Saturday, March 31, 2012

ராமம் பஜே ஷ்யாமம் மனஸா....

ஸ்ரீ ராம நவமி பதிவாக தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதிய

துர்கா ராகத்தில் அமைந்த பாடலும் அதன் தமிழாக்கமும் (மூலம் - சம்ஸ்க்ருதம்)  :

பாடலைக் கேட்க Ramam Bhaje இதைச் சொடுக்கவும்.

பல்லவி:

ராமம் பஜே ஷ்யாமம் மனஸா
ராமம் பஜே ஷ்யாமம் வசஸா
சர்வ வேத சார பூதம்
சர்வ பூத ஹேது நாதம்








அனுபல்லவி:

விபீஷண ஆஞ்சநேய பூஜித சரணம்
வசிஷ்டாதி முனி கண வேதித ஹ்ருதயம்
வசீக்ருத மாயா காரித வேஷம்
ஏதம் புருஷம் சர்வேஷம்






சரணம்:
நீலமேக ஷ்யாமளம் , நித்ய தர்ம சாரிணம்
தண்டினம் கோதண்டம்
பூரா கார்ய கண்டனம்
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி துக்க ரோக பவஹரம்.




தமிழாக்கம்:

பல்லவி:

மனதால்,கருமை நிறம் கொண்ட ராமனை பூஜி!
வாக்கால், கருமை நிறம் கொண்ட ராமனை பூஜி!
அனைத்து வேதங்களின் சாரமான நாமம்
அனைத்து உயிர்களிலும் ஒலிக்கும் நாதம்

அனுபல்லவி:

விபீஷணர், ஆஞ்சநேயர் பூஜித்த திருவடி,
வசிஷ்டர் போன்ற முனிவர்களின் ஹ்ருதயத்தின் வேதம்,
வசீகரிக்கக் கூடிய, நமக்குள் மாயம் ஏற்படுத்தக் கூடிய உருவம்,
இப்படிப் பட்ட வர்ணனைகளுடைய எல்லாவற்றிற்கும் இறைவனாகிய புருஷன்.

சரணம்:

நீலமேகம் போன்ற கருமை நிறமானவன், தினமும் தர்மமாக பின்பற்றக் கூடியவன்,
கோதண்டம் என்ற வில்லுடையவன்,
தவறான நடத்தைகளை அழிக்கக் கூடியவன்,
பிறப்பு , இறப்பு, வயோதிகம், வியாதி, துக்கம், ரோகம் போன்றவற்றிலிருந்து
விடுவிக்க கூடியவன்.

#அப்படிப் பட்ட ராம நாமத்தை மனதாலும் வாக்காலும் பூஜிக்க வேண்டும் என்பதே பாடலின் பொருள்

அவ்வாறே தினமும் ராம நாமம் உச்சரித்து அவனருள் அடைவோம்

ஸ்ரீ ராம ஜெயம்!!!!!!!!!



தமிழாக்கம் செய்யப் பட்ட மற்றொரு ராம் பஜன் (மூலம் - ஹிந்தி )
காதே பீ ராம் கஹோ !
பீதே பீ ராம் கஹோ!
ஸோதே பீ ராம் கஹோ!
ராம்! ராம்! ராம்!
மேரா ராம்!ராம்!ராம்!

பட்தே பீ ராம் கஹோ!
லிக்தே பீ ராம் கஹோ!
ஸுன்தே பீ ராம் கஹோ!
ராம்! ராம்! ராம்!
மேரா ராம்!ராம்! ராம்!

ஹங்ஸ்தே பீ ராம் கஹோ!
ரோதே பீ ராம் கஹோ!
போல்தே பீ ராம் கஹோ!
ராம்! ராம்! ராம்!
மேரா ராம்! ராம்! ராம்!
சீதா ராம்! ராம்! ராம்!
ஜெய் ஜெய் ராம்! ராம்! ராம்!




தமிழாக்கம்:

உண்ணும்பொழுதும் ராம் என்று கூறு!
பருகும்பொழுதும் ராம் என்று கூறு!
உறங்கும் பொழுதும் ராம் என்று கூறு!
ராம்! ராம்! ராம்!
என்னுடைய ராம்! ராம்! ராம்!

படிக்கும் பொழுதும் ராம் என்று கூறு!
எழுதும் பொழுதும் ராம் என்று கூறு!
கேட்கும் பொழுதும் ராம் என்று கூறு!
ராம்! ராம்! ராம்!
என்னுடைய ராம்! ராம்! ராம்!

சிரிக்கும்பொழுதும் ராம் என்று கூறு!
அழும்பொழுதும் ராம் என்று கூறு!
பேசும் பொழுதும் ராம் என்று கூறு!
ராம்! ராம்! ராம்!
என்னுடைய ராம்! ராம்! ராம்!


சீதா ராம்! ராம்!ராம்!
ஜெய் ஜெய் ராம்!ராம்!ராம்!








19 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஹிந்திப்பாடலும் படிக்க வெகு அருமையாகவே உள்ளது. அதைவிட அதனை தமிழில் கொடுத்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

எந்த செயல் செய்தாலும் “ராம் ராம்” என்று சொல்லிச் செய் என்பதிலேயே எல்லாமே அடங்கிவிட்டது.

ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம்!


ஸ்ரீராமநவமிக்கு ஏற்ற அழகான பதிவினை, அற்புதமான படங்களுடன், மிகச்சிறப்பாக
அளித்துள்ள தங்களின் புதிய முயற்சிக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

raji said...

@வை கோபாலகிருஷ்ணன் சார்

//தங்களின் புதிய முயற்சிக்கு//

நேற்று இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களின் “சக்ரவர்த்தி திருமகன்கள்” பதிவை பார்த்து விட்டு என் மகள், ”இவர்கள் போல நீ ஆன்மீகப் பதிவுகள் எல்லாம் போட மாட்டாயா?” என்று கேட்டாள்.அதற்கு நான், ”அவர்கள் போல பதிவு போடும் அளவு எனக்கு ஞானம் கிடையாது.அவர்கள் தகவல் களஞ்சியம்.வேண்டுமென்றால் ஸ்ரீ ராம நவமிக்காக எனக்குத் தெரிந்த எதையாவது போடுகிறேன்” என்று கூறியதன் விளைவே இந்தப் பதிவு.

கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ராமம் பஜே ஷ்யாமம் மனஸா....
ஸ்ரீ ராம நவமி பதிவாக தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதிய

துர்கா ராகத்தில் அமைந்த பாடலும் அதன் தமிழாக்கமும் (மூலம் - சம்ஸ்க்ருதம்) ://

மிக அழகான சம்ஸ்க்ருத கீர்த்தனையையும் அதன் தமிழாக்கத்தையும் தந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ராம் பஜன் ஹிந்திப்பாடல்களின் உச்சரிப்புக்களும் படிக்கும் போது மிகவும் ருசியாகவே உள்ளது.

நாம் எதுசெய்தாலும் “ராம் ராம்” என்று சொல்லிச் செய்துவிட்டால் எல்லாமே அதில் அடங்கிப்போய் விடுகிறது என்பதை அழகாக தமிழிலும் சொல்லி விட்டீர்கள்.

மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸ்ரீராம நவமிக்கு மிகவும் பொருத்தமான பதிவு.

வடமாநிலங்களில் ராமபக்தி நம்மைவிட மிகவும் அதிகமாகவே உள்ளது. ஜபல்பூருக்கும் அதனருகே உள்ள கமேரியா என்ற பகுதிக்கும் போயிருந்தேன்.
எல்லோருமே ராம் ராம் என்று சொல்லிக்கொண்டே தான் எதுவும் செய்கிறார்கள்.

அதுபோல மும்பை பக்கம் வீட்டுக்கு பத்துப்பாத்திரம் தேய்க்கவரும் ஆண் வேலையாட்களை, பொதுவாக ராமன் என்றே அழைக்கிறார்கள்.

அவரவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இருப்பினும், “ராமன்” என்றே சொல்லுகிறார்கள்.

இது, என் சகோதரி ஒருவள் நீண்ட நாட்கள் பம்பாயில் வசித்தபோது என்னிடம் சொன்னது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

2
=
ஸ்ரீராமஜயம்

நாளைய + நாளைய மறுநாள்
ஸ்ரீராமநவமி வாழ்த்துகள்.

ஸ்ரீராமர் நம் எல்லோரையும் செளக்யமாக வைக்கப் பிரார்த்திப்போம்.

அன்புடன் vgk

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீ ராம நவமி சிறப்புப் பதிவு
மிக மிக அருமை
இரண்டு மூன்று முறை வாசித்து
தங்கள் புண்ணியத்தில்
புண்ணியம் சேர்த்துக் கொண்டோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

ஸ்ரீ ராம ஜெயம்!!!!

பானகம் நீர்மோர் விநியோகம் எல்லாம் கிடையாதா? :))

இராஜராஜேஸ்வரி said...

ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி துக்க ரோக பவஹரம்.

மிக அருமையான சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிமையான பயனுள்ள பாடல் பகிர்வு அருமை..

பகிர்வுக்குத் தூண்டிய
அருமை மகளுக்கு
ஆனந்த வாழ்த்துகள்..

பாலா said...

சமஸ்கிருத பாடலும் தமிழ் விளக்கமும் அருமை

குறையொன்றுமில்லை. said...

அதுபோல மும்பை பக்கம் வீட்டுக்கு பத்துப்பாத்திரம் தேய்க்கவரும் ஆண் வேலையாட்களை, பொதுவாக ராமன் என்றே அழைக்கிறார்கள்.

அவரவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இருப்பினும், “ராமன்” என்றே சொல்லுகிறார்கள்.


ஆமா ராஜி அவர்களை ராமன் என்ருதான் அழைக்கிரார்கள் நானும் 20- வருடமாக மும்பையில்தானே

இருக்கேன் நம்ம நாவில் நாள் தோறும் ராம நாமம்
இருந்து கொண்டே இருக்கனுமாம்

தி. ரா. ச.(T.R.C.) said...

நாம் எதுசெய்தாலும் “ராம் ராம்” என்று சொல்லிச் செய்துவிட்டால் எல்லாமே அதில் அடங்கிப்போய் விடுகிறது

சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

ரிஷபன் said...

பாடலும் தமிழ் விளக்கமும் அருமை
“ராம் ராம்”

RVS said...

ஜெய் ஸ்ரீராம்! மிக நல்ல பகிர்வு! சபரியுடன் ராமனின் படம் அற்புதம். ரசித்தேன்.

விச்சு said...

ஸ்ரீராமஜயம்... தமிழாக்கம் நன்றாக இருந்தது.

ADHI VENKAT said...

பாடலும் அதற்கான விளக்கங்களும், படங்களும் என்று ஸ்ரீ ராம நவமிக்கு பிரமாதப்படுத்தி விட்டீர்கள்.

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஹே ரா(ஜி)ம்!

raji said...

பின்னூட்டம் அளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

Post a Comment