திருநெல்வேலியின் தாமிரபரணிக் கரையை சுற்றி ஒன்பது வைணவ
திவ்ய தேசங்களான நவ திருப்பதிகள் அமைந்துள்ளன.அவற்றில்
திருக்குளந்தை எனப்படும் பெருங்குளம் ஒரு திவ்ய தேசம் ஆகும்.
ஆழ்வார்களால் பாடப்பட்ட நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் இந்த நவ
திருப்பதி மிகவும் முக்கியத்துவம் பெற்றவை
ஸ்தல புராணம்: வேதசாரன் மற்றும் குமுதவல்லி என்ற தம்பதியினருக்கு
நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் இங்குள்ள குளத்தில்
நீராடி இறைவனை நோக்கி தவம் செய்ய மகாவிஷ்ணு இவர்களுக்கு
பெண் குழந்தைப் பேற்றை வரமாக அருளினார்.
கமலாவதி என்ற பெயர் பெற்ற அந்த பெண் குழந்தை இறைவனையே
மணக்க விரும்பி தவமிருக்க அதில் மகிழ்ந்த எம்பெருமான் அவளை
மணந்து தனது மார்பில் இடமளித்தார்.
இத்தலத்தில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி அஸ்மசாரன்
என்னும் அசுரனை வதம் செய்து அந்த வெற்றியில் நாட்டியமாடியதால்
ஸ்தல புராணம்: வேதசாரன் மற்றும் குமுதவல்லி என்ற தம்பதியினருக்கு
நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் இங்குள்ள குளத்தில்
நீராடி இறைவனை நோக்கி தவம் செய்ய மகாவிஷ்ணு இவர்களுக்கு
பெண் குழந்தைப் பேற்றை வரமாக அருளினார்.
கமலாவதி என்ற பெயர் பெற்ற அந்த பெண் குழந்தை இறைவனையே
மணக்க விரும்பி தவமிருக்க அதில் மகிழ்ந்த எம்பெருமான் அவளை
மணந்து தனது மார்பில் இடமளித்தார்.
இத்தலத்தில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி அஸ்மசாரன்
என்னும் அசுரனை வதம் செய்து அந்த வெற்றியில் நாட்டியமாடியதால்
இப்பெருமாளுக்கு சோரநாட்டியன் (மாயக்கூத்தன்) என்ற திருநாமம்
ஏற்பட்டது.
இத்தலம் சனி ப்ரீதிக்கு பெயர் பெற்றது.
திருக்குளந்தை எனப்படும் பெருங்குளத்தில் பங்குனி உத்சவம் மிகவும்
விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.அந்த பங்குனி உத்சவத்தின் ஒரு
துளியும் ஊரின் அழகும் இங்கே புகைப்படங்களாகத் தரப்பட்டுள்ளது.
திருக்குளந்தை கோபுரம்:

தாமிரபரணி ஆறு: தாமிர தாதுக்கள் அடங்கியிருப்பதால் தாமிரபரணி என்ற பெயர் பெற்றதாகக் கூறப் படுகிறது. தாமிரபரணி என்ற பெயருக்கு மற்றுமொரு காரணமும் உண்டு. தான் மறந்த பர நீர் , அதாவது தன்னை
மறந்து பிறருக்காகவே ஓடும் நீர் என்று பொருள். இதற்கு பொருணை
என்ற பெயரும் உண்டு.தாமிரபரணியின் அழகை கீழே புகைப்படத்தில் கண்டு களிக்கலாம்.
என்ற பெயரும் உண்டு.தாமிரபரணியின் அழகை கீழே புகைப்படத்தில் கண்டு களிக்கலாம்.
திருக்குளந்தை என்ற இந்த ஊரில் அமையப் பெற்ற பெரிய குளத்தின் காரணமாக இந்த ஊர் பெருங்குளம் என்றும் பெயர் பெற்றது.
ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் அழகிய கோலத்தில் காட்சி தருகிறார்.மூலவர் திருநாமம் வேங்கடவாணன்.உத்சவர் திருநாமம்
மாயக்கூத்தன். சோரநாட்டியன் என்ற பெயரும் உண்டு.தாயார் குளந்தைவல்லித் தாயார், அலர்மேல் மங்கைத் தாயார்.
இத்தலம் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஆழ்வார் பாசுரம்:
"கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன்
கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற் றொழிய இழந்து வைகல்
பல்வளையார் முன் பரிசழிந்தேன்
மாடக்கொடி மதில் தென் குளந்தை
வன்குட பால் நின்ற மாயகூத்தன்
ஆடர் பறவை யுயர்த்த வல்போர்
ஆழி வளவனை யாதரித்தே"
உத்சவரின் அழகிய திருகோலம்:
பெரிய திருவடி எனப்படும் கருடன்: பெருமாள் இத்தலத்திற்கு எழுந்தருள கருடன் ஒரு
கருவியாக செயல்பட்ட காரணத்தால் இத்தலத்தில் கருடனை உத்சவ
மூர்த்தியின் அருகில் காணலாம்.
தோளுக்கினியானில் மாயக்கூத்தர் திருவீதி உலா:
திருமஞ்சனத்திற்கு எழுந்தருளி இருக்கும் மாயக்கூத்தர்:
அற்புத திருமஞ்சனம்:
சேஷ வாகனத்தில் திருவீதி உலா:
கருட சேவை:
ஊரில் சன்னதி வீதியில் அமைந்த புஷ்கரிணி:
தெப்பக்குளம் தாமரை இலைகள் நிறைந்து காட்சியளிக்கின்ற அழகு
இதை தவிரவும் இவ்வூரில் ஒரு பெரிய குளம் ஒன்று உண்டு.அதன் காரணத்தால்தான் பெருங்குளம் எனவும் இவ்வூர் பெயர் பெற்றது.
வயல்வெளி:
சலசலக்கும் தாமிரபரணியின் ஓசையுடனும் வயல்வெளியும் குளங்களும்
தென்னை மற்றும் பனை மரங்கள் சூழவும் வீற்றிருக்கும் எம்பெருமானின்
திவ்ய அழகு மனதையும் கருத்தையும் ஈர்ப்பதில் ஆச்சரியமில்லைதான்.
தென்னை மற்றும் பனை மரங்கள் சூழவும் வீற்றிருக்கும் எம்பெருமானின்
திவ்ய அழகு மனதையும் கருத்தையும் ஈர்ப்பதில் ஆச்சரியமில்லைதான்.







29 comments:
So glad to see my native place and Perumal ..thanks and keep up your good work.
Adiyen
Mayakoothan
நெல்லை மண்ணின் மணம் கமழும் படங்களும் தகவல்களும். அருமையான பகிர்வு.
நீண்ட நாட்களுக்குப்பின் இன்றையபொழுது நல்லபொழுதாக விடிந்ததில் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தேன்.
அழகிய தாமிரபரணி ஆறு, (கடைசியாக ’சாமி’ என்ற சினிமாவில் பார்த்தது),அதற்கான அழகியதொரு விளக்கம்.
108 திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றான மாயக்கூத்தன் என்ற பெருமாள் தரிஸனம், தாயார் தரிஸனம், பெரிய திருவடி எனப்படும் கருடனின் ஸேவை சாதிக்கும் அழகிய கோலம், பள்ளிகொண்ட பெருமாள், மூலவர்,உற்சவர், திருமஞ்சனம், தாமரைக்குளம்,பசுமையான வயல்வெளிகள் என அனைத்துமே அருமை.
படங்களும், படவிளக்கங்களும் மட்டுமின்றி ஏதோவொரு விவரித்துச்சொல்லமுடியாததொரு பரவசத்தை, இந்த அதிகாலைப்பொழுதினில் என்னால் உணரமுடிகிறது.
தலையில் ஜடாயு வைக்கப்பட்டு, துளஸிதீர்த்தம் பயபக்தியுடன் வாங்கிப்பருகி, வாசனை மிகுந்த தாயாரின் பசுமஞ்சள் வாங்கி நெற்றியில் அணிந்து, அதன்பின் சூடான சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை பிரஸாதம் சாப்பிட்ட ஒரு முழுத்திருப்தி ஏற்படுகிறது.
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். அன்புடன் vgk
welcome back teacher
ஸ்தல புராணமும், படங்களும் அருமை
வாங்க,வாங்க ஊர் திரும்பி பதிவுகள் தொடங்கியதில்
மகிழ்சி.
தகவல்களும்,படங்களும் அருமை
படங்களுடன் கூடிய ஆன்மீக
பயணக்கட்டுரை
பரணீதரணை நினைவுறுத்திப்போகிறது
வழக்கம்போல் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்����
மிகவும் அருமை பதிவு மற்றும் படங்கள்.
ஸ்ரீவை யில் இருந்து ஆத்தூர் செல்லும் வழி சொர்க்கம் என்றால் அது மிகை அல்ல
கோயிலை நேரடி தரிசனம் செய்தமாதிரியே இருக்கு தங்களின் பதிவு.. அருமை
மிக அழகான படங்களுடன், அருமையான பதிவு. பொதிகை மலை எரிய போது, எனது மூன்று வேளை உணவும் தாமிரபரணி தண்ணீர்தான். அப்படி ஒரு சுவையான நீர். அந்த நதி மாசுபட்டு வருகிறது என்று கேள்விப் படும் போது வருத்தமாக உள்ளது.
படங்கள் அருமை !!!
திவ்ய தரிசனம்!
வணக்கத்தை போட்டு வைப்போம்.....
வாங்க. அதற்குள் ஊர் திரும்பி விட்டீர்களா ராஜி? பயணங்கள் எப்படி இருந்தது.?
படங்களுடன் அழகான விளக்கம். பகிர்வுக்கு நன்றி.
எங்கள் கள்ளழகர்தான் அழகு என்றால், பெருமாள் அங்கேயும் கொள்ளை அழகுதான்
ராஜி
என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம் தான். ஊர் நினைவுகளை கிளறி விட்டுடேள்.
நான்கு வருஷம் முன்பு ஊர் போயிருந்த போது சில நவ திருப்பதி போக முடிந்தது. கோவில் சேவை பற்றி எழுதியது மிகவும் சந்தோசம். பிற கோயில்களும் வருமா?
தாமிரபரணி ஆறில் இவ்ளோ ஜலம் இப்போ இருக்கா?
ராம்ஜி யாஹூ - நீங்கள் ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் பக்கமா?
பச்சைப் பட்டாடை வயல்வெளியும், தோளுக்கினியானின் படங்களும் சிந்தை நிறைத்தன. பகிவுக்குப் பாராட்டுக்கள்.
சயனக் கோல மாயக்கூத்தர்... பெயரும் அலங்காரமும் ஆளை அசத்துகிறது ராஜி!
எங்கள் ஊர் ராஜகோபாலனின் பலவித அலங்காரங்கள் பார்த்திருக்கிறீர்களா?
நல்ல பதிவு. ;-))
நான் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போயிருந்தேன். நவ திருப்பதி, திருச்செந்தூர், நெல்லையப்பர், குற்றாலீஸ்வரர், இலஞ்சி என்று அருமையான ஒரு ட்ரிப். இன்னொரு முறை போக வேண்டும். இது குறித்து ஒரு பதிவும் போடவேண்டும்.
உங்க பதிவு வழக்கம் போல அசத்தல்.
@Maya
is it? ur native? thanks for comment
@சித்ரா
நன்றி.நெல்லை காத்தை சுவாசிச்சீங்களா?
@வை கோபலகிருஷ்ணன் சார்
தங்கள் பொழுது நல்ல பொழுதாக விடிந்ததில் மகிழ்ச்சியே.
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்
@எல் கே
நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
நான் ஊர் திரும்பி பதிவு தொடங்கறதுல சந்தோஷமா?பாவம் நீங்க!!!!!!
நன்றி ஆச்சி
@ரமணி
கடந்த நாலு பதிவுகளா உங்க கமென்டைக் காணவேயில்லையே சார்?
பிசியா இருந்தீங்களா?
வாழ்த்துக்களுக்கு நன்றி
@ராம்ஜி யாஹூ
அந்த மண்ணே சொர்க்கம்தான்
நன்றி
@வேடந்தாங்கல்-கருண்
நன்றி
@வித்யா சுப்ரமணியம்
நன்றி மேடம்.
நம் மக்கள் எதைத்தான் நன்றாக இருக்க விடுகிறார்கள்?
@நாகசுப்ரமணியன்
நன்றி
@மாதவி
நன்றி
@நாஞ்சில் மனோ
கடவுளை வணங்குதல் நல்லதே
@கோவி2தில்லி
ஆமாம் ஆதி.உங்களையெல்லாம் பதிவு போட்டு அறுக்காம
இருக்க முடியலை.அதான் வந்தாச்சு.பாராட்டுக்கு நன்றி ஆதி.
கடந்த நாலு பதிவுகளா உங்க பெட்டர் ஹாஃப் கமென்ட் பக்கம் வரலையே
@சாகம்பரி
பெருமாளுக்கு அலங்காரப்பிரியன் என்று ஒரு பெயர் உண்டு.
அவர் அழகுக்கு அலங்காரம் செய்தால் கேட்க வேண்டுமா என்ன?
@ஸ்ரீநிவாச கோபாலன்
பிற கோவில்களும் வரும்.ஆனால் உடனே அல்ல.தொடர்ச்சியாக கோவில்களாக
எழுதினால் சற்று சலிப்பு தோன்றலாம்.எனவே வேறு பதிவுகளுக்கு நடுவே போடலாம் என்று எண்ணம்.
சமீபத்தில் நான் சென்ற பொழுது தாமிரபரணியில் ஜலம் நன்றாகவே இருந்தது.
@இராஜராஜேஸ்வரி
நன்றி
@ஆர் வி எஸ்
மாயக்கூத்தரை நேரில் சேவிக்க வேண்டும் சார்.மிக அற்புத தரிசனம் அது.
உங்கள் பதிவிற்கு லிங்க் கொடுத்திருக்கலாமே சார்
@கோபி ராமமூர்த்தி
நீங்கள் குறிப்பிட்ட இடங்கள் மிக அற்புதமான ட்ரிப்.
விரைவில் இது குறித்த தங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்.
நன்றி
Yes madame..Perunkulam is my native palce..But being here(US) for almost 10 yrs..whoever asked my native place I always mentioned 'Perunkulam' .I am so happy that people(blogger) like you visit there and writing about the place and perumal..How about Thirukrunkudi..Have you been there?..If not DON'T MISS that..as a blog writer you can write more if you visit Thirukurunkudi..I know some people over there..let me know..
Adiyen
Mayakoothan.
நல்ல பதிவு.
படங்களுடன் நிறைய விஷயங்கள்.
வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு ராஜி! படங்களும் கோவில் பற்றிய விவரங்களும் அருமையாக இருக்கின்றது. அலுவல் மற்றும் மற்ற வேலைகள் காரணமாய் உங்கள் மற்ற பகிர்வுகளில் தலை காட்டவில்லை! தொடர்வேன். மற்ற பயணக் கட்டுரைகள் பற்றிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
ஆன்மீகம் பற்றி உங்க அளவு எனக்கு தெரியாது.. ஆனா தெரிஞ்ச அளவுல சொல்றேன்.. சயன நிலையில் இருக்கும் தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது... என ஒரு ஐதீகம் உண்டாம்.. அது பிளாக்கிற்கும் பொருந்துமோ..? # டவுட்டு
>>இத்தலம் சனி ப்ரீதிக்கு பெயர் பெற்றது.
ப்ரீதின்னா?
http://jaghamani.blogspot.com/2011_04_03_archive.html#6051451947291685469
இங்கே போய் பாருங்க... உங்களைப்போலவே ஆன்மீகப்பதிவு எழுதுபவர்
நானும் சிறுவயதில் தாமிரபரணியில் நீந்திக்குளித்து
மகிழ்ந்தவள்தான். படங்கலும் பதிவும் அருமையா இருக்கு.
ராஜி'க்கா - சூப்பர் பதிவு... கண்ணுக்கு சரியான விருந்தாய் படங்கள்... நான் அறிந்திராத கோவில்கள் பற்றியும் அறிந்து கொண்டது ரெம்ப சந்தோசம்... பயணம் எல்லாம் நல்ல படியா இருந்ததா? வெல்கம் பேக்...:))
திவ்யமா தரிசனம் ஆச்சு.. பகிர்வுக்கு நன்றிப்பா.
Hi,
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
படங்களும் கோவில் பற்றிய விவரங்களும் அருமையாகவும் மற்றும் இனிமையாகும் உள்ளது.
Post a Comment