
"ப்ரியா...! ப்ரியா..............!"
"ப்ஸு....!முகச்சுளிப்புடன் மிக்சியை நிறுத்தினாள் ப்ரியா
"ப்ரியா! நான் கூப்பிட்டுக்கிட்டுருக்கேன் என்னனு கூட
கேக்காம என்னதான் கிழிக்கறயோ?""என்ன வசந்த் வேணும்.காலை வேளைல சமையலறைல
வேலை இருக்காதா?எதுக்கு இப்பிடி கத்தறீங்க?"
"என்னது கத்தறேனா?உனக்கு நான் கத்தறதுதான் தெரியுது.நீ பண்றது தெரியுதா?அப்போலேருந்து என் ப்ளூ சாக்ஸ் தேடறேன் காணோம்.ஒரு இடமா வைக்க துப்பு இருக்கா?கூப்பிட்டா வந்து என்ன ஏதுன்னு கேட்டு எடுத்து தராம கத்தறேன்னு என்னை சொல்ற அளவுக்கு இருக்கு."
"இங்கதான இருக்கு.சரியா பாக்கறதே கிடையாது.என் மேலதான் எரிஞ்சு
விழத் தெரியும்"
"சரி சரி டிபன் ரெடி பண்ணிட்டியா?எனக்கு இன்னிக்கு சீக்கரம் போகணும்னு நேத்தே சொன்னேனே.ஞாபகமில்லையா?"
"எல்லாமே ரெடி"
"என் பென் ட்ரைவ் எங்க? எடுத்தியா? எடுத்தா எடுத்த இடத்துல வச்சுத் தொலையறதில்லையா"?
"நா எதுக்கு எடுக்கப் போறேன்? உங்க லேப்டாப் பேக்லையே இருக்கு.
ஒழுங்கா பாக்காம எல்லாத்துக்கும் ஏன்தான் இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழறீங்களோ?
"உன் பொலம்பலை ஆரம்பிச்சுடாத.நான் சாப்ட்டு கிளம்பறேன்"
திருமணமான நாளிலிருந்தே வசந்த் இப்படித்தான்.எதையும் தானாக
எடுத்துக் கொள்ள மாட்டான்.கண்ணெதிரில் இருக்கும் பொருளைக்
கூட தானாக எடுத்துக் கொள்வதில்லை.எதெற்கெடுத்தாலும் ப்ரியாவை
கூப்பிட்டு கத்தலோடு பேசுவான்.ப்ரியாவிற்கு சலிப்பாக இருந்தது.
இது என்ன வழக்கம் என்று வசந்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள்
தரையில் தண்ணீர் இருப்பதைப் பார்க்காமல் காலை வைத்தாள்.
"எத்தனை நாள் ரெஸ்டில் இருக்க வேண்டும் டாக்டர்?
"மைல்ட் பிராக்சர்தான் இருந்தாலும் நாலு வாரம் கட்டு போடணும்.
அதுவரை கொஞ்சம் ஸ்ட்ரெயின் ஆகாம பாத்துக்கங்க".
ப்ரியாவிற்கு வலியையும் தாண்டி மலைப்பாக இருந்தது.
சமையலையிலிருந்து குக்கர் விசில் வந்தது.கையில் ட்ரேயுடன் வசந்த் வந்தான்."இந்தா ஹார்லிக்ஸ் குடி.தெம்பாயிருக்கும்.என்ன
பாக்கற? சமயம் பாத்து அம்மாவும் டூர் போய்ட்டாங்களே,அடி பட்டிருச்சே எப்படி சமாளிக்கறதுன்னா? எல்லாம் நான் பாத்துப்பேன்.இதைக் குடிச்சுட்டு, மாத்திரை தரேன் அதைப் போட்டுக்கோ.இட்லி வச்சு சட்னி அரைச்சுட்டேன். மத்யானத்துக்கு சமையல் ஆகிட்டிருக்கு.ஒரு வாரம் லீவ் போட்ருக்கேன்.அதுக்கப்பறமும் எல்லாம் பண்ணி பக்கத்துல வச்சுட்டு போறேன்.நீ எதுக்கும் கவலைப் படாத"
மறு வாரம் வாக்கருடன் மெதுவாக தேவைக்கு மட்டும் நடந்தாள்.
சுற்றி ஒரு பார்வை பார்த்தாள். ரூம் சுத்தமாக இருந்தது.எல்லா ட்ரெஸ்ஸும் அயர்ன் செய்து கரெக்டாக
அடுக்கப் பட்டிருந்தது.படித்த பேப்பர் மடிப்பாக வைக்கப் பட்டிருந்தது.
சமையலறை கச்சிதமாக இருந்ததைப் பார்த்து ப்ரியாவுக்கு வியப்பாக இருந்தது.வசந்துக்கு இப்படி இருக்கத் தெரியுமா என்று ஆச்சர்யித்தாள்.
"ஹலோ!"
"ப்ரியாவா?எப்படி இருக்க? நான்தாண்டி உமா பேசறேன். கால் எப்படி இருக்கு?"
"ஹேய்!உமா! நீ எப்படி இருக்க? கால் நல்லா குணமாய்டுச்சு"
"ப்ரியா! ப்ரியா..........!
வசந்தின் குரல் கேட்டு, "உமா! நான் அப்பறம் பேசறேண்டி" என்று போனை வைத்தாள்.
"ப்ரியா.......!என்ன பண்ற? கூப்டறது கேக்கலையா?என் பிங்க் கலர்
ஷர்ட் எங்க வச்சுத் தொலைச்ச?"
வழக்கமாக வரும் முகச்சுளிப்பிற்கு பதில் ப்ரியாவிற்கு உதடு புன்னகையுடன் விரிந்தது.
18 comments:
மனைவி குணமடைந்து பழைய நிலைக்கு வந்ததும்,கணவனின் குணமும் பழைய நிலைக்கு வந்துவிட்டதா?நல்ல புரிதலே
எப்போதும் மசமசப்பாக இருப்பினும், சில ஆண்கள் மட்டும், RAISING TO OCCASION ஆக இருப்பார்கள். மனைவி பம்பரமாகச் சுற்றும்போது இவர்கள் சாட்டைபோல சோர்ந்து விடுவார்கள். நல்ல பதிவு.
2 to 3 in Tamilmanam & 0 to 1 in Indli. vgk
வசந்தப்பிரியா கதை நன்றாக இருந்தது. ப்ரியாக்களின் மேல் அன்பிருக்கும் வசந்துகள் ஏராளம். ஆனால் அன்பை வெளிப்படுத்துவதற்கு தெரியாமல் திண்டாடுவார்கள்.
ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதை. ;-))
மிகச் சுருக்கமாக மிகத் தெளிவாக
சொல்லவேண்டியதை படிப்பவர் உணரும் வண்ணம்
ிதிரைகதை அமைப்பதைப்போல
மூன்று காட்சிகளாக அமைத்து
சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
(பதிவின் தரத்தின் காரணமாக
காலதாமதம் பொருத்துக்கொள்ளப்படுகிறது)
சமயத்திலாவது உதவி செய்யராங்களே அதுவே பெரிய
விஷயம் இல்லியா.
சில ஆண்களூக்கு பிரியத்தைக் காட்டத் தெரியாது. அதற்காக பிரியமே இல்லை என்று அர்த்தம் இல்லை. மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றால் ஆடிப்போகிற கணவர் உண்டு.
இப்போதுதான் எதையும் ஷோ பண்ணுகிற நாகரிகம் வந்து விட்டது.
இந்தக் கதை இயல்பாய் ஒரு தம்பதியை அடையாளம் காட்டிப் போனது அழகாகவே.
Welcome back, Raji. Happy to see you !!!
நிறைய ஆண்கள் இப்படித்தான். தேவைப்படும்போது பொறுப்பை சுமப்பவர்கள். நல்ல கதை.
நல்ல சிறுகதை
நல்ல சிறுகதை ராஜி... நிறைய ஆண்கள் இப்படித்தான். மனைவிக்கு ஒன்று என்றால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்... அவர் உடல்நிலை தேறிவிட்டால் மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறி விடும்.... :))
இடைவெளிக்குப் பின் நல்ல பகிர்வுடன் வந்த உங்களுக்கு வாழ்த்துகள்...
நன்றாக இருக்கு.கடைசியில் ஒரு சின்ன சிரிப்பு வந்தது.
ஹ்ம்ம் கதை நல்லா இருக்கு . இன்னும் இதை கொஞ்சம் பாலிஸ் பண்ணலாம்னு தோணுது
ராஜி இது சீட்டிங்தானே , அலுவலகம் கிளம்பும் முன் ஆண்கள் பண்ணும் அடாவடிக்கும் அன்பிற்கும் சம்பந்தமே இல்லை. அந்த ஆட்டத்திற்கு பதில் ஆட்டம் கிளம்பாதவரை ராஜ்யம் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளும் சோதனை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் சிறுகதை மிக இயல்பு. அருமை.
நல்ல கதை. வெகு இயல்பாய் இருந்தது. நல்ல புரிதல்.
நல்ல கதை.
வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவின் தொடர்பாக 'முத்தான மூன்று' என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதன் இணைப்பு கொடுத்திருக்கிறேன். படித்து பாருங்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
சமையலையிலிருந்து குக்கர் விசில் வந்தது.கையில் ட்ரேயுடன் வசந்த் வந்தான்."இந்தா ஹார்லிக்ஸ் குடி.தெம்பாயிருக்கும்.என்ன
பாக்கற? சமயம் பாத்து அம்மாவும் டூர் போய்ட்டாங்களே,அடி பட்டிருச்சே எப்படி சமாளிக்கறதுன்னா? எல்லாம் நான் பாத்துப்பேன்.இதைக் குடிச்சுட்டு, மாத்திரை தரேன் அதைப் போட்டுக்கோ.இட்லி வச்சு சட்னி அரைச்சுட்டேன். மத்யானத்துக்கு சமையல் ஆகிட்டிருக்கு.ஒரு வாரம் லீவ் போட்ருக்கேன்.அதுக்கப்பறமும் எல்லாம் பண்ணி பக்கத்துல வச்சுட்டு போறேன்.நீ எதுக்கும் கவலைப் படாத"
ஆகா இதெல்லாத்தையும் செய்துவிட்டு திரும்பவும் முருங்க மரத்தில ஏற நினைத்ததை நினைத்து எங்கள் எல்லோரையும் சிரிக்கும்வண்ணம் செதுவிட்டீர்கள் சகோ .ஆண்களின் பிறவிக் குணத்தில் சிலவற்றை அழகாகப் படம்பிடித்துக் காட்டிய தங்கள் கதை அருமை!.............வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .
தமிழ்மணம் 8
பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி
@ரமணி
இனி பதிவு காலதாமதம் இன்றி அடிக்கடி வருமென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
@எல் கே
விளக்கமாக கூறி இருந்திருக்கலாம்
Post a Comment