அடுத்த வீட்டின் அறிமுகமன்று
அடிக்கடி குசலம் அவசியமன்று
அதிகப்படி வார்த்தைகள் எதெற்கென்று,
அருகே அமர்வோர் காதில்
அடைப்பான் பொருத்தி
அழகிய கைபேசியோடு பயணத்தில்,
அவரவர் வேலைகள்
அவரவர் நேரங்கள் என்று
அடைத்துப் போன உணர்வுகளாய்,
அவசர வாழ்வில் இங்கே
அர்த்தமற்ற வார்த்தையாய்
அகன்று போனதென்ன
அக்கறை என்ற மனிதம்!!
அங்கே ஒரு காகம் இறக்க
அக்கறையாய் பல காகங்கள் கரைகிறது.
அதனிடம் கற்போமா?
கரையும் அவற்றின் முன்
கறையாய் நாம் அக்'கறை' மறந்து....
21 comments:
Tamilmanam 2
INDLI: 4
Udance: 2
Very Nice. vgk
இதுபோல் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்புதான் உண்டாகும். அருகிலிருக்கும் மனிதர்களை அலட்சியப்படுத்திவிட்டு உலகம் முழுவதும் நண்பர்களைக் கொண்டாடுவது இவர்களுக்கு எப்படி சாத்தியம்?
ஆதங்கம் அழகிய கவிதையாகிவிட்டது. அருமை. பாராட்டுகள்.
சூப்பர் ராஜி. மனிதம் நம்மிடம் குறைந்து அவைகளுக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
காகம் கரைதலைக் கொண்டு
அப்படியே நம்மிடையே உள்ள கறையினைக் கண்டு
ஒப்பிட்டுக் கொதித்து அதை அப்படியே ஒரு
நல்ல படைப்பாக கதைத்த விதம் அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 3
அக்கறைக்கு அக்கறையாய் ஒரு கவிதை! நன்று
இதைப் படித்து நிறைய பேர் கரையேறினால் சந்தோஷமே!!
////அங்கே ஒரு காகம் இறக்க
அக்கறையாய் பல காகங்கள் கரைகிறது.
அதனிடம் கற்போமா?
கரையும் அவற்றின் முன்
கறையாய் நாம் அக்'கறை' மறந்து....
////
சிறப்பான வரிகள்
காகத்திடம் நாம் கற்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்குதான் யாருக்கு நேரம் இருக்கு ?அவசரகதியில் ஓடிண்டு தானே இருக்கோம்.?
மனிதன் சுருங்கி கொண்டே போகிறான். மனிதம் அழிந்து கொண்டே வருகிறது.
ஒவ்வொரு பறவையிடமும், விலங்கிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது...
நேரம் இல்லையென்று சொல்லி ஓடிக் கொண்டு இருக்கிறோம்....
நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.
நீங்கள் இன்னும் குரங்கு இறந்து காணவில்லையோ?
மனிதாபிமானம் உள்ள எவரும் அழுது விடுவார்கள், இறந்த குரங்கின் உறவினர் படும் துயரம் கண்டு...
ஆனால் காகம் உங்கள் கவிதைக்கு அழகாய் பொருந்தி உள்ளது
//அவசர வாழ்வில் இங்கே
அர்த்தமற்ற வார்த்தையாய்
அகன்று போனதென்ன
அக்கறை என்ற மனிதம்!!
//
அழகான வரிகள்
இன்று என் வலையில்
கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு
அங்கே ஒரு காகம் இறக்க
அக்கறையாய் பல காகங்கள் கரைகிறது.
அதனிடம் கற்போமா?
கரையும் அவற்றின் முன்
கறையாய் நாம் அக்'கறை' மறந்து....
நெஞ்சைத் தொட்டது சகோ இந்த
உண்மைவரிகள் வாழ்த்துக்கள் .
முடிந்தால் வாருங்கள் கவிதை
காத்திருக்கின்றது .
அங்கே ஒரு காகம் இறக்க
அக்கறையாய் பல காகங்கள் கரைகிறது.
அதனிடம் கற்போமா?
கரையும் அவற்றின் முன்
கறையாய் நாம் அக்'கறை' மறந்து....
வரிகள் அருமை
மனிதர் தீவுகளாகிக் கொண்டே போகிறார்கள்..
பறவைகளும் விலங்குகளும் ஜீவனோடு வாழ்கின்றன..
நல்ல கவிதை.
இனி இப்படியான காக்கா கதை,(இந்த கவிதை) சொல்லன்னும் போலருக்கே பிள்ளைகளுக்கு.பகிர்விற்கு நன்றி.
@வை கோபாலகிருஷ்ணன் சார்
நன்றி
@கீதா
கருத்திற்கு நன்றி
@வித்யா சுப்ரமணியம் மேடம்
நன்றி மேடம்
உண்மைதான்
@ரமணி சார்
நன்றி
@RVS
நன்றி.ஆம் சந்தோஷமே
@K.s.s.Rajh
நன்றி
@லக்ஷ்மிம்மா
ஆமாம்.ஆனால் அந்த நிலையில் மாற்றம்தான் வேண்டும்
@பாலா
தாங்கள் கூறுவது சரிதான்
@வெங்கட் நாகராஜ்
கருத்திற்கு நன்றி
@suryajeeva
குரங்கு இறந்து பார்த்திருக்கிறேன்.ஆனால் நிறைய பேருக்கு காகம் பற்றித் தெரிந்திருக்குமே.அதனால்தான் இந்த ஒப்பீடு.
கருத்துக்கு நன்றி சார்.
@'என் ராஜபாட்டை'-ராஜா
நன்றி
@அம்பாளடியாள்
நன்றி
@r.v.saravanan
நன்றி
@ரிஷபன்
கருத்திற்கு நன்றி
@thirumathi bs sridhar
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஒவ்வொரு உயிர்கள்கிட்டயும் கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்குது..
உண்மைதான். அக்கறை இல்லை என்பதுடன் அலட்சியமும்கூட. அதுதான் நாகரிகம் என்று சொல்லும் இளையவர்கள். எதிர்காலம் கவலைபடுத்துகிறது. நல்ல கவிதை.
அனைவரும் கற்றூக் கொள்ள வேண்டிய விஷயம்.
//அங்கே ஒரு காகம் இறக்க
அக்கறையாய் பல காகங்கள் கரைகிறது.
அதனிடம் கற்போமா?
கரையும் அவற்றின் முன்
கறையாய் நாம் அக்'கறை' மறந்து....//
அருமையான வரிகள்.
..
Post a Comment