அலமேலுவின் இன்றைய அட்டஹாசம் வீணை சம்பந்தப்பட்டது.
அலமேலுவின் கணவர் அழகர்சாமி ஒரு வாரம் ஆபிஸ் டூர் முடிந்து வீடு திரும்ப வீட்டில் வீணை ஒன்று புதிதாய் இடம் பெற்றிருப்பது கண்டு திகைத்தார்.
அலமேலுவின் கணவர் அழகர்சாமி ஒரு வாரம் ஆபிஸ் டூர் முடிந்து வீடு திரும்ப வீட்டில் வீணை ஒன்று புதிதாய் இடம் பெற்றிருப்பது கண்டு திகைத்தார்.
அழகர்:
என்னம்மா?வீணை இருக்கு? ஏது இது?
அலமேலு:
அது ஒன்னுமில்லீங்க.பக்கத்து வீட்ல புதுசா ஒரு மாமி குடி
வந்துருக்காங்கல்ல.அவங்க வீணை கத்து தராங்களாம்.நானும்
சேர்ந்துருக்கேன்.அஞ்சு நாளா போறேன்.அதான்
அழகர்:
(புது தலை எழுத்தா என்று மனதில் நினைத்தவாறே)அது சரி.ஆனா
வீணை ஏது?வாங்கிருக்கயா?
அலமேலு:
சே சே! அதெல்லாம் உங்களை கேக்காம நான் வாங்குவேனாங்க?
இது அந்த மாமியோடது.அவங்க ரெண்டு மூணு வச்சுருக்காங்க.
இது அந்த மாமியோடது.அவங்க ரெண்டு மூணு வச்சுருக்காங்க.
சும்மா வாசிச்சுப் பாக்க குடுத்துருக்காங்க.அவ்வளவுதான்
அழகர்:
ஒ!அப்படியா!நான் கூட என்னமோன்னு நினைச்சு பயந்துட்டேன்
அலமேலு:
என்னங்க! என்னங்க!
அழகர்: ம்... சொல்லு.
அலமேலு: நான் வாசிக்கறேன்.நீங்க கேக்கறீங்களா?
அழகர்: என்னது?
அலமேலு:
(தரையில் பாய் விரித்து வீணையுடன் அமர்ந்து)
வாசிக்கறேன் கேளுங்க.(டொய்ங் டொய்ங் என்று சுருதி சேராமல்
வாசித்துக் கொண்டே)என்னங்க!எப்பிடி வாசிக்கறேன்?நல்லா இருக்கா?
வாசித்துக் கொண்டே)என்னங்க!எப்பிடி வாசிக்கறேன்?நல்லா இருக்கா?
அழகர்: ம்......ம்......ம்ம்
அலமேலு:
அட! என்னங்க வாயைத் திறந்து சொன்னாதான் என்னவாம்
அட! என்னங்க வாயைத் திறந்து சொன்னாதான் என்னவாம்
என்ன யோசனை உங்களுக்கு? என்னங்க இங்க பாருங்களேன்
அழகர்: சொல்லும்மா
அலமேலு:
நான் இப்ப பாக்கறதுக்கு சரஸ்வதி மாதிரியே இருக்கேனா?
நான் இப்ப பாக்கறதுக்கு சரஸ்வதி மாதிரியே இருக்கேனா?
அழகர்: என்ன? ம்ம்... ஆமா! ஆமா!
அலமேலு:
என்னங்க எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு சொல்லிக்கிட்டு?
உங்களுக்கு என் மேல அன்பே இல்ல.
என்னங்க எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு சொல்லிக்கிட்டு?
உங்களுக்கு என் மேல அன்பே இல்ல.
அழகர்:
ஐயோ!அப்பிடிஎல்லாம்இல்லம்மா.போட்டோல சரஸ்வதியை வெள்ளை
ஐயோ!அப்பிடிஎல்லாம்இல்லம்மா.போட்டோல சரஸ்வதியை வெள்ளை
ட்ரஸ்ல பாத்துருக்கேனா,நீ நீலக் கலர் புடைவைல இருக்கயா?அதான் கொஞ்சமா கன்ப்யூஸ் ஆகிட்டேன்.மத்தபடி நீ சரஸ்வதியேதான்.
அலமேலு :
போங்க.நீங்க என்னை ரொம்பத்தான் புகழறீங்க.எனக்கு வெக்கமா
போங்க.நீங்க என்னை ரொம்பத்தான் புகழறீங்க.எனக்கு வெக்கமா
இருக்கு.
அழகர்: ??????????????????
அலமேலு: இல்லைங்க.நீங்க பொய் சொல்றீங்க.
அழகர்:
(ஐயோ! இதென்னடா புது குழப்பம்.எப்பிடி கண்டு பிடிச்சு தொலைச்சா)
ஐயோ!அதெல்லாம் இல்லம்மா,
(ஐயோ! இதென்னடா புது குழப்பம்.எப்பிடி கண்டு பிடிச்சு தொலைச்சா)
ஐயோ!அதெல்லாம் இல்லம்மா,
அலமேலு:
பின்ன என்னங்க.நீங்க என்னை சரஸ்வதி மாதிரியே இருக்கறதா
சொல்றீங்க.ஆனா அந்த போட்டோல பாருங்க.சரஸ்வதி எத்தனை
நகை போட்டுருக்காங்கனு?
அழகர்: ????????????
(ஆ!இதான் மேட்டரா?)
அதில்லம்மா.அது சாமி.அதான் அத்தனை நகை.நாம மனுஷங்கதானம்மா?
அலமேலு:
ஏங்க!எதுக்கும் ஆசைப்படாத சாமியே அத்தனை நகை போடும்போது
ஏங்க!எதுக்கும் ஆசைப்படாத சாமியே அத்தனை நகை போடும்போது
நான் சாதரண மனுஷிதானங்க.நான் ஆசைப்பட்டு போட்டுக்கக் கூடாதா?
அழகர்:
அப்படி இல்லைம்மா.சாமி படத்துல போட்டுருக்குன்னா நிஜமாவே
அப்படி இல்லைம்மா.சாமி படத்துல போட்டுருக்குன்னா நிஜமாவே
சாமியேவா ஆசைப்பட்டு போட்டுருக்கு?அதை வரைஞ்ச மனுஷன்தான்
அத்தனை நகை போட்டுருக்கான்.மனுஷனுக்குதானம்மா நகை மேல
எல்லாம் ஆசை.
அலமேலு:
அதைத்தாங்க நானும் சொல்றேன் .மனுஷனுக்குத்தான நகை மேல
எல்லாம் ஆசை.அப்படின்னா நானும் மனுஷிதானங்க.அதான் சொல்றேன்
என்ன இன்னிக்கே போய் நகை எல்லாம் வாங்கிடலாமா?
அதைத்தாங்க நானும் சொல்றேன் .மனுஷனுக்குத்தான நகை மேல
எல்லாம் ஆசை.அப்படின்னா நானும் மனுஷிதானங்க.அதான் சொல்றேன்
என்ன இன்னிக்கே போய் நகை எல்லாம் வாங்கிடலாமா?
அழகர்: ????????? ம்ம்....ம்.....
( ஏக்கப் பெருமூச்சுடன், டூர்லையே இருந்துருக்கலாம்)
18 comments:
கொஞ்சம் கொஞ்சமா ஸ்ருதி சேர்த்து, அலமேலு ஒரு வழியாக வீணை வாசித்து கடைசியில், அவள் கணவனை மயங்கி விழச்செய்தது, நல்ல நகைச்சுவை தான்.
அபாரம்.... வீணாக எழுதப்பட்ட பதிவு அல்ல, `வீணா' பற்றிய ஹாஸ்யப் பதிவு. கல்கிக்குப் பிறகு நல்ல நகைச்சுவைப் படைப்புகள் அரிதாகி வரும் இக்காலத்தில் தங்களுடைய பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் தங்கள் நற்பணி....வாழ்த்துக்கள் !
பழத்தை வைத்து நாடகத்தைத் துவஙுகுகிறீர்
என சிவன் சொல்லுவதுபோல
வீணையை வைத்து அலமேலு துவங்குவதும்
நன்றாக ரசிக்கும்படியாகத்தான் உள்ளது
வாழ்த்துக்கள்
>>>அழகர்:
(ஐயோ! இதென்னடா புது குழப்பம்.எப்பிடி கண்டு பிடிச்சு தொலைச்சா)
ஹா ஹா இந்த பெண்களே இப்படித்தான்.. கண்டு பிடிச்சிடறாங்க..
>>>அலமேலு:
பின்ன என்னங்க.நீங்க என்னை சரஸ்வதி மாதிரியே இருக்கறதா
சொல்றீங்க.ஆனா அந்த போட்டோல பாருங்க.சரஸ்வதி எத்தனை
நகை போட்டுருக்காங்கனு?
ஆப்பு வெச்சாச்சு
அலமேலு கண்ணும் கருத்துமா தான் இருக்கு.... பாவங்க அழகர்.....
இந்தத் தங்கமணிகளே இப்படிதான் # பிளான் பண்ணி கவுக்கராங்கா
ரங்கமணிகள் எப்பவும் அப்பாவிகள்தான் # எப்பவும் அப்பாவியான ஒரு ரங்க்ஸ்
எப்படியும் கச்சேரி பண்ணியாகணும். அதுக்கு நகை எல்லாம் வேணும். பட்டுப் புடவையும் வேணும். அலமேலு கேட்பது கரெக்ட்தான்
உன் புன்னகையே உனக்கு பொன்னகை மாதிரி இருக்கு... அப்படின்னு சொல்லி கவுக்குற ரெங்கமணிகளும் நாட்டில் நடமாடத் தான் செய்கிறார்கள்!!!
ஆனா நானும் அழகர் தான்!!!! ;-)
பாவங்க அழகர்.
//சரஸ்வதியை வெள்ளை
ட்ரஸ்ல பாத்துருக்கேனா,நீ நீலக் கலர் புடைவைல இருக்கயா?அதான் கொஞ்சமா கன்ப்யூஸ் ஆகிட்டேன்.// ...:)) LOL . gud post akka!
வீணையை வைத்து தங்கத்துக்கு அடிப் போட்டிருக்காளே !! அலமேலு சமர்த்து தான்.
//அட! என்னங்க வாயைத் திறந்து சொன்னாதான் என்னவாம்
என்ன யோசனை உங்களுக்கு? என்னங்க இங்க பாருங்களேன்//நல்லா இருக்கோ நல்லா இல்லையோ பெண்கள் தமது செயலுக்கு கணவனிடமிருந்து பாராட்டு கிடைத்துவிட்டாலே போதும்.
@வை கோபாககிருஷ்ணன்
கருத்துக்கு நன்றி சார்
@நிஷாந்தன்
கருத்துக்கு நன்றி.
கல்கியின் பெயரை உச்சரிக்கும் தகுதி
கூட இன்னும் யாரும் பெறவில்லை
என்பதே எனது கருத்து
@ரமணி
நன்றி
@சி பி செந்தில்குமார்
அதெல்லாம் நாங்க கண்டுபிச்சுடுவோம்ல
@கருணாகரசு
என்ன செய்ய!!!
@எல் கே
இது ஒன் சைட் தான்.
அப்பாவி தங்கமணிகளும் உண்டாக்கும் என்னைப் போல
@கோபி ராமமூர்த்தி
அது சரி
@ஆர் வி எஸ்
நீங்க? நாங்க நம்பறோம்
@தக்குடு
நன்றி
@கோவை2தில்லி
ஆமா ஆதி!நம்பளைப் போல இல்லை
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
உண்மைதான் ஆச்சி
nice
அலமேலுவிடம் நகைச்சுவை யாக ஆரம்பித்தது அழகரிடம் நகைச்சுமையாக முடிந்தது
ஹா...ஹா....
அலமேலு வீணை வாசித்த அழகை வார்த்தையில் நல்ல நகைச்சுவையுடன் சொன்னதை ரசித்தேன்...
பேசாம டூர்லயே இருந்திருக்கலாம்... ஹா..ஹா. இது தான் காமெடி ஹைலைட்...
தொடர்ந்து எழுதுங்கள் ராஜி...
அலமேலு - அழகர் நல்ல ஜோடிதான் போங்க! ரெண்டு பேரும் சேர்ந்து கலக்கறாங்க! எல்லா தங்கமணியும் இப்படித்தான் ரங்கமணிகளை கவுத்துடறாங்க போல! ம்....
Post a Comment