Monday, January 21, 2013

அவன்...அவள்...அது... !!


அவன் ...

அவன் வருகையின்
அடையாளமாய் அந்த
அரங்கம் மிகவும்
அழகாய் ......

அவள்...

அவள் விழிகள்
அலைபாயத் துடித்தும்
அடக்கும் நாணத்தால்
அமர்வாய்.......

அது...

அரங்கின் நடுவே
அது கம்பீரத்துடன்
அலங்காரமாய்......


அவன் மிடுக்காய்
அவளை நோக்க,
அவளும் நோக்கி
அளித்த முறுவலில்
அவன் அதை எடுத்தான்

அனைவரும் ஆர்ப்பரிக்க
அதனை முறித்தான்

அவதாரத் திருமணத்தின்
அடையாளச்  சின்னமாய்
அங்கீகரிக்கப்பட்ட
அது முறிந்தாலும் நிமிர்வாய்....







எனது போன பதிவில் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதும்படி சொல்லி 
இருந்த " அவன்...அவள்...அது... " ஒரு சிறிய இடைவளிக்குப் பின்.







20 comments:

ரிஷபன் said...

அவன் அவள் அது
இப்படி சொல்லி ஒரு கவிதை எழுத..
இலக்கிய நயமாய் அமைந்ததில்
எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி..

இராஜராஜேஸ்வரி said...

அவதாரத் திருமணத்தின்
அடையாளச் சின்னமாய்
அங்கீகரிக்கப்பட்ட
அது முறிந்தாலும் நிமிர்வாய்....

முறிந்த சிவதனுசும் நிமிர்ந்திருக்கிறது
தங்கள் கவிதையால்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அரங்கம் மிகவும்
அழகாய் ......//

அரங்கனின்

அவதாரமான

ஸ்ரீராமன்

வரவுக்காய்

அரங்கே

மிகவும்

அழகானதோ!

இந்தத் தங்களின் கவிதை போல!

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அடக்கும் நாணத்தால்
அமர்வாய்....//

எப்படியும் இவர் வில்லினில்
நாண் ஏற்றிடுவார்,

தன்னை,

இல்லாளாகவும் ஏற்றிடுவார்
என்ற நம்பிக்கையில்

”நாணத்தால் அமர்வாய்” [யோ[ ! ;)

>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவன் மிடுக்காய்
அவளை நோக்க,
அவளும் நோக்கி
அளித்த முறுவலில்
அவன் அதை எடுத்தான்//

ஆஹா, முறுகலான ஸ்பெஷல் வெங்காய ரவா தோசையை ஒரு துண்டு எடுத்து சூடான சாம்பாரிலும், சுவையான சட்னியிலும் தோய்த்தெடுத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறதே இந்த வரிகளில் ......

”அண்ணலும் நோக்கினார் .. அவளும் நோக்கினாள்.”

[இதையே இன்று அண்ணலும் ”நோக்கியா”
அவளும் ”நோக்கியா” என்கின்றனர், தமாஷாக அலைபேசியுடன் அலையும் சிலர்]

வெங்கட் நாகராஜ் said...

அருமை... அவன்... அவள்... அது... எனச் சொன்னாலும் காவியத்திலிருந்து ஒரு காட்சியை கவிதையாகப் பகிர்ந்தது அழகு!

தி. ரா. ச.(T.R.C.) said...

அடக்கும் நாணத்தால்
அமர்வாய்.......

பெண்மையின் அடையாளம்.

அவன் மிடுக்காய்
அவளை நோக்க

ஆண்மையின் அங்கிகாரம்

இரண்டும் சேர்ந்து வில்லின் முறிதல் காரணமாக நிமிர்ந்தது உலகம் உய்ய

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எனது போன பதிவில் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதும்படி சொல்லி இருந்த " அவன்...அவள்...அது... " ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்//

ஆஹா! ..... இந்த ஸ்ரீராமர் + ஸீதாதேவியின் சுயம்வரக் காட்சியை மிக அழகாக அற்புதமான ஓவியமாகக் காவியமாகக் கவிதையாகக் கற்கண்டாக வடிவமைத்து எங்களை ரஸிக்கச்செய்துள்ளது தாங்கள்;

இதில் எனக்கோர் கெளரவமா?

ஸ்ரீராமபிரானுக்கு ஓர் குட்டியூண்டு அணில் கூட உதவியதாமே!

அதைப்போல நினைத்துக்கொண்டு இதையும் ஏற்றுக்கொள்கிறேனம்மா.

மிகவும் அழகாகவே எழுதியுள்ளீர்கள்.

மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். அநேக ஆசிகள். க்ஷேமமாக சந்தோஷமாக இருக்கக்கடவது.

வேறு ஏதாவது தலைப்பு எடுத்துக்கொடுக்கலாமா என தலையைப்பிய்த்துக் கொள்ளச் செய்துவிட்டீர்களே! சபாஷ் !!

பிரியமுள்ள
கோபு

RVS said...

மேடம்! இது கவிதையா? காப்பியமா?

சாந்தி மாரியப்பன் said...

நல்லாருக்கு லாஜி :-)

Yaathoramani.blogspot.com said...

சுருக்கமாகச் சொல்லிப் போனாலும்
காட்சி பிரமாண்டமாய் என்னுள்
விரியத் துவங்குகிறது
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

எளிய தமிழில் கவிதை நன்றாக புரிகின்றது.தனுசு படத்தை பார்க்கும் முன்னே நீங்க தனுசைதான் சொல்றீங்கன்னு கெஸ் செய்தது படத்தைப் பார்த்தவுடன் உறுதியாகிட்டு ,அதனால் டீச்சர் கேள்வி ஏதும் கேக்க மாட்டாங்கன்னு தைரியமா பெஞ்சில் அமர்ந்துள்ளோம் .

RAMA RAVI (RAMVI) said...

அவன்,அவள் அது. பிரமாதம்.

pudugaithendral said...

ரொம்ப நல்லா இருக்கு. பாராட்டுக்கள் ராஜி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவதாரத் திருமணத்தின்
அடையாளச் சின்னமாய்
அங்கீகரிக்கப்பட்ட
அது முறிந்தாலும் நிமிர்வாய்..//

”அது முறிந்தாலும் நிமிர்வாய்”

என்ற வரிகளைப்படித்ததும் தான் கட்டிலில் படுத்தவாறே லாப்டாப்பில் இந்தக்கவிதையைப் படித்து ரஸித்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, பலமாக ஒருமுறை கைத்தட்டி ”சபாஷ்” சொல்லிவிட்டு, பின்னூட்டங்கள் கொடுக்க ஆரம்பித்தேன்.



[இது நான் நேற்றே எழுதி அனுப்பிய கமெண்ட் தான். ஏனோ PUBLISH கொடுக்காமல் விட்டுப்போய் உள்ளது. அல்லது ’காக்கா ஊஷ்’ ஆகியுள்ளது. அதனால் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது - VGK]

”தளிர் சுரேஷ்” said...

அவதார புருசனின் அழகிய காதலை அழகாய் படம் பிடித்த கவிதை! நன்றி!

ADHI VENKAT said...

//அவதாரத் திருமணத்தின்
அடையாளச் சின்னமாய்
அங்கீகரிக்கப்பட்ட
அது முறிந்தாலும் நிமிர்வாய்//

கம்பீரமான வரிகள்.
என்னைப் போல் ட்யூப் லைட் மாணவிக்கு எளிய நடையில் புரிந்து கொள்ள ஏதுவாய் இருந்தது....:)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Suuuuuuuper Raji. wonderful

Ranjani Narayanan said...

சீதா கல்யாணத்தை எளிய வரிகளில் அற்புதமாக கவிதையாக வடித்து இருக்கிறீர்கள்.

கடைசி நான்கு வரிகள் நெஞ்சைத் தொட்டன.

பாராட்டுக்கள்!

ராஜி said...

ராமனின் கைப்பட காத்திருந்த வில்லும், சீதையும் கண் முன்னே நின்றார்கள்

Post a Comment