Showing posts with label படித்தவை. Show all posts
Showing posts with label படித்தவை. Show all posts

Monday, March 7, 2011

துக்கடா

துக்கடா 1 :

இறைவன் நம்மிடம் சொல்வது என்ன?

உன் வீடு எவ்வளவு பெரியது என்று இறைவன் நம்மை கேட்கவில்லை.

அதில் எத்தனை பேரை நீ வரவேற்று உபசரித்தாய்? என்று கேட்கிறார்.

உன்னிடம் எத்தனை உயர்ந்த ஆடம்பர ஆடைகள் உள்ளன என்று

அவர் கேட்கவில்லை.எத்தனை பேருடைய நாணத்தை மறைக்க

எளிமையான உடைகளாவது நீ தந்திருக்கிறாய்? என்றே கேட்கிறார்.

நீ எந்த ஜாதி என்று இறைவன் நம்மை கேட்கவில்லை.எத்தகைய

நற்குணங்களை நீ வெளிப்படுத்துகிறாய்? என்றுதான் கேட்கிறார்.

இறைவனின் ரூபம் கருணை 


துக்கடா 2 :

உள்ளத்தனையது உயர்வு

அர்ஜெண்டினா நாட்டில் ராபர்ட் வின்சென்ஸோ என்ற  கால்ஃப்
விளையாட்டு வீரர் ஒருவர் இருந்தார்.அவர் ஒரு தொடர் போட்டியில் வெற்றி பெற்று பெரும் தொகைக்கான காசோலையை பரிசாக
அடைந்து வெளியில் வரும்போதே ஒரு பெண்ணை பார்த்தார்.
அவள் தன் குழந்தை உயிரிழக்கும் தருவாயில் இருப்பதாகவும்,
காப்பாற்ற பணமில்லை என்றும் கெஞ்சினாள்.

உள்ளம் உருகிய ராபர்ட் காசோலையை அவளிடம் தந்து குழந்தையை
காப்பாற்றுமாறு கூறி சென்று விட்டார்.

மறு வாரம் விளையாட்டு வீரர்களின் சங்க அதிகாரி  ராபர்ட்டிடம் வந்து,
"எவளோ ஒருத்தி குழந்தை சாக கிடக்கிறது என கெஞ்சி பணம் வாங்கி
சென்றாளாமே.அவள் ஒரு ஏமாற்றுக்காரி.எந்த குழந்தையும் சாக கிடக்கவில்லை.அந்த பெண்ணுக்கு திருமணமும் ஆகவில்லை.குழந்தையும் இல்லை.உன்னை ஏமாற்றி  இருக்கிறாள்" என்றார்.

உடனே ராபர்ட், " என்ன குழந்தை எதுவும் சாக கிடைக்கவில்லையா?
ஆஹா! மிக்க நன்றி. இன்று என் காதில் விழுந்த முதல் நல்ல செய்தி இதுதான்.எந்த குழந்தையும் சாக கிடக்கவில்லை என்பதே எனக்கு மிகப் பெரிய  சந்தோஷம்" என்றார்.

வாழ்க்கையையும், அதன் நிகழ்வுகளையும்  நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே
நம் மனம் இன்பமும் துன்பமும் அடைகிறது.

Saturday, January 29, 2011

துக்கடா

துக்கடா 1  :  இறைவனின் செயல்

                              ஒரு குருநாதரும் சில சீடர்களும் இருந்தனர்.அதில் ஒரு சீடனுக்கு ஒருநாள் பயங்கரமான தலைவலி.தலையில் பத்து போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.இதை பார்த்த மற்றொரு சீடன் "என்னாயிற்று?" என்று கேட்க,
அந்த சீடன்" எனக்கு மிகுந்த தலைவலியாக உள்ளது.இன்று இறைவனுக்கு என் மேல் கருணையே இல்லை" என்றான்.

இதை செவியுற்ற குருநாதர் அந்த சீடனை  நோக்கி, "இத்தனை நாள் ஆரோக்கியமாக
இருந்தாயே,என்றாவது ஒரு நாளாவது இறைவனுக்கு நம்மீது எத்தனை கருணை என்று கூறியிருப்பாயா? அல்லது மனதளவிலாவது நினைத்திருப்பாயா?இன்று மட்டும் உனது தலைவலிக்கு எவ்வாறு இறைவன் மீது குற்றம் சுமத்துகிறாய்?

இறைவனின் அனைத்து செயல்களுமே காரண காரியங்கள் நிறைந்தவை.நம்மால்தான் அவற்றை புரிந்து கொள்ள முடிவதில்லை.
அப்படி இருக்க இறைவனை எவ்விதம் குற்றம் கூற இயலும்?" என்றார்

சீடன் வெட்கித்  தலை குனிந்தான்.

நம்மில் பலரும் அந்த சீடனின் நிலையில்தான் உள்ளோம்.

துக்கடா  2 :  மூழ்காத ஷிப்பே....

முதல் உலகப் போரில் நடந்த ஒரு விஷயம் இது.இரு உயிர் நண்பர்களில் ஒருவன்
போர் முனையில் குண்டடி பட்டு விழுந்தான்.இரண்டாமவன் அவனை சென்று பார்க்க படைத்தலைவரிடம் அனுமதி கேட்க அவரோ, "அனுமதி தருகிறேன்.ஆனால் நீ செல்வதில் பலன் இல்லை.அவன் இறந்திருப்பான். மேலும் நீயும் குண்டடி பட்டு சாவாய்" என்றார்.

இரண்டாமவன் சென்று நண்பனைத் தூக்கி வந்தான்.வைத்தியர் அவனை பரிசோதித்து விட்டு அவன் இறந்து விட்டதாகக் கூற,படைத்தலைவர், "நான்தான் பலனிருக்காது என்றேனே" என கூறினார்.
இரண்டாமவன், "இல்லை ஐயா! நான் சென்றது விலை மதிப்பில்லாத பலனைத் தந்தது" என்றான்.
படைத்தலைவர்,"என்ன உளறுகிறாய்?" என்றார்.

இரண்டாமவன், "நான் அருகில் சென்ற போது என் நண்பன் உயிருடன் இருந்தான்.அவன் பேசுவதைக் கேட்டது எனக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது"
என்றான்.
"உன் நண்பன் என்ன கூறினான்?" என்று கேட்டார் தலைவர்
"நண்பா! நீ வருவாய் என்று எனக்குத் தெரியும் என்று கூறிய பின்னர்தான்
உயிர் துறந்தான் எனது நண்பன்" என்று கூறினான் இரண்டாமவன்

நண்பேன்டா..........!!!!!!!!!!!!!

துக்கடா   3  : ஆராய்ந்து அறிக!

பேருந்தின் நடத்துனர் ஒருவர் ஒல்லியாகவும் உடல் பலமற்றவராகவும் இருந்தார்.
அவரது பேருந்தில் பயில்வான் போன்ற தோற்றமளிக்க கூடிய ஒருவர் தினமும் டிக்கெட் வாங்க மாட்டேன் என்று கூறி கொண்டு சென்று வந்து கொண்டிருந்தார்.
நடத்துனருக்கு அவரை தட்டிக் கேட்கவும் பயம்,அதே சமயம் உள்ளுக்குள் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது.

இந்த பிரச்சனையைத் தீர்க்க எண்ணி அவர் உடல் பயிற்சி செய்து உடலின் வலுவை எவ்வாறெல்லாம் கூட்ட முடியுமோ அவ்வாறெல்லாம் செய்து,  கராத்தே ஜூடோ எல்லாம் கற்றார்.

ஒரு நாள் அந்த பயில்வான் பேருந்தில் ஏறியதும் வழக்கம் போல டிக்கெட் வாங்க
மாட்டேன் என கூறினார்.உடனே அந்த நடத்துனர் பயில்வானின் சட்டையைப் பிடித்து "ஏன் வாங்க மாட்டாய்?" என்று ஆத்திரத்துடன் கேட்க,அவனோ
"என்னிடம் சீசன் டிக்கெட் இருக்கிறது" என்று காமிக்க நடத்துனர் திகைத்தார்.

"பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யும் முன், பிரச்சினை என்ன  என்பதை ஆராய்ந்து  அறிதல் நலம்"