Friday, December 7, 2012

கடிகார முள்ளில் பூவாய்.....






நீ  தந்த போர்வை குளிருக்கு
இதமாய்த்தான் இருக்கிறது  

அலமாரி திறந்தேன் 
உடைத் தேர்வுக்கென.
என் கை எடுக்கிறது 
நீ தந்த உடையை 

வானொலி கேட்கும் 
வழக்கம் வேண்டுமென நீ 
தந்த பெட்டியில்தான் என் 
காலைகள் விடிகின்றன 

நடந்து செல்கையில் 
நீ தந்த கொலுசுகள் 
உன் ஒலிகளை எழுப்பியபடி 

மணி பார்க்கவென்று 
மணிக்கட்டைப் பார்த்தால் நீ 
தந்த கடிகாரத்தில் 
உன்னுடன் கழித்த பொழுதுகள்தான் 
தெரிகின்றன

போர்வை வேண்டாத காலமாய் 
குளிர்காலம் மாறலாம்
உன் நினைவுகள் வேண்டாத 
காலங்களை எந்த கடிகாரங்களும்                    
காட்டுவதில்லை