சில்லென்று காற்று வீசும் ஒரு அருமையான மாலைப் பொழுது.
ஆறரை மணி அளவில் எப்பொழுது வேண்டுமானாலும் நான் வருவேனாக்கும் என்று மழை எட்டிப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் சமயம்.
அது ஒரு திறந்தவெளி அரங்கம்.மேடை மட்டும் கட்டிடத்தால் ஆனது.
எதிரே பார்வையாளர்கள் அமர திறந்தவெளியில் வரிசையாக நாற்காலிகள்
போடப்பட்டிருக்க மேடை ஒரு சங்கீத கச்சேரிக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
இடம் குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீமதி ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் அரங்கம்.ஆகஸ்ட் ஏழாம் தேதி மாலை
நேரம் ஞாயிற்றுக்கிழமை.
கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்கள் வர, பிரபல பாடகர் திரு. நெய்வேலி
சந்தான கோபாலன் அவர்களின் பாட்டுக் கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது.
திரு டில்லி சுந்தரராஜன் அவர்களின் வயலினுடனும் திரு சூரிய நாராயணன் அவர்களின் மிருதங்கத்துடனும் வர்ணம் ஆரம்பித்து வாதாபி கணபதிம்
பாடி முடித்ததும் உமாபரண ராகத்தில் பாடல் எடுத்தார்.பாதி பாடலின் போதே
சிறு தூற்றலுடன் ஆரம்பித்த மழை சற்று பெரிதாக பார்வையாளர்கள்
எழவும் மனமற்று ரசித்துக் கொண்டிருக்க சிலர் காரிடாரில் இடம் பிடிக்க
பாடல் முடிவில் சந்தான கோபாலன் அவர்கள் அனைவரையும் மேடையிலேயே வந்தமர்ந்து கேட்குமாறு கூறினார்.
அனைவரும் மேடையேறி அடுத்த கீர்த்தனையை ரசிக்க தயாரானார்கள்.
சுற்றி ரசிகர்கள் கூட்டம் அமர்ந்திருக்க அட்டகாசமாக "ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே" என்ற ஹிந்தோள ராக கீர்த்தனையை ஆலாபனையுடன்
தொடங்கினார்
.உண்மையிலேயே ராமனுக்கு முடி தரிக்கும் பொழுது நான் அருகில் இருந்திருந்தால் இப்படி ஒரு சந்தோஷம் கிட்டி இருக்குமா என தெரியவில்லை.எத்தனையோ மேடைக் கச்சேரிகள் கேட்டிருந்தாலும்
மேடையிலேயே ஒரு பிரபல பாடகரின் அருகிலேயே அமர்ந்து கச்சேரி கேட்ட அந்த அனுபவம் பரவசமாக இருந்தது."பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் ஆச்சே" என்று அவர் பாடிய பொழுது எனக்கு அப்படித்தான் தோன்றியது.
"கா வா வா, கந்தா வா வா" என்ற பாடலுக்கு அவரின் ஆலாபனைக்கு எதிரே இருந்த மரத்தில் ஒரு குயில் எதிர் குரல் கொடுக்க மழை தாளம் போட
அது ஒரு அற்புத நிமிடங்களாக அமைந்தது.
வித்தை கற்றவன் கர்வமற்றிருப்பது அவசியம்.இந்த வாக்கியத்திற்கு
மிகப் பொருத்தமானவராக இந்த பாடகரைக் குறிப்பிடலாம்.
ரசிகர்கள் அமர்வதற்காக பக்க வாத்தியக்காரர்கள் பாடகருக்கு மிக நெருக்கமாக அமர்ந்து வாசித்தது இன்னும் சிறப்பு.
மழைக்கு தவித்த ரசிகர்களை தன்னருகே அமர வைத்துக் கொண்டு மிக
உற்சாகமாக அங்கு நெய்வேலியின் சந்தனம் மணம் வீசியது.
22 comments:
//வித்தை கற்றவன் கர்வமற்றிருப்பது அவசியம்.இந்த வாக்கியத்திற்கு மிகப் பொருத்தமானவராக இந்த பாடகரைக் குறிப்பிடலாம்.
ரசிகர்கள் அமர்வதற்காக பக்க வாத்தியக்காரர்கள் பாடகருக்கு மிக நெருக்கமாக அமர்ந்து வாசித்தது இன்னும் சிறப்பு.மழைக்கு தவித்த ரசிகர்களை தன்னருகே அமர வைத்துக் கொண்டு மிக
உற்சாகமாக ... அங்கு நெய்வேலியின் சந்தனம் மணம் வீசியது.//
அவர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு கலைஞர் தான். பகிர்வுக்கு நன்றி.
"கா வா வா, கந்தா வா வா" என்ற பாடலுக்கு அவரின் ஆலாபனைக்கு எதிரே இருந்த மரத்தில் ஒரு குயில் எதிர் குரல் கொடுக்க மழை தாளம் போட
அது ஒரு அற்புத நிமிடங்களாக அமைந்தது.///
...கந்தனே வந்தானோ கானக் குயிலாக ?
அருமையான பதிவு.
நானும் என் சிறு வயதில் அனுபவித்திருக்கிறேன் மதுரை சோமுவின் கச்சேரியை - இது போல்.
@சிவகுமாரன்
இந்த தளத்திற்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்
http://www.wuzam.com/mp3/Madurai-Somu-enna-Kavi-Padinalum-mp3-download
இசைக்கு மிக அருகில் போவது என்பது இதுதானோ?!
உண்மையிலேயே அந்த நிமிடங்கள் ரசிகர்களுக்கு சொர்க்கம்தான்
நல்ல அருமையான கச்சேரி போல இருக்கே
பெரும்பாலும் கடினமான போர்வை போர்த்திக் கொண்டு இயல்பை மறைத்து நாட்களை கடத்தும் இந்த மாய உலகில், மழையும் இசையும் உள்ளிருக்கும் ஆத்மாவை அடையாளம் காட்டுவன. இரண்டும் சேர்ந்த அனுபவம் அதுவும் ஒரு close proximityக்குள் எனும்போது வரம் கிட்டியதுபோல்தான் . Very nice Raji.
வாழ்த்துக்கள் தோழி...
வள்ளுவர் மழை குறித்த அதிகாரத்தில்
கொடுப்பதுவும் கெடுப்பதுவும் மழை என
மிக அழகாகச் சொல்லிப் போவார்
உங்களுக்கு மிக அழகான வாய்ப்பைக்
கொடுத்துப் போன மழைக்கும்
அதை ரசிக்கும்படியான பதிவாக்கித் தந்த
உங்களுக்கும்
மிக்க நன்றி
மழைக்கு தவித்த ரசிகர்களை தன்னருகே அமர வைத்துக் கொண்டு மிக
உற்சாகமாக அங்கு நெய்வேலியின் சந்தனம் மணம் வீசியது.
...How sweet!
உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு கலைஞர் தான். பகிர்வுக்கு நன்றி.
சே.குமார் (http://vayalaan.blogspot.com)
ரசிக்கும்படியான பதிவாக்கித் தந்த
உங்களுக்கு
மிக்க நன்றி
ரசிகர்களையும் மேடை ஏற வைத்த அந்த கலைஞன் வாழ்க.
ஒரு கலைஞன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு.... உங்களுக்குக் கிடைத்தது நல்ல வாய்ப்பு... அதை எங்களிடமும் பகிர்ந்த உங்கள் நல்லெண்ணமும் பாராட்டுக்குரியது.
என்னுடைய கல்லூரி காலத்தில் இது போல ஒரு கிரேசி மோகன் நாடகத்தில் மழை வந்துவிட, திறந்த வெளி அரங்கத்திலிருந்து எல்லோரும் உள்ளரங்கத்திற்கு வரச்சொல்லி முழு நாடகத்தினையும் நல்ல விதமாய் முடித்துக் கொடுத்துச் சென்றார். அதன் நினைவினை உங்கள் பதிவு தூண்டிச்சென்றது.
சும்மாவே ஹிந்தோளம் மயக்கும். அதுவும் ஆலாபனை அதில் என்றால் கேட்கவும் வேன்டுமா? கூடவே இழைந்த மழைத்தூறலின் பக்க வாத்தியம்! கேட்டு ரசித்த நீங்கள் கொடுத்து வைத்தவர்!!
சில்லென்ற மழை நாளில் குயிலின் இசையுடன் ஒரு நல்ல பாடகரின் அருகில் அமர்ந்து கச்சேரியை ரசிக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.
மிகப் பெரிய ஆடிட்டோரியத்தில் கச்சேரி கேட்பவர்கள் பெருமைக்காக வருவார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான் உண்மையான ரசிகர்கள் இருப்பார்கள். இது நெய்வேலிக்கு தெரிந்துதான் மேடையிலேயே உட்கார வைத்துக் கொண்டு உற்சாகமாகப் பாடியிருப்பார்.
நெய்வேலி சந்தானகோபாலன் ஒரு ஆர்ப்பாட்டமில்லாத பாடகர். ஜெயா டி.வியில் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் போது அவரது எளிமை புரியும்.
பாட்டுக்கச்சேரி ஆரம்பிக்கும் முன் உங்களது வர்ணனை அபாரம். வாழ்த்துகள்.
அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
வித்தை கற்றவன் கர்வமற்றிருப்பது அவசியம்.
உண்மையான உண்மை ,
பகிர்வுக்கு நன்றி
//சில்லென்று காற்று வீசும் ஒரு அருமையான மாலைப் பொழுது.
ஆறரை மணி அளவில் எப்பொழுது வேண்டுமானாலும் நான் வருவேனாக்கும் என்று மழை எட்டிப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் சமயம்.//
படிக்கவே சூப்பரா இருக்கே
நெய்வேலி சந்தானகோபாலன் ஒரு ஆர்ப்பாட்டமில்லாத பாடகர். ஜெயா டி.வியில் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் போது அவரது எளிமை புரியும்.
பாட்டுக்கச்சேரி ஆரம்பிக்கும் முன் உங்களது வர்ணனை அபாரம். வாழ்த்துகள்.
"கா வா வா, கந்தா வா வா" என்ற பாடலுக்கு அவரின் ஆலாபனைக்கு எதிரே இருந்த மரத்தில் ஒரு குயில் எதிர் குரல் கொடுக்க மழை தாளம் போட
அது ஒரு அற்புத நிமிடங்களாக அமைந்தது.//மழையும் அதற்குத்தான் வந்ததோ?
Post a Comment