திடீர்னுதான் தோணுச்சு, "அடடா!நம்ம கவிதை போட்டு இருபது நாள் கிட்ட ஆகுதேன்னு.பதிவர்கள் யாராச்சும் ஞாபகப்படுத்த கூடாதா?(என்ன? என்ன முணு முணுக்கறீங்க? ஓஹோ! இருபது நாளா கவிதைங்கற பேர்ல தொல்லை இல்லாம இருந்துச்சு, இப்ப வந்துட்டாளானுதான?)
அட!அதுக்காக எல்லாம் கவிதைப் பதிவை நிறுத்திட முடியுமா என்ன?
அப்பறம் "ப்ளாக்" உலகத்துக்கே பெரிய இழப்பா ஆகிடாதா?
வேற வழி இல்லை, இதையும் படிங்க
தவிப்பு
ஆகாயம் சென்று
ஆனந்த சுற்றலை
அணு அணுவாய் ரசித்தோம்
அன்றைய பொழுதுக்கு
அளவாக ஆகாரம் அடைந்த பின்
அடைந்திட்டோம் கூட்டை
அந்தோ!
மரமுமில்லை கூடுமில்லை
மதியினிலே எட்டியது
மலையத்தனை முயற்சியால்
மகிழ்வாக புனைந்ததை
மனிதன் அழித்திட்டான்
மகா பாவம் செய்திட்டான்
ஏ மானுடா!
உங்களுக்கோ வீட்டில் பல மரங்கள்
எங்களுக்கோ மரத்தில் ஒரு கூடு
அட!அதுக்காக எல்லாம் கவிதைப் பதிவை நிறுத்திட முடியுமா என்ன?
அப்பறம் "ப்ளாக்" உலகத்துக்கே பெரிய இழப்பா ஆகிடாதா?
வேற வழி இல்லை, இதையும் படிங்க
தவிப்பு
ஆகாயம் சென்று
ஆனந்த சுற்றலை
அணு அணுவாய் ரசித்தோம்
அன்றைய பொழுதுக்கு
அளவாக ஆகாரம் அடைந்த பின்
அடைந்திட்டோம் கூட்டை
அந்தோ!
மரமுமில்லை கூடுமில்லை
மயக்கமுறும் அதிர்ச்சி,
மலங்க மலங்க விழித்த பின்மதியினிலே எட்டியது
மலையத்தனை முயற்சியால்
மகிழ்வாக புனைந்ததை
மனிதன் அழித்திட்டான்
மகா பாவம் செய்திட்டான்
ஏ மானுடா!
உங்களுக்கோ வீட்டில் பல மரங்கள்
எங்களுக்கோ மரத்தில் ஒரு கூடு
எங்கே என் குஞ்சுகள்?

20 comments:
" எங்கே என் வீடு..எங்கே என் குஞ்சுகள் “.....
--------------------------------------
எங்கேயோ அடி மனசுல ஒரு வலிய உணரவெக்கிற வரிகள்...
” மரமுமில்லை... கூடுமில்லை... “
“ ஓ..மனிதா, இந்த பூமில இருக்கற கடைசி மரத்தையும் அறுத்து எறிஞ்சிட்டு வேற எங்க போயி வாழப்போறதா உத்தேசம் “ங்கிற வரிதான் ஞாபகம் வருதுங்க..
- சிலிர்த்தேன்..!!
தங்கள் கவிதை நடை,வீட்டில் பல மரங்கள்,மரத்தில் ஒரு கூடு என்ற வரிகள் யோசிக்க வைக்குது.குருவியும் அழகா இருக்கு.
ரொம்ப அற்புதமா இருக்கு. மனிதன் மரங்களை அழித்துக் கொண்டிருப்பதால் பாவம் எத்தனை ஜீவராசிகளுக்கு கூடில்லாமல் போய் விடுகிறது. அந்தோ பரிதாபம்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்
செல்போன் கோபுரங்கள் வந்தன ...குருவிக்கூட்டம் தொலைந்தன!!
ஆழமா இருக்கு கடைசி வரி சந்திப்பில் சிந்திக்க தூண்டுகிறது இனி மறுத்து போன உலகமத்தில் குருவிகளும் வாழ்ந்தன என ஒரு சான்று மட்டும் உண்டாகும் போல்
@ஸ்ரீனி
கருத்துக்கு நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
மிக்க நன்றி
@கோவை2தில்லி
உண்மைதான் ஆதி
@ரமணி
நன்றி
@சிவகுமார்
ஆமாம்.நன்றி
@தினேஷ் குமார்
மிக மிக சரியாகக் கூறினீர்கள்.நன்றி
ஒரு குருவியின் தவிப்பில் மனித மனத்தின் குரூரத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ராஜி! வாழ்த்துக்கள்!
என்னுடைய ஆதங்கத்தை உங்கள் கவிதை வரிகளில் கண்டேன் .
எனது பதிவில் கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி ராஜி
இவண், இணையத் தமிழன் .
http:\\inaya-tamilan.blogspot.com
நல்லா கவிதை எழுதுறீங்க.... அடிக்கடி எழுதுங்க....
"மலயத்தனைய முயற்சியால்
மகிழ்வாக புனைந்ததை
மனிதன் அழித்திட்டான்."
....உண்மைதானே!
ஏ மானுடா.. என்னைக் கேட்பது போல இருந்தது வரிகள் மிக அருமையாக உள்ளது...
supper
ஒரு பறவையோட தவிப்பை ரொம்ப அழகா பதிவு செஞ்சிருக்கீங்க....
இதுதான் முதல்முறை உங்களைப் படிக்கிறேன்னு நினைக்கிறேன்...
கவலைப் படாதீங்க இனிமேல் கரெக்டா வந்து நான் ஞாபகப் படுத்துறேன் தொடர்ந்து கவிதை எழுதுறீங்க!! Deal.... :-)
பறவையின் நிலைமையை அழகாய் சொல்லி இருக்கு உங்க கவிதை!! முன்னேற்றம் என்ற நினைப்பில் மனிதன் இயற்கையை அழித்துக் கொண்டே இருந்தால், முடிவு தான் என்ன? ஏற்கனவே மனிதனின் வாழ்வில் ஒரு செயற்கைத்தனம் வந்தாயிற்றே!!
நன்றி மனோ மேடம்
நன்றி
@சித்ரா
நன்றி,கட்டாயம் எழுதுகிறேன்
@ம.தி. சுதா
குருவியின் கேள்வி எல்லா மனிதருக்குமே.
நன்றி
@புலிகேசி
நன்றி
@பிரபு எம்
நன்றி
@வெங்கட் நாகராஜ்
உண்மைதான்
நன்றி
ஒரு புது அபார்ட்மென்ட் கட்டும்போது குறைந்த பட்சம் இத்தனை சதுர அடியில் பூங்கா நிச்சயம் இருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும். அது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்று தோன்றுகிறது. ஆனால் அந்த சட்ட்டத்திலும் ஏதாவது ஓட்டை கண்டுபிடிப்பான் மனிதன்:-(
குருவியின் குரலில் சோகம்.
அருமையான் கவிதை.
அந்தப் பறவையின் நிலைமையைப் படிக்கும் போது மிகவும் பரிதாபமாகவே உள்ளது. நல்லதொரு பதிவு.
வீட்டில் பல மரங்கள்
மரத்தில் ஒரு கூடு
சபாஷ்
Post a Comment