கர்ப்ப வாசம் கலைந்து ...
கண்களைத் திறந்ததால்
காட்சி பூதங்கள் நுழைந்தன.
செவிகள் கேட்ட பொழுதினிலே
சொல் பேய்கள் நுழைந்தன.
மூக்கோ முழு நேரமும்
முகர்ந்தது வாசனைப் பிசாசுகளை.
வாயின் வழியாக நிதமும்
வகைவகையாய் சுவை சாத்தான்கள்.
ஸ்பர்ச சுகம் சுகிப்பதால்
சகலமும் மறக்கும் சூன்யம் ஏறியது.
அத்தனையும் சேர்ந்து அழித்ததோ
ஆறாம் அறிவின் திறனை.
ஆக மொத்தம்,
தாயின் கர்ப்பத்தில்
தனது என்றில்லாத காலத்தில்
நான் கொண்ட ஞானமும்
நான் அறிந்த இறைமையும், எங்கேயோ
நகர்ந்து நகர்ந்து சென்றது
33 comments:
Superb...
அத்தனையும் சேர்ந்து அழித்ததோ
ஆறாம் அறிவின் திறனை.
ஆகவே அதனை மீட்பதற்கு மீண்டும் கர்ப்பவாச தொடர்ச்சி !
அருமை அருமை
கர்ப்பம் விட்டுவெளிவரத் தொலைபவைகள் எல்லாம்
மீண்டும் காலகள் இல்லா கட்டிலில் கிடக்கத்தான்
வந்து தொலையும்
அதுவரை இடையிடையே நம்மோடு கண்ணா மூச்சி விளையாடும்
அவ்வளவே
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை. வளரும் கவிதாயினிக்கு வாழ்த்துகள்
Punarabi jananam......
Kavithai arumai.
மிக மிக நன்று....
தங்கள் கவிதை மிகவும் பிடித்தது இன்று!
வாழ்த்துகள் ராஜி....
மனதை பிழிந்த கவி.
படைபாளிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்
கர்ப்ப வாசம் கலைந்ததால்தான் இத்தனை அல்லல் படுகிறோம் தோழி. மனதை நெகிழ வைத்த கவிதை. பகிர்வுக்கு நன்றி
Excellent ! Thanks for sharing.
டச்சிங்... நல்லாயிருக்கு! :-)
ரொம்ப நல்லா இருக்கு கவிதை வாழ்த்துகள்.
Very good one. But I am not sure how we say that we get 'enlightenment and sovereignty' when we are in those period as I guess we could not remember that. If it is an optimistic assumption then maybe it is with us how to tackle all the devilishness you mentioned and maybe which is what we need to focus on... Still it is very true that those are the period of peace from the moment we start our Jananam
Good one
ஞானக்குழந்தை..
//நான் கொண்ட ஞானமும்
நான் அறிந்த இறைமையும், எங்கேயோ
நகர்ந்து நகர்ந்து சென்றது//
அருமையான வரிகள். ரொம்ப அற்புதமா இருந்தது.
அழகு வரிகள்
தனது என்றில்லாத காலத்தில்
நான் கொண்ட ஞானமும்
நான் அறிந்த இறைமையும், எங்கேயோ
நகர்ந்து நகர்ந்து சென்றது
Superb !
அருமை. கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகப் போடலாமே ராஜி.
@krithi
//But I am not sure how we say that we get 'enlightenment and sovereignty' when we are in those period as I guess we could not remember that//
பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த நூறாயிரப்படியில் ஆத்மாவின் லக்ஷணத்தை பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.கர்ப்பத்தில் இருக்கும் ஜீவ லக்ஷணம் அதில் கூறப் பட்டுள்ளது.
“தேஹ மன இந்த்ரிய விலக்ஷண” (தேகம்,மனம்,புலன்கள் இவற்றிலிருந்து விலகி இருப்பது) என்று கூறப் பட்டுள்ளது.
மேலும் ’அசடம்’ என்ற பதமும் உள்ளது.சடம் என்பது ஜீவன் கர்ப்பத்தை விட்டு வெளி வருகையில்
அதன் அதம ஞானத்தை அழிக்கச் செய்வது.
இதற்கு ஆசார்யார் மணவாள மாமுனிகளின் வ்யாக்யாணமும் இருக்கிறது.
வைணவ சம்பிரதாயத்தில் ”நம்மாழ்வார்” கர்ப்பத்தை விட்டு வெளி வருகையில் இந்த சடத்தை கோபித்ததால் அவருக்கு “சடகோபன்” என்ற திருநாமம் உண்டு. அவரது ஆத்ம ஞானத்தால் இந்த சடத்தை ஹூம் என்று உதறியதாகக் கூறப் படுகிறது.அந்த சடமாகிய வாயு நம்மைச் சூழ்வதால்
நம் கர்ப்ப ஞானம் அகன்று விடுகிறது என்பதற்கு நூறாயிரப்படியில் சான்றுகள் உள்ளன.
கர்ப்பத்தில் இருக்கும் வரை ஆத்மா வேறு இறை வேறு இல்லை.வெளி வந்த ஆத்மா புலனடக்கம் இன்றி இருக்கும் பொழுது ஞானம் அகன்று விடுகிறது.மகான்கள் புலனடக்கத்தால் ஞானத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
you can check this with your grandfather "shri.Srinivasa Raghava Iyengar", if you doubt this.
@krithi
//அதன் அதம ஞானத்தை அழிக்கச் செய்வது//
இதில் ஆத்ம ஞானம் என்பது அதம ஞானம் என்று தவறுதலாக பிழையாகி விட்டது.ஆத்ம ஞானம் என்று படிக்கவும்.எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன்.
பின்னூட்டமளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
@வித்யா சுப்ரமணியம் மேடம்
நன்றி.வழி நடத்தினால் செய்து விடுகிறேன் மேடம்.
இந்த எழுத்தே தங்களது ஊக்குவிப்புதானே :-))
Thank you for the wonderful explanation Chiththi. This is actually interesting and your explanation induced my curiosity further to read those books. However, I guess it will be in Sanskrit. I will try to do some research on these.
I agree with Vidhya madam.
@krithi
proceed.u can. :-))
தனதென்று அறிந்த பின்னிருந்துதான் எல்லா நோயும் வேர் பிடிக்கிறது.
பிறப்பும் இறப்புமற்ற நிலைதான் உன்னதமென்பதால் தான் முக்தி தொலைதூரத்தில் இருக்கிறது.
அருமையான சிந்தனையைக் கிளறும் கவிதை ராஜி.
@krithi
பிள்ளை லோகாசார்யர் அருளிய நூறாயிரப்படி என்பதற்கு பதிலாக முமூக்ஷுப்படி என்பதுதான் சரி.
@சுந்தர்ஜி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி!
பிரஹ்லாதனுக்கு தாயின் கர்பத்தில்தான் ஞானம் பிறந்தது.
சரிதான் ரேவதி கர்பத்தில் கலைந்த ஞானம்
மரணத்தின் முடிவில் மறுபடியும் மீண்டும் எழும்.
எல்லோர் மனத்திலும் தினம் தினம் எழும் எண்ணங்களையும் கேள்விகளையும் அருமையான கவிதையாக வெளிப்படுத்தியதற்கு நன்றி
ஏன்? ஏன்? ஏன்?
enjoyable nevertheless :)
தாயின் கர்ப்பத்தில் இருக்கிற காலம் பொற்காலம் போலும்.அடைபட்ட கர்ப்பகிரகம்தானே அது.வெளி வந்ததும் தெரிகிற,புலப்படுகிற காட்சிகள் மிகவும் கனம் வாய்ந்ததாக/அதுதான் மனிட்தனை இப்படி மாற்ரி விடுகிறது.
கவிதை அருமை!. அண்மையில் தான் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் ஞானம் பற்றி எங்கோ வாசித்தேன்
Post a Comment