நீ........ண்ட இடைவெளிக்குப் பின் அனன்யாவின் தட்ட இயலாத அழைப்பின் பேரில் நானும் வலைப்பக்கம் வந்துட்டேன் .என்னையும் கம்ப்யூட்டர் சம்பந்தமான அனுபவங்களை பகிர சொல்லி கூப்பிட்ட ஆல் இன் ஆல் அனன்யாவுக்கு வந்தனங்கள்,நன்றிகள் !
1986 ம் வருடம்.மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். "நம்ப ஸ்கூல்க்கு கம்ப்யூட்டர் வரப் போறதாம்.கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ருப் பசங்களுக்காக" , ஒரு நாள் லஞ்சில் சிநேகிதி சொன்னதும் எல்லாருக்கும் ஒரே ஆர்வம்.
கம்ப்யூட்டர் வந்த திருநாளும் வந்தது.லைனில் எல்லாரையும் நிற்க வைத்து ஐந்து ஐந்து பேராக ரூமுக்குள் அனுப்பி வைத்தார்கள்(ஏ சி ரூமுக்குள் கும்பல் சேர்க்கக் கூடாதாம்).வெள்ளையாய் கருப்பு மானிட்டருடன் டேபிள் மேல் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தது. டேபிள் கீழே இருந்த செவ்வக வெள்ளை டப்பாவை சி பி யு என்றும் கரிய மாணிக்கப் பெருமாள் போல் இருந்த வஸ்துவை யு பி எஸ் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.அத்துடன் கம்ப்யூட்டருடன் ஆனா இண்ட்ரோ முடிந்தது.
அடுத்த நாள் லஞ்சில் கம்ப்யூட்டர் என்னும் நூதன வஸ்துவைப் பற்றிய டிஸ்கஷன் மட்டுமே பிரதான இடம் வகித்தது."நம்மையெல்லாம் தொட்டுப் பாக்க கூட விடலையே" என்ற என் புலம்பலுக்கு, "கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்டுடண்ட்ஸ்லாமே தொட்டுப் பாக்க முடியலையாம்.அவங்களுக்கே டீச்சர்ஸ் தான் ஆபரேட் பண்ணிக் காமிப்பாங்களாம். நாம காமர்ஸ் ஸ்டுடண்ட்ஸ்.நம்மை எப்பிடி தொட விடுவாங்க?" என்று பதிலளித்தாள் தோழி.

அத்துடன் கம்ப்யூட்டருடனான தொடர்பு நான்கு வருடங்களுக்கு துண்டிக்கப் பட்டது.ஒரு நாள் ஊரிலிருந்து வந்திருந்த என் அத்தை பேத்தி " நாம பிரவுசிங் செண்டர் போலாமா" என்றதும் " அங்க என்ன செய்யப் போறோம் ?" என்று பட்டிக்காட்டு கேள்வி ஒன்றை நான் கேட்க "சாட் பண்லாம் வா " என்று இழுத்து சென்றாள். என்னை கம்ப்யூட்டரின் முன் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டாள்.என் அக்கா பெண்ணை சாட்டிற்கு அழைத்து அவளுடன் சாட் செய்ய ஆரம்பித்து, " நீ டைப் பண்ணு" என்றாள்.பிற்காலத்துக்கு உதவும் என்று கற்று வைத்திருந்த டைப்ரைட்டிங் பயிற்சி கை கொடுத்தது.முதன்முதலாக கம்ப்யூட்டரின் அந்த வெள்ளை கீ போர்டில் கை வைத்தது அன்றுதான்.(இதுக்காக என் அத்தைபேத்தியை எல்லாரும் நொந்துண்டா நான்பொறுப்பில்ல )
அதற்கப்பறம் சாட் செய்ய வாய்ப்பும் கிடைக்கல.என் அக்காபெண் ஈ மெயில் எப்படி அனுப்பனும்னு சொல்லிக் கொடுத்து எனக்குஒரு ஐ டி யும் ஏற்படுத்திக் குடுத்தா.(இப்ப வரை அதே மெயில் ஐ டி தான்) சிறிது நாள் கழித்து சின்னதா ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. MS DOS என்ன EXCEL என்ன POWERPOINT, WORD என்னன்னு ஒரே அமர்க்களப்பட்டது.கோர்ஸ் முடிஞ்சப்பறம் வீட்ல கம்ப்யூட்டர் இல்லாததால தொடர்பு இல்ல.
ஒரு தடவை ரங்கஸ் 2 மாசத்துக்கு ஜெர்மன் போயிட்டாரு.அவரை தொடர்பு கொள்ள ஈ மெயில் விட்டா அப்பல்லாம் ஒண்ணும் கிடையாது..அது கூட இருந்திருக்க வேண்டாமேன்னு அவரு அழாகுறையா நினைக்கற அளவு,பிரவுசிங் செண்டர் போயி "நீ சௌக்கியமா? நான் சௌக்கியம். நீ சாப்பிட்டயா ? அங்க இரவா பகலா.இங்க வெய்யில் அப்பிடிங்கற ரேஞ்சுக்கு ஒரே மெயிலோ மெயில்தான்.பிள்ளை கிட்ட நாம பேச முடியலையே .இவ மட்டும் போயி போயி மெயில் அனுப்பறாளேங்கற மாமியாரின் ஏக்கம் தணிக்க ரங்கஸ் ஜெர்மன்ல எடுத்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு வந்து காமிக்க , மாட்டுப் பொண்ணுக்கு என்னல்லாம் தெரிஞ்சுருக்கு என்கிற ரீதியில் மாமியார் அதிசயப் பட்டு போனார்(அட! நிஜமாத்தான் சொல்றேனாக்கும்)
ரங்கஸ் வந்ததும் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கனும்னு முடிவு பண்ணி எங்க வீட்டுக்குள்ளயும் அந்த தேவலோக வஸ்து குடியேறியது. வந்த புதுசுல அதுல இருக்கற ராஜா ராணி லாம் என் தலையைப் பாத்தாலே தலை தெறிக்க ஓடுற அளவு சாலிட்டேர் விளையாடி,சூப்பர் மேரியோ பயல் குதிச்சு குதிச்சு தன் மண்டையெல்லாம் ரணமாகி நொந்து அழும்படியா பண்ணியாச்சு.அது தவிர என்னன்னவோ கேம்ஸ்லாம் போட்டுண்டு குழந்தையோட நானும் குதூஹலிச்சு , winamp ல பாட்டு கேட்டு,பொண்ணுக்கு ப்ராஜக்டுக்கு தேவைப்படும்னு என்சைக்லோ பீடியாலாம் வச்சுண்டு (அஞ்சாஞ்க்ளா ஸ் ) ஒரே அமர்க்களம்தான்.
"பிஎஸ் என்எல் ப்ரான்ட்பேன்ட் வரதாம்.அதைப் போட்டுண்டா ரொம்ப சௌஹர்யமாம் " இதை
கேட்டப்பறம் சும்மா விடுவோமா?போடு அதையும்.அப்பறம் ஒரே பாட்டு டவுன்லோட்,மேசெஞ்சர்ல சாட்,, அப்படின்னு போயிண்டிருந்த காலத்துலதான் நம்ப எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் மேடம்
நமக்கு ப்லாக்கை அறிமுகப்படுத்தி வச்சாங்க (உங்களையெல்லாம் இதன் மூலம் படுத்தி
வச்சாங்களான்னு அவங்க கிட்ட பேசிக்கோங்க )
அப்பறம் எழுதறேன் பேர்வழின்னு பாத்தது பாக்காதது தோணினது தோணாததுன்னு கணக்கே இல்லாம கிறுக்க ஆரம்பிச்சு அதுக்கு வந்த கமெண்டெல்லாம் மொபைல போன்ல
போன இடம் வந்த இடம்னு பாக்கற அளவு தேறியாச்சு.( எங்களையெல்லாம் புண்ணாக்கிட்டு நீ ஏன் தேறமாட்டேன்னு நீங்க feel பண்ண மாட்டீங்கன்னு தெரியும்,நீங்கல்லாம் ஜெம்னு எனக்கு நல்லா தெரியும்பா)
என் எழுத்துப் பணிக்கு ( பிணிக்குன்னு உங்க கண்ணுக்கு தெரியுதா? கரெக்டா தான டைப்பினேன்) இடைவெளி விட்டிருந்த நேரத்துல அதைப் பொறுத்துக்க முடியாத அன்பு அனன்யா பொங்கி எழுந்து எழுத வைக்காம விட மாட்டேனாக்கும்னு தீர்மானம் பண்ணி இந்த கிறுக்கலை உள்ளே இருந்து வெளியே கொண்டு வந்துட்டாங்க (ஏய் ! அனன்யா! இருக்குடி உனக்குன்னு நீங்க கறுவாதீங்க பாவம்)
இப்படியாக இந்த எழுத்தை இப்போ ஐபேட் லேருந்து டைப்பற அளவு முன்னேறிட்டேனாக்கும்( I Bad ?!)
:))))))))))))))))
இந்த தொடர்பதிவுக்கு நிறைய பேரை அனன்யாவும் இன்னும் மற்றவர்களும் அழைச்சுட்டதால விருப்பம் இருக்கற யார் வேணா தொடர கேட்டுக்கறேன் :-)