தீபாவளி!ஒளி மயமான பண்டிகைதான்.ஆனால் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு அதில் இருந்த அந்த ஒளி மயமான மகிழ்ச்சி இப்போழுதும் உள்ளதா என்பதில் எனக்கு ஐயம் ஏற்படுகிறது.
அப்பொழுதெல்லாம் தீபாவளி வரப்போகின்றது என்றாலே எங்கள் வீட்டில் நானும் அண்ணாக்களும் பல விதமான 'ப்ளான்' கள் போட ஆரம்பித்து விடுவோம்
அப்பாவும் அம்மாவுமாக சென்று எங்களுக்கெல்லாம் என்ன துணிமணிகள் எடுக்கிறார்களோ அதுதான் என்றாலும் கூட அதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்போம்.எனக்காவது தேவலை கொஞ்சம் கலர்புல்லாக இருக்கும்.அண்ணாக்கள் எல்லாருக்கும் சேர்த்து ஒரே கலரில் சட்டை துணியும் டிராயர் துணியும் கிழித்து வாங்கி வந்து விடுவார்கள்.ஆனாலும் வருடத்திற்கு ஒரு முறைதான் புது துணி கிடைக்கும் என்பதாலோ என்னவோ அதை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் இப்பொழுது வருடம் முழுவதும் துணிமணிகள்தான்.அன்று ஒரு உடை வாங்கும்பொழுது இருந்த சந்தோஷம் இப்போது எங்கே?
தீபாவளிக்கு முதல் நாளோ தூக்கமே வந்து தொலையாது.யார் என்ன வெடி வெடிப்பது யார் முதலில் குளிப்பது என்பதிலிருந்து எல்லாமே ஒரே உற்சாகமான விஷயங்கள்தான்.காலையிலும் கோவிலுக்கு சென்று வந்த பின் தாத்தா பாட்டி மாமா அத்தை பெரியப்பா சித்தி என உறவுகளுடன் கலந்து மகிழ்ந்த காலம் அது.
இப்பொழுது அந்த நேரங்களை எல்லாம் பொல்லாத தொலைக்காட்சி அல்லவோ ஆக்கிரமித்துக்கொள்கிறது.
என்ன சாப்பிடுகிறோம் என்பதன் ருசியை கூட உணராமல்,வீட்டில் ஒருவருக்கொருவர் பேசி கலக்க இயலாமல் 'இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக' என்பதாக அல்லவோ அந்த நாள் கழிகிறது
பண்டிகைகள் மனித உறவுகளை பலப்படுத்த வருகின்றன.ஒளி, தொலைக்கட்சியில் வேண்டாமே.அதை நம் மனங்களின் வழியே உறவுகளுக்கு கொண்டு வருவோம் இனி.
9 comments:
நல்லா இருக்கு.
சூப்பர் சிங்கரில் பாடுபவர் பெயர் நமக்கு மறப்பதில்லை. ஆனால் அடுத்த பிளாட்டில் உள்ளவர் பெயர் நமக்குத் தெரிவதில்லை.
//பண்டிகைகள் மனித உறவுகளை பலப்படுத்த வருகின்றன.ஒளி, தொலைக்கட்சியில் வேண்டாமே.அதை நம் மனங்களின் வழியே உறவுகளுக்கு கொண்டு வருவோம் இனி//
நல்ல கருத்து.
கருத்துக்களுக்கு நன்றி
கொண்டாட்டங்களையும் உறவுகளையும் காணாமற்செய்யும் முட்டாள் பெட்டியை தவிர்ப்பது மிக கடினமான விஷயமாகிவிட்டது...
காலம் வெகுவாக மாறிவிட்டது. கொண்டாட்டங்கள் வேறு விதமாகிவிட்டது.
http://simulationpadaippugal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF
கருத்துக்கு நன்றி வித்யா மேடம்
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_10.html?showComment=1407632115925#c853170747686434206
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் பாராட்டியுள்ளேன்.
இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_10.html
வாழ்த்துக்கள்......
Post a Comment