Tuesday, November 15, 2011

களஞ்சியம்

நீண்ட நாட்கள் முன்பு இந்த தளத்தில் "துக்கடா" என்ற பெயரில் வந்து கொண்டிருந்த பகுதி,  மூத்த பதிவர் திருமதி மனோ சாமிநாதன் அவர்களின் யோசனையின் படி இனி "களஞ்சியம்" என்ற தலைப்பில் வெளிவரும்.

இன்றைய களஞ்சியம் :


1 .  ஒரு மகானும் மந்திரவாதியும் சந்தித்துக் கொண்ட ஒரு தருணத்தில் அந்த
மந்திரவாதி மகானைப் பார்த்து என்னால் இறந்தவர்களை உயிர் கொடுத்து வாழ
வைக்க இயலும்.உங்களிடம் என் போன்ற சக்தி உள்ளதா? என்று கேட்க அந்த மகானோ,  இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தியை விட உயிருடன் இருப்பவர்களை நம்பிக்கையுடன் நல் வழியில் வாழ வைக்கும் சக்தியே சிறந்தது.நான் அந்த சக்தியைத்தான் பயன்படுத்த விரும்புகிறேன் என்றார்.

மனிதனை நல்வழிப் படுத்தி நம்பிக்கையுடன் வாழ வைப்பவர்களே உண்மையில் மிகச் சிறந்த மகான்களாவார்.


2 . ஒருமுறை சீன தத்துவ மேதை கன்ஃபூஷியஸ்ஸிடம் ஒருவர் வாழ்க்கையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு வார்த்தையில் கூற தங்களால் இயலுமா? என்றார்.இயலும் என்ற கன்ஃபூஷியஸ்ஸிடம் அது என்ன வார்த்தை என்று கேட்ட போது அவர், " பரஸ்பரம் "  என்பதே அந்த வார்த்தை. பிறர் உனக்கு எதை செய்யக் கூடாது என்று நினைக்கிறாயோ நீயும் பிறருக்கு அம்மாதிரி செயல்களை செய்யக் கூடாது என்பதுதான் இதன் பொருள் என்றார்.

சான்றோர்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் உகந்த வார்த்தைகளைத்தான் அவை இருக்கும்.


3 .  சீடன் ஒருவன் தன் குருவிடம் கடவுள் இந்த உலகை சரியாகவே படைக்கவில்லை.நானாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக படைத்திருப்பேன் என்றான். அதற்கு அந்த குரு இப்பொழுதாவது நீ உலகுக்கு வந்த அர்த்தம் உனக்கு விளங்கியதே. நீ நன்றாக படைப்பாய் என்று எண்ணிதான் கடவுள் இந்த உலகில் உன்னைப் படைத்திருக்கிறான் என்றார். 


குறைகள் கண்டுபிடிப்பது நின்றாலே நாம் நிறைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.


4 .  கி மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்பின் போது போருக்கு முகாமிட்டிருந்த இந்தியப் படை வீரர்கள் வயிற்றுப் போக்கால் அவதியுற்றனர்.இதற்கு காரணம் குடிநீரே எனக் கண்டறியப்பட்ட போது, முகாமில் உள்ள தளபதிகளை பாதிக்காத குடிநீர் படை வீரர்களை மட்டும் பாதித்தது எவ்வாறு என்று ஆராயப் பட்டது. தளபதிகளுக்கு வெள்ளிக் குவளையிலும் படை வீரர்களுக்கு தகரக் குவளையிலும் வழங்கப் பட்டதே
காரணம் என அறியப் பட்டு படை வீரர்களுக்கும் வெள்ளிக் குவளையில் குடிநீர்
வழங்கப்பட்ட போது வயிற்றுப் போக்கு நின்றது.

வெள்ளிக்கு கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் உண்டு என்பதும் வெள்ளியின் மதிப்பு உலக அளவில் உயரவும் இந்த இந்தியப் பின்னணியே
காரணமாக அமைந்தது.

வடமொழியில் "வெண்மை ஒளி" என்று பொருள் படும் "அர்ஜென்டா"  என்ற சொல்லே இன்றளவும் வேதியியலில் வெள்ளிக்கு "அர்ஜெண்டம்" என்ற பெயர் அமையக் காராணமாயிற்று.

இது இந்தியப் பெருமை :-))


இதன் மூலம்:

கற்றவற்றிலிருந்தும் கேட்டவற்றிலிருந்தும்

19 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

Tamilmanam : 2
Udance: 3
Indli: 4

அருமையான விஷயங்கள். பாராட்டுக்கள். vgk

[அதனால் தான் சிலர் வீடுகளில் வெள்ளித்தட்டில் சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் கூடத்தான்.]

சிவகுமாரன் said...

மிகவும் அருமையான விஷயங்களின் தொகுப்பு.
கண்பூஷியசின் அந்த ஒரு சொல் தத்துவம் அபாரம்.
பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 3

K.s.s.Rajh said...

அருமையான விடயங்களின் தொகுப்பு இன்றைய களஞ்சியம் அருமை

அப்பாதுரை said...

#3 அருமை!

பாலா said...

எல்லா தகவல்களும், சிந்தனைகளும் அருமை. குறிப்பாக மூன்றாவது கருத்து மிக அருமை.

குறையொன்றுமில்லை. said...

அருமையான விஷயங்களின் தொகுப்பு நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
குறைகள் கண்டுபிடிப்பது நின்றாலே நாம் நிறைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

சாந்தி மாரியப்பன் said...

மணக்குது கதம்பம்..

MANO நாஞ்சில் மனோ said...

வெள்ளிக்கு கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் உண்டு என்பதும் வெள்ளியின் மதிப்பு உலக அளவில் உயரவும் இந்த இந்தியப் பின்னணியே
காரணமாக அமைந்தது.//

அடடா எனக்கு இது புது தகவலா இருக்கே, அப்பிடியா சங்கதி, பதிவு மிக்க நன்று....!!!

ADHI VENKAT said...

எல்லாமே நல்ல விஷயங்களா இருக்கு. பகிர்வுக்கு நன்றி ராஜி.

எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில் வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்ததில் தினந்தோறும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளி தட்டை எடுத்து வைத்து விட்டு எவர்சில்வர் தட்டில் தான் சாப்பிடுகின்றனர். தேய்ந்து விடுமாம்!!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கருத்துக்கள் பெட்டகம்

rajamelaiyur said...

//மனிதனை நல்வழிப் படுத்தி நம்பிக்கையுடன் வாழ வைப்பவர்களே உண்மையில் மிகச் சிறந்த மகான்களாவார்.
//
100 % உண்மை

ரிஷபன் said...

அப்போ அந்த வெள்ளித்தட்டை வெளியே எடுத்துர வேண்டியதுதான்.

களஞ்சியம் அறிவை வளர்க்கிறது..

ஆச்சி ஸ்ரீதர் said...

களஞ்சியமேதான்.

சாகம்பரி said...

களஞ்சியம் நிறைந்து இருக்கிறது. குறிப்பிடதக்க விசயங்களை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி ராஜி.

வெங்கட் நாகராஜ் said...

களஞ்சியம் நன்றாக நிறைந்து இருக்கிறது சகோ... நல்ல விஷயங்களைத் தொடர்ந்து பகிருங்கள்....

raji said...

@வை கோபாலகிருஷ்ணன் சார்

பாராட்டுக்களுக்கு நன்றி

@சிவகுமாரன்

பாராட்டிற்கும் கருத்திற்கும் நன்றி

@ரமணி

நன்றி

@K.s.s.Rajh

நன்றி

@அப்பாதுரை

நன்றி

@பாலா

நன்றி

@லக்ஷ்மிம்மா

வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா

@அமைதிச்சாரல்

ஒரு பிடி பிடிச்சீங்களா?! :)

@MANO நாஞ்சில் மனோ

ஆமாங்க!

@கோவை2தில்லி

பாத்து!சாப்பிட்டாலே தட்டு தேஞ்சுடுதுன்னு சாப்பிடாமலே இருந்துடப் போறாங்க.கொஞ்சம் சொல்லி வைங்க ஆதி!

@NIZAMUDEEN

கருத்துக்கு நன்றி

@'என் ராஜபாட்டை' - ராஜா

ஆமாம்

@ரிஷபன்

தட்டு மட்டும்தான் எடுக்கப் போறீங்களா?டம்ளர்,சொம்பு அப்பறம் உத்தரணி எல்லாம்?

@thirumathi bs sridhar

கருத்துக்கு நன்றி ஆச்சி!

@சாகம்பரி

கருத்திற்கு நன்றி மேடம்

@வெங்கட் நாகராஜ்

தங்கள் ஊக்கத்தில் கட்டாயம் தொடர்கிறேன் சார்!

துரைடேனியல் said...

Super.
TM 8
Udanz 8.

RVS said...

//பகிர்வுக்கு நன்றி டீச்சர். //
சிவா... அவங்க ஹெட்மிஸ்ஸஸ்.

மூன்றாவது நல்லாயிருக்கு. :-)

Post a Comment