வாழ்க்கையில் அறிவுபூர்வமாக புரிந்து நடத்தல் என்பது மிக அவசியமான விஷயமாகும்.
அது இல்லாமல் போகும் பொழுது நிகழ்வுகள் நமக்கு சாதகமற்றோ விளைவுகள் பலனற்றதாகவோ போய் விடும்.
என் வாழ்வில் நான் இது போன்று சமயம் புரிந்து நடக்க தவறிய விஷயத்தை இங்கு பகிர விரும்புகிறேன். இந்த சம்பவத்தினால் மோசமான விளைவுகளோ,
மன வருத்தங்களோ ,மனக்கசப்போ ஏற்படாவிடினும் இந்த சம்பவத்தை நான்
மறக்க மாட்டேன்.இன்றளவும் இது என் வீட்டில் ஒரு நகைச்சுவையாகக் கருதப்பட்டு வந்தாலும் என் பார்வையில் இதில் நான் செய்த தவற்றை மட்டும்தான் பாடமாக எடுத்துக் கொண்டேன்.
இப்போ கொசுவர்த்திக்குப் போகலாமா? சினிமால வர மாதிரி வளையம் வளையமா எல்லாரும் கற்பனை பண்ணிக்கோங்க பாக்கலாம். :)
அப்பொழுது எனக்கு பத்தொன்பது வயதிருக்கும்.நானும் எனது இரண்டு மன்னிகளும் ஷாப்பிங் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.கூடவே கொசுறாக பெரிய அண்ணாவின் இரண்டு வயது குழந்தை.
வீட்டிற்கு திரும்பி வர ஆட்டோ எதுவும் கிடைக்காததால் ஒரு மாலை நேர
நடையாக இருக்கட்டுமே என முடிவு செய்து மூவரும் பேசிக் கொண்டே நடந்து
வந்து கொண்டிருந்தோம்.குழந்தையை கொஞ்சம் நடக்க விட்டு கொஞ்சம் மூவரும் மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு வந்தோம்.
சிறிது தூரம் வந்த பிறகு நானும் இரண்டாவது மன்னியும் சற்று முன்னால் நடக்க குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்த காரணத்தால் பெரிய மன்னி சற்று
மெதுவாக பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்.அந்த இடத்தில் வழியில் ஒரு கிணறு இருக்கும். அதற்கு சில நாட்கள் முன்புதான் அதில் ஒரு உயிரற்ற உடல் கண்டெடுக்கப் பட்டு அது கொலையாக இருக்கலாம் என வதந்தி இருந்து கொண்டிருந்தது.

நானும் இரண்டாவது மன்னியும் அது பற்றி பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று கரண்ட் வேறு போய்விட்டது. பின்னால் வந்த பெரிய மன்னி, சிணுங்க ஆரம்பித்த குழந்தையை சமாதானம் செய்வதற்காக, "அத்தையும் சித்தியும் முன்னாடி போறாங்களே.நாம அவங்களைப் பிடிக்கலாமா?" என்று கேட்டு "ஓடு.. ஓடு..." என்றபடி இரண்டடி ஓடி வர, ஓடு ஓடு என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்த நான் மன்னி ஓடி வருவது கண்டு ஏதோ ஆபத்து போலிருக்கிறது.அதான் நம்மையும் ஓடச்சொல்லி தானும் ஓடி வருகிறார்கள் என்று புரிந்து கொண்டு என்ன ஏதென்றெல்லாம் யோசிக்காமல் ஏற்கனவே கிணற்றைப் பற்றிய பயம் பற்றிக் கொள்ள ஓட ஆரம்பித்தேன்.
நான் ஓடுவது பார்த்து பயந்து போய் இரண்டாவது மன்னியும் என்னுடன் ஓடிவர ஆரம்பித்தார்கள்.பின்னால் வந்த பெரிய மன்னி நாங்கள் ஓடுவது பார்த்து பயந்து போய், "ஏய்!எதுக்குடி ஓடறீங்க? என்னடி ஆச்சு?" என்று கேட்டுக் கொண்டே பயத்தில் ஓடி வர, நான் ' இவங்கதான நம்மை ஓடச் சொன்னாங்க?இப்ப எதுக்குடி ஓடறீங்கன்னு கேக்கறாங்களேன்னு' நின்று திரும்பிப் பார்த்தேன்.

பாவம்.குழந்தையை தூக்கிக் கொண்டு மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.அருகில் வந்து, "எதுக்குடி ஓடினீங்க?" என்றார்கள்.
"நீங்கதான மன்னி ஓடச் சொன்னீங்க.அதான் என்னவோ ஆபத்து போலருக்குன்னு பயந்து போய் ஓடினேன்" என்றேன்.
"அடக்கடவுளே!நான் அழற குழந்தையை சமாதானம் பண்ண வேண்டி உங்க ரெண்டு பேரையும் பிடிக்கலாமான்னு கேட்டு ஓடு ஓடுன்னேன்.அதுக்குன்னு இப்பிடி இருட்டுல என்னைத் தனியா விட்டு ஓட ஆரம்பிச்சுட்டீங்களேடி!"
என்று புலம்பி விட்டார்கள்.
நான் என் இரண்டாவது மன்னியைப் பார்த்து, " நான்தான் சரியா புரிஞ்சுக்கலைன்னா நீங்க ஏன் மன்னி ஓடினீங்க?" என்றேன்.அதற்கு அவர்கள்
"நீ ஓடினதைப் பாத்ததும் பயமாயிடுத்து.அதான் நானும் ஓடிட்டேன்" என்றார்கள்.
வீட்டிற்கு வந்ததும் இதைக் கூறிய போது அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.இன்றும் கூட நாங்கள் மூவரில் யாரேனும் இருவர் சேர்ந்து அந்த இடத்தை கடந்து வர நேரிட்டால் "என்னடி!ஓடலாமா?" என்று கேட்டு கிண்டல் செய்து கொள்வதுண்டு.
ஆனாலும் என்ன ஏதென்று யோசிக்காமல், பின்னாடி வருபவர்கள் பற்றி சிந்திக்காமல் ஓடினோமே என்று எனக்குள் இப்பொழுதும் தோன்றுவதுண்டு.

23 comments:
Tamilmanam : 2
Indli: 5
பழைய சிறுவயது நினைவுகள் [போதிய அனுபவம் இன்மையினால்] எப்போதுமே இதுபோல சற்று பயமளிப்பதாகவே இருக்கும். நல்ல பகிர்வு.
தவறான புரிதல் சில நேரம் காமெடியாகிவிடும்.
ஹா.. ஹா.. இப்ப நினைச்சா காமெடி.. ஆனா அப்ப அதுவே எவ்வளவு டென்ஷன்..
சில நேரங்களில் கிடைக்கிற படிப்பினைகள் வாழ்நாள் புத்தி கொள்முதல்..
சின்ன விஷயம் போல நீங்கள் சொல்லிப் போனாலும்
இது மிகப் பெரிய விஷயமே
இன்றுவரை முன்னால் ஓடுபவர்கள் ஏன் ஓடுகிறார்கள் என
அறியாமல்தானே பின்னால் ஓடுபவர்கள்
ஓடிக்கொண்டிருக்கிறோம்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
த.ம 3
////பார்த்த நான் மன்னி ஓடி வருவது கண்டு ஏதோ ஆபத்து போலிருக்கிறது.அதான் நம்மையும் ஓடச்சொல்லி தானும் ஓடி வருகிறார்கள் என்று புரிந்து கொண்டு என்ன ஏதென்றெல்லாம் யோசிக்காமல் ஏற்கனவே கிணற்றைப் பற்றிய பயம் பற்றிக் கொள்ள ஓட ஆரம்பித்தேன்/////
தவறான புரிந்துனர்வுகளால் இப்படி சம்பவங்கள் நடப்பதுண்டு....
ஹா.ஹா.ஹா.ஹா.....நீங்க செமையா பல்பு வாக்கியிருக்கீங்க மேடம்
சில விஷயங்கள் இப்படித்தான் செய்யும்போது புரியாதது... பிறகு யோசித்தால் தான் இப்படி அசட்டுத்தனமாக இருந்து விட்டேனே என்று யோசிக்க வைக்கும்.. நானும் நிறைய முறை ஆகி இருக்கிறேன்... :)
நினைவுகளை அசைபோடுவது சுகமான அனுபவம்
இன்று என் வலையில்
அஜித் : THE REAL HERO
ஆமா இப்ப படிக்க சிரிப்பாதான் இருக்கு அந்தசமயம் உங்க உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்னும் புரிஞ்சுக்க முடியுது. சில் நேரம் இப்படி தவரான புரிந்துகொள்ளல் காமெடியா ஆயிடரது.
ஆஹா.. எப்டி எல்லோரையும் ஓட விட்டுருக்கீங்க.. :-))
தவறான புரிதலால் நகைச்சுவையான சம்பவமாக மாறி விட்டது. என்றுமே மறக்க முடியாது.
ஹா..ஹா...ஹா..
நினைச்சுப்பார்த்தாலே செம காமெடியா இருக்குங்க.
ஆனால்
//இவங்கதான நம்மை ஓடச் சொன்னாங்க?இப்ப எதுக்குடி ஓடறீங்கன்னு கேக்கறாங்களேன்னு' நின்று திரும்பிப் பார்த்தேன்.//
இங்கதான் நீங்க நிக்கிறீங்க.சிந்தனைமிக்க பதிவர்களில் ஒருவராக ஜொலிக்கப்போறீங்கன்னு அன்றே அங்கயே யோசிக்கும் ஞானம் உங்களுக்கு தோன்றிருக்கு பாருங்க.
அது உங்க மன்னிகளுக்கு தெரியாம போயிட்டே!
{நான் ஐஸ் வைக்கலப்பா...நானும் ஒடிடுறேன்,இங்கிருந்து..........}
ஏ வயலில் ஆடு ஆடு'ன்னு சொல்லி ஒருத்தரை ஆடவைப்பாரே சுருளிராஜன், ஹா ஹா ஹா ஹா அதுதான் நினைவுக்கு வந்து சிரிக்க வச்சுது ஹே ஹே ஹே ஹே செம பல்பு...!!!
: ianaman இந்தபெயரில் இன்ட்லியில் ஓட்டு போட்டதும் போடுவதும் நான்தான் [[நாஞ்சில்மனோ]]
யுடான்ஸ்'ல இணைப்பு கொடுத்துட்டேன்...
இப்படித்தாங்க சின்ன விஷயமெல்லாம் பெரிய கலவரம் ஆகுது. சிரிக்காம இருக்க முடியல.
அப்பவே பல பேரை மிரட்டி ஓடவச்சுருக்கீங்க. பலே ஆளுங்க நீங்க! :-)
உங்க மன்னிங்கள்லாம் உங்களை திட்டலையா?
எப்பவுமே மனுஷாளுக்கு இதுதான் ப்ராப்ளம். இன்னொருத்தரோட நிலைமை இன்னொருத்தருக்கு புரியரதில்லை. Assumptionsல Communicate பண்ணாம விட்டுடறோம். சீரியஸா எடுத்துக்காதீங்க. ஒரு கருத்து கந்தசாமியா சொல்லலாம்னு சொன்னேன். சரியா?
இருந்தாலும் நினைச்சுப் பார்த்தா நல்ல ஜோக்! :-))
பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
@K.s.s.Rajh
@thirumathi bs sridhar
@MANO நாஞ்சில் மனோ
ஆஹா!நாட்டில ஒருத்தர் பல்பு வாங்குறதுல எம்புட்டு சந்தோஷம்டா சாமி!
@ALL
நான் பல்பு வாங்கின கதையை படிச்சவங்கள்லாம்
அப்படியே அடுத்த பதிவுக்கு வருகை தந்து பல்பை உடைச்ச கதையையும் படிக்கவும்.
@RVS
கருத்து கந்தசாமி அவர்களே!வருக!பல நாட்கள் பதிவின் பக்கம் எட்டிப் பார்க்காம விட்டது குற்றம் குற்றமே.
இருந்தாலும் communication பத்தி கருத்து சொன்னதால உங்களை பிழைச்சுப் போகட்டும்னு விட்டுடறேன்.
எங்க வீட்ல இப்பவும் இதை வச்சு என்னை ஓட்டுவாங்க. :-))
@MANO நாஞ்சில் மனோ
ஓட்டிற்கும்
யுடான்சில் இணைத்தமைக்கும் நன்றி
ஹா.ஹா.ஹா..
இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடப்பதுண்டு...
எதேச்சையாக நடக்கும் இச்சம்பவங்கள் உறவுகள் கூடி நிற்கும் வேளையில்
நகையூட்டுவதாகவும் பின்னர் தனிமையில் இருக்கையில் சிந்தனைக்குரியதாகவும் அமைந்து விடுகின்றன..
அழகா சொல்லியிருகீங்க சகோதரி..
All in the game. Nice
இப்படிச் சிரிச்சு ரொம்ப நாளாச்சுங்க.
Kettalum odalum...
Post a Comment