பசுமைக் காஷ்மீரத்தில்
பகை அழியட்டும்
வேதனை தீர்ந்து
வெண்கொடி பறக்கட்டும்
எல்லைப் பகுதியிலே
எல்லையில்லா இன்பம் பரவட்டும்
ஊரெங்கும் பேசும்
ஊழல்கள் குறையட்டும்
உலக நாடுகளின்
உதாரண நாடாகட்டும்
இதற்கென பிறந்தவர்கள்
இங்குண்டு என்றாகட்டும்
இந்த புத்தாண்டிலே
Tuesday, December 28, 2010
Friday, December 24, 2010
அலமேலுவின் அட்டஹாசங்கள்-1
எப்ப பாத்தாலும் சீரியஸ் பதிவாவே போடறாங்களே இவங்கன்னு எல்லாரும் நம்மள
ஓரங்கட்டிட்டா என்ன பண்ணறதுன்னு யோசிச்சதுல கொஞ்சம் இப்டி காமெடியும்(!)
மொக்கையுமா ஏதாவது போடலாமேனுதான் இநத பதிவு.(பாத்தும்மா,கடைசில
இத படிச்சிட்டு ஓரங்கட்டிடப் போறாங்க _ இது கணவர் )
சரி காமெடியா என்ன போடலாம்னு யோசிக்கும்போதே அருமை அண்ணன் வந்து, "தனியா எதுக்கும்மா காமெடி பதிவுலாம்?அதான் ஏற்கனவே உன் ப்ரொஃபைல் குடுத்துருக்கயே" என்று கேட்க,
படித்துக் கொண்டிருக்கும் 'ஹிண்டு' வை லேசாகத் தழைத்து, 'இதையே நான் சொல்லிருந்தா என்ன ஆயிருக்கும்' என்பது போல் கணவர் பார்த்தார்.
சரி சரி கற்பூர வாசனை தெரியாதவங்களை எல்லாம் பக்கத்துல வச்சுகிட்டு எழுதறது கஷ்டம்தான்னு முடிவு பண்ணி அவங்கல்லாம் வேலை பாக்க(?) ஆபிஸ் போனப்பறம் எழுப்பினேன் என் மூளையை(சத்தியமா எனக்கு மூளை இருக்குதுன்னு எனக்கு சி.டி ஸ்கேன் பண்ணின
டாக்டர் சொனாருங்க)
அதன் விளைவுதான் இநத "அலமேலுவின் அட்டகாசங்கள்"
அலமேலுவும் அவள் தோழியும் சினிமா பார்க்க தியேட்டர் செல்ல அங்கு உள்ளே நுழைய முடியாமல் ஒரே கூட்டம்.நம்ம அலமேலு அடிச்சி பிடிச்சி உள்ள நுழைய போற சமயம்,
செக்யூரிட்டி: வெயிட் மேடம்
அலமேலு: அறுபது கிலோங்க
செக்யூரிட்டி: ..?
அலமேலுவின் மெடிக்கல் 'செக்கப்' பின் போது
டாக்டர்: சரியான சாப்பாடில்லாத காரணத்தால வீக்கா இருக்கீங்க.
மார்னிங் ஹெல்த்தி ப்ரேக்பாஸ்ட் எடுத்துக்கங்க.மத்யானமும் சத்துள்ள ஆகாரங்களா சமைச்சதை சாப்டுங்க.
அலமேலு: ஐயோ!அது முடியாதே டாக்டர்!
டாக்டர்: ஏன்?
அலமேலு:அவருக்கு அந்த அளவெல்லாம் சமைக்க தெரியாது டாகடர்.ஏதோ சமைப்பார் அவ்ளதான்
அலமேலுவும் அவள் கணவன் அழகர்சாமியும்:
அழகர்சாமி: என்னது? ஏ டி எம் லேர்ந்து என் சம்பளப்பணம் மொத்தத்தயுமா டிரா பண்ணிட்ட?சம்பாதிக்கறது நான், செலவழிக்கறது நீயா?
அலமேலு: கடமையை செய், பலனை எதிர்பார்க்காதனு சொல்லிருக்குங்க.நீங்க உங்க கடமையை மட்டும் செஞ்சா போதாதா?
அலமேலுவின் மகனைப் பற்றி புகாருடன் ஆசிரியையும், அலமேலுவும்:
ஆசிரியை: உங்க பையன் இந்த ஹாலிடேஸ் முடிஞ்சு வந்தப்பறம் ரொம்ப வாலா மாறிட்டான்.படுத்தல் தாங்கல.
அலமேலு: ஸ்கூல் முடிஞ்சு ஹாலிடேஸ் விட்டிங்களே.லீவுல ஒரு நாளாவது
வந்து உங்க ஸ்டூடண்ட் ரொம்ப வாலா இருக்கான்,படுத்தல் தாங்கலன்னு நான் சொல்லிருப்பேனா?
ஆசிரியை: .....?
இதெல்லாம் படிச்சிட்டு மண்டைய பிச்சிக்கிட்டீங்கன்னா அதுக்கெல்லாம் அலமேலுதான் காரணம்(நானில்ல).
உங்க தலைல மிச்சம் மீதி இருக்கற முடியைப் பொறுத்து அட்டகாசங்களை தொடரலாமாங்கறத யோசிக்கலாம்.அது வரை அலமேலுவின் சார்பில் உங்களிடமிருந்து வடை பெறுகிறேன், சீ சீ அது என்னது அது ஆங்.. விடை பெறுகிறேன்

Labels:
அட்டஹாசங்கள்
Wednesday, December 22, 2010
ஈர மனம்
" எலே! வேலு! அங்கன பஞ்சாயத்து கூட்டம் கூட போவுது.நீ இங்கன குந்திக்கிட்டு என்னலே செய்யுத?"
"அட போ முத்து!நான் வரல" சூள் கொட்டினான்
"எலே!என்ன சொல்லுத?வல்லியா?ஈஞ்சனூர்க்காரங்களுக்கு எதிரா என்ன செய்யுறதுன்னு இன்னிக்கு முடிவுல.வல்லங்கற?"
"ஆமா வந்து என்னத்துக்காவப் போவுது?இத்தன நாள் வெட்டி மடிஞ்சது போதும்ல"
"ஏம்ல திடீர்னு இப்பிடி சொல்லிப் போட்ட?முத ஆளா நெஞ்ச நிமித்திகிட்டு வந்து நிப்ப.இப்ப என்னடான்னா அலுப்பா அலுத்துக்கற?"
"ஆமா அப்ப நெஞ்ச நிமித்துனது ஒண்ணும் இப்ப நல்லா தோணல.நெஞ்சுக்குள்ள இருக்கற ஈரம்தான் சரினு படுதுல"
"என்னலே சொல்லுத ஈரம் கீரம்னுட்டு.ஒரு மண்ணும் என் மண்டைக்கெட்டல.
தலமை ஏத்து நடத்துற நீயா இப்டி பேசுத?நமக்கெதிரா ஈஞ்சனூர்காரங்க செஞ்ச கொடுமை எல்லாம் மறந்து போச்சோ?மண்ணியூர்காரங்க கொறஞ்சவக இல்லன்னு காட்டோனும்ல.இத்தன வருஷமா இருக்கற வாய்க்கா தண்ணி பிரச்னைய மறந்துட்டயால?
"மறக்கல.தண்ணிதான் பிரச்னை.ஆனா இன்னிக்கு மனசு மாறினதும் அந்த தண்ணியாலதான்"
"விளங்கும்படியா பேசப் போறயா இல்லியால?"
"நேத்து டவுனுக்கு போயி திரும்பற பஸ் வழில மண் பாதைல சரிஞ்ச்சிருச்சு.ஈஞ்சனூர் கீழத் தெரு மாரியும் ராசுவும்தான் உள்ள இருக்கறவங்கள வெளியேத்தி முகத்துல தண்ணி அடிச்சி, குடிக்க தண்ணி குடுத்து காப்பாத்தி கொண்டு விட்ருகாங்கல.அவங்க நெஞ்சுல ஈரமில்லாம நாம செஞ்சதெல்லாம் நெனச்சுருந்தா பஸ்சுல வந்த நம்மூர்க்காரங்கல்லாம் என்ன கதியாயிருப்பாங்கல?"
"நிசமாவா?"
"ஆமால.அப்பமே முடிவு பண்ணிட்டேன்.தகராறு செய்யாம தண்ணி பிரச்னைக்கு வழி பண்ணோனும்னிட்டு.அடிதடிக்கு தலமை ஏத்தாப்ல நல்ல வழிக்கும் நானே தலமை ஏத்து தீர்வு பண்ணுவேன்.ஈரம் தண்ணில மட்டுமில்ல.அது மனுஷனோட
மனசுக்கும் ரொம்ப அவசியம்னு எனக்கு புரிஞ்சாப்ல எல்லாத்துக்கும் புரிய வைப்பேன்ல"
உறுதியாய் பேசின வேலுவை வாய் பிளந்து வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து.

சிறுகதை
Thursday, December 16, 2010
கிராமத்துக் காற்றே....
கிராமத்துக் காற்றே
கிராமத்துக் காற்றே
நீ எங்கே போனாயோ?
விடிகாலை வேளையிலே
வாசல் வழி வந்தே
வருடி சுகம் தந்த
நீ எங்கே போனாயோ?
நண்பகல் வேளையிலே
நடு முற்றம் தனிலே
நல்ல அனலைக் குறைத்த
நீ எங்கே போனாயோ?
அந்தி சாயும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
அழகாய் ஆடி வந்த
நீ எங்கே போனாயோ?
கயிற்றுக் கட்டில் இரவினிலே
கருவான தாரகை சிரிப்பினிலே
களிப்புடனே ஓடி வந்த
நீ எங்கே போனாயோ?
நகரத்து வாழ்க்கையிலே
நலம் தர நீ இல்லையிங்கே
நல்லதன்று நகரமென
நகர்ந்து போனாயோ?
அடுக்கு மாடி குடியிருப்பு
அடுக்கவில்லை எனக்கு என
அலுப்புடனே கூறி விட்டு
அகன்று போனாயோ?
கிராமத்துக் காற்றே
கிராமத்துக் காற்றே
நீ எங்கே போனாயோ?
கிராமத்துக் காற்றே
நீ எங்கே போனாயோ?
விடிகாலை வேளையிலே
வாசல் வழி வந்தே
வருடி சுகம் தந்த
நீ எங்கே போனாயோ?
நண்பகல் வேளையிலே
நடு முற்றம் தனிலே
நல்ல அனலைக் குறைத்த
நீ எங்கே போனாயோ?
அந்தி சாயும் நேரத்திலே
ஆற்றங்கரை ஓரத்திலே
அழகாய் ஆடி வந்த
நீ எங்கே போனாயோ?
கயிற்றுக் கட்டில் இரவினிலே
கருவான தாரகை சிரிப்பினிலே
களிப்புடனே ஓடி வந்த
நீ எங்கே போனாயோ?
நகரத்து வாழ்க்கையிலே
நலம் தர நீ இல்லையிங்கே
நல்லதன்று நகரமென
நகர்ந்து போனாயோ?
அடுக்கு மாடி குடியிருப்பு
அடுக்கவில்லை எனக்கு என
அலுப்புடனே கூறி விட்டு
அகன்று போனாயோ?
கிராமத்துக் காற்றே
கிராமத்துக் காற்றே
நீ எங்கே போனாயோ?
Labels:
கவிதை
Tuesday, December 14, 2010
உணர்ந்தேன்
அன்று
திண்னென்ற உன்
கரங்களால் என்
பிஞ்சு விரல் பிடித்து
அழைத்துச்சென்றாய்-
சோதனைப் படிகளில் பல
சாதனைகளை நான் தொட.
அந்த கரங்களின் வலிமை
அன்று எனக்குத் தெரியவில்லை
இன்றோ
அந்த கரங்கள் தோல் வற்றி
சுருங்கித்தான் உள்ளது
ஆனாலும் இன்று
அதன் வலிமையையும் அழகையும்
நான் நன்றாகவே உணர்கிறேன்
ஏனென்றால் இன்று
நானும் ஒரு தாய்
திண்னென்ற உன்
கரங்களால் என்
பிஞ்சு விரல் பிடித்து
அழைத்துச்சென்றாய்-
சோதனைப் படிகளில் பல
சாதனைகளை நான் தொட.
அந்த கரங்களின் வலிமை
அன்று எனக்குத் தெரியவில்லை
இன்றோ
அந்த கரங்கள் தோல் வற்றி
சுருங்கித்தான் உள்ளது
ஆனாலும் இன்று
அதன் வலிமையையும் அழகையும்
நான் நன்றாகவே உணர்கிறேன்
ஏனென்றால் இன்று
நானும் ஒரு தாய்
Labels:
கவிதை
Sunday, December 12, 2010
கல்யாணமே.....! கச்சேரியே......!
ஒரு அழகான மாலை நேரம்.அது ஒரு கல்யாணக் கூடம்.
மலர்களின் வாசனையும், அங்கு கூடியிருந்தவர்கள் தெளித்துக் கொண்டிருந்த திரவியங்களின் வாசனையும் போட்டி போட,பட்டுப் புடவைகள் சரசரக்க வரவேற்புக்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு பக்கம் மேடையில் மணமக்கள் தயாராக வந்து நின்று விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மற்றுமொரு மேடையில் ஒரு இசைக்கச்சேரிக்கு புல்லாங்குழல் வித்வான் தன் குழுவுடன் தயாராகிக் கொண்டிருந்தார்.
அவர் தன் வேய்ங்குழலால் அருமையான கீர்த்தனைகள் வாசிக்க அதை கவனிக்கவோ அங்கு எவருமே இல்லை.மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டுக்காரர்களால் எப்படியும் அதை கேட்க முடியப் போவதில்லை.திருமணத்திற்கு வருபவர்களோ தாம் நீண்ட நாள் பார்க்காத,இன்ன பிற சொந்தங்களுடனும் நட்புகளுடனும் பேசிக் கலப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். அவ்வாறிருக்க இது போன்ற கச்சேரிகளை ஏற்பாடு செய்வதன் நோக்கம்தான் என்ன?
அந்த கலைக்கோ கலைஞருக்கோ அது மதிப்பு
தரக்கூடிய விஷயமாக இருக்கிறதா? அதை ஏற்பாடு செய்ய அந்த பெண்ணின் தகப்பனார் எவ்வளவு செலவு செய்திருப்பார்?யாருக்கும் பணம் கஷ்டப்படாமல் சும்மா
கிடைப்பதில்லை.அவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பு யாருக்கும் பயனற்ற முறையில் போவதேன்?
ஒன்றிரண்டு பேர் மிகவும் இசையில் நாட்டமுள்ளவர்கள் ரசிப்பார்கள் அவ்வளவுதான் என்பதைத் தவிர இதனால் யாருக்கு என்ன நன்மை?யாருக்கு என்ன லாபம்? கர்நாடக சங்கீதமாவது தேவலை, சத்தமாவது படுத்தலாக இருப்பதில்லை. 'ஆர்க்கெஸ்ட்ரா' என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தால் அவ்வளவுதான்.சத்தம் காதைப் பிளந்து அருகிலிருப்பவர் நம்மை ஏதேனும் கேட்டாலும் நமக்கு காதில் விழவே விழாது.இதில் குத்துப் பாட்டுக்கள் வேறு அந்த திருமணத்தின் இனிமையான தாம்பத்தியத்தையே கொச்சைப்படுத்தும் வார்த்தைகளோடு.இதனால் யாருக்கு என்ன மகிழ்ச்சி?எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம் நாம்?எந்த கலாசாரத்தை நோக்கி?
இவ்வாறெல்லாம் அந்த பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக அதைக் கொண்டு நாலு பேருக்கு நன்மை செய்யும் விதமாக செலவு செய்தால் அந்த உள்ளங்கள் அந்த மணமக்களை வாழ்த்தாதா?அவ்வாறு செய்ய மனமில்லாவிடினும் அந்த மணமக்கள் தங்கள் புது வாழ்க்கையை நன்கு வளமாக தொடர உபயோகிக்கலாமே?அந்த கலைஞருக்கு வருவாய் என்பதைத் தவிர இதில் வேறொன்றுமில்லை.அவர்களும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு தங்கள் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டுத்தான் வருகிறார்கள் என்பதே உண்மை.
தமிழ்ப்படம் ஒன்றில் ஒரு பாடல் ஒன்று உண்டு.படத்தின் பெயர் "இந்திரா".
"நிலா காய்கிறது நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே"
மிகவும் சரியான, அர்த்தம் பொதிந்த வார்த்தைகளுடனான பாடல்.இம்மாதிரி விஷயங்களுக்கு மிகவும் பொருந்தும்.இனியாவது இதைப் பற்றி சிந்திப்போம்.

தகவல் அறிவோம்,
திருமண வரவேற்பு
Thursday, December 9, 2010
அத்யயனம்
மணியாகிவிட்டது.ஆரம்பித்திருப்பார்கள்.இன்னும் சற்று முன்னதாகவே கிளம்பி இருந்திருக்கலாம்.எங்கே வேலை முடிந்தால்தானே.
நடையின் வேகத்தை அதிகரித்தாள் ரமா.இன்னும் பத்தடிதான்.இதோ கோவிலின் அருகில் வந்தாகிவிட்டது.அவசரமாக நடந்து கோவிலின் உள்ளே சென்றாள். இன்றிலிருந்து சௌம்ய நாராயணப் பெருமாள் கோவிலில் அத்யயன உத்சவம் ஆரம்பம்.முதல் நாளே தாமதம்.என்ன செய்வது?இப்போதாவது வர முடிந்ததே.
உள்ளே சென்று பெருமாளை சேவித்தாள்.வேணுகோபாலன் சாத்துபடி(அலங்காரம்) பிரமாதமாக இருந்தது.கண்ணன் குழலூதி நின்ற கோலத்தில் மெய் மறந்து நின்றாள்.ஆழ்வார்களின் பாசுரங்கள் கவனத்தை ஈர்க்க அங்கு சென்று அமர்ந்தாள்.
பக்கத்தில் இருந்த கமலம் மாமி, "என்னடி! ஏன் லேட்?" என்றாள்.
"வேலை முடிஞ்சு வர நாழியாய்டுத்து மாமி"
"சரி சரி பாசுரம் சேவிக்கறத கேக்கலாம்"
ஆழ்வாரின் அமுத மொழிகள் குழந்தை கண்ணனை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.கேட்க கேட்க மனம் பரவசமடைந்தது.கோகுலத்திற்கே சென்ற பிரமை ஏற்பட்டது.பாசுரங்கள் சேவித்தானதும் ரமா பிரதட்சிணம் செய்ய எழுந்து சென்றாள்.பிரதட்சிண முடிவில்
ஒரே கூட்டமாக இருப்பதைக் கண்டு அருகில் சென்றாள்.
"அதுக்குள்ளே எங்கடி போய்ட்ட?"
" பிரதட்சிணம் பண்ணலாமேனு போனேன்.ஆமா!இங்க என்ன கூட்டம் மாமி?"
" அத்யயன உத்சவத்துக்கு இந்த வருஷ வெளியீடா 'ஸ்ரீ ஸ்துதி' ,"கோதா ஸ்துதி', 'வாழித் திருநாமம்' லாம் இருக்கறாப்ல பெருமாள் படங்கள் எல்லாம் போட்டு புத்தகம் தராளாம் இலவசமா.வா! வந்து நீயும் ஒண்ணு வாங்கிக்கோடி"
ரமாவும் மாமியும் புத்தகம் வாங்கிக்கொள்ளும்போது ,
"மாமா!எனக்கும் ஒண்ணு" என்று அருகில் ஒரு பெண்மணி கேட்க புத்தகம் கொடுப்பவரோ கவனிப்பதாக தெரியவில்லை.அந்த பெண் மீண்டும், "மாமா!எனக்கும் ஒண்ணு" என்றாள்
"உனக்கு கொடுக்க முடியாதும்மா" என்று சொல்லி அவர் உள்ளே சென்றார்.அந்தப் பெண்ணின் முகம் சுருங்கியது.ரமாவுக்கு திகைப்பாக இருந்தது.
"ஏன் மாமி அந்த பொண்ணுக்கு குடுக்க மாட்டேனுட்டா?"
" என்னடி புரியாம கேக்கற?இங்கலாம் பிராமணாளுக்குத்தான் தருவா".சரி சரி நீ இங்க கொஞ்சம் உக்காண்டிரு.நான் பிரதட்சிணம் பண்ணிட்டு வரேன்".
ரமா மிகுந்த வருத்தத்துடன் ஒரு தூணருகில் அமர்ந்து புத்தகத்தை பிரித்துப் பார்த்தாள்.ஒவ்வொரு பக்கத்திலும் பெருமாளின் மிக அழகிய வண்ணப்படங்களுடன் சுலோகங்களும் விளக்கங்களுமாய் அற்புதமாக இருந்தது.மூடி வைத்து நிமிர்ந்தவளுக்கு எதிர் தூணருகே அமர்ந்திருந்த அந்த பெண் கண்ணில் பட சட்டென்று எழுந்து அவளருகில் சென்றாள்.
"இந்தாங்கோ, நீங்க கேட்ட புத்தகம்".
அந்த பெண் திடுக்கிட்டு ஏறிட்டாள்.
"இந்தாங்கோ, உங்களுக்குத்தான் வாங்கிக்கோங்கோ"
"எனக்கா?எனக்கெதுக்கு?பரவால்ல.நீங்க வச்சுக்கோங்க"
"எனக்கு வேற கிடைக்கும்.இத நீங்க வாங்கிக்கோங்க"
"நிஜம்மாவா?இது எனக்கா?" ஆர்வமாய் கை நீட்டி வாங்கியவள் அதைத் திறந்து பெருமாளின் அழகிய கோலங்களை கண்கள் விரிய ரசித்துப் பார்த்தாள்.
"ரொம்ப நன்றிங்க" என்று கை கூப்பி விட்டு நகர்ந்தாள்.
அங்கு வந்த மாமி, "அடி!உனக்கென்ன பைத்தியமா?உனக்கு குடுத்த புத்தகத்த அவளுக்கு போயி குடுத்துருக்க?அவளுக்கு எல்லாம் அதுல இருக்கற ச்லோகங்களோ வாழித்திருநாமமோ என்ன தெரியும்?
"அதனாலதான் மாமி குடுத்தேன்"
" என்னடி உளர்ற?"
"உளறல மாமி.உண்மையைத்தான் சொன்னேன்.ஏற்கனவே அந்த ஸ்லோகங்கள எல்லாம் படிச்சுத் தெரிஞ்சுண்டு இருக்கறவா கிட்ட இருக்கறத விட இனிமே தெரிஞ்சுக்க நினைக்கறவா கிட்ட அந்த புத்தகம் இருக்கறதுதான் சரி மாமி.அப்படியே இனி எனக்கு அதுல ஏதும் தெரிஞ்சுக்கனும்னாலும் எனக்கு இன்னொன்னு கிடைக்க வாய்ப்பிருக்கு.அதான் குடுத்தேன்".
" ஆமா!நீ குடுத்ததும் அவ அப்படியே படிச்சு எல்லாம் தெரிசுண்டுடப் போறாளாக்கும்?.இதெல்லாம் பிராமண குலம் இல்லாத ஒருத்திக்கு எதுக்கு?"
"பிராமணாளா இருந்தாதான் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு எதுலயும் சொல்லல மாமி.மத்தவாளுக்கும் நல்லத சொல்லித்தரவந்தான் மாமி உண்மையான பிராமணன்.இதெல்லாம் பிராமணாதான் படிக்கணும்னா இந்த பிரபந்தங்கள் எழுதின எல்லா ஆழ்வாரும் பிராமணா இல்லையே மாமி? அத்யயனம்னா என்ன மாமி?நல்ல விஷயங்கள படிச்சு தெரிஞ்சுக்கறதுதான?ஆழ்வார்கள் அனுபவிச்ச பெருமாளோட குணாதிசயங்களை எல்லாருமே தெரிஞ்சுக்கலாம்.அந்த பொண்ணுக்கு அதுல இருக்கற ஸ்லோகங்கள் வேணா தெரியாததா இருக்கலாம்.ஆனா அதுல இருக்கற பெருமாளோட அழகான படங்களை எல்லாம் அவ எப்டி ரசிச்சு பாத்தா தெரியுமா?அந்த சுலோகங்களால ஈர்க்கப்பட்டு அவ அத கத்துக்க கூட செய்யலாம்.அதுக்கு பெருமாள் என்னை ஒரு கருவியா ஏற்படுத்தினதாதான் எனக்குத் தோணறது மாமி"
கமலம் மாமி வெடுக்கென்று முகத்தை தோள் பட்டையில் இடித்து விட்டு விறு விறுவென்று சென்று விட்டாள்.
ரமா மீண்டும் சன்னிதிக்கு வந்து சௌம்ய நாராயணனை தரிசித்தாள்.
அந்த வேணுகோபாலக் கோலத்தில், "நீ செய்தது மிகவும் சரிதான்" என்று குதூகலமாக புன்முறுவலிப்பது
போல் தோற்றமளித்தான் அவன்

Wednesday, December 8, 2010
பிராணாயாமம்
பிராணசக்தியை நியமத்திற்கு கொண்டு வருவதே பிராணாயாமம் ஆகும்.
நம் உடலில் பிராணன் என்ற அடிப்படை சக்தி ஒளிந்திருக்கிறது.
இந்த சக்தியை நாம் நம்முடைய மூச்சின் மூலமறிந்து கொள்ளலாம்.மின்சாரத்தை நாம் நம் தேவைக்கேற்ப கட்டுப்படுத்துவது போல் நாம் நம் பிராண சக்தியையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்
பிராண சக்தியின் நன்மைகள்:
பிராண சக்தியை நன்கு பயன்படுத்துவதால் மனிதனின் உடல்,மனம், மூச்சு மற்றும் அறிவு செம்மையாக இயங்குகின்றன.நன்கு பண்படுகின்றன.ஆத்ம பலம் கிட்டுகிறது.அதற்கு மேலும் தெய்வ சக்தியைக் கூட பெற இயலும்.
மனிதன் தன் உடல்,மனம், மற்றும் அறிவை முழுமையான முறையில் பயன்படுத்துவதில்லை.அதாவது, நாம் ஆழ்ந்து சுவாசிக்கும்போழுது
அதிகக் காற்றை உள்ளிழுத்துக் கொள்கிறோம்.நாம் நன்கு மூச்சு விடும்பொழுது நம் உடலிலுள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுகின்றன.
ஒரு மனிதன் சாதாரணமாக மூச்சு விடும்போது ஒவ்வொரு முறையும் அரை லிட்டர் காற்றை உள்ளிழுத்து அதே அரை லிட்டர் காற்றை வெளி விடுகின்றான்.ஆனால் முழுமையாக சுவாசிக்கத் தெரிந்த மனிதனோ ஒவ்வொரு முறையும் இரண்டரை லிட்டர் காற்றை உள்ளிழுத்து அதே அளவு வெளி விடுகின்றான்.
எனவே சாதாரணமாக சுவாசிப்பவர்கள் தன் திறமை,சக்தியில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.இதனால் அவர்களுடைய உடலில் ரத்த ஓட்டம்,பிராண வாயு மற்றும் பிராண சக்தி இவை இதயத்திலிருந்து தொலைவில் உள்ள மூளை, விரல் நுனி இவற்றிற்கு போதுமான அளவு கிடைப்பதில்லை
நுரையீரலின் மேல்பகுதியிலும் கீழ் பகுதியிலும் உள்ள செல்கள் பிராண வாயு கிடைக்காமல் மரித்து போகின்றன. கை, கால், விரல்கள் மற்றும் மூளை இவை முழுத்திறமையுடன் பயன்படுவது இல்லை.மனமும் அமைதியை வெகு சுலபத்தில் இழந்து விடுகிறது.
பிராணாயாமம் செய்யும் வழிகள்:
பிராணாயாமம் செய்ய பல வழிகள் உள்ளது.ஒரு நாசியால் மூச்சை உள்ளிழுத்து மறு நாசியால் மூச்சை வெளியேற்றுவது மிக எளிமையான வழி.மூச்சு உள்ளிருக்கும்போது நாசியை மாற்ற வேண்டும்.பின் எந்த நாசியால் மூச்சை வெளி விட்டோமோ அதே நாசியால் மீண்டும் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
ஆழ மூச்சு விடுதல்,மெல்ல மெல்ல மூச்சு விடுதல்,தொடர்ந்து மூச்சு விடுதல்,சுலபமாக மூச்சு விடுதல்,மூச்சை நன்கு கவனித்தல் என்று பல விஷயங்கள் இதில் குறிப்பிட பட வேண்டியவையாகும்.இவற்றை முறையாக கற்றுக் கொள்வது நலம் தரும்.
பிராணாயாமத்தின் பயன்கள்:
உடல் முழுதும் பிராண சக்தியும் ரத்த ஓட்டமும் சீராகப் பரவி சுறுசுறுப்பு.உற்சாகம்,உயிர்த்தன்மை இவை பெருகுகின்றன.
மன அமைதி,அறிவுக்கூர்மை மனதில் மேன்மை இவை உண்டாகின்றன.
த்யானத்திற்கு பிராணாயாமம் பெரிதும் உதவுகிறது.
பிரத்யாகாரம் என்று சொல்லப் படுகிற புலனடக்கம் எளிதில் கிட்டுகிறது.அழகான பொருள்களினால் கண் கவரப்படுகிறது.
சுவையான பொருள்களினால் நாவில் எச்சில் சுரக்கிறது.நறுமணம் உள்ள பொருள்களினால் மூக்கு கவரப்படுகிறது.பிராணாயாமத்தால், இப்படி புலன்கள், பொருள்கள் பின் செல்லாமல் மனக்கட்டுப்பாடு கிடைக்கிறது.ஒரு புள்ளியில் மனத்தை நிலை நிறுத்தி த்யான நிலையும்,அதற்கு அப்பால் இறைமையை அடைதலும் சாத்தியமாகும்.
குறிப்பு: படித்தவற்றிலிருந்தும் கேட்டவற்றிலிருந்தும்.

ஆரோக்கியம்,
தகவல் அறிவோம்
Monday, December 6, 2010
அன்பு செய்வோம்
மண்ணுக்குள் நீ இருந்தாலும்
மரத்திற்கு நீ ஆதாரம் - வேர்கள்
கண்ணுக்குள் நீ இருந்தாலும்
காட்சிக்கு நீ ஆதாரம் - கருவிழி
மேகத்துள் நீ இருந்தாலும்
மேதினிக்கு நீ ஆதாரம் - மழை
வானத்தில் நீ இருந்தாலும்
வாழ்க்கைக்கு நீ ஆதாரம் - சூரிய சந்திரன்
இவற்றையெல்லாம் இயக்க
இறைவன் ஒருவன் உண்டு - ஆனால்
மனத்துக்குள் நீ இருந்தாலும்
மனித வாழ்வுக்கே நீ ஆதாரம் - அன்பு
ஆதலினால் நாமனைவரும்
அன்பு செய்வோம்
மரத்திற்கு நீ ஆதாரம் - வேர்கள்
கண்ணுக்குள் நீ இருந்தாலும்
காட்சிக்கு நீ ஆதாரம் - கருவிழி
மேகத்துள் நீ இருந்தாலும்
மேதினிக்கு நீ ஆதாரம் - மழை
வானத்தில் நீ இருந்தாலும்
வாழ்க்கைக்கு நீ ஆதாரம் - சூரிய சந்திரன்
இவற்றையெல்லாம் இயக்க
இறைவன் ஒருவன் உண்டு - ஆனால்
மனத்துக்குள் நீ இருந்தாலும்
மனித வாழ்வுக்கே நீ ஆதாரம் - அன்பு
ஆதலினால் நாமனைவரும்
அன்பு செய்வோம்
Labels:
கவிதை
Sunday, December 5, 2010
பரோபகாரம்
"அப்பாடி!என்ன வெயில் என்ன வெயில்! மங்களம்! குடிக்க ஒரு சொம்பு ஜலம் கொண்டு வா" என்றபடியே உள்ளே நுழைந்தார் கோபாலன்.
"என்னண்ணா! பாங்குக்கு போன வேலை நல்லபடியா முடிஞ்சதா" என்று கேட்டுக்கொண்டே தண்ணீர் கொண்டு வந்தாள் மங்களம்.
"ம்.. ம்.. ஆச்சு ஆச்சு. மெச்சூர் ஆன டெபாசிட் பணத்தை ட்ரா பண்ணி கொண்டு வந்துட்டேன்.ராதா கல்யாணத்தை நல்லபடியாவே முடிச்சுடலாம்.மாப்பிள்ளையாத்துக்காரா கேட்ட சத்திரமே பேசி முடிச்சு அட்வான்ஸ் பண்ணிட்டேன்.இந்தா இந்த பையில
மூணு லட்சம் பணம் இருக்கு பத்திரமா உள்ள எடுத்து வை.சாயங்காலம் கல்யாண கான்ட்ராக்ட்காரா வருவா.அவாளுக்கு கொடுக்கணும்.ஆமா ராதா எங்க இன்னும் கோவில்லேர்ந்து வரல்லையா" என்றபடியே லெதர்பேக்கிலிருந்த துணிப்பையில் பத்திரப்படுத்திய பணத்தை எடுக்க கை நுழைத்தவர் அதிர்ந்தார்.
"எங்க ஐயோ!எங்க" என்று பதறியபடியே மீண்டும் பைக்குள் கை நுழைத்து திகைத்தார்.
"ஏண்ணா!என்னண்ணா! "என்று கேட்ட மங்களத்தையும் பதற்றம் தொற்றிக்கொண்டது.வியர்த்து விறு விறுத்து மலங்க மலங்க விழித்த கணவனை பார்த்து பயந்து போனாள்
விக்கித்து நின்றிருந்தவரை உலுக்கி, "என்னாச்சு உங்களுக்கு? பணத்தை தொலைச்சுட்டேளா? சொல்லுங்கோன்னா" என்றாள்
"காணோம்டி பணம் காணோமேடி, நான் என்ன செய்வேன் எங்க போச்சு பத்திரமாதான் கொண்டு வந்தேன்.அய்யோ நான் என்ன செய்வேன் என் பொண்ணு கல்யாணம் எப்டி நடக்கும் இனி" கதறினார்
"இருங்கோ, நான் பைய நல்லா பாக்கறேன்" என்று பையில் கையை துழாவினாள் மங்களம்
"ஐயோ பைய யாரோ கிழிச்சிருக்காண்ணா"
"இப்ப என்ன பண்றது கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா கிடைக்குமாண்ணா" அழுதாள்
"எனக்கும் ஒண்ணும் புரியலடி, சாயங்காலம் கான்ட்ராக்ட்காரா வருவாளே.என்ன செய்ய"
"அவாளையாவது நாளைக்கு வர சொல்லலாம் ரெண்டு நாள் கழிச்சு வாங்கலாம்,தொலஞ்ச பணத்துக்கு என்ன செய்ய?அத முதல்ல யோசிங்கோ"
"குரலெடுத்து அழுது என்னை இன்னும் குழப்பாத.நானும் கலங்கித்தான் போயிருக்கேன்" என்று கத்தியவர் ஊஞ்சலில் தளர்ந்து உட்கார்ந்தார்
எப்படி எப்படி பத்திரமாகத்தானே வைத்திருந்தார் அப்படியும் எப்படி இப்படி, யோசித்தார்
சட்டென்று மின்னல்.அந்த பையன்.ஆம்!அவன்தான்.அவன்தான் ரயிலில் மிக அருகில் நின்று கர்ச்சீப் விற்றுக்கொண்டு,ஆமாம் அவனாகத்தான் இருக்கும்.இப்பொழுது என்ன செய்வது?மங்களம் சொல்வது போல் கம்ளைன்ட் கொடுத்து விடலாமா?கிடைக்குமா? கிடைக்காவிட்டால்? குழப்பமாக இருந்தது
வாசலில் நிழலாடியது.சார்! சார்! என்ற குரலுக்கு திரும்பியவர் அதிர்ந்தார்
இவன்தான் இவனேதான்.பக்கத்தில் நின்று கர்ச்சீப் விற்றுக்கொண்டு தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.இவன்தான்.இவன் எப்படி இங்கே?எதற்கு?
"யாருப்பா யார் வேணும்? " மங்களம் சுதாரித்துக்கொண்டு கேட்டாள்
"சாரைத்தான்மா பாக்க வந்தேன்.இந்த பையை அவர் கிட்ட குடுக்க வந்தேன்"
அவன் கையில் இருந்த பையை பார்த்ததும், "மங்களம்!மங்களம்!இந்த பைதான்.இதே பைதான்.நம்ம பை.நான் பணம் கொண்டு வந்த பை இதுதான்" என்று கூச்சலிட்டார்
"நம்ம பையா? என்ன சொல்றேள்? யாருப்பா நீ?இது எப்டி உன்கிட்ட வந்தது"
"முதல்ல இத பிடிங்கம்மா.பணம் சரியார்க்கானு பாத்துக்கோங்க.இத கொண்டுட்டு வந்து சேக்கரதுக்குள்ளாட்டியும் என் மூச்சு என்கிட்ட இல்லடா சாமி"
வாங்கி சரி பார்த்தார் கோபாலன்
சரியாய் மூணு லட்சம் அப்படியே இருந்தது
வியந்து போனவளாய்,"யாருப்பா நீ?இது உனக்கெப்படி கிடைச்சது? "என்றாள்
"அம்மா!நான் ட்ரெய்ன்ல கர்ச்சீப் விக்கறவன்மா.ஐயா இறங்கும்போது இது கீழ விழுந்துச்சு.நான் பின்னாடியே வந்து கூப்ட கூப்ட ஐயா காதுல வாங்காம ஆட்டோ பிடிச்சு போய்ட்டார்மா.அதுல இருந்த பேங்க் சீட்டுல இந்த விலாசம் இருந்துச்சு.அதான்மா எடுத்திட்டு பின்னாடியே வந்தேனுங்க"
அப்படியே தடாலென்று அவன் காலில் விழுந்தார் கோபாலன்.அவன் பதறினான்
"ஐயோ!என்ன செய்யறீங்க" பின்னைடைந்தான்
"உனக்கு தெரியாதப்பா.நீ எங்க குடும்பத்தையே காப்பாத்திட்ட" தழுதழுத்தார்
"அட என்னங்கய்யா!உங்க பணம் அது.அதத்தான் நான் தந்தேன்.அதுக்கு போயி இப்டி.."
"இல்லப்பா இது இல்லன்னா என் பொண்ணு கல்யாணமே நின்னுருக்கும்.காப்பாத்தி குடுத்துட்ட.பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நான் உன்னை தரக்குறைவானவனா நினைச்சேன்.ஆனா உன் செயலால நீ உசந்து என்னை குறுக வச்சுட்ட" அழுதார்
"கஷ்டப்பட்டு சேத்த பணம் எப்டிங்க போகும்?கல்யாணத்த நல்லா நடத்துங்க.நான் வரேன்"
"இருப்பா இரு!உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது, இரு.எவ்ளோ பெரிய உபகாரம் பண்ணிருக்க"
"உபகாரம் எதிர்பார்த்துலாம் செய்யல்லிங்க.நதி என்ன நம்ம கிட்ட எதிர்பார்த்தா தண்ணி குடுக்குது?மரம் என்ன எதிர்பார்த்தா நிழழும், காயும் கனியும் தருது.அதெல்லாம் சார்ந்து வாழற ஆறறிவு படச்ச மனுஷன் மட்டும் அத பாத்து கத்துக்க வேணாமானு சின்ன வயசுல எங்காத்தா சொல்லும்.நான் எங்காத்தா சொல்லி தந்தாப்லதான் இன்னி வரை வாழ்ந்துட்ருக்கேன்.அட போங்க சாமி"
சிறிய வயதில் தந்தை தன்னை உட்கார்த்தி வைத்து சொல்லி தந்த சமஸ்க்ருத பாடம் ஞாபகம் வந்தது அவருக்கு
"பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா:
பரோபகாராய வஹந்தி நத்யா:
பரோபகாராய துஹந்தி காவா:
பரோபகாரார்த்தம் இதம் சரீரம்"
படித்தறியாதவனாயிருந்தும் தாய் சொல்லித் தந்ததை வாழ்க்கை முறையாய் வாழும் அவன் முன் தான் தூசியாய் தன்னை உணர்ந்தார்
பார்த்த்தனுக்குப் பின் தனக்கு விஸ்வரூபம் கிடைத்த உணர்வில் நெகிழ்ந்து அவனை வழியனுப்பினார்.மனம் சிலு சிலுவென்றிருந்தது

Friday, December 3, 2010
தமிழ் மடி
எழுத்துக்களம் குதித்திடவே
எழுது கலம் எடுத்திட்டேன்
எழுந்து வந்த எண்ணங்களை
ஏடுதன்னில் ஏற்றிட்டேன்
உள்ளமதில் உதித்தவற்றை
உயிர் கொடுத்து உதிர்த்திட்டேன்
உருவம் தந்து சுவைதன்னை
ஊற்றிடவே முயன்றிட்டேன்
தன் குழந்தையென தன் கரம்
தந்தனள் தமிழன்னை
தமிழே! என் தாயேயென
தாவி மடி ஏறி விட்டேன்
வளர்த்தனள் அன்னை
வளர்ந்தது என் தமிழ்
வந்தது வார்த்தைகள்-
'வாழ்க நம் தமிழ்' என
எழுது கலம் எடுத்திட்டேன்
எழுந்து வந்த எண்ணங்களை
ஏடுதன்னில் ஏற்றிட்டேன்
உள்ளமதில் உதித்தவற்றை
உயிர் கொடுத்து உதிர்த்திட்டேன்
உருவம் தந்து சுவைதன்னை
ஊற்றிடவே முயன்றிட்டேன்
தன் குழந்தையென தன் கரம்
தந்தனள் தமிழன்னை
தமிழே! என் தாயேயென
தாவி மடி ஏறி விட்டேன்
வளர்த்தனள் அன்னை
வளர்ந்தது என் தமிழ்
வந்தது வார்த்தைகள்-
'வாழ்க நம் தமிழ்' என
Labels:
கவிதை
Wednesday, December 1, 2010
குருதியில் உறுதி வேண்டும்
ஒரு வருடம் முன்பு என் சொந்த வேலையாக அடையாரில் உள்ள 'வாலண்டரி ஹெல்த் ஆர்கனைசஷன்' சென்றிருந்தேன்.அங்கு சற்று நேரம் காத்திருக்கும்படியாக ஆனது.நான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது என் அருகில் நிறைய பேர் சிறு குழந்தை முதல் பத்து பன்னிரண்டு வயதுள்ள குழந்தைகளுடன் காத்திருந்தனர்.என் அருகில் இருந்த குழந்தை என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டது.அதன் தாயாருடன் பேசிக்கொண்டிருக்கும்போது 'குழந்தைக்கு என்ன உடம்பு' என்று கேட்டேன்.ஏதாவது சளி ஜுரம் என்றிருக்குமென நினைத்து கேட்டேன்.அவர் உடனே 'தலசெமியா' 'இங்க வந்திருக்கற எல்லா குழந்தைகளுக்கும் அதான்' என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அப்படிஎன்றால் என்ன என்று அவரிடம் கேட்க முடியவில்லை.ஏனென்றால் அதை கூறும்போது அவர் கண்களில் வேதனை இருந்தது.பின்னர்தான் ஒரு மருத்துவ புத்தகத்தின் மூலம் அறிந்தேன் அது ரத்தத்தில் ஏற்படும் ஒரு குறைபாடு என்று.
இக்குறைபாடு மரபணு கோளாறால் ஏற்படுகிறது.இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவில் இருக்காது என்பதோடு ரத்தம் தானாகவே உற்பத்தி ஆவதில்லை. இவர்கள் ஹீமோகுளோபின் குறையும் அளவை பொறுத்து மாதம் ஒரு முறையோ பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ தேவைக்கேற்றாற்போல் ரத்தம் ஏற்றிக்கொண்டே ஆக வேண்டும்.இவர்களால் மற்ற குழந்தைகள் போல் எல்லா விளையாட்டுக்களையும் விளையாட இயலாது.ஏனெனில் அடி பட்டு ரத்தம் வெளி வரக்கூடாது."போன் மேரோ ட்ரான்ஸ்ப்லாண்டேஷன்' செய்வதால் நிவர்த்திக்கு முயற்சிக்கலாம்.மிக விலையுயர்ந்த முயற்சி.மேலும் இந்த வகை சிகிச்சைக்கு உடன்பிறந்தவர்களின் போன் மேரோ ஒத்திருத்தலும் அது நோயாளிக்கு பொருந்துதலும் மிக அவசியம்.மாதம் ரத்தம் ஏற்ற ஆகும் செலவே வெளியில் குறைந்தது 3000 ரூபாய் ஆகும்.இந்த ஹெல்த் ஆர்கனைசேஷனில் மிக குறைந்த கட்டணத்தில் செய்கிறார்கள்.நல்ல மனத்துடன் ரத்த தானம் செய்யும் மனிதர்களை நம்பி இவர்கள் வாழ்கிறார்கள்.
அட!எங்கே செல்கிறீர்கள்? ரத்த தானத்திற்குதானே?மிக்க வந்தனம்.மிக்க நன்று

மருத்துவம்
Subscribe to:
Posts (Atom)