கையில் எடுத்துச் சென்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.இதில் ரெண்டு
விஷயம் இருக்கிறது.ஒன்று பிருந்தாவின் புலம்பலில் இருந்து சற்று
தப்பலாம்.அடுத்து இந்த புத்தகத்தின் சுவை அப்படி. சொல்லப் போனால் இதுதான்
பிரதானமாக இருக்க வேண்டும்.என்ன செய்வது பிருந்தாவின் குணம் அந்த
மாதிரி..சமீபத்தில் ஒரு ஃபார்வேர்ட் மெஸேஜ் ஒன்றை சினேகிதன்
அனுப்பியிருந்தான். ஹவ் டூ ஹாண்டில எ வொய்ஃப்? என்ற கூகுள் தேடலுக்கு
கூகுள் ”வீ ஆர் அல்ஸோ சர்ச்சிங் ஸ்டில்” என்று ரிசல்ட் தருவது போல்.மெலிதான
சிரிப்பிழையோடே பாதியில் விட்டிருந்ததை தொடர்ந்தேன்.
“மனிதனும் அவன் மனமும் விசித்திரமானவை. எப்போதும் போல் ஒரே மாதிரியான நடப்பு இருப்பதில்லை.அவன் மனம் பல முகங்களைக் கொண்டது.எந்த நேரத்தில் எந்த முகம் வெளிப்படும் என்பது அவனுக்கே முன் கூட்டி தெரிவதில்லை. வெளியில் தெரிவது அவனது முகமூடி மட்டுமே.சமயத்தில் வெளிவரும் முகம் பல்லிளித்து சாயம் தோய்த்த முகமூடியையும் மீறி குபுக்கென்று கொப்பளிப்பதும் உண்டு”
”டோக்கன் நம்பர் த்ரீ” என்ற குரலுக்கு கலைந்து நிமிர்ந்த போது எதிர் வரிசை நாற்காலியில் இருந்து ஒரு பெண் எழுந்து சென்றாள். நிறைமாத கர்ப்பிணி. நடக்க சிரமப்பட்டு சென்றாள்.
“இப்பத்தான் த்ரீ யே போறது.எப்ப பத்தாம் நம்பர் வர்றது?” சீக்கிரம் கிளம்புங்கன்னா கேட்டாத்தானே” பிருந்தா ஆரம்பித்து விட்டாள்.அவளுக்கு எப்போதும் எல்லாவற்றுக்கும் என்னைச் சொல்லியே ஆகவேண்டும்.இல்லையென்றால் சாதம் இறங்காது.பாவம் அவளைச் சொல்லி என்ன செய்ய? மெனோபாஸ் டைம்.உடம்பு படுத்துகிறது.மீண்டும் புத்தகத்திற்குள் போனேன்.
“மன நிலையை சமன்படுத்த தெரிந்தவன் நிறைய கற்றுக் கொள்கிறான்.அவன் மனம் எல்லாவற்றையும் உள்வாங்குகிறது.கிரஹித்ததை பிரித்துப் பார்க்கவும் ஆராயவும் கற்றுக் கொள்கிறது.அவனால் ஒருமுகப் படவும் இயல்கிறது.இது ஒரு கலை அல்ல கற்றுக் கொள்வதற்கு.இது ஒரு செயல்பாடு. இயல்பு. இந்த இயல்பு உண்மையில் எல்லா மனிதர்களுக்குமே உள்ளில் அடங்கியிருக்கிறது.ஆனால் அதை மனிதன் உணர்வதோ வெளிப்படுத்துவதோதான் வித்தியாசப்பட்டுவிடுகின்றது”
“சார்! ப்ளீஸ் கால் ஆட்டாதீங்க. நீங்க ஆட்டறது மத்த பேஷண்ட்க்குலாம் டிஸ்டர்பென்ஸா இருக்கு.இது தனி தனி நாற்காலி இல்ல” எதிர் வரிசையில் ஒரு இளைஞன் பக்கத்திலிருப்பவரிடம் மென்மையாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
திரும்பி ஒரு பார்வை பார்த்த அவர் மீண்டும் காலாட்டிக் கொண்டு அலட்சியமாக முகம் திருப்பிக் கொண்டார்.
“சார்!உங்களைத்தான் சொன்னேன். மத்தவங்களுக்கு யாருக்காவது உடல் உபாதை இருக்கலாம். நீங்க இப்பிடி பண்ணின்னீங்கன்னா அவங்களோட உபாதைஅதிகமாகும்.”
ஒரு முறைப்புடன் காலாட்டுவதை ஒரு நிமிடம் நிறுத்தி பின் தொடர்ந்தார்.
“டோக்கன் நம்பர் சிக்ஸ்” என்றதும் அந்த இளைஞன் எழுந்து செல்ல அந்த காலாட்டியோ மீண்டும் சௌகர்யாமாக அமர்ந்து காலாட்ட ஆரம்பித்தார்
பிருந்தா எழுந்து சென்றாள்.” உங்களுக்கு குழந்தை இருக்கா?” அந்த காலாட்டியிடம் கேட்டாள்.வம்பை இழுத்துக் கொண்டு வந்து விடப் போகிறாளே என்று கவலையாயிற்று.
“ஏன் கேக்கறீங்க” காலாட்டி முகத்தை சுருக்கிக் கொண்டு கேட்டார்
“இல்லை.உங்க மனைவி உங்க பக்கத்துல பிரசவ வலியால துடிச்சிட்டிருக்காங்கன்னு நினைச்சுகோங்க அப்பறம் இந்த தொடர்ச்சியான நாற்காலில இருக்கற மத்தவங்களுக்கு இப்பிடி காலாட்டினா என்ன கஷ்டம்னு உங்களுக்கு புரிஞ்சிரும்னு நினைக்கறேன்”
பளிச்சென்று நிறுத்திக் கொண்டார். நல்லவேளை! சச்சரவில்லை.பிருந்தா வந்து அமர புத்தகம் அழைத்தது.
“மனிதன் மட்டுமின்றி எல்லா ஜீவிதங்களும் மற்றொரு ஜீவிதத்தை சார்ந்தே இருக்கின்றன.இந்த சார்ந்திருத்தல் என்னும் தொடரால் ஒரு ஜீவனின் செயல்பாடு இன்னொரு ஜீவனுக்கு வலி உண்டாக்கி விடுகின்றது.புலியின் ஆகாரம் மான் என்பதால் மானுக்கு வலிதான்.ஆனால் பிரித்து உணரவும் மனதை சமனிலைப் படுத்தவும் மனிதனால் இயலும்.அது தெரிந்த மனிதனுக்கு இந்த தொடரிலும் வலி தவிர்க்க இயலும்.ஒரு மனிதனின் செயல்பாடு மற்றொரு மனிதனை சென்று அடையும் வாய்ப்புண்டு.இந்த தொடரையும் அதன் வலியையும் ஆராயத் தெரிந்தவனும் தவிர்க்கத் தெரிந்தவனும் மனிதன் ஆகிறான்”
திரும்பி பிருந்தாவை பார்த்தேன்.
*********************************
”அதீதம் ” ஃபிப்ரவரி முதல் இதழில் வெளியான எனது கதை.அதீதம் குழுவினருக்கு எனது நன்றிகள்

13 comments:
அருமையான பொருத்தமான தலைப்பு.
அழகான ஆக்கம். பாராட்டுக்கள்.
அதீதம் இதழில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
நீண்ட நாட்களுக்குப்பின் கொடுத்துள்ள பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
அதீதம் வெளியிட்ட சிறப்பான சிறுகதைக்கு வாழ்த்துகள்..
“//இல்லை.உங்க மனைவி உங்க பக்கத்துல பிரசவ வலியால துடிச்சிட்டிருக்காங்கன்னு நினைச்சுகோங்க அப்பறம் இந்த தொடர்ச்சியான நாற்காலில இருக்கற மத்தவங்களுக்கு இப்பிடி காலாட்டினா என்ன கஷ்டம்னு உங்களுக்கு புரிஞ்சிரும்னு நினைக்கறேன்”//
தீயில் நனைதெடுத்த சாட்டையடியாய் இறங்கிய வார்த்தைகள்..
கண்முன் தான் பார்க்கும் நோயாளின் துன்பத்தை சொல்லிக்கூட உணர்ந்து கொள்ள முடியாத ஜடம் .. உணரவைத்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..!
அருமையான கதை...
அதீதத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.
வணக்கம்
தொடர் படைப்புக்கள் .. படையுங்கள் எங்கேயும் அறிவு ஜீவிகள் உருவாகட்டும்
தங்களின் படைப்பு வெளிவந்தமைக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அதீதத்திலேயே படித்தேன். சிறு சம்பவத்தை அழகாக கதையாக்கி விட்டீர்கள்.
பிருந்தா சரியாக புரிய வைத்தார்கள்...
அதீதம் இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...
ஆஸ்பத்திரிக் காட்சியை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் மனித உணர்வுகளையும் புரியவைத்தீர்கள்!
super! Congrats for publishing in Atheetham!
அருமையான கதை. பாராட்டுகள்.
புரிதல் உணர்வு எல்லோருக்கும் இருந்து விட்டால் தான் பரவாயில்லையே..
சில நிஜ சம்பவங்கள் கதையை விட ஆழமாய் மனதில் தைக்கும்.. இந்த சம்பவத்தைப் போல !
மனிதன் எப்போது மனிதன் ஆகிறான் என்பதை அழகாக உணர்த்தி படிப்பவர் மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கிற சிறுகதை! அசத்தல்!
அருமையான சிறுகதை. பாராட்டுகள் ராஜி.
அருமையான கதை. பாராட்டுகள் லாஜி.
Post a Comment