Wednesday, March 2, 2011

சிந்திக்குமா சி பி எஸ் சி


மார்ச் மாதம் வந்தாச்சு.பரிட்சை உத்சவம் ஆரம்பிச்சாச்சு.
எனவே ஒரு கல்வி சம்பந்தமான பதிவு இது.

ஆனால் இந்த பதிவு இந்த வருடம்  இனி எதற்கும்  உபயோகமில்லை.
வரும் கல்வியாண்டிலாவது பெற்றோர்கள் விழித்துக் கொள்ள
உதவியாய் இருக்கட்டுமே என்பதற்காகவே இப்பதிவு.
இனி  விஷயத்திற்கு வருவோம்.


போன கல்வியாண்டில் (2009  - 2010 ) ஆகஸ்ட் மாதத்தில்
சி பி எஸ் சி பாட திட்டத்தில் திடீரென்று ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது.அதாவது அந்த வருடம் பத்தாம் வகுப்பு பயிலும்
மாணவர்களுடன் பொது தேர்வு முடிவுக்கு வந்து விட்டதாகவும் அந்த
வருடமும் மார்க்குகள் ரீதியாக ரிசல்ட் இல்லாமல் கிரேட் ரீதியாக
ரிசல்ட் வழங்கப் படும் என்றும் அறிவிக்கப் பட்டது.

அதன் படி அந்த வருட மாணவர்களுக்கு கிரேட் ரீதியாகவே ரிசல்ட்
வழங்கப் பட்டது.

பின்னர் சில தரப்புகளின் எதிர்ப்பினாலும், பொது தேர்வு எழுதாத
மாணவர்களை மாநிலக்  கல்வி முறை (state board ) பதினொன்றாம் வகுப்பில் அனுமதிக்க ஒத்துக் கொள்ளாததாலும் பிரச்சனைகளை கருத்தில்
கொண்டு நடப்பு ஆண்டில்  சி பி எஸ் சி யில் பொது தேர்வை optional  என்ற முறையில்
மாற்றி விட்டனர்.

அதாவது எந்த மாணவர்களுக்கெல்லாம் state board மாறிக் கொள்ள வேண்டுமோ அவர்கள் பொது தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்றும்
விருப்ப படாதவர்கள் school based exam எழுதலாம் என்றும் மாற்றி
அமைத்தனர்

பொது தேர்வு என்பது சி பி எஸ் சி board  ல் வினாத்தாள்கள் அமைத்து
விடைத்தாள்களை அவர்களே திருத்தும் முறை என்றும்,
school based exam  என்பது வினாத்தாள்கள் மட்டும் சி பி எஸ் சி யில்
அமைத்து விடைத்தாள்களை பள்ளியிலேயே திருத்தும் முறை என்றும்
திட்டம் செய்தனர்

இப்பொழுது இதில் என்னவெல்லாம் சிக்கல்கள் என்றால்
பொது தேர்வு எழுதுவதும் வேண்டாமென்பதும் பல பள்ளிகளில்
(முக்கியமாக பெயர் வாங்கிய பெரிய பள்ளிகளில்) மாணவர்களின் விருப்பமாகவோ அல்லது பெற்றோரின் விருப்பமாகவோ
இல்லாது அதை அந்த பள்ளியே முடிவு செய்து விடுகிறது.

உதாரணமாக ஒரு சி பி எஸ் சி பள்ளியில் பத்தாம் வகுப்பிற்குப்
பின் ஸ்டேட் போர்டு இல்லை என்றால் மாணவர்கள் வெளியில்
சென்று விடுகிறார்கள் என்ற ஒரே காரணத்தால் அந்த பள்ளியில்
மாணவர்கள் பொது தேர்வு எழுதாது school  based  exam  எழுத வேண்டும் என்று  விஷயத்தை அந்த பள்ளியே முடிவு செய்து சி பி எஸ் சி க்கு அனுப்பி விடுகிறது.

அவ்வாறு school based exam எழுதும் மாணவர்களை state board பள்ளிகள்
அனுமதிக்க மறுப்பதால் வேறு வழி இன்றி அந்த மாணவர்கள்
அந்த பள்ளியிலேயே மறுபடியும் சி பி எஸ் சி படிப்பையே
தொடர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் படுகிறார்கள்.

மேலும் grade  system என்பது நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும்
பின் தங்கிய மாணவர்களுக்குமே ஒத்து வருகின்ற விஷயமாக உள்ளது

அதாவது 91  - 100 வரை எடுப்பவர்களுக்கு பாதகமில்லை.இதில் எந்த மார்க்
எடுத்தாலும் அவர்கள் A 1 grade தான்.
அதே போல் பின் தங்கிய மாணவர்களை fail  செய்யக் கூடாது என்று
சி பி எஸ் சி திட்டத்தில் அமைத்து விட்டார்கள்.
அதனால் படிக்காமலே பரீட்சையை attend செய்து கிறுக்கினாலும் pass
தான்.
இது என்ன திட்டம்? பத்தாவது படிக்கும் பொழுது கூட மாணவர்களுக்கு
படிப்பின் மீது அக்கறை ஏற்படாவிடில் அதன் பின் எந்த வயதில்தான்
ஏற்படுவது?
இதில் பரிதாபத்துக்குரியவர்கள் mediocre performer என்று கூறப்படும்
மாணவர்கள்தான்.கஷ்டப்பட்டு படித்து எழுதி இருந்தாலும்
அவர்கள் 71 க்கு பதில் 70 மார்க்குகள் எடுத்து விட்டால் அடுத்த grade  க்கு
தள்ளப் பட்டு விடுவார்கள்.(71   - B 1 )(70  ௦ _ B  2 )

70 மார்க் வாங்கி B 2  வாங்கி இருந்தாலும் உலகம் இவர்களை 61
வாங்கியதாக கூட பார்க்கலாம்.ஏனென்றால் B 2 என்பது 61 லிருந்து
70 வரை.

இதை  எல்லாம் விட கொடுமை என்னவென்றால் பரிட்சை
என்பது மார்ச்சில் நடப்பது மட்டுமன்று.

ஜூலை - formative assessment  1  - 10 %  (பரிட்சை வைத்து அதில் 10 %)

ஆகஸ்ட்  - formative assessment 2 - 10 %
செப்டெம்பர்-summative assessment 1 -20 %

நவம்பர்-formative assessment 3  -  10%


ஜனவரி

அல்லது
டிசம்பர் --- formative assessment 4  - 10 %

இறுதியாக
மார்ச்     ---- summative assessment 2 - 40  % (எல்லாத்தையும் கூட்டினால் 100 %)

இப்படித்தான் பரிட்சை முறை.அது பொது தேர்வானாலும் சரி அல்லது
school  based exam என்றாலும் சரி.


மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த system படித்த
பெற்றோர்களுக்கு கூட புரியாமல் தலை சுற்ற வைப்பதுதான்.
அதை  விட மாணவர்களுக்கு  தான் எந்தெந்த பரிட்சையில் எவ்வளவு
எடுத்துள்ளோம்,  இன்னும் நல்ல மார்க் வாங்க நாம் எவ்வளவு
எடுக்க வேண்டும் என்பது கூட புரியாமல் இருக்கும் நிலைதான் கொடுமையானது.

பரிட்சை முடிவுகளுக்கு பின்னர் நடக்கும் தற்கொலைகளை தடுக்கவே
இந்த திட்டம் என்பதாக வேறு ஒரு கூற்று.

மாணவர்களை மனோதிடம் கொண்டவர்களாக ஆக்க முயற்சிக்காமல்
இன்னும் அறிவற்றவர்களாகவும்  முயற்சி அற்றவர்களாகவுமே
இது மாற்றும்.

இதை சிந்தித்து  மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி
வரும் கல்வியாண்டுகளில் மாற்றம் செய்வது நன்மை பயக்கும்.

சிந்திக்குமா?????????????

24 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

காலத்திற்கேற்ற மிகவும் நல்லதொரு பதிவு. கல்வி முறைகளில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படுகிறதோ இல்லையோ இது போல அடிக்கடி ஏதாவது குழப்பங்களைக் கொண்டு வந்து, அரசாங்கமும் குழம்பி, கல்வித் துறையையும் குழப்பி, பெற்றோர் & மாணவர்கள் எல்லோரையும் ஒரேயடியாகக் குழம்பச் செய்து விடுகிறார்கள், என்பதே உண்மை.

//மாணவர்களை மனோதிடம் கொண்டவர்களாக ஆக்க முயற்சிக்காமல் இன்னும் அறிவற்றவர்களாகவும் முயற்சி அற்றவர்களாகவுமே இது மாற்றும்.//

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் வாய்க்கு சர்க்கரை தான் போடவேண்டும். சிந்திக்கத் தூண்டும் ஒரு விஷயத்தைப் பதிவு செய்ததற்கு பாரட்டுக்கள்

எல் கே said...

ஸ்டேட் போர்டுடன் கம்பேர் செய்யும்பொழுது சி பி எஸ் சி எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் இந்தக் கோமாளி கபில் தேவை இல்லாமல் குழப்ப செய்துக்கொண்டிருக்கிறார்.

Yaathoramani.blogspot.com said...

நல்ல பயனுள்ள பதிவு.மிகவும் சிரத்தையுடன்
தகவல்களை சேகரித்து தந்ததை விட
குழப்பமானதை குழப்பமின்றி தந்தமைக்கு
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
தொடரட்டும் உங்கள் சிறப்புமிக்க
பதிவுலகப் பணி.வாழ்த்துக்களுடன்...

raji said...

இப்பதிவில் கூற எண்ணி விடுபட்ட தகவல் இது:

மார்ச் மாத பரிட்சைக்கு மட்டுமே ரிவிஷன் பரிட்சைகள்
வைக்கப்பட்டு மாணவர்கள் தயார் செய்யப் படுகின்றனர்.
ஆனால் மார்க்குகளை கணக்கில் எடுக்கும் பொழுது ஜூலை,
ஆகஸ்ட்,செப்டெம்பர்,நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களின்
மார்க்குகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது.
அப்படி என்றல் அந்த பரிட்சைகளுக்கெல்லாம் ரிவிஷன்
தேவை இல்லை என்றாகிறதே.அதை எல்லாம் சேர்த்தால்
60% ஆகிறது.60% க்கு ரிவிஷன் இல்லாமலும் 40%க்கு
ரிவிஷனும் செய்தால் அதில் மாணவர்களுக்கு என்ன
பிரயோஜனம் இருக்க முடியும்?

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவு. நல்ல அலசலும்கூட...
ரியான நேரத்தில் சரியான பதிவு...

Nagasubramanian said...

//மாணவர்களை மனோதிடம் கொண்டவர்களாக ஆக்க முயற்சிக்காமல்
இன்னும் அறிவற்றவர்களாகவும் முயற்சி அற்றவர்களாகவுமே
இது மாற்றும்.//
கசப்பான உண்மை.

Chitra said...

இருங்க... தலை சுத்துது... இந்த சிஸ்டம் புரிந்து கொள்ளவே தனி வகுப்புக்கு போய் பாஸ் ஆகணும் போல. அவ்வ்வ்வ்....

raji said...

@சித்ரா
நீங்க வேற.இந்த சிஸ்டம் புரியாம
இன்னும் சி பி எஸ் சி பள்ளிகளின் ஆசிரியர்களே
ட்ரெய்னிங்குக்கு போய்க்கிட்டு இருக்காங்க.
அதை தாண்டியும் சந்தேஹம் வந்தா இன்னொரு
சி பி எஸ் சி பள்ளியை தொடர்பு கொண்டு சந்தேகத்தை
தீத்துக்கறாங்க.அப்டின்னா பெற்றோர்கள்,
மாணவர்களின் நிலையை யோசிச்சு பாருங்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

Chitra said...
//இருங்க... தலை சுத்துது... இந்த சிஸ்டம் புரிந்து கொள்ளவே தனி வகுப்புக்கு போய் பாஸ் ஆகணும் போல. அவ்வ்வ்வ்...//

சித்ரா மேடம், நீங்கள் வெகு அழகாகச் சொல்லி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போலவே தான் என் நிலைமையும்.

என் வீட்டில் இப்போது யாரும் பள்ளிகளில் படிக்காததால், இதைப்பற்றியெல்லாம் எனக்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை.

புரிந்து கொள்ள நேரமோ, பொறுமையோ, ஆர்வமோ, தேவையோ இப்போதைக்கு எனக்கு இல்லை.

இந்த எலிப் பிரச்சனையை வேறு நான் இழுத்து விட்டுக் கொண்டுள்ளேன். அதற்கே நேரம் சரியாக உள்ளது.

வேலியில் போகும் ஓணானைப் பிடித்து வேஷ்டியில் விட்டுக்கொண்டு குத்துதே குடையுதேன்னு சொன்னானாம் ஒருவன் என்று ஒரு கதை சொல்லுவார்களே அது போலத்தான் நானும் இப்போது.

ஒரே சிரிப்பு தான் போங்க !

நிரூபன் said...

இந்தத் தேர்வு மதிப்பீடுகள் உங்கள் நாட்டில் எவ்வாறான அடிப்படையில் கணிப்பீடு செய்யப்படுகின்றன என்பது தெரியவில்லை. ஆதலால் இப் பதிவு பற்றி விமர்சிக்க முடியவில்லை சகோதரி. ஆனாலும் காலத்திற்கேற்ற காத்திரமான பதிவு என்பது மட்டும் நிஜம்.

r.v.saravanan said...

பயனுள்ள பதிவு பாரட்டுக்கள்

ADHI VENKAT said...

நல்லதொரு பதிவு. இந்த சிஸ்டம் எல்லாம் புரியவே மாட்டேங்குது. முயற்சி செய்து மதிப்பெண்களை அதிகரித்து வாங்க வேண்டும் என்ற எண்ணமே போய் விடுமே!

middleclassmadhavi said...

விரிவான தகவல்களுடன் அழகான பதிவு. நீங்கள் சொல்வது போல் mediocre மாணவர்களுக்குத் தான் கஷ்டம். கபில் சிபல் புரிந்து கொள்வாரா?

சமச்சீர் கல்வியே பயமாயிருக்கு...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. கபில் சிபல் மட்டுமல்ல, இவருக்கு முன்னால் இருந்த அர்ஜூன் சிங் அவர்களும் எப்படியெல்லாம் குழப்பமுடியுமோ அத்தனை குழப்பங்கள் செய்து விட்டு சென்றுவிட்டார். அத்தனை குழப்பங்களிலும் நொந்து போய் இருப்பது படிக்கும் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களுமே!

RVS said...

அற்புதமான தகவல்கள்... ;-)))
படிப்பு சம்பந்தப்பட்டது.... கொஞ்சம் ஒதுங்கியே இருக்குறது நல்லது.. ;-))))
ராஜி... நீங்க டீச்சரா?

R. Gopi said...

I repeat RVS

Solomon said...

Some of the concerns raised by the author are addressed at http://wikieducator.org/CONTINUOUS_AND_COMPREHENSIVE_EVALUATION-Article

http://en.wikipedia.org/wiki/Continuous_and_comprehensive_evaluation

sundarmeenakshi said...

continuous Evaluation nalldhudhan nanbara
for example unga payan ஜூலை exam attend pannamuiyaviddalum fail agamaddar.thodarndhu ஆகஸ்ட்
செப்டெம்பர் exam pick up pannalam.
ora oru end exam vaidhu ivan padikindra payan ivan padikadha payan ena yaralum mudivu panna mudiyadhu.adharkudhan indha continuous Evaluation.

ஜூலை - formative assessment 1 - 10 % (பரிட்சை வைத்து அதில் 10 %)

ஆகஸ்ட் - formative assessment 2 - 10 %
செப்டெம்பர்-summative assessment 1 -20 %

நவம்பர்-formative assessment 3 - 10%



நவம்பர்-
ஜனவரி

அல்லது
டிசம்பர் --- formative assessment 4 - 10 %

இறுதியாக
மார்ச் ---- summative assessment 2 - 40 % (எல்லாத்தையும் கூட்டினால் 100 %)

raji said...

பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

raji said...

@ Solomon Antony

//The aim is to reduce the workload on students and to improve the overall skill and ability of the student by means of evaluation of other activities. Grades are awarded to students based on work experience skills, dexterity, innovation, steadiness, teamwork, public speaking, behaviour, etc. to evaluate and present an overall measure of the student's ability. This helps the students who are not good in academics to show their talent in other fields such as arts, humanities, sports, music, athletics, etc.//

இந்த தளங்களை நான் படித்திருக்கிறேன்.
பெற்றோர்களும் இவற்றை படித்து அறிந்திருந்தாலும்
இதில் குறிப்பிட்ட படி எல்லாமே பள்ளிகளில் நடப்பதில்லை.
மாணவர்களின் வொர்க் லோடை குறைப்பதாக கூறும் இந்த முறையில்
உண்மையில் மாணவர்களுக்கு மட்டுமல்லாது
பெற்றோர்களுக்கும் வொர்க் லோட் அதிகம்தான் ஆகிறது.
ப்ராஜெக்ட் என்ற பெயரில் கணிணி உதவி நாடுவதும்
அதற்கு பெற்றோர் பல வேலைகளை செய்யும் படி இருப்பதும்
படிக்கும் நேரம் குறைவதும் நடக்கிறது.மேலும் நான் அகடமிக் ஆக்டிவிட்டீஸ்
என்று ஆசிரியர்கள் கையில் மார்க் விஷயம் மட்டிக் கொள்வதால்
பார்ஷியாலிட்டி என்ற விஷயம் இடிக்கிறது,.இதை பற்றி
புலம்புவதானால் நிறைய புலம்பலாம்

raji said...

@ sundarmeenakshi

ஆகஸ்ட்டில் சரியாக பண்ணலைன்னா செப்டெம்பரில் பிக் அப் பண்ணலாம்தான்.
அது அந்த ஆசிரியர் அந்த மாணவனை நல்லா படிக்காத பையன் என்று முத்திரை குத்தாத பட்சத்தில்.
இந்த முத்திரை விழாமல் இருப்பதற்காகதான் முன்பு பொது தேர்வுக்கு விடைத்தாள்கள் திருத்துவதற்கு
வெளியே அனுப்ப பட்டன.
ஆனால் இப்பொழுதோ 60% க்கு ஆசிரியர்கள் கையில்.பார்ஷியாலிட்டி என்ற பெயரில் பல பள்ளிகளில்
பல மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்களே.

//ora oru end exam vaidhu ivan padikindra payan ivan padikadha payan ena yaralum mudivu panna mudiyadhu.adharkudhan indha continuous Evaluation.//

ரொம்ப கரெக்ட்.பட் இப்ப பதினொன்றம் வகுப்புக்கு அட்மிஷ்ன் க்கு வேற
பள்ளிக்கு போனா அவங்க செப்டெம்பர் க்ரேட் கேக்கறாங்க.அதை வச்சுதான் அட்மிஷன்
அப்பிடிங்கறாங்க.அப்பிடின்னா இறுதி பரிட்சை எதுக்கு?
அப்பறம் என்ன பெரிசா continuous comprehensive
evaluation?

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலைப்பார்த்ததும் என்னைத்தான் தாக்கறீங்களோன்னு ஆர்வமா படிச்சா..? ஹி ஹி

GKP Pillay said...

It's very interesting & useful to me as my child is studying in this system.
CBSE syllabus is only from 1st std. onwards..
They are getting ready the KGs to CBSE according to their own syllabus..Is it true?
What is that CCE pattern?(starts from 6th onwards...)
If u have any ideas share with us......

raji said...

@GKP Pillay

//They are getting ready the KGs to CBSE according to their own syllabus..Is it true?//

s, it is.

CCE pattern: what i have told in my blog is comes under this CCE pattern only.
that is FA 1+FA 2+SA 1+FA 3+FA 4+SA 2 is the
total result of the child.
FA 1 - 10% (they keep the test for 100 marks.
FA 2 - 10% from that they calculate these %)
SA 1 - 20%
FA 3 - 10% (these exams conducted every month)
FA 4 - 10%
sa 2 - 40%

total - 100%


(FA - Formative Assaessment.
SA - Summative Assessment)

if u have more doubts about this means u can
go thru the 'CCE Corner' in google.

Post a Comment