Wednesday, January 19, 2011

கோவிலின் சில தாத்பர்யங்கள்

                                                      இந்து தர்மத்தின் படி அமைந்த கோவில்களின் சில விவரங்களையாவது நாம் அனைவரும் அறிவது அவசியமாகும்.

கோவில்களில் உருவ வழிபாடு செய்வதற்கும், கொடி மரம் எனப்படும் த்வஜஸ்தம்பம் அமைப்பதற்கும் உண்டான காரணம் நம்  நலம் கருதி உண்டானதுதான்.

இந்த உலகில் நம்மை  சுற்றி ஆகாயம், காற்று, நீர், நெருப்பு மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்கள்  அமைந்திருக்கின்றன.இவற்றின் சக்தியால்தான் நாம் காக்கப்படுகிறோம் என்பதை எவரும் மறுக்க முடியாது.இவைகளிடமிருந்தே நாம் சக்தி பெறுகிறோம்.எனவே கோவில்கள் இந்த அடிப்படையிலேயே அமைக்கப்பட்டவைகளாக உள்ளன.

த்வஜஸ்தம்பம்:   முதலில் த்வஜஸ்தம்பத்தைப்(கொடி மரம்) பற்றிப் பார்ப்போம்.
வான் வெளியை நோக்கி உயர்ந்து நீண்டிருக்கும் இந்த கொடி மரமானது வெட்ட வெளியிலிருந்து காற்றலைகளை தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது.(நம்ம டி வி க்கு ஆண்டனா,டிஷ் ஆண்டனா எல்லாம் வச்சா எப்பிடி நமக்கு ஒப்பன் ஸ்பேஸ்லேருந்து
காற்றலை மூலமா சிக்னல் கிடைக்குது.அப்டித்தான்.நான் மொபைல் போன் பத்தியோ அந்த காற்றலை பத்தியோ சத்தியமா பேசவே  இல்லைங்க) சரி விஷயத்திற்கு வருவோம்.கொடி மரமானது உலோகத்தகட்டால் இருப்பதன் மூலம், அந்த உலோகம் தான் ஈர்த்த காற்றலைகளை கோபுர வாயிலின் குறுகலான பாதை வழியாக கர்ப்பக்ரஹத்துக்கு அனுப்புகின்றது

இங்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம்.அது எவ்வாறு காற்றலைகள் மிக சரியாக கர்ப்பக்ரஹத்தை நோக்கி செலுத்தப்படுகிறது என்று.காற்றலைகள் பரந்து விரிந்திருக்கும் இடங்களை  விட குறுகலான இடம் நோக்கியே வேகமாக செல்கின்றன.(இந்த முதல் படியில் ஆகாயம் மற்றும் காற்று இடம் பெற்று விடுகின்றன)

                     
கர்ப்பக்ரஹம்:   அடுத்ததாக கர்ப்பக்ரஹத்தில் மூலவராக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிலை கல்லால் செய்யப்பட்டதாகும்.இந்த கல் காற்றலையை உள் வாங்கி தன் தன்மையை சேர்த்து அங்கு கூடும் நம்மிடம் சேர்ப்பிக்கின்றது(இந்த நிகழ்வுக்கு கற்பூர ஆரத்தி தன் பங்காக உதவுகின்றது)


கற்பூர ஆரத்தியை நாம்  கண்களில் ஒற்றிக் கொள்வதன் மூலம் அதிலுள்ள பாஸ்பரஸ் சக்தியும் நம்மை வந்தடைகின்றது.
Fire Crown (Rajendran Rajesh) Tags: fire flames crown camphor abigfave(இந்த நிலையில் நெருப்பு இடம் பெற்று விடுகின்றது)


தீர்த்தம்:  கோவில்களில் நமக்கு வழங்கப்படும் தீர்த்தமே அடுத்து இடம் பெறுகிறது.
காற்றலைகள் கர்ப்பக்ரஹத்தில்  வைக்கப்பட்ட தீர்த்தத்தை குளிர்ச்சியுள்ளதாக்குகின்றன.அது நம் உடல் சூட்டை குறைத்து நமக்கு சக்தி கிடைக்க ஏதுவாகின்றது.மேலும் தீர்த்தத்தில் துளசி, ஏலம், லவங்கம் இடுவதன் மூலம் நம் உடலின் கிருமிகள் அழிக்கப் படுகின்றன.
(இந்த நிலையில் நீர் இடம் பெற்று விடுகின்றது)

Brass & Copper Vattle For Lord Perumal, Vishnu And Hanuman Temple

நமஸ்காரம்:  நன்றாகக் கீழே  விழுந்து உடல் நிலத்தில் படுமாறு நமஸ்காரம்  செய்வதன் மூலம் புவியின் காந்த சக்தியும் நம்மை வந்தடைகின்றது.
(இந்த நிலையில் நிலம் இடம் பெற்று விடுகின்றது)

                                                  
                                                         

இவ்வாறு கோவிலுக்கு செல்வதன் மூலம் நாம் பஞ்ச பூதங்களிடமிருந்து உடலுக்கு உண்டான சக்தியை பெறுகின்றோம்.கோவிலுக்குள் இருக்கும் அனைவரின் எண்ண அலைகளும் பிரார்த்தனையை நோக்கியே இருப்பதால் ஆன்ம பலமும் கூடுகின்றது.

                                           

கோவிலின் தர்மத்தை கடைபிடித்து நன்மை பெறுவோமாக

  குறிப்பு:   கேட்டவற்றிலிருந்து           

25 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் said...

hai y dont attached in indli? any problem?

சி.பி.செந்தில்குமார் said...

>>>>admin@thamizmanam.com

send to this address . ( not now.. while problem in votw pattai. now working

சி.பி.செந்தில்குமார் said...

while WE R IN TEMPLE THE POSITIVE THINKING R RAISING.THAT IS GOOD FOR OUR HEALTH ALSO

சி.பி.செந்தில்குமார் said...

SEND THIS MATTER TO SAKTHI VIKADAN, 757 ,ANNA SAALAI, CHENNAI 2

U WILL GET A CHANCE TO ENTER IN ANANDHA VIKATAN GROUP AND THIS MATTER WILL RWACH 8 LAKSH PEOPLE.

S Maharajan said...

அருமையான பகிர்வு
நன்றி

தினேஷ்குமார் said...

நல்ல பகிர்வு நன்று

ADHI VENKAT said...

நல்ல பல தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஆதி
http://www.kovai2delhi.blogspot.com/

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல் பகிர்வு சகோ. மிக்க நன்றி. கொடி மரம் இருக்கும் கோவிலில் எப்போதுமே நமஸ்கரிக்கும் போது கொடிமரத்தைத் தாண்டி வெளியே வரும்போதுதான் நமஸ்கரிக்க வேண்டும் என சொல்லக் கேட்டிருக்கிறேன்..

நட்புடன்

வெங்கட் நாகராஜ்.

ஆர்வா said...

என்ன ரொம்ப செண்டிமெண்டா இறங்கிட்டீங்க?


விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

Nagasubramanian said...

நல்லதொரு பகிர்வு. "ஓலைச்சுவடி" என்ற புத்தகத்தைப் படிக்காவிடில் படியுங்கள். இந்து மதத்தில் பின்பற்றப்படும் பெரும்பான்மையான விஷயங்களுக்கு அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளனர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நன்கு அலசி ஆராய்ந்து, கேட்ட/படித்த/உணர்ந்த விஷயங்களை சர்க்கரைப் பொங்கல் & புளியோதரை பிரசாதம் போல எங்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

Chitra said...

சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

R. Gopi said...

சூப்பர் போஸ்ட்.

வெங்கானூர் பாலகிருஷ்ணன் என்பவர் ஓலைச்சுவடி என்று ஒரு புத்தகம் போட்டிருக்கிறார் (மலையாள மூலம்). அதில் நிறைய சம்பிரதாயங்கள் பற்றியும் அதை ஏன் செய்யவேண்டும் என்பது பற்றியும் எழுதியுள்ளார். முடிந்தால் வாங்கிப் படிக்கவும்

Yaathoramani.blogspot.com said...

படத்துடன் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்

raji said...

@ராம்ஜி யாஹூ

நன்றி

சி.பி.செந்தில்குமார்

கருத்துக்களுக்கும் வழி நடத்தலுக்கும் நன்றி

@மஹாராஜன்
நன்றி

@தினேஷ் குமார்
நன்றி

@கோவை2தில்லி
நன்றி

@வெங்கட் நாகராஜ்
கருத்துக்களுக்கு நன்றி

@கவிதைக் காதலன்
some times sentiments also needed

@நாகசுப்ரமணியன்

'ஓலைச்சுவடி' புத்தகம் இது வரை படித்ததில்லை,அவசியம் படிக்கிறேன்.
தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி

@வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி

@சித்ரா

நன்றி

@கோபி ராமமூர்த்தி

நாகசுப்ரமணியன் அவர்கள் 'ஓலைச்சுவடி' புத்தகத்தை பற்றி
கூறியதும் எழுதியவர் யாரென்று தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
தெளிவு படுத்தி விட்டீர்கள்.நன்றி.கட்டாயம் வாங்கிப் படிக்கின்றேன்

@ரமணி

நன்றி

Srini said...

" செல்போன், எலெக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸ்-னு இப்பிடி சயிண்ட்டிபிகலாவும் டெக்னிக்கலாவும் சொல்லித்தான் நம்ம கலாச்சாரத்தோட சாரத்தையே விளக்க வேண்டிய அவல நிலை..!!
“ என் மேல் விழுந்த மழைத்துளியே ...இத்தனை நாளாய் எங்கிருந்தாய் “ங்கிற பாடல்வரி ஞாபகம் வருது... உங்களைப்போன்ற பதிவர்கள்னாலதான் எங்களுக்கு நெறய விஷயம் தெரிய வருது..
“ மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.. தங்களுக்கும், தங்களைப்போன்ற யதார்த்தமான பதிவர்களுக்கும்..”

எல் கே said...

@ராஜி
கற்பூர தீபம் சமீபக் காலங்களில் உண்டானது. நெய் தீபம் அல்லது தீபம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். மற்றப் படி நல்லத் தகவல்கள்

priyamudanprabu said...

mm sari...

raji said...

@ஸ்ரீனி

வாழ்த்துக்களுக்கு நன்றி

@எல்.கே

கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி சார்

@பிரியமுடன் பிரபு

பதிவின் கடைசி வரிக்கு உண்டான பின்னூட்டமா?

RVS said...

நல்ல தகவல்கள். என்னைப்போலன்றி உருப்படியான விஷயங்கள் எழுதும் உங்களுக்கு நன்றி.
இதே போல் கோவில் அமைப்பையும் மனிதனின் உடலையும் ஒப்புமைப்படுத்தி ஒன்று உண்டு.. துவஜஸ்தம்பம் காலில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக மேலே போகும்.. ;-) ;-)

Anonymous said...

சில சொட்டுகள் துளசி கலந்த கோவில் தீர்த்தத்தை அருந்துகையில் ஏற்படும் புத்துணர்ச்சி எதிலும் கிடைப்பதில்லை.

Unknown said...

பகிர்விற்கு நன்றி

ரிஷபன் said...

சாந்நித்யம் நிறைந்த பதிவு..

RAMA RAVI (RAMVI) said...

ராஜி, தங்களின் இந்த பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்,நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

Post a Comment