Sunday, February 12, 2012

விருது வாங்கலாம் வாங்க

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எல்லாருடனும் பதிவுலகில் இணைவதில்
மகிழ்கிறேன்.சில காரணங்களால் பதிவுலகிற்கு நேரம் செலவழிக்க இயலாமல் இருந்த சமயத்தில் திரு ரமணி சார் அவர்கள் நான் எழுதி எவ்வளவு நாட்கள் ஆகின்றது என்பதை எனக்கு நினைவூட்டி பின்னூட்டம் அளித்து என்னை மீண்டும் பதிவுலகம் வர ஊக்கமளித்திருந்தார்.அந்த சமயத்தில் திரு வை கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு விருது வழங்கி அதை தொடருமாறு அன்புடன் அழைத்தார்.

இவை தவிர ராம்வி,ஆச்சி,ஆதி,எல் கே சார் மற்றும் ஆர் வி எஸ் சார் போன்ற பலரின் விசாரிப்பும் எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.

அனைவருக்கும் எனது நன்றிகள்



எனக்கு VERSATILE BLOGGER AWARD என்ற விருதினை வழங்கி மீண்டும் எழுத தூண்டிய மூத்த பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருது என்னை மட்டும் சார்ந்ததில்லை.இம்மாதிரி என்னை ஊக்கம் கொள்ள வைக்கும் அனைவருக்குமே இந்த விருதில் பங்கிருக்கிறது.

இந்த விருதைப் பெற்றவர் தனக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஏழு விஷயங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, தான் மிகவும் விரும்பும் தகுதி வாய்ந்த வேறு ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை தன் மூலம் PASS ON செய்ய வேண்டுமாம். அப்போது தான் இந்த விருதை அவர் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். 

அதனால் எனக்கு மிகவும் பிடித்தமான ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு இன்னும் ஐந்து பேருக்கு இதனை என் மூலம் தொடர்கிறேன்

நான் விரும்பும் ஏழு விஷயங்கள் :

1 இசை (கேட்பது, பாடுவது மற்றும் வீணை வாசித்தல்)
2 படித்தல் (பல வகைப் பட்ட புத்தகங்களை படிப்பது)
3 பயணம் (பேருந்து,இரயில் மற்றும் காரில் பல விதமான இடங்களுக்கு பயணித்து அங்குள்ள 
விஷயங்களை அறிவது,இயற்கையை ரசிப்பது)
4 மழையில் நனைதல் (இது என்னைச் சுற்றி இருப்பவர்களை சற்று கோபமூட்டும் விஷயமாக இருப்பினும்)
5 எழுதுவது (இது கூட ஒருவகையில் மற்றவர்களைப் படுத்தும் விஷயமாக இருப்பினும்)
6 கடல் அலையில் கால் நனைத்தல்
7 குழந்தைகள் 

என் மூலம் இந்த விருதினை கீழ்க்கண்ட பதிவர்களுக்கு அளிக்கிறேன்



மேலே குறிப்பிட பட்டிருக்கும் பதிவர்கள் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தங்களின் விருப்பங்கள் ஏழு பற்றி தங்கள் பதிவினில் கூறிவிட்டு, இதே முறையில், தங்களுக்கு மிகவும் பிடித்தமான தகுதி வாய்ந்த மற்ற ஐந்து பதிவர்களுக்கு, இந்த விருதினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


24 comments:

சாந்தி மாரியப்பன் said...

விருதுக்கு வாழ்த்துகளும், பகிர்ந்து கொடுத்ததற்கு நன்றிகளும்..

அடிக்கடி உங்க தளத்துக்கு வந்து பார்த்துட்டு ஏமாந்து திரும்பிப் போனவங்கள்ல நானும் ஒருத்திங்கோவ் ;-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீண்ட நாட்களுக்குப்பின் பதிவுலகத்திற்கு மீண்டும் தாங்கள் வந்திருப்பதே, எங்கள் அனைவருக்கும் விருதும், விருந்தும் கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் தகுதி வாய்ந்த பதிவராகிய தாங்கள் இந்த விருதினை ஏற்றுக் கொண்டதனால் VERSATILE BLOGGER AWARD என்ற விருதுக்கே பெருமை கூடுவதாக உள்ளது.

விருதினை ஏற்ற தங்களுக்கு என் நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் மிகவும் விரும்புவதாகச்சொல்லும் ஏழு விஷயங்களிலிருந்தே தங்களின் தனித்திறமைகளும், தாங்கள் ஒரு பன்முகத்திறமையாளர் தான் என்பதும் நன்கு பளிச்சிடுகிறது.

ஆகவே இந்த விருது சேரவேண்டியவரைத்தான் போய்ச் சேர்ந்துள்ளது என்பதில் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் மூலம் இந்த விருதினைப் பெறும் ஐவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

மீண்டும் பதிவு கொடுத்து பதிவுலகில்
விருதோடு வலது கால வைத்து
நுழைந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பல புதிய பெண் பதிவர்கள் தற்சமயம்
எழுதத் துவங்கியிருக்கிறார்கள்
தரமான பதிவுகளைத் தரும் தங்களைப் போன்றவர்கள்
நிச்சயம் நல்ல வழிகாட்டியாக அவர்களுக்கு இருப்பீர்கள்
என்வே தொடர்ந்து தொடர வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

விருதோடு வந்தமைக்கு வளமான வாழ்த்துகள்..

RVS said...

விருது வழங்கி சிறப்பித்தமைக்கு நன்றிங்க மேடம்.

RVS said...

போன கமெண்ட்டைல் ”என்னையும்” என்ற பதத்தை சிறப்பித்தமைக்கு முன்னால் சேர்த்துக்கொள்ளவும். விடுபட்டுவிட்டது. :-)

குறையொன்றுமில்லை. said...

ராஜி நீண்ட நாட்களுக்குப்பிறகுவந்தாலும் விருது உங்களை வரவேற்கிரது பாத்தீங்களா? வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

விருது பெற்றதற்கும் உங்களால் விருது பெற்ற‌ மற்ற அன்புத் தோழமைகள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!

ராமலக்ஷ்மி said...

விருதுக்கு மிக்க நன்றி ராஜி. தங்களுக்கும் விருது பெற்றிருக்கும் சக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

மீண்டும் புதிய உற்சாகத்துடன் தொடர்ந்து பதிவுகள் தாருங்கள். காத்திருக்கிறோம்:)!

ADHI VENKAT said...

விருதுடன் மீண்டும் பதிவுலகத்துக்கு வருகை தந்ததற்கு நன்றி..... நேற்று கூட ஏன் இன்னும் வரவில்லை என்று விசாரிக்கலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்....

தங்களுக்கும், தங்களால் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.....

RAMA RAVI (RAMVI) said...

ராஜி, மீண்டும் பதிவுலகத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

விருதுக்கு வாழ்த்துக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

ஹை!வாங்க,வாங்க மீண்டும் வந்ததற்கும்,விருது பெற்று மற்றவர்களுக்கு விருது வழங்கியதற்கும் நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

வாழ்த்துகள்

Rathnavel Natarajan said...

நீண்ட நாட்கள் கழித்து எழுதுகிறீர்கள்.
நல்வரவு.
வாழ்த்துக.

அப்பாதுரை said...

ரொம்ப நன்றி raji. என்ன, ஆளையே காணோமேனு பார்த்தேன். நலமா?

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும்போதே அதிரடியாக விருது கொடுத்துத் துவங்கி இருப்பது நன்று.

தொடர்ந்து எழுதுங்கள்...

எனக்கும்[!] விருது வழங்கியதற்கு மிக்க நன்றி. தொடர்கிறேன்..

விச்சு said...

வாழ்த்துககள்..

கீதமஞ்சரி said...

விருது பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Unknown said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்க.

வெங்கட் நாகராஜ் said...

நீங்கள் வழங்கிய விருதிற்கு மீண்டுமொரு முறை நன்றி சகோ...

விருதினை நானும் பகிர்ந்து கொண்டேன். என் வலைப்பூவிற்கு வந்து பாருங்களேன்...

http://www.venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_14.html

raji said...

பின்னூட்டம் அளித்து வாழ்த்தி ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

Post a Comment