' லில் வந்த செய்திக்கு அதிர்ந்து போனான்.எவ்வளவு நேரம் நின்றானோ தெரியாது,சுய உணர்வு வந்ததும் அலறி அடித்து வீட்டைப் பார்க்கப் போனான்
'வாங்க தம்பி! நிலைமையைப் பாருங்க' என்றார் அப்பாவின் நண்பர்.
'கண்மூடி திறக்கறதுக்குள்ளே இப்டி ஆயிடிச்சி.ராத்திரி ரெண்டு மணிக்கு வீட்டுக்குள்ளே லேசா அதிர்வு ஏற்படறாப்ல இருந்துச்சு.நாங்கல்லாம் பயந்து வெளில வந்துட்டோம்.பத்து நிமிஷத்துக்கெல்லாம் ஒரு பக்கமா இருக்கற வீடுகள் எல்லாம் இடிஞ்சு தரை மட்டமாயிடுச்சு.அதிலயும் ஒரு சில வீடுகள்ல உயிர்ச்சேதம் இல்லை.ஆனா அந்தப் பக்கம்லாம் பாருப்பா என்ன நிலைமைன்னு .கண் கொண்டு பாக்க முடில அந்த கொடுமையை' என்றார்
கண்களில் நீருடன்.
முற்றிலும் இடிந்து தரை மட்டமாகி இருந்த தன் வீடு இருந்த இடத்தைப்
பார்த்தான்.பிரமை பிடித்தது போல் நின்றான்.'ஓ' வன்ற ஓலம் கேட்டு திரும்பினான்.அப்பொழுதுதான் அந்த இடத்தின் கொடூரத்தை உணர்ந்தான்.சுற்றிலும் கல்லும் கட்டையும் இடிபாடுகளும் அவற்றுக்கு நடுவே
ரத்தக் களறியாய் பல உடல்கள்.முகத்தைப் பொத்திக் கொண்டான்
.'இவ்வளவுதானா?இவ்வளவுதானா வாழ்க்கை?கண நேரத்தில் தவிடு பொடியாகி உருக்குலைந்த உயிரினங்கள்!அம்மா அம்மம்மா! சிசுவை இழந்த தாயின் கதறல்.மனைவியை இழந்து உடல் உறுப்பு இழந்த கணவன்.இருவரையும் சேர்த்து இழந்து நாதியற்ற குழந்தைகள்!கடவுளே!ஏன்?
ஏன் இப்படி?உயிர்களை இழந்த உறவுகளுக்கு முன் இழந்த வீட்டிற்காகவா தான்
அழுவது?என்ன மனிதன் நான்?'
கீச் கீச் என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.பழத்திற்கு அடித்துக் கொண்ட அணில்கள் இரண்டும் பலத்த காயங்களுடன் ஒன்றை ஒன்று அரவணைத்து ஒரு பொந்துக்குள் சுருண்டிருந்தது.முகத்தை துடைத்துக் கொண்டு அவற்றை அரவணைப்புடன் எடுத்துக் கொண்டவன் ஒரு புது முடிவுக்கு வந்தவனாய் தந்தை தனக்கு விட்டு சென்ற சொந்தங்களைப் பார்க்க கிளம்பினான்.
கோர்ட்டின் தீர்ப்பிற்கு முன், புவியின் விசை கொடுத்த தீர்ப்பில் புது விசையுடன் கிளம்பினான் சத்யா.
15 comments:
குட் நல்ல தொய்வில்லா நடை
சில முடிவுகள் ‘இயற்கையாய்’த்தான் வரும்!
திரும்பி வீட்டைப் பார்த்தான்.அவனுக்கு ஐந்து வயதிருக்கும்போது அப்பா
பார்த்து பார்த்து கட்டியது.மழைக்கும் வெயிலுக்கும் இத்தனை வருடங்களில் மெருகு குலையாமல் அதனை பராமரிப்பதிலும் அவருக்கு தனி ஆர்வமிருந்தது.
சுற்றிலும் தோட்டம் அமைக்க இடம் செய்து,வாசலில் ஊஞ்சலுக்கேன்று தனி
வராண்டா அமைத்து எதிரில் சிறு திண்ணையுடன் கம்பி வைத்த ஜன்னல்களுமாய் எல்லாமே அவரின் ரசனைதான்.அந்த ஊஞ்சலில் அவர் லேசாக ஆடிக் கொண்டு வெற்றிலை பாக்கு போடும் காட்சி சத்யாவின் மனதில் தோன்றியது.
வீடு அது சார்ந்த உணர்வுகள்.. எல்லாம் மிகவும் யதார்த்தமாய் சித்தரிக்கப்பட்டிருந்தது.
எதுவுமே சாஸ்வதம் இல்லையென்ற ஞானம் வந்து விட்டால் அன்பு மட்டுமே பிரதானமாகி விடும் வாழ்வில்.
நல்ல கதை
வாழ்கையை, வாழ்கையின் உறவுகளை ஒரு மனிதன் எப்படியெல்லாம் தரப்படுத்தமுடியுமோ அதை மனிதன் செய்வதே இல்லை. அதற்கான விலையை பிள்ளைகள் நிர்ணயம் செய்வது இன்னும் கொச்சைபடுத்தும் செயலாகும். அருமையான நடைமுறை பதிவு.
புவி தீர்ப்பு விசை!
தலைப்பும், கருத்தை புகுத்திய விதமும் செம டச்சிங்.அருமை.
வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்துகிறது.வாழ்த்துகள்
இதே theamல் அட்சயபாத்திரம் என்றொரு நாவல் நானும் எழுதியிருக்கிறேன். வாழ்க்கை இவ்வள்ளவுதான் என்பதை அழகாக சில்லி இருக்கிறாய். குறை சொல்ல ஏதுமில்லை. வாழ்த்துக்கள். இது போன்ற கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பலாமே.
//உயிர்களை இழந்த உறவுகளுக்கு முன் இழந்த வீட்டிற்காகவா தான் அழுவது?//
நீங்கள் இதுவரை எழுதிய படைப்புக்களிலேயே எனக்கு மிக மிக சந்தோஷம் கொடுக்கும் வெகு அருமையான சுவையானதொரு படைப்பு இது.
ஆங்காங்கே அந்த அணில்களின் வருகை நிகழ்வுகளின் சுவைக்குச் சுவையூட்டுவதாக உள்ளது.
எழுத்துலகில் ஜொலிக்கப்போகிறீர்கள் என்று நான் அப்போதே சொன்னேன் அல்லவா! ஜொலிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது இந்தத் தங்களின் படைப்பு.
தொடர்ந்து இதுபோலவே நீங்கள் எழுதவேண்டி என் அன்பான ஆசிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்லதொரு யதார்த்தமான சூப்பர் பகிர்வுக்கு நன்றிகள்.
தமிழ்மணம் 1 to 2; INDLI 5 to 6 vgk
மிக சுருக்கமாக மிக அழகாக கதைசொல்லிப் போகிறீர்கள்
கதையின் பிரச்சனையும் சரி அதை சொல்லிப்போகும் விதமும் சரி
அதை முடித்திருக்கும் விதமும் சரி
மிக மிக அருமை
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம3
பாராட்டுக்கள் நல்லா இருக்கு கதை எழுதும் விதம். தொடருங்க.
தலைப்பும் ,கதையின் நடையும், கதைக்கருவும் அருமை. எதுவுமே நிலையில்லாத உலகில் அன்பு மட்டுமே சாஸ்வதம்.
தில்லியில் நேற்று காலை குண்டு வெடிப்பு, இரவு பூமித்தாயின் ஆட்டம் 4.2 ரிக்டர் அளவுகோலில்.
ஒரு தேர்ந்த கதைசொல்லியின் நடை தெரிகிறது. அற்புதம்.
தலைப்பு சூப்பர்! :-))
அருமையானதோர் கதை.
அலட்டிக்காத அழகான நடை. தெளிவான முடிவு. ஏதோ ஒரு நொடிதான் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்குகிறது எனும் அழகிய சிறுகதை.
@எல் கே
நன்றி
@ரிஷபன்
நன்றி
@ஆனந்த் ராஜ்
நன்றி
@சத்ரியன்
பாராட்டுக்கு நன்றி
@திருமதி ஸ்ரீதர்
நன்றி
@வித்யா சுப்ரமணியம் மேடம்
'அட்சய பாத்திரம்'? படித்ததில்லை.ப்லாக் கில் போடலாமே. 'முதல் கோணல்' கூட படித்ததில்லை.வெளியில் அது கிடைக்கவில்லை.
முடிந்தால் அதையும் எங்களுக்காக ப்லாக்கில் போட முடியுமா?
@வை கோபாலகிருஷ்ணன்
எல்லாம் தாங்கள் தரும் ஊக்கம்தான் சார்.
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்
@ரமணி
தாங்கள் ஊக்கப்படுத்துவதால் இப்பொழுது உடனே பதிவுகள் போட்டு விடுகின்றேன் காலதாமதமின்றி
நன்றி
@லக்ஷ்மிமா
நன்றி தொடர்கிறேன்
@கோவை2தில்லி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி
டிவி யில் பார்த்தேன்.
@ஆர் வி எஸ்
நன்றி.இருந்தாலும் உங்களைப் போல கதை சொல்லிட முடியுமா?
@அமைதிச்சாரல்
நன்றி சாரல்
@சாகம்பரி
கருத்துக்கு நன்றி
>>பழத்திற்கு அடித்துக் கொண்ட அணில்கள் இரண்டும் பலத்த காயங்களுடன் ஒன்றை ஒன்று அரவணைத்து ஒரு பொந்துக்குள் சுருண்டிருந்தது
கதைக்கான நீதி ட்விஸ்ட்
Post a Comment