ஆச்சர்யமும் அற்ற
கேள்விக்குறியுமற்ற-
முன்னிலை, படர்க்கையை
நகர்த்தும் தன்மைச் சொல்லாய்
இந்த உலகில் - ”நான்”
*************************
உலகையெல்லாம் நீ
உன் கண்ணால்
பார்க்க அதனுள்
என்னைப் பார்க்கிறேன்
நான்
************************
என்றேனும் நேரக்கூடும்,
என் இழப்பால்
இடிந்து நிற்காதே.
இறந்த காலமல்ல நான்.
உன் எதிரே ஒரு வேளை
உணவுக்காய் கையேந்தும்
உதவியற்ற சிறுமியாகவோ
மழைக்கு ஒதுங்க இடமற்ற
மூதாட்டியாகவோ வரும்
நிகழ்காலம்தான் நான்
************************

நான் என்பது என் உடலல்ல - கலங்காதே
நான்கு பேருக்கு உதவியாக
தந்துவிடும் உறுப்புகளில்
எரிந்த பின் வாழும் பீனிக்ஸ் நான் .
*****************************
காயென நினைத்தேன் கசந்தது
கனியென நினைத்தேன் இனித்தது - இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது - எல்லாம்
நானென நினைத்தேன் முடிந்தது

****************************************
டிஸ்கி 1 : சென்ற பதிவில் 'நீ'. என்ற தலைப்பில் எழுதியதை படித்து விட்டு பதிவர் ஆர்விஎஸ் அவர்கள் ( இப்பல்லாம் இவரை பதிவர்னு சொல்றதை விட முகநூல்காரர்னு சொல்றது பொருத்தமா இருக்கும்.இதை நான் கோவமா சொல்றேன் .அந்த அளவு அவர் தனி பதிவுகள் போடறதில்லை ) . ' நான் '. என்ற தலைப்பில் எழுதச் சொல்லிக் கேட்டதன் விளைவே இந்தப் பதிவு.(நியாயமா போன பதிவைப் படிச்சப்பறம் தலை தெறிக்க ஓடி இருக்கணும்.அவருக்கு என்னவோ ஒரு விபரீத ஆசை .அதுக்காக பாதிக் கல்லை அவர் பக்கம் யாரும் எறிய வேண்டாம்னு கேட்டுக்கறேன் :-). )
டிஸ்கி 2 : இதில் பதிந்திருக்கும் கடைசி கவிதை (!) எனது பதினைந்தாவது வயதில் நான் எழுதிய எனது முதல் கவிதை என்பதைக் கூறிக் கொள்கிறேன். :-)
அப்பலேருந்தே நீ இப்படித்தானான்னு(!) உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு க்ளியரா கேக்குது. :-)
34 comments:
இதற்கு முந்திய பதிவில் ”நீ” பற்றிய கவிதை படைத்த தங்களை ”நீயா நானா” போட்டிக்கு அழைத்த பதிவர் திரு. ஆர்.வி.எஸ் அவர்களுக்கு முதற்கண் நன்றிகள்.
.>>>>>>>>
//காயென நினைத்தேன் கசந்தது
கனியென நினைத்தேன் இனித்தது - இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது - எல்லாம்
நானென நினைத்தேன் முடிந்தது//
சிறுவயதில் தாங்கள் முதன்முதலாக
எழுதியுள்ள இந்தக்கவிதை இன்றும்
இளமையாக மிகவும் சிறப்பாக உள்ளது.,
//இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது - எல்லாம்
நானென நினைத்தேன் முடிந்தது//
இறைவனை நினைத்தால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்பது அருமையாகச் சொல்ல்ப்பட்டுள்ளது.
இதற்கு இரண்டாவது ரேங்க் தரப்படுகிறது.
>>>>>>
//நான் என்பது என் உடலல்ல - கலங்காதே
நான்கு பேருக்கு உதவியாக
தந்துவிடும் உறுப்புகளில்
எரிந்த பின் வாழும் பீனிக்ஸ் நான் .//
இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
இதற்கே முதல் ரேங்க் தரப்படுகிறது.
>>>>>>
//என்றேனும் நேரக்கூடும்,
என் இழப்பால்
இடிந்து நிற்காதே.
இறந்த காலமல்ல நான்.
உன் எதிரே ஒரு வேளை
உணவுக்காய் கையேந்தும்
உதவியற்ற சிறுமியாகவோ
மழைக்கு ஒதுங்க இடமற்ற
மூதாட்டியாகவோ வரும்
நிகழ்காலம்தான் நான்//
இதுவும் சூப்பராக உள்ளது.
இதற்கும் நான் தருவது முதல் ரேங்க் மட்டுமே
>>>>>>>
//உலகையெல்லாம் நீ
உன் கண்ணால்
பார்க்க அதனுள்
என்னைப் பார்க்கிறேன்
நான்.//
மூன்றாம் ரேங்க் பெறும் இதுவும் பிரமாதமாகவே உள்ளது.
>>>>>>>>
//ஆச்சர்யமும் அற்ற
கேள்விக்குறியுமற்ற-
முன்னிலை, படர்க்கையை
நகர்த்தும் தன்மைச் சொல்லாய்
இந்த உலகில் - ”நான்”//
முதலில் வெளியிடப்பட்டிருந்தாலும் இது
நான்காம் இடத்தினை மட்டுமே பெறுகிறது
என் பார்வையில்.
>>>>>>>>
”நீ” ஆச்சு ...... ”நான்” ஆச்சு
அடுத்தது என்ன?
அவன் / அவள் /. அது
போன்ற எதுவோ?
எதுவாக இருந்தாலும் என்ன ....
அடுத்தடுத்து பதிவுகள் வந்தால் சரியே!
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றிகள்.
oooooOooooo.
காயென நினைத்தேன் கசந்தது
கனியென நினைத்தேன் இனித்தது - இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது - எல்லாம்
நானென நினைத்தேன் முடிந்தது
ஆஹா பதினைந்து வயதிலேயே ஒரு தானறிதல் நிலையா? யோகிக்குத்தான் கிட்டும் . சில பேருக்கு 16 வயதினிலேயே புகழ் கிட்டியது அது வேறு விஷயம். மனிதனுக்கு இந்த ஞானம் வந்தால் போதும் வேறு என்ன வேண்டும். அது சரி கண்ணன் பிறந்த வேளையில்தான் கவிதை வருமோ
சோகக் கவிதைக்கு சொந்தக்காரன் மில்டன் என்று யார் சொன்னது. இதோ நானும் இருக்கிறேன் என்று சொந்தம் கொண்டாடியவள் நீதானோ.
என்றேனும் நேரக்கூடும்,
என் இழப்பால்
இடிந்து நிற்காதே.
இறந்த காலமல்ல நான்.
நினைவிலும் கனவிலும் வேண்டாமே இந்த நினைப்பு
//எரிந்த பின் வாழும் பீனிக்ஸ் நான் //
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...
//அதனுள் என்னைப் பார்க்கிறேன் நான்...//
ம்... சூப்பர்ப். மேடம். வாழ்த்துகள்.
ப்ளாகென்றால் அட்லீஸ்ட் இரண்டு பக்கமாவது எழுத வேண்டியிருக்கிறது. முகநூலில் நமது இருப்பை தெரிவிக்க இரண்டு வரி போதும். இப்போதெல்லாம் விஸ்தாரமாக எழுத நேரமிருப்பதில்லை. மீண்டும் இந்த வருடன் நிறைய எழுதலாம் என்று விருப்பம். பகவான் சித்தம். பார்க்கலாம்.
உன் எதிரே ஒரு வேளை
உணவுக்காய் கையேந்தும்
உதவியற்ற சிறுமியாகவோ
மழைக்கு ஒதுங்க இடமற்ற
மூதாட்டியாகவோ வரும்
நிகழ்காலம்தான் நான்
ஆஹா சபாஷ்.. தேவன் வருகிறார் என்று காத்திருந்து வந்து போனவர்களில் அவர்தான் இருந்தார் என்றறியும் தருணம்..
கவிதைகளில் தெறிக்கும் அக்னிக் குஞ்சு இன்னும் இன்னும் சுடர் விட்டுக் கொண்டெ இருக்க வாழ்த்துகள்.
Superb!
காயென நினைத்தேன் கசந்தது
கனியென நினைத்தேன் இனித்தது - இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது - எல்லாம்
நானென நினைத்தேன் முடிந்தது
நானென்ற நினைவு அற்ற பிறகே
காட்சி கொடுக்கும் இறைவன் ..
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
//காயென நினைத்தேன் கசந்தது
கனியென நினைத்தேன் இனித்தது - இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது - எல்லாம்
நானென நினைத்தேன் முடிந்தது//
பிரமாதம் ராஜி.
15 வயதில் இப்படி ஒரு முதிர்ச்சியா என்கிற வியப்பு எனக்கு. வாழ்த்துக்கள்.
ஆஹா.. ஜூப்பருங்கோ :-))
இன்னும் நிறைய எழுதுங்க.
ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. எனக்கெல்லாம் ரசிக்கத்தாங்க தெரியும்.
விவரம் புரியாத வயதில் எழுதும் எழுத்துக்கள் சில சமயம் கல்லில் எழுத்தாய் பதிந்து விடுவது உன்டு. உங்களின் பதினைந்தாவது வயதில் எழுதியதும் அது மாதிரி மிக சிறப்பாக அமைந்து விட்டது. வாழ்த்துக்கள்!!
//நான் என்பது என் உடலல்ல - கலங்காதே
நான்கு பேருக்கு உதவியாக
தந்துவிடும் உறுப்புகளில்
எரிந்த பின் வாழும் பீனிக்ஸ் நான் .
// கவர்ந்த வரிகள்
Superb...
உலகையெல்லாம் நீ
உன் கண்ணால்
பார்க்க அதனுள்
என்னைப் பார்க்கிறேன்
நான்////////
எங்கோ கேட்ட மாதிரி ஞாபகம்:)
முன்ன ‘நீ’ இப்ப ’நான்’ பின்ன நாமா?
கவிகள் நன்று.
ஒவ்வொரு வரியும் உயிருடன் உள்ளது ராஜி. அடுத்து ராஜியின் ரகளைகளை கவிதை வடிவில் எதிர்பார்க்கிறேன்
அனைத்தும் ஆழமான அர்த்தங்கள்,சிறு வயதிலே தீப்பொறி எழுத்துப்போறியாக துவங்கியுள்ளது.படித்த சீரியஸ்னஸ் குறையும் அளவிற்கு டிஸ்கியில் கலாய்த்துள்ளிர்கள்.கோபாலகிருஷ்ணன் சார் சொல்லியிருப்பதை கன்சிடர் பண்ணுங்கள்.(அடுத்து அவன், அவள், அது, அவர்,இவர்,எதுவோ கவிதாயினிக்கு எதுவேணும்னாலும் தோணலாம்.)
thirumathi bs sridhar said...
//அனைத்தும் ஆழமான அர்த்தங்கள்,சிறு வயதிலே தீப்பொறி எழுத்துப்போறியாக துவங்கியுள்ளது.படித்த சீரியஸ்னஸ் குறையும் அளவிற்கு டிஸ்கியில் கலாய்த்துள்ளிர்கள்.கோபாலகிருஷ்ணன் சார் சொல்லியிருப்பதை கன்சிடர் பண்ணுங்கள்.(அடுத்து அவன், அவள், அது, அவர்,இவர்,எதுவோ கவிதாயினிக்கு எதுவேணும்னாலும் தோணலாம்.)//
*****கோபாலகிருஷ்ணன் சார் சொல்லியிருப்பதை கன்சிடர் பண்ணுங்கள்.*****
ஆஹா, நீங்களாவது இன்று வரை தொடர்ந்து என்னை ஞாபகம் வைத்துள்ளது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி. ;)
அன்புடன்
VGK
அடிக்கடி படுத்துகிற பவர் கட்டில் இந்தக் கவிதை தந்த தாக்கம் பற்றி சொல்ல விட்டு விட்டேன்.
ஆச்சர்யமும் அற்ற
கேள்விக்குறியுமற்ற-
முன்னிலை, படர்க்கையை
நகர்த்தும் தன்மைச் சொல்லாய்
இந்த உலகில் - ”நான்”
தன்மை இங்கே இரு பொருளாய் எனக்குத் தோன்றியது. இலக்கண விதிப்படி ஒன்றும், அனுசரித்துப் போகிற தன்மையைச் சொல்லும் விதமாகவும். நம் மிக அருகில் உள்ளோர் முன்னிலையிலும், விலகி நின்று ஆனால் நம்மைக் குறித்த விமர்சனங்களுடன் இருப்போர் படர்க்கையெனவும் குறிப்பிட்டுள்ளீர்களோ என்கிற யூகம்.
என் கருத்து சரியா தெரியல.. ஆனால் சற்றெ ஆழ்ந்த பொருளை வெகு இயல்பாய் சொல்லிப் போன அழகை வெகுவாய் ரசித்தேன்.
@ Rishaban
தங்களின் கோணம் இதற்கு பொருந்துகிறது.என்றாலும் எனது கோணத்தையும் நான் வெளிப்படுத்துகிறேன்.
ஆச்சர்யமுமற்ற (ஆச்சர்யப் படக்கூடிய அளவில் இல்லாதவள் நான்)
கேள்வியுமற்ற ( என்ன இவள் என்று கீழ் நிலையாக நினைக்கும்படியும் இல்லாதவள்)
முன்னிலை,படர்க்கையை
நகர்த்தும் தன்மைச் சொல்லாய்
இந்த உலகில் - நான் (எல்லாருமே ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் சுயநலவாதிகளாகி விடுகிறோம் எதோ ஒரு காரணத்தை முன்னிட்டு.இதற்கு நானும் விதி விலக்கல்ல.அப்போது முன்னிலை எனப்படும் இரண்டாம் நபரையும், படர்க்கை எனப்படும் மூன்றாம் நபரையும் நகர்த்தி, தன்மை எனப்படும் நான் என்னைப் பற்றி மட்டும் கருதும் சாதாரணமான நானாகிறேன் )
@Rishaban :
தமிழில் மூவிடம் எனப்படும்:
தன்மை- நான் (முதலிடம்)
முன்னிலை- நீ,நீங்கள் (இரண்டாமிடம் )
படர்க்கை- அவன், அவள், அது, அவர்கள், அவைகள் ( மூன்றாமிடம் )
இதனை மையமாக வைத்து எழுதியுள்ளேன்.
கவிதைகளுக்கு ஏற்றவாறு படத்தேர்வுகளும் அருமை.
அதுவும் முதல் கவிதைக்குத் தேர்ந்தெடுத்துள்ள படத்தில் கேள்விக்குறியும் ஆச்சர்யக்குறியும் ஒன்றோடொன்று இரண்டறக்கலந்திருப்பதும், கீழே ஓர் நெற்றிபொட்டுபோல ஒரே புள்ளியில் இரண்டும் இணைத்திருப்பதும் அருமையோ அருமை.
முதல் கவிதையை நம் திரு. ரிஷபன் சார் ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டுள்ளார், நான் வேறொரு மாதிரியாகப் புரிந்து கொண்டுள்ளேன். தாங்கள் எனக்குக் கொடுத்துள்ள விளக்கமோ என்னுடையதிலிருந்து சற்றே வேறுபட்டு இருந்தது.
இதுவரை வருகை தந்துள்ள சிலர் வேறு மாதிரி புரிந்து கொண்டு இருக்கலாம், அல்லது புரிந்து கொள்ளாமலேயே கூட இருக்கலாம்.
மேலும் சிலர் வருகைதந்து தங்களுக்குத்தோன்றும் கருத்துகளையும் எடுத்துக்கூறலாம்.
அதனால் சற்றே பொறுத்துப்பார்ப்போம்.
அதன் பிறகு தயவுசெய்து தாங்களே அந்த முதல் கவிதைக்கு அழகாக ஒரு விளக்கம் கொடுத்து விடலாமோ என எனக்குத் தோன்றுகிறது.
இது என் ஆலோசனை மட்டுமே. தங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள்.
பிரியமுள்ள VGK
//raji said...
@ Rishaban
தங்களின் கோணம் இதற்கு பொருந்துகிறது என்றாலும் எனது கோணத்தையும் நான் வெளிப்படுத்துகிறேன்.
ஆச்சர்யமுமற்ற (ஆச்சர்யப் படக்கூடிய அளவில் இல்லாதவள் நான்)
கேள்வியுமற்ற ( என்ன இவள் என்று கீழ் நிலையாக நினைக்கும்படியும் இல்லாதவள்)
முன்னிலை,படர்க்கையை
நகர்த்தும் தன்மைச் சொல்லாய்
இந்த உலகில் - நான்
(எல்லாருமே ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் சுயநலவாதிகளாகி விடுகிறோம் எதோ ஒரு காரணத்தை முன்னிட்டு. இதற்கு நானும் விதி விலக்கல்ல.
அப்போது முன்னிலை எனப்படும் இரண்டாம் நபரையும், படர்க்கை எனப்படும் மூன்றாம் நபரையும் நகர்த்தி, தன்மை எனப்படும் நான் என்னைப் பற்றி மட்டும் கருதும் சாதாரணமான நானாகிறேன் )//
இந்த விளக்கம் போதுமானது. மிகவும் சுலபமாக இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. ;)
பிரியமுள்ள
VGK
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
இன்று தான் முதன் முதலாக வந்தேன் சகோ ...
எனக்கு எல்லா கவிதையும் பிடித்து இருக்கு ...
அருமை அருமை
பொங்கல் வாழ்த்துக்கள் ............
அனைருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் :-)
வரிகள் கவர்கின்றன...
வாழ்த்துக்கள்....
ஆஹா... அற்புதமான கவிதைகள்.
வாழ்த்துக்கள் தோழி.
Post a Comment