Monday, November 29, 2010
இளைய பாரதம்
சமிபத்தில் ஒரு விஷயம் என் மனதை வருத்தத்திற்கு உள்ளாக்கியது.பேருந்திற்காக காத்திருந்த வேளையில் அருகில் ஒரு இளைஞன் நின்றிருந்தான்.அவனது சட்டையில் 'மை டாட் இஸ் அன் ஏடிஎம்' என்ற வாசகம் எழுதியிருந்தது.பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் பெற்றோர்களின் நிலைமை பணம் கொடுக்கும் இயந்திரத்திற்கு ஒப்பான பரிதாபம் எப்படி ஏற்படுகிறது? இதற்கு காரணம் பிள்ளைகளின் அலட்சிய மனப்போக்கா? அல்லது பெற்றோர்களின் வளர்ப்பு முறையா?பெற்றோர்களின் நிழலில் இருக்கும்போதே இந்நிலை என்றால் வளர்ந்து தன் காலில் நிற்கும்போது அந்த பெற்றோர்களின் நிலைமை என்னவாக இருக்கும்?வள்ளுவரின் 'தந்தை மகற்காற்றும் உதவி'யும் , மகன் தந்தைக்காற்றும் உதவி' யும் நம்மை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றனவா?
Labels:
இளைஞர்,
தகவல் அறிவோம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாழ்த்துக்கள் முதல் பதிவிற்கு
என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த காலத்துப் பிள்ளைகள்!!
இது முதல் பதிவா? வ்வாவ்...
வாழ்த்துக்கள்!!
mutrilum unmaii
good one
Post a Comment