Friday, December 7, 2012

கடிகார முள்ளில் பூவாய்.....






நீ  தந்த போர்வை குளிருக்கு
இதமாய்த்தான் இருக்கிறது  

அலமாரி திறந்தேன் 
உடைத் தேர்வுக்கென.
என் கை எடுக்கிறது 
நீ தந்த உடையை 

வானொலி கேட்கும் 
வழக்கம் வேண்டுமென நீ 
தந்த பெட்டியில்தான் என் 
காலைகள் விடிகின்றன 

நடந்து செல்கையில் 
நீ தந்த கொலுசுகள் 
உன் ஒலிகளை எழுப்பியபடி 

மணி பார்க்கவென்று 
மணிக்கட்டைப் பார்த்தால் நீ 
தந்த கடிகாரத்தில் 
உன்னுடன் கழித்த பொழுதுகள்தான் 
தெரிகின்றன

போர்வை வேண்டாத காலமாய் 
குளிர்காலம் மாறலாம்
உன் நினைவுகள் வேண்டாத 
காலங்களை எந்த கடிகாரங்களும்                    
காட்டுவதில்லை


26 comments:

இராஜராஜேஸ்வரி said...

உன் நினைவுகள் வேண்டாத
காலங்களை எந்த கடிகாரங்களும்
காட்டுவதில்லை

மனதில் பூவாய் மலரும் அழகான எண்ணங்கள் வடித்த அருமையான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

ezhil said...

நினைவுகள் என்பதே என்றுமே நீங்காமல் இருக்கத்தானே? கவிதை அழகு

ஆச்சி ஸ்ரீதர் said...

//உன் நினைவுகள் வேண்டாத
காலங்களை எந்த கடிகாரங்களும்
காட்டுவதில்லை//

டச்

டச் டச்

டச்

குறையொன்றுமில்லை. said...

அழகான கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமை! கடைசி நான்கு வரிகள் மிகவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

நினைத்து ரசிக்கக்கூடிய கவிதை. நல்லா இருக்கு.

ரிஷபன் said...

உன் நினைவுகள் வேண்டாத
காலங்களை எந்த கடிகாரங்களும்
காட்டுவதில்லை

நான் தான் ரசித்தேன் என்று நினைத்தால் சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும்..

சில சமயம் கவிதை தன்னை எழுதிக் கொள்கிறது மிக அழகாய்..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.....

பாராட்டுகள்.

Mrs.Mano Saminathan said...

அன்பின் மிகுதியில் கவிதை மிக அழகாய் வந்து விழுந்திருக்கிறது!

ராமலக்ஷ்மி said...

அருமை ராஜி. இறுதி வரிகள் மிக நன்று.

Yaathoramani.blogspot.com said...

மனம் தொட்ட அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

Very Nice !
Excellent !!
Congrats !!!

Touching Lines .... ;)))))

உஷா அன்பரசு said...

//உன் நினைவுகள் வேண்டாத
காலங்களை எந்த கடிகாரங்களும்
காட்டுவதில்லை
// - அழகா சொல்லி அசத்திட்டிங்க.

ADHI VENKAT said...

//போர்வை வேண்டாத காலமாய்
குளிர்காலம் மாறலாம்
உன் நினைவுகள் வேண்டாத
காலங்களை எந்த கடிகாரங்களும்
காட்டுவதில்லை//

அழகான வரிகள். மனதை தொட்டன...

கதம்ப உணர்வுகள் said...

ரசனை ரசனை....

ஒவ்வொரு வரியிலும் அன்பு இழையோடும் ரசனை....

நேசத்துக்குரியவனின் அன்பை நினைக்கவைக்க திகட்டாத ரசனை....

அவன் தந்த போர்வையில் இருந்து கதகதப்பும் அணைப்பும்....

வானொலியில் இருந்து எழும் ஒலியின் திசை எல்லாம் அவனே வியாபித்தது போன்ற ஒரு மயக்கம்....

கொலுசு சத்தம் தரும் நடக்கும்போது ஆனால் நினைவலைகளை தட்டி எழுப்புமா?? அட எழுப்புகிறதே ராஜி உங்க எழுத்துகளால்.....

பருவக்காலம் மாறலாம் அழகிய உவமை ரசித்தேன்பா.... ஆனால் நினைவுகளை மீட்டும் ரகசிய எண்ணங்களை பகிர்ந்த நேசங்களின் ஒவ்வொரு நொடிப்பொழுதை கடிகாரம் மட்டும் உடலின் ஒரு பாகமாக ஒட்டிக்கொண்டு....

கடைசி ரெண்டு வரி க்ளாசிக்பா.. ரசித்து மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்...

போர்வை வேண்டாத பருவக்காலம் மாறலாம்....

பருவம் மறைந்து முதுமை கூட வரலாம்....

ஆனால் நினைவுகளின் இளமை மட்டும் என்றென்றும் மனதில் நிலைத்த இடத்தில்... நினைக்கும் பொழுதில் எல்லாம் தூசி தட்டாமலேயே எழுப்பும் அற்புதமான பொழுதுகளை

ரசித்து வாசித்தேன் பலமுறை ராஜி....

என்ன ஒரு ரசனைப்பா உங்களுக்கு.....

அன்பு வாழ்த்துகள் ராஜி...

கதம்ப உணர்வுகள் said...

ராஜியின் ரசனையும் ரகளையும் அடிக்கடி ரசிக்கணும்னா முதல்ல ஃபாலோயரா இணைச்சுக்கனும்பா.. இப்பவே அதை செய்கிறேன்...

கதம்ப உணர்வுகள் said...

மனம் தொட்ட பகிர்வுப்பா...

தமிழ்மணத்திலும் இணைத்து ஓட்டும் போட்டுட்டேனே...

Ranjani Narayanan said...

அசத்தலான ஒரு கவிதை எழுதி இருக்கிறீர்கள், ராஜி!
வெகு அற்புதம்!
பாராட்டுக்கள்!

http://thiruvarangaththilirunthu.blogspot.in/

துரைடேனியல் said...

அருமையான கவிதை.

முத்து குமரன் said...

அன்பின் ஆழத்தை காட்டும் இந்த நினைவுகள் அருமை.

a said...

ரசிக்க வைத்த வரிகள்...... நினைவை கிளரும் வரிகள்...

உஷா அன்பரசு said...

இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவு பகிர்ந்துள்ளேன்
வருக!
http://blogintamil.blogspot.in/

Unknown said...

உங்களைப் போலவே உங்கள் கவிதையும் அழகு.
நீங்காத இந்த நினைவுகள் ஒரு மிதமான போதைதான். வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

27.12.2012 அன்று வலைச்சரத்தில் இந்த தங்களின் பதிவு பற்றி திருமதி உஷா அன்பரசு என்பவர்களால் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது.

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். VGK

Anonymous said...

/உன் நினைவுகள் வேண்டாத 
காலங்களை எந்த கடிகாரங்களும்                    
காட்டுவதில்லை/ மிகவும் அருமையான கவிதை .. அழகிய வரிகள்

பூந்தளிர் said...

என்ன ரசனையான வரிகள். கவிதை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

Post a Comment