Thursday, August 15, 2013

கணினியாயணம் !!

நீ........ண்ட   இடைவெளிக்குப் பின் அனன்யாவின் தட்ட இயலாத அழைப்பின் பேரில் நானும் வலைப்பக்கம் வந்துட்டேன் .என்னையும் கம்ப்யூட்டர் சம்பந்தமான அனுபவங்களை பகிர சொல்லி கூப்பிட்ட ஆல் இன் ஆல்  அனன்யாவுக்கு வந்தனங்கள்,நன்றிகள் !

1986 ம் வருடம்.மகாகவி பாரதியார்  நினைவு நூற்றாண்டு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். "நம்ப ஸ்கூல்க்கு கம்ப்யூட்டர்  வரப் போறதாம்.கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ருப் பசங்களுக்காக" , ஒரு நாள் லஞ்சில் சிநேகிதி சொன்னதும் எல்லாருக்கும் ஒரே ஆர்வம்.

கம்ப்யூட்டர் வந்த திருநாளும் வந்தது.லைனில் எல்லாரையும் நிற்க வைத்து ஐந்து ஐந்து பேராக ரூமுக்குள் அனுப்பி வைத்தார்கள்(ஏ  சி ரூமுக்குள் கும்பல் சேர்க்கக் கூடாதாம்).வெள்ளையாய் கருப்பு மானிட்டருடன் டேபிள் மேல் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தது. டேபிள் கீழே இருந்த செவ்வக வெள்ளை டப்பாவை சி பி யு  என்றும் கரிய மாணிக்கப் பெருமாள் போல் இருந்த வஸ்துவை யு பி எஸ் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.அத்துடன் கம்ப்யூட்டருடன் ஆனா இண்ட்ரோ முடிந்தது.

அடுத்த நாள் லஞ்சில் கம்ப்யூட்டர் என்னும் நூதன வஸ்துவைப் பற்றிய டிஸ்கஷன் மட்டுமே பிரதான இடம் வகித்தது."நம்மையெல்லாம் தொட்டுப் பாக்க கூட விடலையே" என்ற என் புலம்பலுக்கு, "கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்டுடண்ட்ஸ்லாமே தொட்டுப் பாக்க முடியலையாம்.அவங்களுக்கே டீச்சர்ஸ் தான் ஆபரேட் பண்ணிக் காமிப்பாங்களாம். நாம காமர்ஸ் ஸ்டுடண்ட்ஸ்.நம்மை எப்பிடி தொட விடுவாங்க?" என்று பதிலளித்தாள் தோழி.





அத்துடன் கம்ப்யூட்டருடனான தொடர்பு நான்கு வருடங்களுக்கு துண்டிக்கப் பட்டது.ஒரு நாள் ஊரிலிருந்து வந்திருந்த என் அத்தை பேத்தி " நாம பிரவுசிங் செண்டர் போலாமா" என்றதும் " அங்க என்ன செய்யப் போறோம் ?" என்று பட்டிக்காட்டு கேள்வி ஒன்றை நான் கேட்க "சாட் பண்லாம் வா " என்று இழுத்து சென்றாள். என்னை கம்ப்யூட்டரின் முன் அமர வைத்து  தானும் அமர்ந்து கொண்டாள்.என் அக்கா பெண்ணை சாட்டிற்கு அழைத்து அவளுடன் சாட் செய்ய ஆரம்பித்து, " நீ டைப் பண்ணு" என்றாள்.பிற்காலத்துக்கு உதவும் என்று கற்று வைத்திருந்த டைப்ரைட்டிங்  பயிற்சி கை கொடுத்தது.முதன்முதலாக கம்ப்யூட்டரின் அந்த வெள்ளை கீ போர்டில் கை வைத்தது அன்றுதான்.(இதுக்காக என் அத்தைபேத்தியை எல்லாரும் நொந்துண்டா நான்பொறுப்பில்ல )
அதற்கப்பறம் சாட் செய்ய  வாய்ப்பும் கிடைக்கல.என் அக்காபெண் ஈ மெயில் எப்படி அனுப்பனும்னு சொல்லிக் கொடுத்து எனக்குஒரு ஐ டி யும் ஏற்படுத்திக் குடுத்தா.(இப்ப வரை அதே மெயில் ஐ டி தான்) சிறிது நாள் கழித்து சின்னதா ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கும் வாய்ப்பு  கிடைத்தது. MS   DOS என்ன EXCEL  என்ன POWERPOINT, WORD  என்னன்னு ஒரே அமர்க்களப்பட்டது.கோர்ஸ் முடிஞ்சப்பறம் வீட்ல கம்ப்யூட்டர் இல்லாததால தொடர்பு இல்ல.

 ஒரு தடவை ரங்கஸ் 2 மாசத்துக்கு ஜெர்மன் போயிட்டாரு.அவரை தொடர்பு கொள்ள ஈ மெயில் விட்டா அப்பல்லாம் ஒண்ணும்  கிடையாது..அது கூட இருந்திருக்க வேண்டாமேன்னு அவரு அழாகுறையா நினைக்கற அளவு,பிரவுசிங்  செண்டர் போயி "நீ சௌக்கியமா? நான் சௌக்கியம். நீ சாப்பிட்டயா ? அங்க இரவா பகலா.இங்க வெய்யில் அப்பிடிங்கற ரேஞ்சுக்கு ஒரே மெயிலோ மெயில்தான்.பிள்ளை கிட்ட நாம பேச முடியலையே .இவ மட்டும் போயி போயி மெயில் அனுப்பறாளேங்கற மாமியாரின் ஏக்கம் தணிக்க ரங்கஸ் ஜெர்மன்ல எடுத்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு வந்து காமிக்க , மாட்டுப் பொண்ணுக்கு என்னல்லாம் தெரிஞ்சுருக்கு என்கிற ரீதியில் மாமியார் அதிசயப் பட்டு போனார்(அட! நிஜமாத்தான் சொல்றேனாக்கும்)

ரங்கஸ்  வந்ததும் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கனும்னு முடிவு பண்ணி எங்க வீட்டுக்குள்ளயும் அந்த   தேவலோக வஸ்து குடியேறியது. வந்த புதுசுல அதுல இருக்கற ராஜா ராணி லாம் என்  தலையைப் பாத்தாலே தலை தெறிக்க ஓடுற அளவு சாலிட்டேர் விளையாடி,சூப்பர் மேரியோ பயல் குதிச்சு குதிச்சு தன் மண்டையெல்லாம் ரணமாகி நொந்து அழும்படியா  பண்ணியாச்சு.அது  தவிர என்னன்னவோ கேம்ஸ்லாம் போட்டுண்டு  குழந்தையோட நானும் குதூஹலிச்சு , winamp ல பாட்டு கேட்டு,பொண்ணுக்கு ப்ராஜக்டுக்கு தேவைப்படும்னு என்சைக்லோ பீடியாலாம் வச்சுண்டு  (அஞ்சாஞ்க்ளா ஸ் ) ஒரே அமர்க்களம்தான்.        
"பிஎஸ் என்எல்  ப்ரான்ட்பேன்ட் வரதாம்.அதைப் போட்டுண்டா ரொம்ப சௌஹர்யமாம் " இதை 
கேட்டப்பறம்  சும்மா விடுவோமா?போடு அதையும்.அப்பறம் ஒரே பாட்டு டவுன்லோட்,மேசெஞ்சர்ல சாட்,, அப்படின்னு போயிண்டிருந்த  காலத்துலதான் நம்ப  எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் மேடம் 
நமக்கு ப்லாக்கை அறிமுகப்படுத்தி வச்சாங்க (உங்களையெல்லாம் இதன்  மூலம் படுத்தி
வச்சாங்களான்னு அவங்க கிட்ட பேசிக்கோங்க )
அப்பறம் எழுதறேன் பேர்வழின்னு பாத்தது பாக்காதது தோணினது தோணாததுன்னு கணக்கே இல்லாம  கிறுக்க ஆரம்பிச்சு அதுக்கு வந்த கமெண்டெல்லாம் மொபைல போன்ல 
போன இடம் வந்த இடம்னு பாக்கற அளவு  தேறியாச்சு.( எங்களையெல்லாம் புண்ணாக்கிட்டு நீ ஏன் தேறமாட்டேன்னு  நீங்க feel பண்ண மாட்டீங்கன்னு  தெரியும்,நீங்கல்லாம் ஜெம்னு எனக்கு நல்லா தெரியும்பா)
என் எழுத்துப் பணிக்கு ( பிணிக்குன்னு உங்க கண்ணுக்கு தெரியுதா? கரெக்டா தான டைப்பினேன்) இடைவெளி  விட்டிருந்த நேரத்துல  அதைப் பொறுத்துக்க முடியாத அன்பு அனன்யா பொங்கி எழுந்து எழுத வைக்காம விட மாட்டேனாக்கும்னு தீர்மானம் பண்ணி இந்த கிறுக்கலை உள்ளே இருந்து வெளியே கொண்டு வந்துட்டாங்க (ஏய் ! அனன்யா! இருக்குடி உனக்குன்னு நீங்க கறுவாதீங்க பாவம்)

இப்படியாக இந்த எழுத்தை இப்போ ஐபேட்  லேருந்து டைப்பற  அளவு முன்னேறிட்டேனாக்கும்( I Bad ?!)


:))))))))))))))))


இந்த தொடர்பதிவுக்கு நிறைய பேரை அனன்யாவும் இன்னும் மற்றவர்களும் அழைச்சுட்டதால விருப்பம் இருக்கற யார் வேணா தொடர  கேட்டுக்கறேன் :-)











21 comments:

RVS said...

அபாரம். வெல்கம் பேக் டு தி ப்ளாக்ஸ் ஆஃப் இந்தியா.... :-)

ரிஷபன் said...

எங்க வீட்டுக்குள்ளயும் அந்த தேவலோக வஸ்து குடியேறியது. வந்த புதுசுல அதுல இருக்கற ராஜா ராணி லாம் என் தலையைப் பாத்தாலே தலை தெறிக்க ஓடுற அளவு சாலிட்டேர் விளையாடி,சூப்பர் மேரியோ பயல் குதிச்சு குதிச்சு தன் மண்டையெல்லாம் ரணமாகி நொந்து அழும்படியா பண்ணியாச்சு. :)
ரசிக்கும்படி எழுதிட்டீங்க.. நான் என்னத்தை பண்ணப் போறேனோ..

இராஜராஜேஸ்வரி said...

கணினியாயணம் !!

அருமையாய் பலபடிகளை
அநாயசமாக தாண்டி சிகரம் தொட்டகதை .. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

Ranjani Narayanan said...

முதல் பதிவின் சந்தோஷம், புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்ட ஆனந்தம் எல்லாம் இந்தப் பதிவில் தெரிகிறது. நான் இப்பவும் சாலிடேர் விளையாடியபடியே தான் எழுதுகிறேன் :)
உங்களுக்கு மேரியோ, எனக்கு பென்குயின் டைனர்!

மறுபடி வலைப்பக்கம் வந்ததற்கு வாழ்த்துக்கள். இனி அடிக்கடி எழுதுங்கள்.

Yaathoramani.blogspot.com said...

அப்பா.... இந்த தொடர் பதிவின் சாக்கிலாவது
மீண்டும் பதிவு உலகினுள் எட்டிப்பார்த்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

சிறந்த பதிவர்கள் பலர் தங்களைப்போல் பலர்
இல்லாமல் பதிவுலகு கொஞ்சம்
டல்லடித்துத்தான் போயிருக்கிறது

இனியேனும் தொடர்ந்தால் மகிழ்வோம்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

கணினி அனுபவங்களை சுவைபடச் சொல்லியிருக்கீங்க ராஜி......

I BAD ....... :) ரசித்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

அமர்க்களம்.. அடிக்கடி எழுதுங்கோ.

Mala said...

ஆஹா...அனன்ஸ்...என்னே ஒரு சமூக சேவை...
எப்படியாப்பட்ட எழுத்தாளியை இவ்ளோ நாள் தெரிஞ்சிக்காம இருந்துட்டோம்....ச் ச் ச் ச் ச் ச் ச்
ஆமா..அது சரி..இந்த ராஜி யாரு..அந்த ர௪எவதி வெங்கட் யாரு..../!
அப்பாடி! ரெண்டு பேரை கோத்து விட்டாச்சு.கல்,அழுகின தக்காளி,முட்டை எதாருந்தாலும் share தான் ன்னு எவ்ளோ கெத்தா அறிக்கை !!!!! இந்தாங்க பிடிங்க..!!!! பூச்செண்டு !!!

Ananya Mahadevan said...

//அதுல இருக்கற ராஜா ராணி லாம் என் தலையைப் பாத்தாலே தலை தெறிக்க ஓடுற அளவு சாலிட்டேர் விளையாடி// rofl! Super post Revu daling, way to go! Adi dhool!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கணினியாயணம் !!

மிக அழகாக ரஸிக்கும் படியாக நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

இரண்டுமுறை ரஸித்துப்படித்தேன் பலருக்கும் இதுபோல பல அனுபவங்கள் தான்.ஆரம்ப்த்தில் ஏற்பட்டிருக்கும்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

நீண்ண்ண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு மீண்டும் பார்த்ததில் எல்லோருக்குமே ஓர் மகிழ்ச்சி.

நான் மிகவும் ரஸித்த இடம்:

//மாமியாரின் ஏக்கம் தணிக்க ரங்கஸ் ஜெர்மன்ல எடுத்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு வந்து காமிக்க , மாட்டுப் பொண்ணுக்கு என்னல்லாம் தெரிஞ்சுருக்கு என்கிற ரீதியில் மாமியார் அதிசயப் பட்டு போனார்//

;)))))

பகிர்வுக்கு நன்றிகள்.

Anonymous said...

வணக்கம்
வாசக உள்ளங்களை கவரும் வகையில் நல்ல நகைச்சுவை மொழிநடையில் அமைந்துள்ளது மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

middleclassmadhavi said...

Super!

கவியாழி said...

ஆல் இன் ஆல் அனன்யாவுக்கு வந்தனங்கள்,நன்றிகள் !நானும் சொல்லிவிடுகிறேன்

ஆச்சி ஸ்ரீதர் said...

ரொம்ப வருஷமா அந்த வஸ்துவுடன் ஃப்ரண்டா இருக்கிங்களே!சுவையாக பகிர்ந்துள்ளீர்கள்.

ரெண்டு நாளைக்கு முன் நானும் கணினி அனுபவங்களை பகிர துவங்கியபோது உங்கள ஆளையே காணும்னு நினைத்தேன்,எனக்கு முன்னாடி கணினியானம் பண்ணிட்டிங்களே!சற்றுமுன் தான் என் கணினியானததை பகிர்ந்துள்ளேன்.முடிந்தால் வாருங்கள் என் பதிவிற்கு.

அப்பாதுரை said...

attakaasam..
ipadls thamizh eppadi type panreenga?

Avainayagan said...

அனுபவங்களை அழகாகவும் அருமையாகவும் எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்பதிவோடு வந்திருக்கீங்க... தொடர்ந்து எழுதுங்க....

Jawahar said...

படிச்சி முடிக்கும் போது அடடா அவ்வளவுதானா, இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமேன்னு தோணிச்சு..

தொடர்ந்து எழுதுங்க

http://kgjawarlal.wordpress.com

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ராஜி வந்தாச்சு... ராஜி வந்தாச்சு (தெய்வத் திருமகள் ராகத்தில் பாடவும்) விரைவில் நானும் வரேன் ராஜி

ADHI VENKAT said...

தாமதமாக வந்து சொல்றேன்....தூள் கிளப்பிட்டீங்க ராஜி....

எங்களை விட ரொம்ப வருடமாகவே கணினியோடு பழகிட்டீருக்கீங்க...தொடர்ந்து எழுதுங்க...

raji said...

@Rvs

நன்றி

@ரிஷபன்

உங்க முன்னாடிலாம் நான் எம்மாத்திரம் சார்!

@இராஜராஜேஸ்வரி

நன்றி மேடம்

@Ranjani Narayanan

வாழ்த்திற்கு நன்றி மேடம்

@Ramani

வாழ்த்திற்கு நன்றி!கட்டாயம் தொடர்கிறென் சார்!

@வெங்கட் நாகராஜ்

ரசித்தமைக்கு நன்றி சார்!

@அமைதிசாரல்

//அடிக்கடி எழுதுங்கோ// விதி வலியது சாந்தி!

@Mala

ராஜியும் நானே!ரேவதியும் நானே!
ஆமா!பூச்செண்டு எனக்கா இல்ல அனன்யாவுக்கா?

@Ananya Mahadhevan

உங்களை விடவா? அடிப்பொளிட்ளா?!

@வை கோபாலகிருஷ்ணன்

ரசித்துப் படித்தமைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்!

@2008roopan

நன்றி!

@Middleclass Madhavi

thank you

@கவியாழி கண்ணதாசன்

நன்றி

@thirumathi bs Sridhar

வருகைக்கு நன்றி.தங்கள் பதிவில் பின்னூட்டம் அளித்திருக்கிறேன்

@அப்பாதுரை

நன்றி சார்! செந்தமிழ் அல்லது typetamil software install பண்ணிக் கொண்டால் ipad ல் தமிழ் டைப் செய்வது எளிது.

@Viya Pathy

நன்றி

@சே குமார்

வருகைக்கு நன்றி.கட்டாயம் எழுதுகிறேன்

@jawahar

கருத்திற்கு நன்றி.தொடர்கிறேன்

@வித்யா சுப்ரமணியம் மேடம்

இம்புட்டு சந்தோஷமா மேடம் உங்களுக்கு?இதுக்காகவாவது எழுதாலாம்னு தோணுது. நன்றி!வாங்க! வாங்க!

@கோவை2தில்லி

நன்றி ஆதி.கட்டாயம் தொடர்கிறேன்

Post a Comment