அப்படி என்ன ஆகி விட்டது இப்போது? நினைத்து நினைத்து ஆறவில்லை மாதவிக்கு. காலையில் எப்பொழுதும் போல் எல்லா விஷயங்களும் சரியாகத்தான் நடந்தது. விவேக்கிற்குப் பிடித்த ஆனியன் ரோஸ்ட்டும் கொத்தமல்லிச் சட்னியும்தான் காலை உணவிற்கு பார்த்து பார்த்து செய்திருந்தாள்.இருந்தும் கடைசியில் அதைக் கூட சாப்பிடாமல் செல்லும் அளவு கண்ணை மறைக்கும் கோவம்.மனதிற்குள் பொருமினாள்.
சாதாரணமாக எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாத சுபாவம்தான் விவேக்கிற்கு.இன்று என்னதான் ஆகி விட்டதோ, அதுவும் உப்பு பெறாத விஷயத்திற்கு. காலை நேர அவசரத்தில் குழந்தை அழுகிறாளே என்று அவசரமாக கரைத்த போர்ன்விட்டாவை ஆற்றி எடுத்துக் கொண்டு வரவும் எதிரில் விவேக் வருவதைப் பார்க்காமல் மோதி விட்டாள்.மொத்த போர்ன்விட்டாவும் அவன் மேல் தெறித்து சட்டை எல்லாம் கறையாகி
விடவும் " கண் தெரியல. இப்படித்தானா வந்து மோதறது. போச்சு,இன்னிக்கு முக்கியமான மீட்டிங்காக இந்த சட்டையைப் போட்டேன். சே! மனுஷன் கஷ்டம் கொஞ்சமும் தெரியறதில்லை" என்று எரிந்து விழுந்தான
" எதுக்கு இப்பிடி கத்தறீங்க? வேற சட்டை மாத்திண்டா போச்சு" என்று இவள்
சொல்லவும் "உன் யோசனையை நிறுத்தறயா? " என்று கையை ஓங்கி விட்டான். மாதவிக்கு இது புதிது.விதிர் விதிர்த்து நின்று விட்டாள்.
கையை ஓங்கிய அவனுக்கே தன் செயல் புரிந்து சட்டென அறைக்குள் சென்று விட்டாலும் கோவம் குறையாமலே வேறு சட்டை அணிந்து விருட்டென்று சாப்பிடாமல் கொள்ளாமல் சென்று விடவும் மாதவிக்கு துக்கம் பொத்துக்கொண்டு வந்தது.
ஏனோ தானோவென்று வேலை பார்த்தாள். மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. இதுவரை விவேக்கிடம் இப்படி ஒரு கோவத்தை சந்தித்திருக்கவில்லை. சாப்பிட உட்கார்ந்தாலும் இறங்காமல் மனம் சண்டி செய்தது. மதிய உணவு கூட எடுத்துச் செல்லாமல் போய் விட்டானே என்றுதான் தோன்றியது.
"அழறியாம்மா?" மூன்று வயது மானஸா கன்னம் தொட்டதும் சமாளித்துக் கொண்டாள்
இரவு வீடு திரும்பியவன் குளித்து உடை மாற்றி சாப்பிட உட்கார்ந்தான்.ஆனாலும் ஒரு வார்த்தை " நீ சாப்பிட்டயா? குழந்தை என்ன சாப்பிட்டா?" என்ற வழக்கமான விசாரிப்புகளற்று அரையும் குறையுமாய் விழுங்கி விட்டு எழுந்து சென்றான்
"அம்மா! கதை சொல்லும்மா" காலை மேலே போட்டுக் கொண்டு படுத்திருக்கும் குழந்தைக்கு " நாளைக்கு சொல்றேண்டா " என்று பதிலளிக்க குழ்ந்தை சிணுங்க ஆரம்பித்தாள்.
"ம்....ஹூஹூம் .....இப்ப சொல்லு"
"சரி சொல்றேன்.தூங்கு"
விவேக்கிடம் லேசான அசைவு தெரிந்தது. திரும்பிப் பார்த்து விட்டு மௌனமாய் இருந்தான்.
"அப்பா!"
"ம்..."
"அம்மா கதை சொல்லப் போறாங்க.தினம் நீயும் என்னோட கேப்பயே.கண்ணை முழிச்சுக்கோ "
"சரி"
"சொல்லும்மா" குழந்தை திரும்பி படுத்து கதை கேட்க தயாரானாள்
" ராமர் காட்டுல இருந்தப்ப ஒரு நாள் குளத்துல குளிக்கறதுக்காகப் போனாராம்"
"ம்.."
"அப்ப அவரோட வில், அம்பறாத்தூணி, அம்புகள் எல்லாத்தையும் கரையில் ஒரு இடத்துல வச்சுட்டு குளிக்கப் போயிட்டார்"
"ம்.."
"அவர் குளிச்சு முடிச்சு திரும்ப கரைக்கு வந்து அவர் வச்சுட்டுப் போனதெல்லாம் எடுக்கறதுக்காக குனிஞ்சப்ப அந்த இடத்துல ஈனஸ்வரத்துல ஒரு குரல் கேட்டுச்சாம்"
"ம்.... ஈனஸ்வரம்னா?"
"மெல்லிசா ஒரு குரல்ல யாரோ முனகறாப்புல ஒரு சத்தம் கேட்டுச்சாம்"
"அது யாரு?"
"என்ன சத்தம்?எங்கிருந்து வருதுன்னு ராமர் குனிஞ்சு பாத்தப்ப அங்க ஒரு தவளை இருந்துச்சாம். அதன் உடல்ல ரத்த கறை இருந்ததை பாத்து ராமர் அதை எடுத்து ஆதரவா தடவினாராம்.பக்கத்துல இருக்கற தன்னோட அம்புகள்லயும் ரத்தக் கறை இருக்கறதைப் பாத்த ராமர் அந்த தவளையைப் பாத்து " நான் அம்புகளை வைக்கும் போதே உனக்கு வலிச்சுருக்குமே அப்பவே கத்தி இருந்துருக்கலாமே"ன்னு கேட்டாராம்
"பாவம் இல்ல" குழந்தை முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டது.
"அதுக்கு அந்த தவளை ராமரைப் பாத்து , "வேற யார் மூலமா எப்ப துன்பம் வந்தாலும் நான் ராமா அப்படின்னு கத்துவேன்.ஆனா ராமனோட பாணமே காரணமா இருக்கும் போது என்னன்னு சொல்லி கத்துவேன்"னு வருத்தமா கேட்டதாம்.
........................
"இதை கேட்ட ராமர் அந்த தவளையை தன் நெஞ்சோட சேர்த்து அணைச்சுக்கிட்டாராம்"
விவேக் சடக்கென்று எழுந்து சென்று கையில் பால் தம்ளருடன் வந்தான்.மாதவியை எழுப்பி கையில் தந்து அருகில் அமர்ந்து அணைத்துக் கொண்டான்.
கண்ணீருடன் அவன் தோளில் சாய்ந்த மாதவியின் மடியிலேறி அமர்ந்து விவேக்கின் மேல் கால் போட்டுக் கொண்ட மானஸா " அந்த தவளைக்கு வருத்தம் சரியா போச்சான்னு சொல்லவே இல்லையேம்மா ? " என்று கொட்டாவியுடன் கேட்டது.
" ராமர் அணைச்சுண்டப்பறம் தவளைக்கு ஏது வருத்தம்? " என்று சிரித்த அன்னையுடன் சேர்ந்து அப்பாவைப் பார்த்து தானும் சிரித்தது குழந்தை