எனது சிறு வயதில் என்னை மிகவும் வியப்பிலாழ்த்திய விஷயங்களுள் ஒன்று பொம்மலாட்டம். தாமிரபரணி ஆற்றங்கரையில் சிலுசிலுவென காற்றடிக்க மணல் பரப்பில் அமர்ந்து விழி விரிய பொம்மைகளின் அசைவுகளையும்,அவற்றின் உடை அமைப்புகளையும் அதற்குரிய வசனங்களையும் கண்டும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன். தொலைக்காட்சி என்ற தொல்லையற்ற பொழுதுகளில் அப்பொழுது பொம்மலாட்டம் சிறுவர்களுக்கு ஒரு பொழுது போக்காகவே இருந்தது.கோவில் திருவிழாக் காலங்களில் சங்கீத கச்சேரிகளுக்கு இணையாக பொம்மாலட்டமும் ஒரு சிறப்பிடம் பெற்றிருந்தது.
பொம்மைகள் எவ்விதம் அசைகின்றன என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கும்.என்னதான் அண்ணா அதைப் பற்றிய விளக்கம் அளித்தாலும், அது எவ்வாறு ஒருவர் பொம்மைகளின் அசைவை அப்படி கன கச்சிதமாக செய்யக் கூடும் என்பது எனக்கு பெருத்த ஆச்சர்யமாகத்தான் இருந்தது.வசனங்களுக்கேற்ப அவற்றை அசைக்கவும், பின்னே இசைக்கும் இசைக்கேற்ப அவற்றைக் குதிக்கவும் ஆடவும் செய்வதும் எனக்கு அப்பொழுது வேடிக்கையாகவே இருந்தது.
பொம்மலாட்டம் மூலம் பல புராணக் கதைகள் அறிய குழந்தைகளுக்கு வாய்ப்பிருந்தது.காதால் கேட்கப் படும் அல்லது புத்தகம் மூலம் படிக்கப் படும் கதைகளை விட கண்ணால் பார்த்து மனதில் பதித்துக் கொள்ளக் கூடிய வண்ணம் பொம்மலாட்டங்கள் அமைந்திருந்தன.அவற்றிற்குரிய அலங்காரங்களும் பொருத்தமாகவே இருக்கும்.
கண்ணை பாதிக்கக் கூடிய திரையும் வன்முறைக் காட்சிகளும் அவற்றில் இல்லை.வில்லனுக்கு எதிராக கதாநாயகன் சுழன்று சுழன்றும், ஆகாயத்தில் பறந்து வந்தும், வித்தைகள் செய்தும் துவம்சம் செய்யும் பொய்மைக் காட்சிகள் அதில் இல்லை.
கதாநாயகியாக வரும் பொம்மைக்கு குட்டைப் பாவாடையுடன் கூடிய நடனக் காட்சிகள் இருக்கவில்லை.பெண் ஒரு போதைப் பொருள் என்றதொரு தோற்றம் ஏற்படுத்தும் கட்டிப்பிடி காட்சிகளும், காதால் கேட்க கூசும் குத்துபாட்டுகளும் பொம்மலாட்டத்தில் புனையப் படவில்லை.
இன்று அந்தக் கலை அழிவின் பாதையில்.
நம்பிக்கையூட்டும் வண்ணம் சில பொருட்காட்சிகளில் அவ்வப்பொழுது காண இயல்கிறது.
மார்ச் 21 உலக பொம்மலாட்ட தினம்.
"இதற்கெல்லாமா ஒரு தினம் கொண்டாடுவது?" சினேகிதி கேட்டாள்.
ஏன் கூடாது?வாலன்டைன்ஸ் டே என்ற பெயரில் அந்த தினத்திற்கான அர்த்தம் கூட புரியாமல் சிலர் கூத்தடிக்கையில் இதற்கு ஏன் கூடாது?
உண்மையில் வாலன்டைன் என்பவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார்.தன்னை நாடி வந்த ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைத்த அவரை அந்த ஊர் மக்கள், தண்டனையாக உயிர் வதை செய்து விட்டனர்.அவர் இறந்த தினமே வாலன்டைன் டே.ஒருவர் இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாடுகிறோம் என்பது கூட தெரியாமலே பலர் இதைக் கொண்டாடுகின்றனர்.
அதற்கெல்லாம் ஒரு தினம் இருக்கையில் அழிவின் பாதையில் இருக்கும் ஒரு கலையை மீட்டெடுக்க உலக பொம்மலாட்ட தினம் ஏற்படுத்திக் கொண்டதில் தவறென்ன?
22 comments:
Super Raji'kka...:) Happy Puppet show day...
அதற்கெல்லாம் ஒரு தினம் இருக்கையில் அழிவின் பாதையில் இருக்கும் ஒரு கலையை மீட்டெடுக்க உலக பொம்மலாட்ட தினம் ஏற்படுத்திக் கொண்டதில் தவறென்ன?
நிச்சயம் இருக்கவேண்டும்
அந்தக் கலையும் கலைஞனும்
சிறப்பாக வாழ நிச்சயம்
இந்த தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படவேண்டும்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
மார்ச் 21 உலக பொம்மலாட்ட தினம்.
அருமையான கலை அழியாமல் காக்கப்படுதல் அவசியம்..
நல்ல வேளையாக ஒரு முறை பொம்மலாட்டம் பார்த்திருக்கிறேன்... (1st or 2nd std- i guess).. Discoveryஇல் "தொலு பொம்மலாட்டா" பற்றிய நிகழ்ச்சி ஒன்று பார்த்ததிலேர்ந்து அதை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
"sound of music" பார்த்ததுண்டா? இதை கண்டிப்பாக நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்... http://www.youtube.com/watch?v=QWaMJ331oYM
Bommalaattam Day is a news! Never knew about it... hats off!
//கதாநாயகியாக வரும் பொம்மைக்கு குட்டைப் பாவாடையுடன் கூடிய நடனக் காட்சிகள் இருக்கவில்லை.பெண் ஒரு போதைப் பொருள் என்றதொரு தோற்றம் ஏற்படுத்தும் கட்டிப்பிடி காட்சிகளும், காதால் கேட்க கூசும் குத்துபாட்டுகளும் பொம்மலாட்டத்தில் புனையப் படவில்லை. //
அருமையான, சாட்டையடி போன்ற வரிகள்! ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!
புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி
நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
நானும் கூட சின்ன வயசில் தாமிர பரணி நதிக்கரையில் பொம்மலாட்டம் பாத்திருக்கேன் இப்பகூட யாராவது நினைவு படுத்தினா தான் அந்த நாள் நினைவே வருது.
//அதற்கெல்லாம் ஒரு தினம் இருக்கையில் அழிவின் பாதையில் இருக்கும் ஒரு கலையை மீட்டெடுக்க உலக பொம்மலாட்ட தினம் ஏற்படுத்திக் கொண்டதில் தவறென்ன?//
தவறே கிடையாது. மிகச்சரியாகவே ஆணித்தரமாகச் சொல்லியுள்ளீர்கள்.
நானும் உங்களைப்போல என் சிறுவயதினில் இதைக் கண்டு மகிழ்ந்து பிரமித்துப்போனதுண்டு.
//பொம்மலாட்டம் மூலம் பல புராணக் கதைகள் அறிய குழந்தைகளுக்கு வாய்ப்பிருந்தது.காதால் கேட்கப் படும் அல்லது புத்தகம் மூலம் படிக்கப் படும் கதைகளை விட கண்ணால் பார்த்து மனதில் பதித்துக் கொள்ளக் கூடிய வண்ணம் பொம்மலாட்டங்கள் அமைந்திருந்தன.அவற்றிற்குரிய அலங்காரங்களும் பொருத்தமாகவே இருக்கும்.//
ஆமாம். அந்த வயதினில் இவை நமக்கு நல்ல பல நீதிக்கதைக்களை வெகு அழகாகவே விளங்கிப் புரிய வைத்தன என்பதில் சந்தேகமே இல்லை.
அசிங்கமான காதல் காட்சிகளோ, வன்முறைகளோ அதில் இருக்காது. கூடவே ஒருவர் கதையை விளக்கிக்கூறுவதும் உண்டு. பெரும்பாலும் நல்ல விஷயங்களாகவே இருக்கும்.
தொலைகாட்சி வந்தபுதிதில், தூர்தர்ஷன் மட்டுமே கொடைக்கானலிலிருந்து மட்டுமே ஒலிபரப்பானபோது கூட, இந்த பொம்மலாட்டத்தை அதில் காட்டி, பல நல்ல விஷயங்களை காலத்திற்கு ஏற்றபடி, பல நல்ல நீதிக்கதைகளை ஒலிபரப்பி மகிழ்வித்தனர். நானே அவற்றை 1985 இல் மிகவும் விரும்பிப்பார்த்துள்ளேன்.
இந்தக்கலைகள் இப்போது அழிந்து வருவது காலத்தின் கொடுமை தான். அதைத் தடுக்கவும் வழியேதும் இல்லை என்றும் ஆகிவிட்டது.
என்னுடைய சமீபத்திய [Latest] நேற்றைய பதிவினில் தெருக்கூத்துக் கலைஞர்களைப்பற்றி எழுதியிருந்தேனே!
அவர்களின் இன்றைய நிலையும் அதுபோலவே தான்.
அந்த நிகழ்ச்சியின் கேள்வி-பதில் நேரத்தில் இதை அவர்கள் வாயாலே கேட்டு மிகவும் வருந்தினேன்.
அவர்களின் வாழ்வாதாரமே போய்விட்டது. பரம்பரய் பரம்பரையாக இந்தக் கலையை வளர்த்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு இன்று சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது. வேறு பல கூலிவேலைகளுக்குச் சென்று வருகிறார்களாம்.
டிராமா, சினிமா, தொலைக்காட்சிகள், Internet என்று ஏதேதோ நவீன வசதிகள் வந்து விட்ட பிறகு இதுபோன்று பாதிக்கப்பட்ட கலைஞர்கள் ஏராளமாக உள்ளனர்.
அழகான பதிவு இட்டு எல்லோருக்கும் இதுபற்றிக் கூறியுள்ளதற்கு என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
சின்ன வயதில் நானும் இதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். காப்பாற்றப் பட வேண்டிய கலை! நல்ல பகிர்வு!
'அன்புடன் ஒரு நிமிடம்'
இரண்டாவது பகுதி.
'முழுமையாக ஒரு வாழ்த்து...'
http://kbjana.blogspot.com/2012/03/blog-post_21.html
அருமையான பகிர்வு. கடைசி பாராவில் சொல்லியுள்ளவை அத்தனையும் நானும் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கெல்லாம் நாள் இருக்கும் போது இப்படி ஒரு அருமையான கலைக்காக ஏன் இருக்கக் கூடாது?
நான் முதன் முதலாக 2009ல் ஜெய்ப்பூர் சென்ற போது தான் பார்த்தேன். பின்பு இங்கு தில்லியில் இரண்டு, மூன்று இடங்களில்....
பொம்மலாட்டம் மிகவும் புராதனமான கலை..... அழிந்து கொண்டு வருவது மிகவும் கவலையான ஒரு விஷயம்.....
நானும் ரசிக்கும் ஒரு விஷயம்....
கடைசி வரிகளில் சொன்ன வார்த்தைகள் மிகவும் அருமை...கலை காப்பாற்ற படவேண்டும்...பகிர்வுக்கு நன்றி..
பொம்மலாட்ட கலைகள் அழிந்து வருவது வருத்தத்திற்குரிய விசயம். நல்லதொரு பதிவு.
பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்
ஒரு அறிய கலை மறைந்து கொண்டுதான் வருகிறது. வாழ்வின் தத்துவமே பொம்மலாட்டம்தான?
இப்போதைய சினிமாவை விட அப்போதைய பொம்மலாட்ட கலைக்கு கூட்டம் அதிகம் வரும்
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_20.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment