
மனக்குளத்தில் மலர வேண்டிய
மணமிகு தாமரை எண்ணங்கள்
பாசி பாசியாய் படர்ந்து
பேசி பேசி வெறுப்போடி
வாசத்தை இழந்து நாசி மூட வைக்க,
வாழ்க்கைப் படியில் வழுக்கியது.
ஊசிப் போன உறவுகளும்
உதறிப் போன நட்புகளுமாய்
உலகம் மாறிய பின்
உணர்ந்து திரும்புகையில்,
கூசிப் போன தருணங்களும்
குறுகிப் போன நிமிடங்களுமாய்
உருகி நின்று தவித்தாலும்
உபயோகம்தான் என்ன மனமே?
32 comments:
தவிர்க்க இயலாத காரணத்தால் இந்த பதிவிற்கு
ஒரு மாத காலம் விடுமுறை விடப்படுகிறது
அடடா...
மனதில் ஏற்பட்ட காயத்திற்கும்,பதிவில் ஏற்பட்ட தடங்கலுக்கும் மீண்டு வர மீண்டும் வர என் பிரார்த்தனைகள்
@சி பி செந்தில்குமார்
தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என எண்ணுகிறேன்.இப்பதிவிற்கும்
என மனதிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.இது தினமும் நான் காணும்
அருகாமையில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரது நிலை.
இப்பதிவிற்கு எனது விடுமுறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனது தற்காலிக விடுமுறை இந்த ஒரு மாத காலம் நான்
கணிணி உபயோகிக்க முடியாத சூழ்நிலையினால்தான் என்பதை
கூறிக் கொள்கிறேன்.
யோசித்து யோசித்து எழுதி இருக்கீங்க...நல்லா இருக்கு.
சரி சரி சீக்கிரமா வந்து பதிவு போடுங்க
மீண்டும் வருகை தர வரவேற்கிறோம்.
“பாசியாய்” கண்ணீர் கவிதை
அருமையாக எழுதப்பட்டுள்ளது.
பாராட்டுக்கள்.
பாதிக்கப்பட்டவரின் மனம் மீண்டும்
’தாமரைக் கன்னங்களாகவும்
தேன் மலர் கிண்ணங்களாகவும்’
மாற ப்ரார்த்திக்கிறேன்.
பசியாய் - சோகம்
ஒரு மாதம் விடுமுறையில் உதித்த எண்ணங்கள் ,ஒரு மாதத்திற்கு பிறகு தினமும் ஒரு பதிவாக வெளியாகும்னு எதிர்பார்க்கிறேன்.
நல்ல படைப்பு
ஊசிப்போன உறவுகள் என்கிற வார்த்தை
என்னை கொஞ்சம் கூடுதலாக
சிந்திக்க வைத்தது
அதன் தொடர்சியாக
உறவுகள் உதிராமல் இருக்க
என்ன செய்ய்யலாம் என ஒரு
புதிய யோசனை வந்தது
அதனயே ஒரு பதிவாகப் போட்டுள்ளேன்
கரு கொடுத்தமைக்கு நன்றி
விடுமுறையை சிறப்பாக கழித்து வரவும்
புதுமையான பதிவுகள் தரவும் ...
வாழ்த்துக்களுடன்
உலகம் மாறிய பின்
உணர்ந்து திரும்புகையில்,
கூசிப் போன தருணங்களும்
குறுகிப் போன நிமிடங்களுமாய்
உருகி நின்று தவித்தாலும்
உபயோகம்தான் என்ன மனமே?
.....ஆழமான அர்த்தங்கள்..... அருமையான கருத்தை சொல்லும் கவிதை.
Have a great break and come back soon. :-)
ஒரு மாத விடுப்பிற்குப் பின் புத்தம்புது தாமரையாய்
பூத்து மலர்ந்து உற்சாகமாய் பதிவெழுத வாழ்த்துகிறேன்.
கவிதை என்னை மிகவும் யோசிக்க வைத்தது.
nice
@சி பி செந்தில்குமார்
இண்ட்லியில் சப்மிட் செய்ததற்கு நன்றி
யதார்த்தமான கவிதை..
//உலகம் மாறிய பின்
உணர்ந்து திரும்புகையில்,
கூசிப் போன தருணங்களும்
குறுகிப் போன நிமிடங்களுமாய்//
ம்ம்ம்... என்ன இப்படி ஒரு கவிதை எழுதிட்டீங்க ராஜி?
பட்... அநேகமா எல்லார்க்குமே பொருந்தற மாதிரி தான் இருக்கு....
நல்ல கவிதை. ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து பதிவுகள் படைத்திட வேண்டுகிறேன்.
போய்ட்டு வாங்க...
மனதை அதிர வைக்கும் பதிவோடு ஒரு இடைவெளி தொடர்வது முரண்தானோ ராஜி?
இடைவெளியை இட்டு நிரப்புவது பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
ஓய்வுக்குப் பின்னே சந்திப்போம்.இளைப்பாறுங்கள்.
கவிதையும் ராஜிக்கு கைவசம் ஆகிவிட்டது. எதையோ ஆழமாக புரிய வைக்கிறது.
மேலும் கவிதையின் கருவை ஆராயும்போது, சூழ்நிலையில் மாற்றம் தேவை என்று புரிகிறது. ஒரு புதிதான ஆரம்பம். ஒரே நாளில் உறவுகளும் , நட்பும் மாறிப்போவதில்லை.ராஜி. எங்கேயோ ஆரம்பித்த சிறிய விரிசல் எல்லா பக்கமும் விரிந்திருக்கிறது. மனம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு புதிய சூழ் நிலைக்கு மாறினால், எண்ணங்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த பெண்ணாக இருந்தால் ஆறுதல் கூறி வழிப்படுத்துங்கள். கடவுள் நம்பிக்கையை விதையுங்கள். ( திங்கள் கிழமை அம்மன் மட்டும் இருக்கும் கோவிலுக்கு சென்றால் மனம் தெளிவாகும் , இதுவும் ஒரு வழி). சொந்தமாக சம்பாதிக்க வழி சொல்லுங்கள். பயம் விலகும். தன்னம்பிக்கை வரும். முக்கியமான விசயம், உடனடி முடிவுகள் எடுக்க வேண்டாம். காலம் மாறும். சரிதானே ராஜி.
உறவுகள் கூட ஊசிப் போகுமா என்ன?
பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
@சாகம்பரி
கருத்துக்களுக்கும் யோசனைகளுக்கும் நன்றி மேடம்
தெரிந்த பெண்தான் என்றாலும் என் எல்லைக்குட்பட்டு நான்
ஆறுதல் தந்திருக்கிறேன்.
//ஒரே நாளில் உறவுகளும் , நட்பும் மாறிப்போவதில்லை//
உங்கள் கூற்று முழுக்க உண்மையே
கவிதை அற்புதம். மனதைப் பிசைகிறது.
கவிதை அருமை என்றாலும் தமிழை நேசிக்கவும் ஆராதிக்கவும் தேவைப்படும்போது எழுத்தில் புதுமையையும் அனலையும் கொன்டு வரத்தெரிந்த உங்கள் எழுத்தில் இந்த ஆழ்ந்த சோகம் வேன்டாமே?
ரொம்பவே அழகா இருக்கு மனம் பற்றிய இந்தக் கவி.
பருவம் தவறிய மழையும் , தருணம் தவறிய செயலும், பயன் இன்றிப் போகும் என்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
நல்லா இருக்கு கவிதை மீண்டும் பதிவிட சீக்கிரம் வாருங்கள்
நல்ல கவிதை. விரைவில் விடுப்பு முடிந்து பதிவுகள் வரட்டும்.
மனக்குளத்தில் "மறுபடியும்" மலர வேண்டிய
மணமிகு தாமரை எண்ணங்கள்தான் தீர்வு.
Excellent!
Post a Comment