Saturday, January 29, 2011

துக்கடா

துக்கடா 1  :  இறைவனின் செயல்

                              ஒரு குருநாதரும் சில சீடர்களும் இருந்தனர்.அதில் ஒரு சீடனுக்கு ஒருநாள் பயங்கரமான தலைவலி.தலையில் பத்து போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.இதை பார்த்த மற்றொரு சீடன் "என்னாயிற்று?" என்று கேட்க,
அந்த சீடன்" எனக்கு மிகுந்த தலைவலியாக உள்ளது.இன்று இறைவனுக்கு என் மேல் கருணையே இல்லை" என்றான்.

இதை செவியுற்ற குருநாதர் அந்த சீடனை  நோக்கி, "இத்தனை நாள் ஆரோக்கியமாக
இருந்தாயே,என்றாவது ஒரு நாளாவது இறைவனுக்கு நம்மீது எத்தனை கருணை என்று கூறியிருப்பாயா? அல்லது மனதளவிலாவது நினைத்திருப்பாயா?இன்று மட்டும் உனது தலைவலிக்கு எவ்வாறு இறைவன் மீது குற்றம் சுமத்துகிறாய்?

இறைவனின் அனைத்து செயல்களுமே காரண காரியங்கள் நிறைந்தவை.நம்மால்தான் அவற்றை புரிந்து கொள்ள முடிவதில்லை.
அப்படி இருக்க இறைவனை எவ்விதம் குற்றம் கூற இயலும்?" என்றார்

சீடன் வெட்கித்  தலை குனிந்தான்.

நம்மில் பலரும் அந்த சீடனின் நிலையில்தான் உள்ளோம்.

துக்கடா  2 :  மூழ்காத ஷிப்பே....

முதல் உலகப் போரில் நடந்த ஒரு விஷயம் இது.இரு உயிர் நண்பர்களில் ஒருவன்
போர் முனையில் குண்டடி பட்டு விழுந்தான்.இரண்டாமவன் அவனை சென்று பார்க்க படைத்தலைவரிடம் அனுமதி கேட்க அவரோ, "அனுமதி தருகிறேன்.ஆனால் நீ செல்வதில் பலன் இல்லை.அவன் இறந்திருப்பான். மேலும் நீயும் குண்டடி பட்டு சாவாய்" என்றார்.

இரண்டாமவன் சென்று நண்பனைத் தூக்கி வந்தான்.வைத்தியர் அவனை பரிசோதித்து விட்டு அவன் இறந்து விட்டதாகக் கூற,படைத்தலைவர், "நான்தான் பலனிருக்காது என்றேனே" என கூறினார்.
இரண்டாமவன், "இல்லை ஐயா! நான் சென்றது விலை மதிப்பில்லாத பலனைத் தந்தது" என்றான்.
படைத்தலைவர்,"என்ன உளறுகிறாய்?" என்றார்.

இரண்டாமவன், "நான் அருகில் சென்ற போது என் நண்பன் உயிருடன் இருந்தான்.அவன் பேசுவதைக் கேட்டது எனக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது"
என்றான்.
"உன் நண்பன் என்ன கூறினான்?" என்று கேட்டார் தலைவர்
"நண்பா! நீ வருவாய் என்று எனக்குத் தெரியும் என்று கூறிய பின்னர்தான்
உயிர் துறந்தான் எனது நண்பன்" என்று கூறினான் இரண்டாமவன்

நண்பேன்டா..........!!!!!!!!!!!!!

துக்கடா   3  : ஆராய்ந்து அறிக!

பேருந்தின் நடத்துனர் ஒருவர் ஒல்லியாகவும் உடல் பலமற்றவராகவும் இருந்தார்.
அவரது பேருந்தில் பயில்வான் போன்ற தோற்றமளிக்க கூடிய ஒருவர் தினமும் டிக்கெட் வாங்க மாட்டேன் என்று கூறி கொண்டு சென்று வந்து கொண்டிருந்தார்.
நடத்துனருக்கு அவரை தட்டிக் கேட்கவும் பயம்,அதே சமயம் உள்ளுக்குள் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது.

இந்த பிரச்சனையைத் தீர்க்க எண்ணி அவர் உடல் பயிற்சி செய்து உடலின் வலுவை எவ்வாறெல்லாம் கூட்ட முடியுமோ அவ்வாறெல்லாம் செய்து,  கராத்தே ஜூடோ எல்லாம் கற்றார்.

ஒரு நாள் அந்த பயில்வான் பேருந்தில் ஏறியதும் வழக்கம் போல டிக்கெட் வாங்க
மாட்டேன் என கூறினார்.உடனே அந்த நடத்துனர் பயில்வானின் சட்டையைப் பிடித்து "ஏன் வாங்க மாட்டாய்?" என்று ஆத்திரத்துடன் கேட்க,அவனோ
"என்னிடம் சீசன் டிக்கெட் இருக்கிறது" என்று காமிக்க நடத்துனர் திகைத்தார்.

"பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யும் முன், பிரச்சினை என்ன  என்பதை ஆராய்ந்து  அறிதல் நலம்"

27 comments:

Unknown said...

மூன்றாவது சூப்பர்.

மாணவன் said...

“துக்கடா” தூள் கிளப்புதுங்க மேடம், மூன்றுமே மூன்று வித வாழ்க்கை நிகழ்வுகளை உணர்த்துகிறது அருமை....

தொடர்ந்து எழுதுங்கள்

மாணவன் said...

“பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யும் முன்
பிரச்சினை என்ன என்பதை ஆராய்ந்து அறிதல் நலம்”

இது செம்ம பஞ்ச்... கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க மேடம்

எல் கே said...

துக்கடா அருமை டீச்சர்

R. Gopi said...

மூன்றாவது சூப்பர்

middleclassmadhavi said...

அருமையான துக்கடாக்கள்

Ram said...

முதல் கருத்து ஏற்கனவே பல முறை கேட்டு சளித்தது.. இரண்டாவது ந்நான் ஏற்கனவே அறிந்த பிரசித்திபெற்ற கதை.. அந்த மூன்றாவது செம.. காமெடியோடு கருத்து.. ஜூப்பர்..

தினேஷ்குமார் said...

துக்கடாக்கள் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

மூன்றுமே ஓரளவு ஏற்கனவே
தெரிந்த கதைகள் தான் என்றாலும்,
தங்கள் கைப்பக்குவத்தால் சமைத்தளித்த துக்கடாக்காள்,
நல்ல மழை காலத்தில்,
சுடச்சுட சாப்பிடும்
வெங்காயத் தூள்
பக்கோடாக்கள்
போல மிகவும் ருசியாக இருந்தன.
பாராட்டுக்கள் !

வசந்தா நடேசன் said...

Interesting...

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே நல்ல விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி.

RVS said...

நல்லா இருக்கு. துக்கடான்னு பெரிய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க. அக்கடான்னு இருந்த நான் இதைப் பார்த்து இப்போ என் சைட்ல ஆசிரமக் கதைகள்ன்னு ஒரு போஸ்ட் எழுதவேண்டியதாப் போச்சு. ஆசிரமக் கதைகள் இன்று வெளிவரும்.. ;-)

இளங்கோ said...

கதைகள் மூன்றும் முத்துக்கள்.. :)
அதிலும் மூன்றாவது கதை அருமை.

raji said...

@கலாநேசன்
நன்றி

@மாணவன்
நன்றி

@எல். கே

கடைசி பெஞ்சுல இருந்தாலும்
துக்கடாவை கவனிச்சு பாராட்டினதுக்கு நன்றி

@சித்ரா
நன்றி

@கோபி
நன்றி

@மிடில்க்ளாஸ் மாதவி
நன்றி

@கூர்மதியன்
நன்றி

@தினேஷ்குமார்
நன்றி

@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி

@வசந்தா நடேசன்
நன்றி

@வெங்கட் நாகராஜ்
நன்றி

@ஆர் வி எஸ்
நன்றி
ஆசிரமக் கதைகள் படிச்சாச்சு.

@இளங்கோ
நன்றி

raji said...

@ ALL

இந்த துக்கடா பதிவு இண்ட்லியில் அதிக ஓட்டு
பெற்று இன்றைய முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
ஓட்டளித்த அனைவருக்கும் எனது நன்றி

மதுரை சரவணன் said...

மூன்றும் அருமை... பிரச்சனைகளை நாம் கண்டறிவதே இல்லை என்பதே பிரச்சனை.. வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

மூன்றுமே அவசியமானவை..

enrenrum16 said...

எல்லாமே கேள்விப்பட்டவையாக இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் நீங்கள் கூறியிருக்கும் தத்துவங்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன.... நல்ல பகிர்வு ராஜி..நீங்கள் ஆசிரியையா? (எதுக்குன்னா கொஞ்சம் பார்த்து பின்னூட்டமிடுறதுக்குத்தான்......கம்பெடுத்திடக்கூடாதில்லையா?);)

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் நன்று.
மூன்றாவது சூப்பர்.

ADHI VENKAT said...

துக்கடாக்கள் அருமை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்றுதான் முதல் தடவையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன் மேடம்! துக்கடாக்கள் அருமை! அதிலும் மூன்றாவது துக்கடா செம கலக்கல்!

// நம்மில் பலரும் அந்த சீடனின் நிலையில்தான் உள்ளோம்.//

உண்மைதான்!



என்னுடைய வலைப்பூவிற்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்டிலியில் உங்களைத் தொடருகிறேன்! ஓட்டும் போட்டுள்ளேன்!! வாழ்த்துக்கள்!!!

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said...

நல்ல விஷயம் அதிகம் இருந்தால் மாறித்தானே ஆகணும்.




நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com

சிவகுமாரன் said...

மூன்றும் அருமை.
மூன்றாவது சிரிப்பை வரவைத்தது. பரவாயில்லை அவருக்கு உடம்பாவது பலமாச்சே. .

சி.பி.செந்தில்குமார் said...

adadaa 3 தனி தனித்தனி பதிவா போட்டிருக்கலாமே..

அப்புறம் இண்ட்லியில் ஹிட் ஆனதுக்கு வாழ்த்துக்கள்

raji said...

@மதுரை சரவணன்

நன்றி

@ரிஷபன்
நன்றி

@என்றென்றும் 16
நன்றி
நீங்கள் தைரியமாகவே பின்னூட்டமிடலாம்
உண்மையான கலைஞர்கள் விமர்சனங்களால் காயப்படுவதில்லை

@சே.குமார்
நன்றி

@கோவை2தில்லி
நன்றி

@மாத்தி யோசி
நன்றி
இன்ட்லியில் ஓட்டு போட்டதற்கும் நன்றி

@சந்தக்கவி
நன்றி

@சிவகுமாரன்
நன்றி

@சி பி செந்தில்குமார்
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

3rd one is very super!!

Post a Comment