வந்தேன்.....வந்தேன்.....மீண்டும் நானே வந்தேன்..!
ப்லாக் பக்கம் வந்து பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் கதை கேட்டு வாங்கி ப்லாக் என்பதை நினைவு படுத்தி இழுத்து வரும் முயற்சி செய்ததாலும் இனியும் ப்லாக் பக்கம் வராதிருந்தால் தலைநகரில் வாழும் தலை என் தலையில் நங்கென்று குட்டி விடும் அபாயம் இருப்பதாலும் மீண்டும் வந்து விட்டேன்.
வட இந்திய சுற்றுலாவில் பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஏற்கனவே இருமுறை எங்கள் இல்லத்தில் சந்தித்திருக்கிறோம் என்றாலும் அவர்கள் ஊரில் சந்திப்பது முதல் முறை என்பதால் அவருக்கு மிகுந்த சந்தோஷம்.
சுற்றுலாவில் தென்னிந்திய உணவே மறந்து வாயும் வயிறும் ஏங்கிப் போயிருந்த நிலையில் டெல்லி ஜன்பத் நகரில் உள்ள சரவண பவனுக்கு அழைத்துச் சென்று வயிறார சாப்பிட வைத்தார். வாழ்க நீ எம்மான் ! :)
ஆளாளுக்கு காஞ்ச மாடு கம்மங்கொல்லையைப் பாத்த கணக்கா புகுந்து வ்ளாடிட்டோம்.இடியாப்பம் என்ன இட்லி வடை என்ன சாம்பார் வடை என்ன பொங்கல் என்ன காஃபி என்ன...! ஆஹா...!
வயறு மட்டும் ஆனந்திக்கவில்லை.உள்ளமும்தான்.வட இந்தியப் பகுதிகள் பற்றியும் ஹிமாச்சலப் பிரதேசம் பற்றியும் வெங்கட் நாகராஜ் பல தகவல்கள் வைத்திருக்கிறார் கூறுவதற்கு. சாப்பிட்டுக் கொண்டே ஆ வென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டுமிருந்தோம்.
இனி வட இந்திய சுற்றுலா பற்றிய பதிவுகளும் பின்னர் ஜுகல்பந்திச் சிறுகதை பற்றிய பதிவுகளும் தொடர்ந்து வர இருக்கும் அபாயம் இருப்பதால் அனைவ்ரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுவது உங்கள் சௌகர்யம்.கல் தயாராக வைத்திருந்தால் அதை எங்கள் ப்ளாகையும் தலையின் ப்ளாகையும் ரிசீவிங் எண்டாக எய்ம் செய்து கொள்ளவும் :)
செவிக்கு உணவு,வயிற்றுக்கு உணவு மட்டும் போதாது என்று சிந்தனைக்கும் உணவிருக்கட்டும் என்று எண்ணி “ஜுகல்பந்திச் சிறுகதைகள்” புத்தகப் பரிசும் தந்தார். ஊரிலிருந்து வந்து வீட்டை சரி பண்ணி நம்ப வீட்டு சாப்பாடும் சாப்டாச்சு.இப்ப பதிவும் போட்டாச்சு.அடுத்து ஜுகல் பந்தியைக் கையில் எடுக்க வேண்டியதுதான். மிக்க நன்றி திரு வெங்கட் நாகராஜ். :)