Tuesday, July 5, 2011

மனதை தொட்ட முரண்கள்



மழையும் நானும்:

சில்லென்று வந்து விட்டாய்

சிலிர்த்துப் போனேன்.

நின்றுவிட்டால் காத்திருப்பேன்

நிச்சயமாய் உன் வரவுக்கு.

மழையும் செருப்பு தைப்பவரும்:

சில்லென்று வந்து விட்டாய்

சிதைந்து போனேன்.

நின்றுவிட்டால் நிமிர்ந்திடுவேன்

நிச்சயமாய் தொழில் செய்ய.

                                                                          




காகிதமும் நானும்:

எழுதி எழுதி பார்த்து

எதுவும் சரியற்று

கிழித்து கிழித்து போட்டேன்.

காகிதமும் குப்பை எடுப்பவரும்:

எடுத்து எடுத்துப் பார்த்து

எதுவும் வீணற்று

குவித்து குவித்து சேர்த்தான்  

28 comments:

Yaathoramani.blogspot.com said...

ஒருவருக்கு ரசிக்கத்தக்கதாய் இருப்பதுவே
மற்றொருவருக்கு இம்சிக்கத்தக்கதாய் இருக்கிறது
இந்த முரணை மிக அழகாக கவியாக்கி இருக்கிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

எல் கே said...

இரண்டு கவிதைகளும் நல்லா இருந்தது

R. Gopi said...

தீபாவளி சமயம் மழை வரும்போது வெட்டவெளியில் கடைபோட்டு வியாபாரம் செய்பவர்கள் நிறைய பாதிக்கப்படுவர். முதல் கவிதை படித்ததும் எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது.

சக்தி கல்வி மையம் said...

rendu kavithaikalum asaththal thozhi..

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு முரண்களும் நல்ல கவிதைகளைத் தந்து விட்டது உங்கள் மூலமாய் எங்களுக்கும்.....

சாகம்பரி said...

நானும் மழையும்

சென்னையில் வந்து விட்டாய்
வெறுத்துப் போனேன்.
மதுரையில் காத்திருப்பேன்
நிச்சயமாய் உன் வரவுக்கு.

முரண்பாடுகள் இப்படியும் வரலாம்.
வித்தியாசமான பெர்செப்ஷன். வாழ்த்துக்கள், ராஜி.

ஆர்வா said...

முரண்களை கவிதையின் அரணாக்கி கவிதை படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பா..


கவிதை காதலன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒரு கதவு மூடுதலும் மற்றொரு கதவு திறத்தலும் என்கிற பெரும் ஆறுதல் தரும் தத்துவங்களைச் சுமக்கிறது இரண்டும்.

அருமையான அழகான பார்வை ராஜி.

A.R.ராஜகோபாலன் said...

முரண்களைக் கூட
முறையாய் வகைப் படுத்த முடியும் என
முத்திரை பதித்த கவிதை
எல்லாமே ஒன்றோடு ஒன்று
தொடர்பு கொண்டிருப்பதை
தெளிவாய் சொன்ன விதம் அருமை

'பரிவை' சே.குமார் said...

முரணை மிக அழகாக கவியாக்கி இருக்கிறீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இரண்டு முரண்பாடுகளும்
கவிதைக்குள் அரணமைத்து
அழகு பெறுகின்றன.

vijaykarthik said...

nalla muranpadukal

Anonymous said...

யதார்த்தம் தெறி(ரி)க்கிறது உங்கள் வரிகள்

RVS said...

லாஜிக் ரொம்ப நல்லா இருக்குங்க ராஜி! ;-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

முரண்பாடுகள் அவரவர் பார்வையில் முரண்பட்டுத் தெரிந்தாலும், தங்கள் கைபட்டு வெளிவந்த கவிதையில் எங்கள் அனைவர் பார்வையிலும் அழகாகத் தெரிகிறதே!

// எதுவும் வீணற்று
குவித்து குவித்து சேர்த்தான் //

”வீணற்று” என்பதற்கு பதில்
“வீணென்று” என்று இருக்கலாமோ
என்று எனக்குத்தோன்றுகிறது.

நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

பாலா said...

கவிதை அருமை. இது என்ன மாதிரியான ஸ்டைல்?

ADHI VENKAT said...

இரண்டுமே நல்லா இருந்தது ராஜி.

Matangi Mawley said...

அந்தக் காகிதம்...
காகிதக் குவியலில் தான் எத்தனைப் பரிமாணங்கள்...
prism லிருந்து வெளி வரும் ரச்மிகளின் தன்மை எப்படி வேறு பட்டிருக்கின்றனவோ- அதே போல...
அந்த காகிதம்... அந்த வரிகள்... ஆஹா!

வெட்டிப்பேச்சு said...

//நின்றுவிட்டால் காத்திருப்பேன்
நிச்சயமாய் உன் வரவுக்கு.//

அருமை..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... என்ன ஒரு சித்தனை... One man's food is other man's poison னு படிச்சு இருக்கேன்... அதை அழகு தமிழில் மழையோடு சேர்ந்து ரசித்தேன்... அழகா எழுதி இருக்கீங்க அக்கா...:)

பாலாஜி said...

உங்கள் பெண்ணின் comment:

நின்றுவிட்டால் காத்திருப்பேன்
நிச்சயமாய் உன் வரவுக்கு.

நனைந்து விட்டால் காத்திருப்பேன்
அடி வாங்குவதற்கு (அம்மாவிடம்).

raji said...

பின்னூட்டமளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி

ரிஷபன் said...

அழகான முரண்கள்.

மாய உலகம் said...

வசந்தத்தை தேடுகிறார்... ஒருவர்
வாழ்க்கையை தேடுகிறார்...மற்றொருவர்.... சில நேரங்களில் நாம் இரண்டையும் தேடுகிறோம்...rajeshnedveera

மனோ சாமிநாதன் said...

முரன்பாடுகளின் கவிதைகள் அருமை!

சத்ரியன் said...

அழகிய முரண்கள்.

ADHI VENKAT said...

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது தொடருங்கள்.

http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html

Post a Comment