Friday, April 13, 2012

விஷுக்கனி

இன்று வல்லமை புத்தாண்டுச் சிறப்பிதழில் வெளியான எனது படைப்பு.

வ்ல்லமை ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றிகள்



நாட்கள் சேர்ந்து மாதம் பிறக்கின்றது
மாதங்கள் சேர்ந்து வருடம் பிறக்கின்றது.
நிமிடங்களில் நொடிகளும்
மணிகளில் நிமிடங்களும் 
நாட்களில் மணிகளும் மறைகின்றது
என்றால்,
எது பிறக்கையில் மனித
பகை மறையும்?
எது பிறக்கையில் மனித
வளம் பெருகும்?
எது பிறக்கையில் நம்
பொறாமைகள் அழியும்
அன்பு!!!!!!
ஆம்!
பிறக்கும் வருடங்களில், நாட்களில்,
மணிகளில், நிமிடங்களில். நொடிகளில்
பூக்கும் அன்பைக் கொண்டாடுவோம்
பண்டிகை போல!!!!
பூவையும் கனியையும்
மட்டும் காணாமல்
பூத்த அன்பை கனிய விட்டு
சமமாகக் காண்போம் அனைவரையுமே -
விஷுக்கனியாக.
விஷு(சமம்) கனி (காணுதல்)



Tuesday, April 3, 2012

கர்ப்ப வாசம் கலைந்து...




கர்ப்ப வாசம் கலைந்து ...

கண்களைத் திறந்ததால்
காட்சி பூதங்கள் நுழைந்தன.

செவிகள் கேட்ட பொழுதினிலே
சொல் பேய்கள் நுழைந்தன.

மூக்கோ முழு நேரமும்
முகர்ந்தது வாசனைப் பிசாசுகளை.

வாயின் வழியாக நிதமும்
வகைவகையாய் சுவை சாத்தான்கள்.

ஸ்பர்ச சுகம் சுகிப்பதால்
சகலமும் மறக்கும் சூன்யம் ஏறியது.

அத்தனையும் சேர்ந்து அழித்ததோ
ஆறாம் அறிவின் திறனை.

ஆக மொத்தம்,

தாயின் கர்ப்பத்தில்
தனது என்றில்லாத காலத்தில்

நான் கொண்ட ஞானமும்
நான் அறிந்த இறைமையும், எங்கேயோ
நகர்ந்து நகர்ந்து சென்றது