ரம்யா ஏன் இன்னும் வரவில்லை.இன்று ஒரு முடிவெடுக்கலாம் என்று
சொல்லியிருந்தாள்.
ஐந்து மணிக்கு வருகிறேன் என்றவளை ஐந்தரை ஆகியும் காணவில்லை.
சிவாவின் சிந்தனை பின்னோக்கிய நாட்களுக்கு சென்றது.இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆபிஸ் ப்ராஜக்ட் விஷயமாக ரம்யாவின் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி வந்து அங்கு அவளுடன் ஒன்றாக இணைந்து வேலை செய்ய ஆரம்பித்த ஆறு மாதத்திற்குள் இவள்தான் இனி தன் வாழ்க்கை என்று தீர்மானிக்கும் நிலையை எட்டி விட்டான்.
எப்படியோ தயங்கி தயங்கி ஒருவாறு தன் உணர்வை அவளிடம் திறந்து
பேசுகையில்தான் அவளும் அப்படிப்பட்ட உணர்வுக்கு ஆட்பட்டிருப்பது தெரியவந்தது.
இருந்தும் என்ன செய்ய?அவள் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.
சிவாவுக்கென்று யாருமில்லை.அவன் வளர்ந்து படித்ததெல்லாமே அநாதை
ஆசிரமத்தில்தான். காலூன்ற ஆரம்பித்ததும்தான் ஆசிரம விதிகளின் படி தனியே
வெளியில் தங்கியுள்ளான்.
ரம்யாவின் பெற்றோரின் மறுப்புக்கு காரணமே அவன் அநாதை என்பதுதான்.
அவர்கள் மறுப்புக்கு பின் இன்றுதான் பார்க்க போகிறார்கள்.மற்றபடி பார்க்
அங்கு இங்கு என்று சுற்றுவதை அவர்கள் இருவருமே விரும்பவில்லை.
அதோ ரம்யா வந்து விடடாள்.
"என்ன சிவா ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?கொஞ்சம் ட்ராபிக்.அதான்
கண்ணா லேட்"
"சரி வா.இப்பதான் காபி ஆர்டர் பண்ணினேன்.உக்காரு.இப்ப வந்துடும்"
"ஓகே சிவா நீங்க யோசிச்சீங்களா?என்ன முடிவு உங்களோடது?"
"அவங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதமில்லம்மா.
எனக்குத்தான் யாருமில்லன்னு ஆயிடிச்சு.உனக்குன்னு இருக்கறவங்களையும்
நீயும் பிரியணுமான்னு தோணுது"
"மை காட்!நானும் இதத்தான் நினைச்சேன்.காதல்ங்கறது ஒருத்தரை
நேசிக்கற,ஒருத்தரால நேசிக்கப்படற, ஒருஉணர்வு.ஒருத்தர் மேல நேசம் வருதுங்கறதுக்காக ஏற்கனவே நாம நேசிக்கற,நம்மளை நேசிக்கற
பெத்தவங்களை உதறிடறது எப்டி உண்மையான காதலா இருக்க முடியும் சிவா?"
பெத்தவங்களை உதறிடறது எப்டி உண்மையான காதலா இருக்க முடியும் சிவா?"
"எக்ஸாக்ட்லி ரம்யா!நீ சொல்லறது சரிதான்.நாம வெயிட் பண்ணுவோம் ரம்யா!
காத்திருத்தலும் காதலை இன்னும் உணர வைக்கும்.வா கிளம்பலாம்.நான்
உன்னை கொண்டு விட்டுடறேன் வா"
"எங்கடி சுத்திட்டு வர?அவன் கொண்டு விடறான்.நாங்க அவ்ளோ சொல்லியும் நீ உன் மனச மாத்திக்க மாட்ட அப்பிடித்தான?"
"அம்மா!ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.நாங்க உங்க சம்மதமில்லாம சேரறதா இல்ல"
"சேரவே வேணாங்கறோம் .அப்பறமென்ன சம்மதம்?" இது அப்பா
"அப்பா!உங்களுக்கு ஏன் அவர் மேல இவ்ளோ வெறுப்பு.அவர் நல்ல மனுஷர்தான்பா"
"இருக்கட்டுமே.என் பொண்ணுக்கு அவன் வேணாம்.ஒழுங்கா நாங்க பாத்து வச்சுருக்கறவனை கல்யாணம் பண்ணிக்கோ"
"நாங்க உங்க சம்மதமில்லாம சேர மாட்டோம்னு சொன்னேனே தவிர
மனச மாத்திப்பேன்னு சொல்லலையே.நீங்க சம்மதிக்காட்டா நான் இப்டியே இருந்துடறேன்.உங்க சம்மதத்தை எதிர்பாக்க காரணம் உங்க மேல நாங்க வச்சுருக்கற அன்புதான்.அத நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்களா?"
"உண்மைலேயே எங்க மேல உனக்கு அன்பிருந்தா நாங்க சொல்றபடி நீ கேப்ப"
"இதுக்கு என்னப்பா அர்த்தம்.அப்டின்னா நான் சொல்றத நீங்க கேக்கலேன்னா உங்களுக்கு என் மேல அன்பில்லன்னா?அப்பா, சிவாவை நான் பாக்கறதுக்கு முன்னால நீங்க ஒருத்தனை கை காட்டியிருந்தா நான் ஒத்துண்டிருந்துருப்பேனா
இருக்கும்.ஆனா இப்ப முடியாது.காதலும் கற்பும் மனசு சம்பந்தப் பட்டது.
சட்டையைக் கழட்டறாப்ல மாத்திக்க முடியாது.நான் ஒத்துக்காததுக்கு காரணம் இருக்கு.ஆனா நீங்க ஒத்துக்காம இருக்க ஒரு சரியான காரணமுமில்லை"
"இருக்கு. அவன் அநாதை"
"அப்பா! உலகத்துல யாரும் அநாதை இல்லப்பா.எல்லாருக்குமே செயின் மாதிரி
ஒருத்தருக்கொருத்தர் தேவையாவும் சார்ந்தும்தான் இருக்கோம்.
சரி உங்க காரணம் சரியானதுன்னே வச்சுக்கலாம்.உங்க சின்ன வயசுல
நீங்க அம்மாவையோ அல்லது அம்மா உங்களையோ திருமண பந்தம் ஏற்பட்டப்பறம்
இழந்திருந்தா உங்க மனசு மாத்திண்டு உடனே வேற ஒருத்தருக்கு இடம்
தந்திருப்பிங்களாப்பா? இரண்டாம் விவாஹம் தப்புன்னு நான் சொல்ல வரலை.
ஆனா நீங்க செஞ்சுருப்பிங்களா?"
...........................
"ஏன் மௌனமா இருகீங்க? முடியாதுன்னு தோணுது இல்ல?" எனக்கும்
அப்படித்தான்பா.சிவா தன் கிட்ட அன்பா இருக்கறவங்களுக்காக ஏங்கறவர் .நீங்க உங்க அன்பை அவருக்கு கொடுத்து அவரோட அன்பை உணர ஒரு சந்தர்ப்பம் கொடுங்கப்பா. உங்க ஆசிர்வாதத்தோட சேர்ந்து உங்களை தன்
பெற்றோரா நினைச்சு தன்னுடன் வச்சுக்க தயாரா இருக்கறவரை
நீங்க அணைக்கனும்னு நினைக்கறிங்களா? ஒதுக்க போறீங்களானு
முடிவு பண்ணி சொல்லுங்கப்பா."
காலையில் அலுவலகம் கிளம்புகிறவளின் முன் வந்து, " மாப்பிள்ளையைக்
கூட்டிட்டு வாம்மா.உங்க காதல் விலாசத்துக்கு நாங்க முன்னுரை எழுத தீர்மானிச்சிட்டோம்" என்ற தந்தையின் காலில் விழுந்து வணங்கிய ரம்யாவை
தூக்கி நிறுத்திய அம்மா உச்சி முகர்ந்தாள்.
17 comments:
>>>"அப்பா! உலகத்துல யாரும் அநாதை இல்லப்பா.எல்லாருக்குமே செயின் மாதிரி
ஒருத்தருக்கொருத்தர் தேவையாவும் சார்ந்தும்தான் இருக்கோம்.
காதல் சாகரத்தில் கிடைத்த தத்துவ முத்துக்கள்
கதைல வர்ற ரம்யா தான் ராஜியா? ஹா ஹ ஹா
>>>>>காத்திருத்தலும் காதலை இன்னும் உணர வைக்கும்.
என்னாச்சு..? இனைக்கு? ராஜி ஒரே தத்துவமா போட்டுத்தாக்கறாங்க?
ரம்யா வேற ராஜி வேற.
ரம்யா கற்பனை.
ஒவ்வொரு கதையோட கதபாத்திரமும்
எழுதினவங்களா ஆக முடியாது(ஹா ஹா ஒன் மோர் தத்துபித்துவம்)
ஆர் வி எஸ் சார் சொன்னாப்ல கதபாத்திரத்தை
எழுதினவங்களா நினைக்க ஆரம்பிச்சா,க்ரைம்
எழுத்தாளர் ராஜேஷ்குமாரை தூக்கி உள்ள போட்டிருப்பாங்க(தத்துபித்துவம் நம்பர் 2)
ஹா ஹா ஹாஅ...ஹாஅ....
கதை எளிமையாக ஆரம்பித்து, புதுமையாக நடந்து சென்று, புயலாக சற்று வீசி, பிறகு தென்றலாக வருடிச் சென்று சுஹமாக முடிந்துள்ளது. சும்மாவா? பிரபல எழுத்தாளராக மாறி வரும் திருமதி சுஹராஜி அவர்கள் எழுதியதல்லலவா!!
பாராட்டி மகிழ்கின்றேன்.
நன்றாக இருந்தது....கதை
குட் நல்லா இருக்கு ராஜி.
பெரிய பிரச்சனைகள்,எதிர்ப்புகள் இல்லாமல் சுமுகமாக முடித்த விதம் அழகு.
பெற்றோரா நினைச்சு தன்னுடன் வச்சுக்க தயாரா இருக்கறவரை
- யதார்த்தமா பதிவு பண்ணி இருக்கீங்க
எனக்கென்னமோ இந்த விஷயத்துக்காக தான் ஒத்துகிட்டாங்கலோன்னு ஒரு டவுட்டு!~
கதை அருமை.
நல்ல முடிவு!
எதார்த்தமான கதை. நல்லா இருந்தது.
நல்லா இருக்கு ராஜி மேடம்
@வை கோபாலகிருஷ்ணன்
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பிரபல எழுத்தாளர் சுஹராஜி!!!!!
உங்கள் வாய் முஹூர்த்தத்திலும் ஆசிர்வாதத்திலும்
இனிமேல்தான் வளர வேண்டும்
@ஆகாய மனிதன்
நன்றி
@ஹம்துன் அஷ்ரப்
நன்றி
@
நன்றி
@எல் கே
நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
கருத்துக்கு நன்றி ஆச்சி
@கலாநேசன்
நன்றி
@விக்கி உலகம்
பெரியவங்க தங்களோட செக்யூரிட்டிய பத்தி
நினைக்கறது தப்பில்லைதானே?
@சே குமார்
நன்றி
@வெங்கட் நாகராஜ்
கருத்துக்கு நன்றி
@கோவை2தில்லி
நன்றி ஆதி
@கோபி ராமமூர்த்தி
நன்றி
லேட் என்ட்ரியா இருக்கே
வாலன்டைன்ஸ் டே க்கு தங்க்ஸ் கூட
டாடா பை பை யோ?!!!!!!!!!(கண்டு பிடிச்சுட்டேனே:-))))) )
மிகவும் அருமை ..........சுபமான் முடிவு . பொறுமைக்கு கிடைத்த பரிசு .......
ரம்யா ஒரு தகப்பன் ஸ்வாமி!!! ;-)
கதை கலலவென்று நிறைய டயலாக்குடன் நன்றாக இருந்தது!
>>raji said...
ரம்யா வேற ராஜி வேற.
ரம்யா கற்பனை.
ஒவ்வொரு கதையோட கதபாத்திரமும்
எழுதினவங்களா ஆக முடியாது(ஹா ஹா ஒன் மோர் தத்துபித்துவம்)
ஆர் வி எஸ் சார் சொன்னாப்ல கதபாத்திரத்தை
எழுதினவங்களா நினைக்க ஆரம்பிச்சா,க்ரைம்
எழுத்தாளர் ராஜேஷ்குமாரை தூக்கி உள்ள போட்டிருப்பாங்க(தத்துபித்துவம் நம்பர் 2)
ஹா ஹா ஹாஅ...ஹாஅ....
ரைட்டு.. ஆர் வி எஸ் யாரு?நான் கேள்விப்படாத எழுத்தாளர் பேரா இருக்கே?
Post a Comment