மதிப்பிற்குரிய வை கோபாலகிருஷ்ணன் அவர்களும், சக பதிவர்
ஆதி அவர்களும் 'மூன்று' தொடர்பதிவிற்கு என்னையும் தொடர
அழைத்ததன் காரணத்தால் நான் இதை தொடர்ந்துள்ளேன்
1. இசையும் பயணமும்
2 புத்தகம்
3 மழையில் நனைதல்
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1 பலர் உபயோகிக்கின்றனர் என்று அறிந்திருந்தும்
தெருவில் எச்சில் துப்புபவர்கள்
2 உடல்நலம் சரியில்லாதவர்களை பார்க்க சென்று விட்டு
தனக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இதற்கு முன் இது போல்
கஷ்டப்பட்டதை கூறி அவர்களை கலவரத்திற்கு உள்ளாக்குதல்
3 சமயத்தில் எனக்கு வரும் கோபம்
3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
1 மனசாட்சி
2 கரப்பான் பூச்சி
3 பாம்பு
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
1 அரசியல்வாதிகளை நம்பும் அப்பாவி தொண்டர்களின் செய்கைகள்
2 எத்தனை வருடங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவில் ஹீரோயினும்
ஹீரோவும் பாடும் டூயட்கள்
3 ப்ளஸ் ஒன் படிக்கும் பொழுது மேத்ஸ்ல கால்குலஸ்னு
ஒரு மேட்டர் இப்பவும் கூட சரியா புரியாது 5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
நமக்குன்னு தனி மேஜைலாம் வச்சுக்கலை.கணினி மேஜைதான் நம்ம
மேஜை.அதுல நான் வச்சுருக்கறது:
1 ஐ பாட்
2 நோட்டுப் புத்தகமும் பேனாவும்
3 வாட்ச்
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?
1 தில்லுமுல்லு படத்தில் சௌகார் ஜானகி அவர்களின் நடிப்பு
2 தேவன் கதைகள்
3 என்றும் நான் சிரித்துக் கொண்டிருக்க உதவும் உறவுகளும் நட்பும்
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1 வீணையின் நாலு ஸ்வர தந்திகளையும் மூன்று தாளத் தந்திகளையும்
ஒரு வழி செய்து 'ஆரபி' யை 'ஞே' என்று விழிக்க வைப்பது
2 எழுத்தாளர் 'பாலகுமாரன்' அவர்களின் 'உடையார்' முழுவதையும்
படித்துவிடும் முயற்சியில் இருப்பது
3 மகளை இடைத்தேர்வுக்கு தயார் செய்வது
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
1 உருப்படியாக ஒரு புத்தகம் எழுதுவது
2 அடையார் வாலண்டரி ஹெல்த் ஆர்கனைசேஷன் சென்று
நோயுற்றவர்களுக்கு உதவுவது
3 வாழ்நாள் முடிவைப் பற்றிய எண்ணமில்லாமல் இருப்பது
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
1 நம்மை விரும்புபவர்களையும் நாம் விரும்புபவர்களையும்
சங்கடப்படுத்தாமல் இருக்க நினைப்பது
2 இசை ஞானத்தை இன்னும் வளர்த்துக் கொள்வது(கொல்வது??!! :)) )
3 தினமும் காலையில் யோகாசனப் பயிற்சி
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1 குத்துப் பாடல்கள் என்ற பெயரில் காதுக்கு நாராசமான
இசையுடனும் சகிக்காத வார்த்தைகளுடனும் கூடிய பாடல்கள்
2 மழைக்காலத்தில் தவளையின் கத்தல் மற்றும் சுவர்க்கோழியின்
படுத்தல்
3 இரைச்சலான சண்டைகள்
1 தையல்
2 கைவேலைப்பாடுகள்
3 எமோஷனலாக இல்லாமல் பேலன்ஸ்டாக இருப்பதற்கு
12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
1 அம்மா கையால் செய்த அவியல்
2 தோழி எனக்கென்று ஸ்பெஷலாக செய்யும் பால் கொழுக்கட்டை
3 கத்திரிக்காய் கொத்சு, பூசணிக்காய் கூட்டு தி கிரேட் தச்சு மம்மு வித்
எனி ஊறுகாய்( ச்சே! இந்த கேள்விக்கு மட்டுமாவது எவ்வளவு வேணா
பதில் சொல்லலாம்னு ரூல் போட்ருக்க கூடாதா?)
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்
கர்நாடக இசையில்: 1 ராமம் பஜே 2 என்ன கவி பாடினாலும்
3 காயதி வனமாலி
சினிமா பாடல்கள்:
1 தென்றல் வந்து என்னைத் தொடும் 2 காற்றே என் வாசல் வந்தாய்
3 அமுதும் தேனும் எதற்கு
14) பிடித்த மூன்று படங்கள்?
1 ரிதம்
2 ஹிந்தியில் 'பா'
3 டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்கள்
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
1 காதல்
2 நட்பு
3 பாசம்
24 comments:
நன்றி திருமதி ராஜி.
ஸ்ரீ வில்லிபுத்தூர் மண் வாசனை ஈர்க்கிறது. இங்கு இப்போது ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேரோட்டம்.. நான் அந்த பதிவில் தீவிரமாக இருக்கிறேன். நீங்கள் தொடர் பதிவு எழுத அழைத்ததிற்கு நன்றி. விரைவில் எழுதுகிறேன்.
வாழ்த்துக்கள்.
பல்வேறு குடும்பப்பொறுப்புக்களுக்கு இடையே, எங்கள் அழைப்புக்களையும் தட்டமனமின்றி, அதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தங்களின் விருப்பு வெறுப்புக்களை வெகு அழகாக பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.
8 வது கேள்விக்கான தங்களின் முதல் இரண்டு பதில்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்கள் மனதின் விருப்பம் போலவே அனைத்தும் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்புடன் vgk
ரிதம் எனக்கும் பிடிக்கும்
மிக அருமையான பதில்கள் ராஜி. நட்புடன் அழைத்தமைக்கு என் அன்பான நன்றி.
பயோடேட்டா 16*3=48 ம் அருமை சகொதரி
//12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
1 அம்மா கையால் செய்த அவியல்
2 தோழி எனக்கென்று ஸ்பெஷலாக செய்யும் பால் கொழுக்கட்டை//
அப்ப உங்களுக்கு சமைக்கத் தெரியாது. (அல்லது) சமைச்சாலும் உங்க சமையலை நீங்க சாப்பிட மாட்டீங்க. கிரேட்!
//3 கத்திரிக்காய் கொத்சு, பூசணிக்காய் கூட்டு தி கிரேட் தச்சு மம்மு வித் எனி ஊறுகாய்( ச்சே! இந்த கேள்விக்கு மட்டுமாவது எவ்வளவு வேணா
பதில் சொல்லலாம்னு ரூல் போட்ருக்க கூடாதா?)//
இதுக்கும் மேல இருக்கா.?
(என்னைய மாதிரி வளர்ர பிள்ளைங்க சாப்பிடதேவைப்படுது... லிஸ்ட்ட கொறைச்சுக்குங்க.)
//2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1 பலர் உபயோகிக்கின்றனர் என்று அறிந்திருந்தும்
தெருவில் எச்சில் துப்புபவர்கள்
2 உடல்நலம் சரியில்லாதவர்களை பார்க்க சென்று விட்டு
தனக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இதற்கு முன் இது போல்
கஷ்டப்பட்டதை கூறி அவர்களை கலவரத்திற்கு உள்ளாக்குதல்//
இந்த குணம் எல்லருக்கும் வரட்டும்!
//3 சமயத்தில் எனக்கு வரும் கோபம்//
”பயோ”டேட்டா-வ ஏங்க ”பய”டேட்டா-வா மாத்திட்டீங்க?
ரசனையான பதில்கள்
@சத்ரியன்
என்னதான் நாம சூப்பர் சூப்பரா சமைச்சாலும் அடுத்தவங்க கையால
உக்காந்து சாப்பிடற சுகம் தனிதான்.அதுவும் பெண்களுக்கு பிறந்த வீட்டு
சாப்பாடு தனி சுகம்
நல்ல ரசனையான பதில்கள். காற்றே என் வாசல் வந்தாய் உன்னிகிருஷ்ணனின் சூப்பர் டூப்பர் ஹிட்.
“துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே” என்ற இடத்தில் துள்ளியிருப்பார்.
ஒரு சின்ன சந்தேகம்.
யார்கிட்டயுமே பயப்படாத இந்த பெண் சமூகம் தம்மாத்தூண்டு கரப்பான் பூச்சியைப் பார்த்து ஏன் அலறுது!!!
அருமையான பதிலகள்
ரசனையான பதில்கள்
எல்லா பதில்களும் மிகைப்படுத்தப்படாமல், மிக இயல்பாக இருக்கின்றன.
தினமும் காலையில் யோகாசனப் பயிற்சி
ம்ம்.. இதே தொல்லைதான் என்கிட்டேயும்.. ஏழு மணி ஆபீஸ் பஸ்ஸை பிடிக்க படுகிற அவஸ்தையில் நாளைக்கு நிச்சயம் என்று என்னை நானே ஏமாத்திக் கொள்ளும் சாமர்த்தியம்.. சூர்ய நமஸ்காரம் மட்டுமாவது என்று இரண்டாவது மாடி பால்கனியில் எட்டிப்பார்க்கிற சூரியனை ‘ஹாய்’ சொல்லிப் போகிற அவசர காலைகள்!
Super answers... Thanks ராஜி'க்கா for inviting me to write... கண்டிப்பா எழுதறேன் ...:)
மிகத் தெளிவான பதிவு
நீங்கள் அதிக நாட்கள் பதிவிடாமல் இருந்ததற்கான
காரணம் 7 இல் உள்ள 3தான் என நினைக்கிறேன்
8 ல் உள்ள ஒன்று மற்றும் இரண்டையும் நிச்சயம்
நீங்கள் செய்து முடித்துவிடுவீர்கள்
அதற்கான திறனும் மனமும் உங்களிடம்
அதிகம் உள்ளதை பதிவின் மூலமே அறிந்து
கொள்ள முடிகிறது
15 இ உள்ள மூன்றையும் இன்றுபோல
என்றும் பெற்று தொடர்ந்து சிறப்போடு வாழ
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
//என்ன கவி பாடினாலும் //
யார் பாடியது ? அருணா / மதுரை சோமு ??
எல்லா தாய்க்குலங்களையும் நடுங்க வைக்குக்ம் கரப்பான் பூச்சி வாழ்க
தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துகிறேன்
அருமையாய் இயலபாய் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்: இறந்தவீட்டிற்குச் சென்றால், எப்படித்தான் இந்த இழப்பைத் தாங்குகின்றீர்களோ என்று கேட்டு உறவினர்களை இன்னும் துயரத்தில் தாழ்த்துவது. 30 நாள்கள் சமைத்துக் கொடுத்து 30 நாள்களும் இருந்தபடி அழுது கொண்டேயிருங்கள் என்றுவிடுவது. இப்படிப்பல. துயரத்தை மாற்ற உறவினர்களை வெளியில் கூட்டிச் செல்லுதல் போன்ற பல விடயங்களை ஐரோப்பியர்கள் செய்யும்போதுதான் எங்கள் தவறு புரிகின்றது. காற்றே என் வாசல் வந்து எனக்கும் மிகப் பிடித்த பாடல் இப்படி எமக்கும் பிடிக்கும் பல விடயங்களை உங்கள் பதிவில் காணுகின்றேன். வாழ்த்துகள்
முடிச்சுக்கள் அனைத்தும் அருமை..
நிறைவேற நினைப்பவை அத்தனையும் அடைந்திட வாழ்த்துக்கள்..
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்...
http://sempakam.blogspot.com/
@ எல் கே
மதுரை சோமு அவர்கள் பாடி முதன் முதலில் சிறு வயதில் கேட்டதால்
அதுவே முதலில் என் மனதில் பதிந்தது
பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் மிக்க நன்றி
அத்தனையும் முத்துக்கள்.
மதுரை சோமுவின் என்ன கவி பாடினாலும் - என்னை மிகவும் கவர்ந்த பாடல். வெகு நாளாய் தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கு கிடைக்கும் ? உதவ முடியுமா ப்ளீஸ்.?
என் அழைப்புக்கும் செவி சாய்த்து பதிவிட்டமைக்கு நன்றி ராஜி.
நல்ல பதில்கள். ஒரு விஷயம் சொல்லட்டுமா.... எல்லாத்துக்கும் பயப்படற நான் கரப்பான் பூச்சிக்கு பயப்பட மாட்டேன்.
அவியல், பால் கொழுக்கட்டை எனக்கும் பிடித்த அயிட்டங்கள்.
Post a Comment