வாழ்க்கையில் அறிவுபூர்வமாக புரிந்து நடத்தல் என்பது மிக அவசியமான விஷயமாகும்.
அது இல்லாமல் போகும் பொழுது நிகழ்வுகள் நமக்கு சாதகமற்றோ விளைவுகள் பலனற்றதாகவோ போய் விடும்.
என் வாழ்வில் நான் இது போன்று சமயம் புரிந்து நடக்க தவறிய விஷயத்தை இங்கு பகிர விரும்புகிறேன். இந்த சம்பவத்தினால் மோசமான விளைவுகளோ,
மன வருத்தங்களோ ,மனக்கசப்போ ஏற்படாவிடினும் இந்த சம்பவத்தை நான்
மறக்க மாட்டேன்.இன்றளவும் இது என் வீட்டில் ஒரு நகைச்சுவையாகக் கருதப்பட்டு வந்தாலும் என் பார்வையில் இதில் நான் செய்த தவற்றை மட்டும்தான் பாடமாக எடுத்துக் கொண்டேன்.
இப்போ கொசுவர்த்திக்குப் போகலாமா? சினிமால வர மாதிரி வளையம் வளையமா எல்லாரும் கற்பனை பண்ணிக்கோங்க பாக்கலாம். :)
அப்பொழுது எனக்கு பத்தொன்பது வயதிருக்கும்.நானும் எனது இரண்டு மன்னிகளும் ஷாப்பிங் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.கூடவே கொசுறாக பெரிய அண்ணாவின் இரண்டு வயது குழந்தை.
வீட்டிற்கு திரும்பி வர ஆட்டோ எதுவும் கிடைக்காததால் ஒரு மாலை நேர
நடையாக இருக்கட்டுமே என முடிவு செய்து மூவரும் பேசிக் கொண்டே நடந்து
வந்து கொண்டிருந்தோம்.குழந்தையை கொஞ்சம் நடக்க விட்டு கொஞ்சம் மூவரும் மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு வந்தோம்.
சிறிது தூரம் வந்த பிறகு நானும் இரண்டாவது மன்னியும் சற்று முன்னால் நடக்க குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்த காரணத்தால் பெரிய மன்னி சற்று
மெதுவாக பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்.அந்த இடத்தில் வழியில் ஒரு கிணறு இருக்கும். அதற்கு சில நாட்கள் முன்புதான் அதில் ஒரு உயிரற்ற உடல் கண்டெடுக்கப் பட்டு அது கொலையாக இருக்கலாம் என வதந்தி இருந்து கொண்டிருந்தது.

நானும் இரண்டாவது மன்னியும் அது பற்றி பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று கரண்ட் வேறு போய்விட்டது. பின்னால் வந்த பெரிய மன்னி, சிணுங்க ஆரம்பித்த குழந்தையை சமாதானம் செய்வதற்காக, "அத்தையும் சித்தியும் முன்னாடி போறாங்களே.நாம அவங்களைப் பிடிக்கலாமா?" என்று கேட்டு "ஓடு.. ஓடு..." என்றபடி இரண்டடி ஓடி வர, ஓடு ஓடு என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்த நான் மன்னி ஓடி வருவது கண்டு ஏதோ ஆபத்து போலிருக்கிறது.அதான் நம்மையும் ஓடச்சொல்லி தானும் ஓடி வருகிறார்கள் என்று புரிந்து கொண்டு என்ன ஏதென்றெல்லாம் யோசிக்காமல் ஏற்கனவே கிணற்றைப் பற்றிய பயம் பற்றிக் கொள்ள ஓட ஆரம்பித்தேன்.
நான் ஓடுவது பார்த்து பயந்து போய் இரண்டாவது மன்னியும் என்னுடன் ஓடிவர ஆரம்பித்தார்கள்.பின்னால் வந்த பெரிய மன்னி நாங்கள் ஓடுவது பார்த்து பயந்து போய், "ஏய்!எதுக்குடி ஓடறீங்க? என்னடி ஆச்சு?" என்று கேட்டுக் கொண்டே பயத்தில் ஓடி வர, நான் ' இவங்கதான நம்மை ஓடச் சொன்னாங்க?இப்ப எதுக்குடி ஓடறீங்கன்னு கேக்கறாங்களேன்னு' நின்று திரும்பிப் பார்த்தேன்.

பாவம்.குழந்தையை தூக்கிக் கொண்டு மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.அருகில் வந்து, "எதுக்குடி ஓடினீங்க?" என்றார்கள்.
"நீங்கதான மன்னி ஓடச் சொன்னீங்க.அதான் என்னவோ ஆபத்து போலருக்குன்னு பயந்து போய் ஓடினேன்" என்றேன்.
"அடக்கடவுளே!நான் அழற குழந்தையை சமாதானம் பண்ண வேண்டி உங்க ரெண்டு பேரையும் பிடிக்கலாமான்னு கேட்டு ஓடு ஓடுன்னேன்.அதுக்குன்னு இப்பிடி இருட்டுல என்னைத் தனியா விட்டு ஓட ஆரம்பிச்சுட்டீங்களேடி!"
என்று புலம்பி விட்டார்கள்.
நான் என் இரண்டாவது மன்னியைப் பார்த்து, " நான்தான் சரியா புரிஞ்சுக்கலைன்னா நீங்க ஏன் மன்னி ஓடினீங்க?" என்றேன்.அதற்கு அவர்கள்
"நீ ஓடினதைப் பாத்ததும் பயமாயிடுத்து.அதான் நானும் ஓடிட்டேன்" என்றார்கள்.
வீட்டிற்கு வந்ததும் இதைக் கூறிய போது அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.இன்றும் கூட நாங்கள் மூவரில் யாரேனும் இருவர் சேர்ந்து அந்த இடத்தை கடந்து வர நேரிட்டால் "என்னடி!ஓடலாமா?" என்று கேட்டு கிண்டல் செய்து கொள்வதுண்டு.
ஆனாலும் என்ன ஏதென்று யோசிக்காமல், பின்னாடி வருபவர்கள் பற்றி சிந்திக்காமல் ஓடினோமே என்று எனக்குள் இப்பொழுதும் தோன்றுவதுண்டு.