Thursday, January 13, 2011

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் மென்மையானவர்கள் மட்டுமின்றி மேன்மையானவர்களாகவும் மிகுந்த அறிவுடன்
கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு  நான் பார்த்தவற்றிலிருந்தும்
கேட்டவற்றிலிருந்தும் சில பகிர்வுகள்:

ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு மின்வெட்டு என்பதால் வாசலில் சென்று அமர்ந்து கொண்டேன்.தெருவில் இரு குழந்தைகளின் உரையாடல் இது:

ஷிவானி: நாம ஒரு கேம் விளையாடலாமா?

பூஜா: ஓ எஸ்! விளையாடலாம்

ஷிவானி: நீ அறிவாளியா இல்லையா?

பூஜா: நான் அறிவாளிதான்

ஷிவானி: ஒகே நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு  அப்டின்னா.  நீ யாரு?

பூஜா: நான் பூஜா

ஷிவானி: பூஜாங்கறது உன்னோட பேரு, நீ யாரு?

பூஜா: நான் ஹ்யுமன் பீயிங்

ஷிவானி: ஐம் ஆல்சோ ஹ்யுமன் பீயிங்,(பக்கத்திலுள்ள குழந்தையைக்  காட்டி) ஷீ இஸ்  ஆல்சோ ஹ்யுமன் பீயிங்.எல்லாரும் அதேதான? நீ யாரு?

பூஜா: ஐம் ஒன் ஆப் தி ஹ்யுமன் பீயிங்

ஷிவானி:   ஐம் ஆல்சோ ஒன் ஆப் தி ஹ்யுமன் பீயிங், ஷீ இஸ் அல்சோ ஒன் ஆப் தி ஹ்யுமன் பீயிங்.எல்லாருமே தனித்தனியா அப்டித்தான்.நீ சொல்றதெல்லாமே எல்லாருக்கும் காமனா இருக்கற பதில்.நான் கேக்கறது நீ யாருன்னு?

பூஜா: (ஷிவானி தன்னை மடக்குவதை உணர்ந்து) நான் இந்த 'கேம்' க்கு வரல

ஷிவானி: அப்டின்னா நீ அறிவாளி இல்லன்னு ஒத்துக்கோ." நான்" ங்கறதுக்கு என்ன அர்த்தம்,நான் யாருன்னு   தன்னை பத்தியே தெரிஞ்சுக்க முடியாத ஒருத்தர் எப்டி அறிவாளியா இருக்க முடியும்.நாம யாருன்னு நாம தெரிஞ்சுண்டாதான நாம அறிவாளி?

எவ்வளவு பெரிய பெரிய நூல்கள் படித்தும் "நான்" என்பது எது என பலரும் சிந்திக்க மறந்ததை ஒரு பத்து வயது குழந்தை அனாயாசமாக கூறி விட்டது என்னை திகைப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
                                                 
                                         * *  * *  * *                 * *  * * * *
அடுத்தது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.விஜய் டி வி யின் 'கண்ணாடி' என்ற நிகழ்ச்சியில் இரண்டு குழந்தைகளின் பேச்சு:

முதல் குழந்தை: தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி பாடினார்.ஆனால் எங்களுக்கோ உணவிருந்தும் சாப்பிட இயலாத  நிலை.கார்த்தால கார்ன் பிளேக்ஸ்ங்கற பேர்ல ஒண்ணுத்தை சாப்ட்டு அவசரமா ஸ்கூல் போக வேண்டியிருக்கு சீக்கரமாவே.லஞ்ச்சோ ஒரு டப்பால.சாயங்காலமும் அவசரமா பாலை  குடிச்சிட்டு ட்யுஷன் போக வேண்டியிருக்கு.அந்த புத்தகப் பையை தூக்கிண்டு இரண்டாவது மாடில இருக்கற க்ளாஸ்க்கு இப்டி சாப்ட்டு போனா எங்க நிலைமை என்ன?

இன்னொரு குழந்தை:  எல்லா பேரண்ட்சும் நம்ம குழந்தை என்ஜினீயர் ஆகணும் டாக்டர் ஆகணும்னுலாம் கனவு கண்டா அப்பறம் யார்தான்    டீச்சராகவும் ப்ரின்சிபாலாவும் ஆறது?அதுக்கு அடுத்த ஜெனரேஷனுக்கு யார்தான் சொல்லித்தரது?

குழந்தைகள் எந்த அளவு சிந்திக்கும் திறனுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இவை உதாரணங்கள்.பெற்றவர்களும் சுற்றி உள்ளவர்களும் அதனை உணருதல் நலம்.அவசியமும் கூட.

14 comments:

vasan said...

Too great to be true. India will shine again when they sign the Law to the Nation.
We are NOT even qualified to greet them.

எல் கே said...

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். குழந்தைகள் புத்திசாலிகள். நாம்தான் அவற்றின் வளர்ச்சியை தடுக்கிறோம்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உண்மையில் குழந்தைகள்தான் வேஷம் போடாத களங்கமில்லாத குருமார்கள் என்று சொல்லலாம். நாம்தான் அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தைக் கலக்குகிறோம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சகோ. இப்போதுள்ள குழந்தைகள் எல்லாருமே மிகவும் அறிவாளிகளாய் இருக்காங்க!

ADHI VENKAT said...

குழந்தைகள் யோசிக்கும் விதமும் அவர்கள் கேட்கும் கேள்விகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும். பொங்கல் வாழ்த்துகள்.

raji said...

கருத்துக்களுக்கு நன்றி மிஸ்டர் வாசன்,மிஸ்டர் எல்.கே.நன்றி வித்யா மேடம்.நன்றி மிஸ்டர் வெங்கட் நாகராஜ்,நன்றி கோவை2தில்லி
அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

ஆமினா said...

நல்லா சொல்லியிருக்கீங்க....

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே....

நம்ம தான் நஞ்சை விதைக்கிறோம் :(

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

R. Gopi said...

நல்ல பதிவு

வை.கோபாலகிருஷ்ணன் said...

நமக்கு நாற்பது வயதாகியும் தெரியாத / புரியாத /மூளையில் தோன்றாத / மாற்றி யோசிக்கத் தெரியாத சில விஷயங்கள், இந்தக் காலக் குழந்தைகளுக்கு நாலு வயதிலேயே இயற்கையாகவே ஏற்படுவது ஆச்சரியமாகத் தான் உள்ளது. இந்தக் கால அவசர உலகின், நவீன தொழில் நுட்பங்கள் போலத்தான் அவர்கள் அறிவும் உள்ளது.

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

குழந்தைகள் மிக மிக புத்திசாலிகள்... நாம் தான் அவர்களை தப்பாக எடை போட்டு விடுகிறோம்...

ஆனாலும் ஒன்று, இன்றைய உலகத்தில் எதிர்நீச்சல் போட இந்த புத்திசாலித்தனம் அவசியம் என்றே தோன்றுகிறது ராஜி....

நல்லா எழுதி இருக்கீங்க...

raji said...

@ஆமினா

நன்றி

@கோபி ராமமூர்த்தி

நன்றி சார்

@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் கூறியது சரியே


@ஆர் கோபி

நன்றி

Vijay Periasamy said...

நாமும் குழந்தை மனமுடனே இருந்தாலென்ன? உலகில் பல பிரச்சனைகள்
வராமலே போய் விடுமே ...


இவண், இணையத் தமிழன் .
http:\\inaya-tamilan.blogspot.com

Jaleela Kamal said...

அருமையான ஒரு பகிர்வு

raji said...

@vijay & @ jaleela kamal

கருத்துக்களுக்கு நன்றி

Post a Comment