மதிப்பிற்குரிய வை கோபாலகிருஷ்ணன் அவர்களும், சக பதிவர்
ஆதி அவர்களும் 'மூன்று' தொடர்பதிவிற்கு என்னையும் தொடர
அழைத்ததன் காரணத்தால் நான் இதை தொடர்ந்துள்ளேன்
1. இசையும் பயணமும்
2 புத்தகம்
3 மழையில் நனைதல்
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1 பலர் உபயோகிக்கின்றனர் என்று அறிந்திருந்தும்
தெருவில் எச்சில் துப்புபவர்கள்
2 உடல்நலம் சரியில்லாதவர்களை பார்க்க சென்று விட்டு
தனக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இதற்கு முன் இது போல்
கஷ்டப்பட்டதை கூறி அவர்களை கலவரத்திற்கு உள்ளாக்குதல்
3 சமயத்தில் எனக்கு வரும் கோபம்
3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
1 மனசாட்சி
2 கரப்பான் பூச்சி
3 பாம்பு
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
1 அரசியல்வாதிகளை நம்பும் அப்பாவி தொண்டர்களின் செய்கைகள்
2 எத்தனை வருடங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவில் ஹீரோயினும்
ஹீரோவும் பாடும் டூயட்கள்
3 ப்ளஸ் ஒன் படிக்கும் பொழுது மேத்ஸ்ல கால்குலஸ்னு
ஒரு மேட்டர் இப்பவும் கூட சரியா புரியாது 5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
நமக்குன்னு தனி மேஜைலாம் வச்சுக்கலை.கணினி மேஜைதான் நம்ம
மேஜை.அதுல நான் வச்சுருக்கறது:
1 ஐ பாட்
2 நோட்டுப் புத்தகமும் பேனாவும்
3 வாட்ச்
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?
1 தில்லுமுல்லு படத்தில் சௌகார் ஜானகி அவர்களின் நடிப்பு
2 தேவன் கதைகள்
3 என்றும் நான் சிரித்துக் கொண்டிருக்க உதவும் உறவுகளும் நட்பும்
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1 வீணையின் நாலு ஸ்வர தந்திகளையும் மூன்று தாளத் தந்திகளையும்
ஒரு வழி செய்து 'ஆரபி' யை 'ஞே' என்று விழிக்க வைப்பது
2 எழுத்தாளர் 'பாலகுமாரன்' அவர்களின் 'உடையார்' முழுவதையும்
படித்துவிடும் முயற்சியில் இருப்பது
3 மகளை இடைத்தேர்வுக்கு தயார் செய்வது
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
1 உருப்படியாக ஒரு புத்தகம் எழுதுவது
2 அடையார் வாலண்டரி ஹெல்த் ஆர்கனைசேஷன் சென்று
நோயுற்றவர்களுக்கு உதவுவது
3 வாழ்நாள் முடிவைப் பற்றிய எண்ணமில்லாமல் இருப்பது
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
1 நம்மை விரும்புபவர்களையும் நாம் விரும்புபவர்களையும்
சங்கடப்படுத்தாமல் இருக்க நினைப்பது
2 இசை ஞானத்தை இன்னும் வளர்த்துக் கொள்வது(கொல்வது??!! :)) )
3 தினமும் காலையில் யோகாசனப் பயிற்சி
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1 குத்துப் பாடல்கள் என்ற பெயரில் காதுக்கு நாராசமான
இசையுடனும் சகிக்காத வார்த்தைகளுடனும் கூடிய பாடல்கள்
2 மழைக்காலத்தில் தவளையின் கத்தல் மற்றும் சுவர்க்கோழியின்
படுத்தல்
3 இரைச்சலான சண்டைகள்
1 தையல்
2 கைவேலைப்பாடுகள்
3 எமோஷனலாக இல்லாமல் பேலன்ஸ்டாக இருப்பதற்கு
12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
1 அம்மா கையால் செய்த அவியல்
2 தோழி எனக்கென்று ஸ்பெஷலாக செய்யும் பால் கொழுக்கட்டை
3 கத்திரிக்காய் கொத்சு, பூசணிக்காய் கூட்டு தி கிரேட் தச்சு மம்மு வித்
எனி ஊறுகாய்( ச்சே! இந்த கேள்விக்கு மட்டுமாவது எவ்வளவு வேணா
பதில் சொல்லலாம்னு ரூல் போட்ருக்க கூடாதா?)
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்
கர்நாடக இசையில்: 1 ராமம் பஜே 2 என்ன கவி பாடினாலும்
3 காயதி வனமாலி
சினிமா பாடல்கள்:
1 தென்றல் வந்து என்னைத் தொடும் 2 காற்றே என் வாசல் வந்தாய்
3 அமுதும் தேனும் எதற்கு
14) பிடித்த மூன்று படங்கள்?
1 ரிதம்
2 ஹிந்தியில் 'பா'
3 டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்கள்
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
1 காதல்
2 நட்பு
3 பாசம்