தலைப்பை பார்த்ததும இது ஏதோ பெரிய விஷயம் போலிருக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.இது வெறும் சுய புராணம் பற்றிய பதிவே.
எழுபத்தைந்து எழுபத்தாறு வருடங்களின் காலமது. ப்ரீகே ஜி, எல் கே ஜி மற்றும் யூ கே ஜி எல்லாம் எட்டிப் பார்த்திராத பொற்காலம் என்று கூட கூறலாம்.
ஆறு வயது நிரம்பி வலது கையால் இடது காதையோ அல்லது இடது கையால்
வலது காதையோ தலைக்கு மேல் வழியாக தொட முடிந்தால்தான் ஒன்றாம்
வகுப்பிற்கு சேர்த்துக் கொள்வார்கள்.(தமிழ் மீடியமாக இருந்தால் யாராவது என்ன படிக்கற என்று கேட்டால்,ஒண்ணாப்பு என்று ஸ்டைலாக பதில் வரும் நாகரிகமான
காலம்)
அப்படிப்பட்ட எழுபத்தாறில்,அண்ணா பள்ளிக்கூடம் போகிறானே என்ற
காரணத்தால் ஆறு வயது நிரம்பாமலே அழுது அடம் செய்து நானும் அவனுடன்
போவேன் என்று பிடிவாதம் பண்ணி பள்ளிக்கூட படியை மிதித்த அனுபவம்
அன்று வீட்டிலுள்ளவர்களுக்கும் பள்ளியில் இருந்தவர்களுக்கும் எப்படி இருந்ததோ
தெரியாது.எனக்கு ஒரு அற்புதமான அனுபவம்தான்.
இரட்டைப் பின்னல் ஆட, அக்கா வித விதமாய் தைக்கும் கவுன் போட்டுக் கொண்டு கையில் சிலேட்டு பலகையுடன் துள்ளிக் குதித்துக் கொண்டும், கூட்டி செல்லும் அண்ணாவுடன் சின்ன சின்னதாய் சண்டைகளுடனும் கிளம்பும் போது உற்சாகமாய் இருக்கும்.
முதலில் ஆறு வயது நிரம்பாத காரணத்தால் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள்.முறைப்படி சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் சும்மா
ஒப்புக்கு சப்பாணியாக சேர்த்துக் கொள்ளுமாறு அப்பா கூறியதாலும் அவர் கமிஷனராக அங்கு இருந்த காரணத்தாலும் அண்ணாவின் வகுப்பிலேயே என்னையும் சும்மா உட்கார வைத்தார்கள்.
முதல் நாள் என்னை வகுப்பறைக்கு கூட்டி செல்லும்போது எழுந்த உற்சாக
ஊற்று என்னை உள்ளே உட்கார வைத்த விதத்தில் புஸ்சென்று அடங்கிப்
போனது.அத்தனை மாணவ, மாணவிகளும் பெஞ்சுகளில் அமர்ந்து கொள்ள
என்னை மட்டும் கீழே தனியே குட்டிப் பாயில்(கிழிஞ்ச நார்னு சொல்லலாம்)
அமர வைக்க நான் தொங்கிப் போன முகத்துடன் அமர்ந்தேன்
இதில் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த மாணவிகள் இந்திர பதவியில்
அமர்ந்திருந்த லுக் ஒன்றை என் மேல் விடுவார்கள்.
இதையெல்லாம் பொறுக்க முடியாமல் வீட்டிற்கு சென்றதுமே அப்பாவிடம் சென்று முறையிட்டால் அவர் கண்டு கொள்வதாக இல்லை.
(அவருக்குத்தான் ஏற்கனவே தெரியுமே)
"இன்னிக்கு ஸ்கூல் போனியே,எப்பிடி இருந்தது?" என்று கேட்ட அக்காவை பிடித்துக்
கொண்டு அவளுக்கு நான் சொன்ன பதிலில் அனைவருக்கும் அதிர்ச்சி.
"என்னை அம்பேத்கார் மாதிரி உக்கார வச்சுட்டாங்க"
"என்னது?" என்று கேட்ட அக்காவுக்கு பெரியண்ணாவின் வரலாறு புத்தகத்தை
கொண்டு வந்து தந்து அதைப் பிரித்து அதில் போட்டிருந்த அம்பேத்காரின் படத்தை
காண்பித்து இவரை மாதிரி என்று காண்பித்ததும் "உனக்கு இவரை பத்தி தெரியுமா?
எப்பிடித் தெரியும்?" என்றாள் அவள்.
அக்காவின் பக்கத்தில் உட்கார்ந்து அம்மா, ஆடு, இலை படிக்கும் போது
பெரியண்ணா வந்து பாடம் ஒப்பிப்பான்.
அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்தால்
அவர் பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுடன் அமர வைக்காது அவரை கீழே ஒரு கோணியில்(அதையும் அவரே கொண்டு வந்து கொண்டு செல்ல வேண்டும்) அமர வைப்பார்கள் என்று அண்ணா ஒப்பிப்பான்.
இதைக் கூறியதும் அவள் விழுந்து விழுந்து சிரித்ததின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை அப்பொழுது.
அர்த்தம் புரியாமலே அடுத்த நாள் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அறைக்கு
சென்று "என்னை மட்டும் ஏன் அம்பேத்கார் மாதிரி உக்கார வச்சுருக்கீங்க?"
என்று கேட்க அவர் என்னைப் பார்த்து அம்பேத்காரை நான் அறிந்த விதம் பற்றி கேட்க நான் சொன்னதும், இனிமையான புன்முறுவலுடன் "நீயும் அவர் மாதிரி
பெரிய ஆளா வரணுமில்லையா அதுக்காகத்தான்" என்றார்.
"அப்போ மத்தவங்கல்லாம் வர வேணாமா?என்ற எனது அடுத்த கேள்விக்கு
அவர் என்னருகே மண்டியிட்டு அமர்ந்து,எல்லாரும்தான் வரணும்.உன்னைப் பார்த்து மத்தவங்கல்லாம் வருவாங்க" என்றார்.
இந்த பதில் என்னை அப்பொழுது கொஞ்சம் சமாதானப் படுத்தியது.
அடுத்த நாள் இந்திர பதவிகளின் லுக்குக்கு, "நான் அம்பேத்கார் மாதிரி வருவேனாக்கும்" என்று பதில் கூறுமளவுக்கு எனக்கும் அம்பேத்காருக்கும் ஒரு
சம்பந்தம் இருந்தது.
பின்னாளில் அம்பேத்கார் பற்றி படிக்கவோ கேட்கவோ நேரும் போதெல்லாம்
நான் சிரிக்காமல் இருந்ததே இல்லை.இந்த பதிவை படிக்கும் பொழுது கூட நான் சிரித்தேன்.அக்காவின் சிரிப்புக்கு அர்த்தம் புரிந்த வயதை விட புரியாத வயது இனிமையானதாக இருந்தது.

18 comments:
சிறுவயது நினைவுகளைச் சித்தரித்த விதம் வெகு அருமையாக இருந்தன. அழகான மலரும் நினைவுகள் தான் அவை. அப்படியே திரு. கோபி அவர்களின் வலைப்பூவுக்கும் செல்லும் வாய்ப்பு, உங்களால் கிடைத்தது, எனக்கு. நன்றி
அநியாயத்துக்கு இவ்வளவு குறும்பு பண்ணி இருக்கீங்க ராஜி
ஒரு குழந்தைக்கு உள்ள presence of mind மாதிரி வேற எந்த ஒரு விஷயமும் என்னைக் கவர்ந்தது இல்லை!!!
Nice sharing
சிறு வயது நினைவுகள் என்றும் சுகமானவை தான்
//பீரீ கேஜி, எல் கேஜீ, யு கே ஜீ எல்லாம் இல்லாத பொற்காலம்// நானும் அந்தக்காலம் தான். ரசித்தேன்.. (ஏன் உங்கள் பிளாக்கில் காப்பி பேஸ்ட் பண்ணமுடியலை?)
இந்த பதிவை ரசித்து வாசித்தேன்.... நிச்சயம், அம்பேத்காரை பற்றி பேச்சு வரும் போது, இந்த பதிவும் நினைவுக்கு வரும்.
முதல் பள்ளி அனுபவம் பெரும்பாலும் பலருக்கு இனிமையானது. சிறு வயதுக் குழந்தைகள் கேள்விகளுக்கு பெரியவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. இனிய அனுபத்தினை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
பள்ளிக்கூடம் போகுமுன்னே அம்பேத்கார் பற்றி தெரிந்து வைத்திருந்திருக்கிறீர்கள்... பலருக்கு இன்னும் அவரைப் பற்றி தெரியவில்லை.
அக்கா, நீங்க பயங்கர குறுப்புக்காரவங்களா இருந்திருக்கீங்க.. ஹா... ஹா... ஹாஹாஹா....
ரசித்த்ப் படித்தேன்.
என் தங்கையும் நான் பாடம் படிக்கும்போது கவனித்து கவனித்து, என்னை விட மதிப்பெண்கள் கூட வாங்கி விட்டாள்!
நல்ல எழுத்து நடை
"ஆஹா, எந்த சமரசத்திற்கும் ஆட்படாத பதிவு.
என்னை... சபாஷ் போடவைத்தது. "
கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...
See.,
http://sakthistudycentre.blogspot.com/
:-) என் பதிவிற்கு சுட்டி கொடுத்ததற்கு மிக்க நன்றி
எப்படிங்க இன்னும் அதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க..???
ஒரு நல்ல சுவாரஸ்யமான சம்பவம் தான்.. மைண்ட்ல வச்சிகிடுறன்..
ராஜி மேடம், அதான் ஸ்மைலி போட்டிருக்கேனே. பள்ளிக்கோடம் படிக்கும் நாளில் இருந்தே பெரிய ரௌடியா இருந்திருப்பீங்க போல:)
nice
@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி
@எல். கே
நான் ரொம்ப சாது சார்
@நாக சுப்ரமணியன்
நன்றி
@வெறும்பய
நன்றி
@வசந்தா நடேசன்
நன்றி
எனக்கு காப்பி பேஸ்ட் வருதே
உங்களுக்கு ஏன் வரலை
@சித்ரா
நன்றி
@வெங்கட் நாகராஜ்
நன்றி
@சே.குமார்
நன்றி
எல்.கே சாருக்கு என்ன பதில் சொல்லிருக்கேனோ அதைதான் உங்களுக்கும்
சொல்றேன்
@ மாதவி
நன்றி மாதவி,எங்க வீட்ல கூட நான் நிறைய மார்க் வாங்குவேன் படிப்புல
@ஆர் கே சதீஷ்குமார்
நன்றி
@தமிழன் வீதி
நன்றி
@சக்திஸ்டடி கருண்
நன்றி
@கூர்மதியன்
நன்றி
@கோபி ராமமூர்த்தி
சே சே எங்க ஸ்கூல்லயே நாந்தான் ரொம்ப சமத்துப் பொண்ணு தெரியுமா?!!!!!
வாவ்....
சிறு வயது குறும்பு நிகழ்வுகளை நினைவு கூர்வதே ஒரு தனி சுகம்...
அதை இன்றும் நினைவு கூர்ந்து அழகாக பதிந்தமைக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்...
வாழ்த்துக்கள் ராஜி...
-**********
இதையும் பாருங்களேன் ராஜி....
புதிய முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவு தரும் தோழமைகளின் அன்புக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்...
நண்பர்களின் துணையோடு, “சித்தம்”” எனும் ஒரு குறும்படம் உருவாக்கி இருக்கிறோம்...
“சித்தம்”””“ என்பதென்ன?
”””எல்லாம் ஆண்டவன் சித்தங்க...
ஆண்டவன் சித்தம் இருந்தா நடக்கட்டும்
இப்படி பலர், பல சந்தர்ப்பங்களில் சொல்வதை நாம் அன்றாட வாழ்வில் கேட்டிருக்கிறோம்... சோதனைகளும், வேதனைகளும் நம்மை சூழ்ந்து கொண்டு தாக்கும் போது, நமக்கு மேல் இருக்கும் மாபெரும் சக்தியை உணர்ந்து “சித்தம்“” ””இருந்தால் நடக்கட்டும் என்று சொல்வது நம் மிகப்பெரிய பலம். இந்த நுண்ணிய உணர்வை ஒரு கற்பனை கதையின் மூலம் அனைவருக்கும் எடுத்து சொல்ல “ஒலி ஒளி“யின்”””” உதவி கொண்டு ஒரு குறுங்கவிதை வடித்துள்ளோம்...
தங்களின் மேலான ஆலோசனையும், கருத்து பகிரலும் வேண்டி விரும்புகிறோம்.
”சித்தம்” குறும்படத்தை இங்கே கண்டு ரசியுங்கள்...
பார்ட் - 1
http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL
பார்ட் - 2
http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw
தோழமையுடன்
ஆர்.கோபி, துபாய்
www.jokkiri.blogspot.com / www.edakumadaku.blogspot.com
லாரன்ஸ் பிரபாகர்
www.padukali.blogspot.com
Post a Comment